என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு போதிய வாய்ப்புகளும் உதவிகளும் அளித்து சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும். இதுவே வருங்கால தலைமுறைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.
    சர்வதேச சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தை என்று கருதப்படுகின்றனர். இது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு ஆகும். குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் வரையறுக்கப்பட்டது. இவை பல நாடுகளில் சட்ட திருத்தங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியாவை பொறுத்தவரை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எப்போதும் சட்டப்பூர்வமான உரிமைகளும், பாதுகாப்பும் பெற்ற தனிப்பிரிவி னராகவே கருதப்படுகின்றனர். இதனால்தான் 18 வயதானவர்களுக்கு மட்டுமே ஓட்டு உரிமை, வாகனம் ஓட்ட உரிமம், சட்டப்பூர்வமான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் உரிமை ஆகியவை வழங்கப்படுகிறது.

    குழந்தை பருவத்தில் கொடுமைக்கு உள்ளாவது, தவறாக பயன்படுத்தப் படுவது ஆகியவற்றில் இருந்து காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். இதற்கு காரணம் சமூகத்தில் பெரியவர்களைவிட அதிகமாக பாதிக்கப் படகூடிய பலவீனமான நிலையில் குழந்தைகளே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சமூகம் மட்டுமின்றி அரசாங்கங்களின் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கை இன்மை ஆகிய காரணங்களால் அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள். குழந்தைகள் அவர்களது பெற்றோரின் சொத்துக்களாக கருதப்படு கின்றனர். அவர்களுக்கு சட்ட ரீதியான உரிமைகள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆகியவை தரப்பட வேண்டியது அவசியம். இதற்கு 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவரும் தகுதி வாய்ந்த வர்கள். அதில் சிலவற்றை காண்போம்...!

    6 முதல் 14 வயது வரை உள்ளவர்கள் ஆரம்ப கல்வியை இலவசமாக பெறும் உரிமை (சட்டப் பிரிவு-21 ஏ), 14 வயது பூர்த்தியாகும் வரை தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையில் வேலை செய்ய தடை (சட்டப் பிரிவு-24) பொருளாதார நிலை காரணமாக வேறு வழியின்றி வயது அல்லது வலிமையை மீறிய பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது மற்றும் கொடுமைக்குள்ளாவது ஆகியவற்றுக்கு தடை (சட்டப் பிரிவு-39 இ), பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான சமஉரிமை (சட்டப் பிரிவு-15), வலுக்கட்டாயமாக கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு (சட்டப் பிரிவு-23) ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.

    இதுபோன்ற அரசியலமைப்பு சட்டங்களை தவிர குழந்தைகளின் நலனுக்காகவே குறிப்பிட்ட வகையில் பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. சமுதாயத்தில் குழந்தைகளுக்கான நியாயமான மற்றும் சம அளவிலான உரிமைகளை பெறுவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா.சபை தெரிவித்து உள்ளது. சிவில், அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு உரிமைகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதில் கல்வி கற்பதற்கான உரிமை, சமூக பாதுகாப்பு, கலாசாரம், போர் உள்ளிட்ட நெருக்கடி காலங்களில் சிறப்பு பாதுகாப்பு, எதையும் வெளிப்படுத்தும் உரிமை, தகவல்களை கேட்டு பெறும் உரிமை, மத நம்பிக்கை களை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்பட ஏராளமான உரிமைகள் உள்ளன.

    குழந்தைகளின் வயது ஏறும்போது பல்வேறு நிலைகளில் முதிர்ச்சி அடைகின்றனர். இதற்கு அர்த்தம் 15 அல்லது 16 வயதை அடைந்தால் இனி அவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்பது அல்ல. குறிப்பாக அந்த வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைப்பது, பணிகளில் ஈடுபடுத்தப்படுவது போன்றவை அரங்கேறுகிறது. இது முற்றிலும் தவறானது. 18 வயது வரை அவர்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்க வேண்டியது அனைவரது கடமை ஆகும். ஆண்றுதோறும் நவம்பர் மாதம் 20-ந்தேதியை குழந்தை உரிமை நாளாக உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றன. அன்றைய தினம் மட்டுமின்றி அனைத்து தினங்களிலும் குழந்தைகளுக்கு போதிய வாய்ப்புகளும் உதவிகளும் அளித்து சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்க அனைவரும் முன்வரவேண்டும். இதுவே வருங்கால தலைமுறைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.
    ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் வாங்குவதே போதுமானது. பல புத்தகங்கள் வாங்கினால் அவர்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அடுத்த புத்தகம் நோக்கி தாவி விடுவார்கள்.
    குழந்தைகள் ஆர்வமுடன் படிக்க வேண்டும் என்கிறீர்களா? அதற்கு புத்தகம் அவர்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று நீங்கள் அறிந்து அந்த புத்தகத்தை வாங்கலாம்.

    நீங்கள் மட்டும் கடைக்கு சென்று புத்தகம் வாங்கி வராதீர்கள். இந்த கால குழந்தைகள் வேறு ரகம். அவர்களே அவர்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்வார்கள்.

    உங்கள் குழந்தைகள் வீட்டில் ஏதோ ஒன்றை சிறப்பாக செய்தவுடன் அவர்களை பாராட்டும் தொனியில் ஒரு நல்ல கதை புத்தகம் வாங்கி தருவதாக உறுதியளியுங்கள். அப்போது அவர்களிடம் என்ன கதை புத்தகம் வேண்டும் என்றும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தநாள் காலையில் நீங்கள் அலுவலம் செல்லும் போது இன்று மாலை புத்தகம் வாங்கி வருகிறேன் என்று கூறி ஆர்வத்தை தூண்டுங்கள். ஆனால் புத்தகம் வாங்கி வருவதும், வாங்கி வராமல் மேலும் ஆர்வத்தை தூண்டுவதும் உங்கள் விருப்பம்.

    புத்தகம் வாங்கவில்லை என்றால் குழந்தையிடம் மன்னிப்பு கோரி விட்டு அன்று மாலையோ அல்லது அடுத்த நாளோ குழந்தையை கடைக்கு அழைத்து சென்று சிறிது நேரத்தை அங்கேயே செலவழித்து அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை வாங்கி கொடுங்கள். ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் வாங்குவதே போதுமானது. பல புத்தகங்கள் வாங்கினால் அவர்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அடுத்த புத்தகம் நோக்கி தாவி விடுவார்கள். 3-8 வயது குழந்தைகளுக்கு படக்கதை புத்தகமே சிறந்தது.
    உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 19 வயதுக்குட்பட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் வெவ்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
    புற்றுநோய் பெரியவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உலகெங்கிலும் தினமும் ஏராளமான குழந்தைகள் இந்த கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 19 வயதுக்குட்பட்ட 4 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் வெவ்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    எச்.ஐ.வி, எப்ஸ்டீன்-பார் வைரஸ் மற்றும் மலேரியா போன்ற நாள்பட்ட நோய்த்தொற்றுகள் குழந்தை பருவ புற்றுநோய்க்கு வித்திடக்கூடியவை. இதேபோன்ற பிற நோய்த்தொற்றுகளும் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

    எனவே, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் நாள்பட்ட நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதும், உரிய சமயத்தில் தடுப்பூசி போடுவதும் முக்கியமானது. ஆரம்பத்திலேயே புற்றுநோய்க்கான அறிகுறிகளை கவனத்தில் கொண்டு நோய் தடுப்பு சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் திறம்பட எதிர்த்து போராட முடியும்.

    அதிக வருமானம் கொண்ட நாடுகளில், புற்றுநோய் சிகிச்சைக்கு உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு குழந்தை பருவ புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ரத்த புற்றுநோயாகும். இது குழந்தைகளை பொறுத்தவரை பொதுவான வகை புற்று நோயாக அறியப்படுகிறது.

    ரத்த அணுக்கள், எலும்பு மஜ்ஜை, ரத்தம் மற்றும் நிணநீர் போன்றவை பாதிப் படைவது ரத்த புற்றுநோய்க்கு வித்திடக்கூடும். புற்றுநோய்களுள் லுகேமியா என்பது பிறந்த குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள இளம் வயதினரை பாதிக்கும் பொதுவான வகை ரத்த புற்றுநோயாகும். ரத்தப் புற்றுநோயை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்பது பலருக்கு இன்னும் தெரியாது. ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
    நொறுக்குத்தீனி, கடைகளில் விற்பனைக்கு இருக்கும் சுகாதாரமற்ற, தரம் இல்லாத பண்டங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று பெற்றோர்கள், கூடுதல் அக்கறையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டியிருக்கிறது.
    குழந்தைகளின் படிப்பில் அக்கறையுள்ள பெற்றோர், அவர்களது முக்கியப்பருவமான பள்ளி வயதில் உடல்நலனில் கண்டிப்பான அக்கறையை காட்ட வேண்டும்.

    காலை நேரத்தில் கடனே என உணவு திணிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாக பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், பெரும்பாலான குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.

    இப்போது சில பள்ளிகள், குழந்தைகளின் நலனில் அக்கறையாக, ஒவ்வொரு நாளும் என்ன மெனு என்பதை பட்டியலிட்டு கொடுத்து மதிய நேரத்தில் கண்காணிக்கிறார்கள். ஆனாலும், குழந்தைகள் அனைவரும் ஒரே வகை உணவை கொண்டுவந்தால் எப்படி தங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொண்டு, நிறைவாக உண்ண முடியும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

    சதை பிடித்து வளர்கிற பருவத்தில் வயிற்றை எளிதில் அடைக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவை குழந்தைகள் வெறுப்பது இயல்புதான். பெரியவர்களுக்கான நல்ல உணவு என்று சொல்லப்படுபவை அத்தனையும் குழந்தைகளுக்கும் பொருத்தமானவையல்ல.

    ஓடியாடி உடலாற்றலை எரிக்கும் பருவத்தில் கார்போஹைட்ரேட் உணவையும், உடல் கட்டுமானத்துக்குரிய கடினத்தன்மை கொண்ட கிழங்கு போன்றவற்றை வறுவலாகவும் உண்ணக் குழந்தைகள் விரும்புவது இயற்கையே. குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உணவை அறிவார்த்தமாக தேர்வு செய்வதில்லை.

    அதே நேரத்தில், நொறுக்குத்தீனி, கடைகளில் விற்பனைக்கு இருக்கும் சுகாதாரமற்ற, தரம் இல்லாத பண்டங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று பெற்றோர்கள், கூடுதல் அக்கறையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டியிருக்கிறது.

    இயற்கையான, விதம்விதமான சுவை கொண்ட உணவை குழந்தை பருவத்தில் இருந்தே பழக்கிவிட்டால் அது அவர்களுக்கு பிடித்த உணவாகி விடுகிறது. இதனால் உடல் நலத்துக்கு கேடு விளைவுக்கும் பண்டங்களை நிச்சயமாக குழந்தைகள் விரும்பமாட்டார்கள்.
    ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.
    ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, ஏறக்குறைய 50 வருடங்களாக ‘டோபல் தேர்வு’ என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.

    ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம்.

    டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்கு தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்கள் எவை என்பதை பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    வேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

    உலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது. மொத்தம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500-க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவு செய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.

    சர்வதேச மதிப்பில் 165 டாலர்களும், இந்திய மதிப்பில் ரூ.7,500-ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    என்ன ஸ்பெஷல்?

    டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் சுருக்கி எழுதுதல் போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, சோதிப்பது மற்றும் அதை குறிப்பெடுப்பது போன்ற செயல்பாடுகளினால் தனித்துவம் பெறுகிறது. இதன் மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதி செய்யப்படுகிறது.

    மதிப்பெண் செயல்முறையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான மதிப்பீட்டாளர்களின் மதிப்புரைக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவு செய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.

    இத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் தானியங்கி மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன் மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.
    கங்காரு குட்டிகளை போல குறை பிரசவம் அல்லது முன்கூட்டியே பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் முறை ‘கங்காரு மதர் கேர்’ என்று அழைக்கப்படுகிறது.
    ஆஸ்திரேலியாவில் அதிகம் வசிக்கும் பாலூட்டி இனமான கங்காரு, பிரசவ காலத்திற்கு முன்னதாகவே குட்டிகளை ஈன்றுவிடும். அவைகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக கங்காருவின் வயிற்று பகுதியில் பை போன்ற அமைப்பு இயற்கையாகவே உருவாகி இருக்கும். அதில் தான் பிரசவித்த குட்டிகளை சுமந்து கொண்டே திரியும். தாயின் அரவணைப்பில் வளரும் அந்த குட்டிகள் ஆரோக்கியமான நிலையை முழுமையாக எட்டிய பிறகு பையை விட்டு வெளியேறும். அதுவரை தாயின் உடலுடன் ஒட்டியவாறே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும். கங்காரு குட்டிகளை போலவே குறை பிரசவம் அல்லது முன்கூட்டியே பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் முறை ‘கங்காரு மதர் கேர்’ என்று அழைக்கப்படுகிறது. தாயின் உடலுடன் ஒட்டியவாறே குழந்தையை பராமரிக்கும் இந்த முறையை பின்பற்றுவதற்கான அவசியம் பற்றி அறிந்து கொள்வோம்.

    கங்காரு முறையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

    இந்த முறை தாய்க்கும், குழந்தைக்கும் இடையே ஐந்து புலன்களுடனும் தொடர்பை ஏற்படுத்துகிறது. குழந்தை தாயின் அரவணைப்பை தோலுக்கு இடையேயான தொடர்பு (தொடுதல்) மூலம் உணர்கிறது. தாய் தனது மார்பு பகுதியில் குழந்தையை நெருக்கமாக வைத்திருக்கும்போது, தாயின் குரல் மற்றும் இதய துடிப்பை காதுகள் மூலம் கேட்கிறது. அதன் மூலம் கேட்கும் திறனை பெறுகிறது.

    தாய்ப்பாலை உறிஞ்சும்போது சுவையை அறிகிறது. தாயை பார்க்கும்போது பார்வைத்திறனை மெருகேற்றிக்கொள்கிறது. தாயின் வாசனையையும் உணர்ந்து கொள்கிறது. இந்த இயற்கை முறை குழந்தையின் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. தாய்ப்பாலை ஊக்குவிப்பதன் மூலம் நோய்த்தொற்று உள்பட பிற நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

    கங்காரு முறையில் யாரெல்லாம் குழந்தையை கவனித்துக்கொள்ள முடியும்?

    தாய் மட்டுமின்றி தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கங்காரு முறையில் குழந்தையை கவனித்துக்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட நபர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கக்கூடாது.

    அடிக்கடி கை கழுவுதல், தினசரி குளித்தல், விரல் நகங்களை அடிக்கடி வெட்டுதல், அழுக்கில்லாத ஆடைகளை அணிதல் போன்ற சுகாதார விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும். நகை, கைக்கடிகாரம் அணிவதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை சுகாதாரத்தை பேணுவதற்கு இடையூறாக இருக்கலாம். குழந்தைகளுக்கு காயங்களையும் ஏற்படுத்தலாம்.

    கங்காரு முறை பராமரிப்புக்கு பொருத்தமான ஆடை எது?

    தாய்மார்கள் புடவை அணிவது பொருத்தமானதாக இருக்கும். பேபி பேக் பயன்படுத்தலாம். குழந்தைகளை நீண்ட நேரம் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஆடைகளை உபயோகிப்பதும் சிறந்தது. கைக்குழந்தைகள் தொப்பி, சாக்ஸ், டயப்பர்கள் மற்றும் பருத்தி போன்ற மென்மையான இயற்கை துணியால் செய்யப்பட்ட சட்டை அணிந்திருப்பது சிறப்பானது.

    குழந்தையை கவனமாக கையாள வேண்டும். குறிப்பாக குழந்தைக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. பாட்டில் மூலம் உணவு பொருட்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட நபருடன் குழந்தையை தொடர்பு கொள்ள அனுமதிக்காதீர்கள்.

    கங்காரு பராமரிப்பு முறை குழந்தைக்கு எப்போது தேவைப்படாது?

    குழந்தையின் எடை 2,500 கிராமுக்கு மேல் அதிகரித்திருந்தால் அதற்கு கங்காரு பராமரிப்பு முறை தேவைப்படாது. மேலும் குழந்தை தாயின் அரவணைப்பை விரும்பாமல், அழுது அடம்பிடிக்கும் சமயத்தில் கங்காரு பராமரிப்பு முறையை கைவிட்டுவிடலாம்.

    கங்காரு முறையை கையாண்டால், தினமும் குறைந்தபட்சம் 4 மணி நேரமாவது குழந்தையை அரவணைத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 மணி முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம்.

    எந்த குழந்தைக்கு காங்காரு முறை தேவை?

    குறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘காங்காரு மதர் கேர்’ முறை தேவைப்படும். குறிப்பாக 2,500 கிராமுக்கும் குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த முறை அவசியமானது. பொதுவாக எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை ‘இன்குபேட்டர்’ உதவியுடன் பராமரிக்கும் வழக்கம் இருக்கிறது.

    அதுபோலவே தாய் தன் உடலுடன் ஒட்டியவாறு குழந்தையை பராமரிக்கும்போது உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த முடியும். குறை பிரசவம் என்பது கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு முன் பிறந்த குழந்தைகளை குறிக்கும். 2 ஆயிரம் கிராமுக்கும் குறைவாக பிறந்த குழந்தை களுக்கு கங்காரு முறை பராமரிப்பு அவசியமானது.
    இன்றைய காலகட்டத்தில், தாய்மொழிக் கல்வி மூலம் தங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏதாவது நன்மைகள் கிடைக்குமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் உள்ளது.
    தற்போதைய உலகமயமாக்கல் சூழலில், நமது மாணவர்கள் தாய்மொழி வழியில் கல்வி கற்பது குறைந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் விண்ணைத்தொடும் இன்றைய காலகட்டத்தில், தாய்மொழிக் கல்வி மூலம் தங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏதாவது நன்மைகள் கிடைக்குமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் உள்ளது.

    தாய்மொழியில் 8 வயது வரை கல்வி பயிலும் மாணவர்கள், கற்றலில் திறன் பெற்றவர்களாக இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அந்தவகையில் ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, சீனா போன்ற வளர்ந்த நாடுகள், அவர்களது தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலமே தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த சமூக வளர்ச்சியை உருவாக்க முடியும் என்ற கருத்தை பின்பற்றி வருகின்றன.

    இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் அவர்களது தாய்மொழியில் பயின்று, கண்டுபிடிப்புகளையும், இலக்கியங்களையும் படைத்துள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதனால், குழந்தையின் அடிப்படையான அறிவுத்திறனை வீட்டில் இருந்து உருவாக்கும் பொறுப்பு கொண்ட அன்னையர்கள் தாய்மொழியிலேயே தங்கள் குழந்தைகளுக்கு அறிவுசார்ந்த உலகை அறிமுகப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தாய்மொழியில் எழுதப்பட்ட இலக்கியம், அறிவியல், ஆன்மிகம், பொது அறிவு உள்ளிட்ட நூல்களை அறிமுகப்படுத்தி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

    ஒருவர் எத்தனை மொழிகளை அறிந்திருந்தாலும், அவரது தாய்மொழியில்தான் அவரால் சிந்திக்க இயலும். தனிமனித படைப்பாற்றலை வளமையாக்குவது தாய்மொழி கல்வியால்தான் முடியும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை அன்னையர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    தாய்மொழியில் பயிலும் குழந்தையின் கற்றல் முறையில் பெற்றோர்கள், குறிப்பாக அன்னையர்கள் எளிதாக பங்கேற்க இயலும். தாய்மொழியில் கதைகள், விடுகதைகள், புதிர்கள் போன்றவற்றை சொல்வதன் மூலம் குழந்தைகளது ஆர்வத்தைத் தூண்ட முடியும். அதன் வழியாக தங்கள் குழந்தைகளுக்கு உணர்வுப்பூர்வமான நம்பிக்கையும், சுய சிந்தனையும் வளரும்.

    தாய்ப்பால் பருகி வளர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வது போல, தாய்மொழியை பிரதானமாகக் கொண்டு கல்வி கற்கும் குழந்தைகள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். கற்றல், கேட்டல், எழுதுதல், பேசுதல் ஆகியவற்றில் தெளிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.

    குழந்தையின் 5 வயது வரையிலான வளர்ச்சி காலகட்டத்தில், அன்னையின் நாக்கு அசைவதை வைத்தும், குரலை உணர்ந்து கொள்வதன் மூலமும் தாய் பேசும் மொழியை புரிந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் அன்னையர்கள் தங்கள் உணர்வை, அறிவுசார் வெளிப்பாடாக அமைத்துக்கொள்ள வேண்டும். தாய்மொழியில் உள்ள இலக்கிய, ஆன்மிக, நன்னெறி, பண்பாட்டு கருத்துக்களை பேசுவதன் மூலம் குழந்தைகளை கொஞ்சி மகிழலாம்.
    காய்கறிகளைக் கண்டால் அலறியடித்து ஓடும் குழந்தைகளுக்கு, லாலேவின் பார்முலாவைப் பயன்படுத்தி உணவைக் கொடுத்தால், சமர்த்தாக சாப்பிடுவார்கள்.
    சிறு குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்கு தாய்மார்கள் அதிக சிரமப்படுவார்கள். இது உலகம் முழுவதும் தாய்மார்களின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு அளிக்கும் விதமாக உணவையே கலைவடிவத்தில் படைத்து தாய்மார்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘புட் ஆர்டிஸ்ட்’ லாலே மோமேடி.

    இன்றைய தாய்மார்கள் எதிர்கொள்ளும், குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டும் சவாலை அவரும் எதிர்கொண்டார். அப்போது அவருடைய மகன் ஜேக்கப்பிற்கு 2 வயது. அவனுக்கு உணவு ஊட்டுவதே மோமேடிக்கு நாளின் மிகப்பெரும் பணியாகியது. அந்த சமயத்தில் ஒருநாள் அவர் சிந்தித்ததுதான் ‘கார்ட்டூன் சமையல்’. நமது பாட்டிமார்கள் குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்காக குட்டிக் குட்டி தோசைகளைச் செய்து கொடுப்பார்களே, அதே தந்திரம்தான். ஆனால், அதைச் சற்று மெருகேற்றிக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் உருவத்தில் உணவு பதார்த்தங்கள் தயார் செய்து அவருடைய மகனுக்கு அளித்தார்.  

    முதன் முதலில், கேக்கை ஐந்தாறு ஆரஞ்சுச் சுளைகள், வெட்டிய தர்பூசணித் துண்டுகள், பிளாக் பெர்ரி மற்றும் சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து, சிங்க உருவத்தில் அலங்கரித்துக் கொடுத்திருக்கிறார். அதன் தோற்றத்தினால் ஈர்க்கப்பட்ட அவருடைய மகன், மிச்சமின்றி அனைத்தையும் சாப்பிட்டான். பின், அந்த பார்முலாவையே பின்பற்றினார்.

    அவரைப் போன்றே தவிக்கும் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் ‘ஜேக்கப் புட் டைரீஸ்' எனும் பெயரில் இன்ஸ்டாகிராமில் பக்கத்தைத் தொடங்கி அதில் புகைப்படத்தை பதிவிட்டார். தொடர்ச்சியாக நீமோ, ஜுட்டோபியா, சூப்பர் மாரியோ, குங் பூ பாண்டா, மிக்கி மவுஸ், ஆங்கிரி பேர்ட், பீட்டர் ராபிட், போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை தத்ரூபமாக தட்டில் அலங்கரித்து பதிவிட்டார். இன்று அவரது இன்ஸ்டாகிராம் பதிவிற்காக காத்திருந்து, சமையல் செய்யும் தாய்மார்கள் கூட்டமே உள்ளது. அவரது பக்கத்தை 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர்.

    லாலே, வெறும் அலங்காரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், சத்தான ஆகாரங்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். கதாபாத்திரத்தின் உருவங்களை செய்வதற்கு பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள், முட்டைகள், கோதுமையால் செய்த கேக் போன்ற உணவுப் பொருட்களைத் தேர்வு செய்கிறார்.

    காய்கறிகளைக் கண்டால் அலறியடித்து ஓடும் குழந்தைகளுக்கு, லாலேவின் பார்முலாவைப் பயன்படுத்தி உணவைக் கொடுத்தால், சமர்த்தாக சாப்பிடுவார்கள்.

    ‘‘உணவுகளை பதப்படுத்தமாட்டேன். வெள்ளைச் சர்க்கரை, நிறமூட்டிகளைப் பயன்படுத்துவதில்லை. நான் முதலில் இதை ஆரம்பித்தபோது, நானும்-ஜேக்கப்பும் ஒன்றாக சமையல் அறையில் இருப்போம். வெவ்வேறு உணவுகளைப் பற்றிப் பேசுவோம். இது குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு சிறந்த வழியாகும்’’ என்கிறார் லாலே மோமேடி.
    தேர்வுகள் அல்லது பாடத்திட்டம் பற்றி அழுத்தம் கொடுக்காதீர்கள். கற்றலை வேடிக்கையாக கையாள்வதற்கு அனுமதியுங்கள். சுதந்திரமாக கற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுங்கள்.
    கொரோனா அச்சுறுத்தலால் நேரடி பள்ளிப்படிப்பு முடங்கி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கற்றல் முறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டானது. பள்ளிக்கூடமே செல்லாமல் வீட்டில் இருந்தபடியே படிக்கும் வீட்டுக்கல்வி முறை நடைமுறையில் இருந்தாலும் கொரோனா காலகட்டம் அதன் மீதும் கவனம் திரும்ப வைத்திருக்கிறது.

    வீட்டுக்கல்வி மூலம் படித்த குழந்தைகளும் வெற்றிகரமான வாழ்க்கைக்குள் நுழைவார்கள் என்பதற்கு தன் பிள்ளைகளை முன்னுதாரணமாக காட்டுகிறார், ஜூன் மெண்டெஸ். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் ஆசிரியராக பணி புரிந்தவர். தனது மூன்று குழந்தைகளுக்கும் வீட்டுக்கல்வி மூலமே பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அந்த படிப்பும் அவர் களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல வைத்திருக்கிறது.

    ‘‘நான் 2010-ம் ஆண்டு வரை ஆசிரியையாக பணிபுரிந்தேன். நான் ஆங்கில ஆசிரியை. அதனால் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால் குழந்தைகளுக்கு வீட்டுக்கல்வி கற்றுக்கொடுக்க முடிவு செய்ததும் அவைகளையும் கற்றுக்கொண்டேன். நான் ஆசிரியையாக இருந்ததால் வீட்டுக்கல்வி எளிதாகிவிட்டது’’ என்கிறார்.

    ஜூன் மெண்டெஸ், பிள்ளைகளுக்கு வீட்டுக்கல்வி கற்றுக்கொடுக்க முடிவு செய்தபோது மூத்த மகள் செஸ்ட்லாவி 6-ம் வகுப்பும், மகன் ஜீயஸ் 5-ம் வகுப்பும், இளைய மகள் டென்சின் 2-ம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தார்கள். தான் ஆசிரியை என்பதற்காக வீட்டுக்கல்வியை தேர்ந்தெடுக்கவில்லை என்றும் சொல்கிறார்.

    "நான் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்தேன். அங்கு நான் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அதே போன்ற பின்னணி கொண்ட வீட்டுக்கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பியதும் இல்லை. என் கணவர்தான் இந்த யோசனையை முன்வைத்தார்.

    ஆனாலும் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க நான் தயாராக இருப்பதாக நினைக்கவில்லை. அதேவேளையில் என் குழந்தை களுக்கு கற்றலின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி குறைய தொடங்கியது. அவர்கள் மெல்ல மெல்ல தனித்துவத்தை இழந்து வருவதை கவனித்தேன். பள்ளியிலும் வீட்டிலும் படிப்புக்கு அதிக நேரம் செலவிட்டனர். அவர்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கும், மகிழ்ச்சியாக பொழுதை போக்குவதற்கும் போதுமான நேரம் கிடைக்கவில்லை.

    ``என் பிள்ளைகள் வகுப்பில் முதலிடம் பெற வேண்டும், அவர்களின் வேலையை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்று எண்ணும் சராசரி பெற்றோராக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் மகள்கள் அதிகாலையில் எழுந்து மன அழுத்தத்தோடு வீட்டு பாடங்களை முடிப்பதை பார்த்ததும் மாற்று திட்டம் பற்றி ஆலோசித்தேன். இறுதியில் வீட்டுக் கல்விதான் சிறந்த தேர்வாக அமையும் என்று முடிவு செய்தேன்’’ என்கிறார்.

    ஆரம்பத்தில் வீட்டுக்கல்விக்கான அட்ட வணையை தயாரித்து அதன்படி செயல்படுவதற்கு பிள்ளைகளை பழக்கி இருக்கிறார். அதுவும் ஒரு வகையில் நிர்பந்தப்படுத்தி படிக்க வைக்கும் சூழலை உருவாக்கியதால் அவர் களின் விருப்பப்படி செயல்பட அனுமதித்திருக்கிறார். அது அவர்களின் கற்றல் திறனை மெருகேற்றுவதற்கு உதவி இருக்கிறது. புத்தக படிப்போடு, விதவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது முதல் ஓவியம் வரைவது வரை பல்வேறு தனித்திறன்களை வளர்த்திருக்கிறார்கள்.

    எந்த விஷயத்திலும் மற்றவர்களை சார்ந்திருக்காமல் சுயமாகவே முடிவெடுத்து செயல்படும் திறனையும் வளர்த்துக்கொண்டிருக் கிறார்கள்.

    வீட்டுக்கல்வி மீது நாட்டம் கொண்டவர்களுக்கு ஜூன் மெண்டிஸ் வழங்கும் அறிவுரைகள்:

    * ஆரம்பத்தில் எந்த விஷயமும் சுமுகமாக இருக்காது. உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வையுங்கள். அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

    * சிந்தித்து செயல்படுவதற்கு பிள்ளைகளை அனுமதியுங்கள். பல வழிகளை தேர்ந் தெடுப்பதற்கும் ஊக்கப்படுத்துங்கள். இறுதியில் அதில் சிறந்ததை தேர்வு செய்து முன்னோக்கி செல்லும் பாதையை கண்டுபிடிப்பார்கள்.

    * தேர்வுகள் அல்லது பாடத்திட்டம் பற்றி அழுத்தம் கொடுக்காதீர்கள். கற்றலை வேடிக்கையாக கையாள்வதற்கு அனுமதியுங்கள். சுதந்திரமாக கற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுங்கள்.

    * எதையும் மிகைப்படுத்தாதீர்கள். ஏதாவதொரு இலக்கை நிர்ணயித்தால் அதனை நோக்கி செயல்படுவதற்கு வழிகாட்டுங்கள். அவர்களுக்கு நீங்கள் முன் மாதிரியாக இருங்கள்.

    * குழந்தைகள் சிறப்பாக செயல்பட்டால் பரிசு அளித்து ஊக்கப்படுத்துவதற்கு மறக்காதீர்கள்.

    * ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டவர்கள். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள்.
    குழந்தைகள் அவர்களது பெற்றோரின் சொத்துக்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு சட்ட ரீதியான உரிமைகள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆகியவை தரப்பட வேண்டியது அவசியம்.
    சர்வதேச சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தை என்று கருதப்படுகின்றனர். இது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு ஆகும். குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் வரையறுக் கப்பட்டது. இவை பல நாடுகளில் சட்ட திருத்தங்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டன. இந்தியாவை பொருத்தவரை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எப்போதும் சட்டபூர்வமான உரிமைகளும், பாதுகாப்பும் பெற்ற தனிப்பிரி வினராகவே கருதப்படுகின் றனர். இதனால்தான் 18 வயதானவர் களுக்கு மட்டுமே ஓட்டு உரிமை, வாகனம் ஓட்ட உரிமம், சட்டபூர்வமான ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் உரிமை ஆகியவை வழங்கப்படுகிறது.

    குழந்தை பருவத்தில் கொடுமைக்கு உள்ளாவது, தவறாக பயன்படுத்தப்படுவது ஆகியவற்றில் இருந்து காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். இதற்கு காரணம், சமூகத்தில் பெரியவர்களை விட அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பலவீனமான நிலையில் குழந்தைகளே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சமூகம் மட்டுமின்றி அரசாங்கங்களின் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கை இன்மை ஆகிய காரணங்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் அவர்களது பெற்றோரின் சொத்துக்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு சட்ட ரீதியான உரிமைகள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆகியவை தரப்பட வேண்டியது அவசியம். இதற்கு, 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவரும் தகுதி வாய்ந்தவர்கள். அதில் சிலவற்றை காண்போம்...!

    6 முதல் 14 வயது வரை உள்ளவர்கள் ஆரம்ப கல்வியை இலவசமாக பெறும் உரிமை (சட்டப்பிரிவு-21ஏ), 14 வயது பூர்த்தியாகும் வரை தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையில் வேலை செய்ய தடை(சட்டப்பிரிவு-24), பொருளாதார நிலை காரணமாக வேறு வழியின்றி வயது அல்லது வலிமையை மீறிய பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது மற்றும் கொடுமைக் குள்ளாவது ஆகியவற்றுக்கு தடை(சட்டப் பிரிவு-39இ), பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான சம உரிமை(சட்டப்பிரிவு-15), வலுக்கட்டாயமாக கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்படுவதில் இருந்து பாதுகாப்பு (சட்டப்பிரிவு-23) ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.

    இதுபோன்ற அரசியலமைப்பு சட்டங்களை தவிர குழந்தைகளின் நலனுக்காகவே குறிப்பிட்ட வகையில் பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. சமுதாயத்தில் குழந்தைகளுக்கான நியாயமான மற்றும் சம அளவிலான உரிமைகளை பெறுவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது. சிவில், அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு உரிமைகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதில் கல்வி கற்பதற்கான உரிமை, சமூக பாதுகாப்பு, கலாசாரம், போர் உள்ளிட்ட நெருக்கடி காலங்களில் சிறப்பு பாதுகாப்பு, எதையும் வெளிப்படுத்தும் உரிமை, தகவல்களை கேட்டு பெறும் உரிமை, மத நம்பிக்கைகளை தேர்தெடுக்கும் உரிமை உள்பட ஏராளமான உரிமைகள் உள்ளன.

    குழந்தைகளின் வயது ஏறும்போது பல்வேறு நிலைகளில் முதிர்ச்சி அடைகின்றனர். இதற்கு அர்த்தம், 15 அல்லது 16 வயதை அடைந்தால் இனி அவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்பது அல்ல. குறிப்பாக அந்த வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைப்பது, பணிகளில் ஈடுபடுத்தப்படுவது போன்றவை அரங்கேறுகிறது. இது முற்றிலும் தவறானது. 18 வயது வரை அவர்களுக்கு மிக சிறந்த பாதுகாப்பை அளிக்க வேண்டியது அனைவரது கடமை ஆகும். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 20-ந் தேதியை குழந்தை உரிமை நாளாக உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றனர். அன்றைய தினம் மட்டுமின்றி அனைத்து தினங்களிலும் குழந்தைகளுக்கு போதிய வாய்ப்புகளும், உதவிகளும் அளித்து சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும். இதுவே வருங்கால தலைமுறைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.
    ஓவியப்பயிற்சி, நடனப்பயிற்சி, கராத்தே பயிற்சிகளை போல குழந்தைகளின் திறன் வளர்க்கும் பயிற்சி பட்டியலில் நவீன அப்டேட்டாக கோடிங் பயிற்சி இணைந்திருக்கிறது.
    சமீபகாலமாக பெற்றோர் மத்தியில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் தலைப்புகளில் ‘கோடிங்' தலைப்பும் ஒன்று. இன்று நிறைய குழந்தைகள், பள்ளி கல்வியோடு சேர்த்து கோடிங் கல்வியும் கற்கிறார்கள். அது அவசியமான ஒன்றா?, அது குழந்தைகளின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கும்... போன்ற பல கேள்விகளுக்கு, பதிலளிக்கிறார் கல்பனா சேட்டு. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவரான இவர், கடந்த 5 வருடங்களாக ஏழை குழந்தைகளுக்கு இலவச கோடிங் பயிற்சி வழங்கி வருகிறார். அவர் கோடிங் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

    குழந்தைகளுக்கு ‘கோடிங்’ கற்றுக்கொடுக்கும் மோகம் எல்லா பெற்றோர்கள் மத்தியிலும் இருக்கிறது. இது நல்லதா?

    நல்லதுதான். ஓவியப்பயிற்சி, நடனப்பயிற்சி, கராத்தே பயிற்சிகளை போல குழந்தைகளின் திறன் வளர்க்கும் பயிற்சி பட்டியலில் நவீன அப்டேட்டாக கோடிங் பயிற்சி இணைந்திருக்கிறது. இது மற்ற பயிற்சிகளைவிட சிறப்பானது.

    எந்த வயதில் கோடிங் கற்றுக்கொள்வது சிறந்தது?

    6 வயதில் இருந்தே, கோடிங் கற்கலாம். இருப்பினும் 8 வயதிற்கு பிறகான கோடிங் பயிற்சி, சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் அப்போதுதான் குழந்தைகளிடத்தில் புரிந்து கொள்ளும் திறன், அதிகமாக இருக்கும்.

    குழந்தைகளுக்கு கோடிங் எத்தகைய வளர்ச்சியை கொடுக்கும்?

    என்னிடம் கோடிங் பயிற்சி பெற்ற, 8 வயது நிரம்பிய குழந்தைகள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர், சுயமாக கோடிங் எழுதி, அப்ளிகேஷன் உருவாக்க பணிகளில் களம் இறங்கி உள்ளனர். பலர் சுயமாகவே, சிறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க, முயற்சித்து வருகின்றனர். பள்ளி-கல்லூரி படிப்புகளை முடிப்பதற்குள், இவர்கள் கோடிங் துறையில் தங்களுக்கு என தனி மார்க்கெட்டையும், வருவாயையும் உருவாக்கிவிடுவார்கள். இதுதான் கோடிங் பயிற்சியின் வளர்ச்சி.

    கோடிங் பயிற்சிகள், பொழுதுபோக்கு பயிற்சிகளா? இல்லை வாழ்வியல்/தொழில்முறை பயிற்சிகளா?

    இது வாழ்க்கைக்கான, தொழில்முறை பயிற்சிதான். மற்ற பொழுதுபோக்கு பயிற்சிகளைவிட, கோடிங் பயிற்சியின் மூலம் நிறைய சம்பாதிக்கலாம். ஆண்ட்ராய்டு ஆப், சமூக வலைத்தளங்கள், கணினி கோடிங்... என டிஜிட்டல் உலகில், கோடிங் பயிற்சிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பள்ளி-கல்லூரி படிப்புகளில் ஜொலிக்காத பட்சத்தில்கூட, கோடிங் திறமையை கொண்டு, அதிக சம்பளம் கிடைக்கும் பணிகளில் சேரலாம். வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்தலாம்.

    குழந்தைகளுக்கு எந்தெந்த கோடிங் பயிற்சிகளை வழங்கலாம்?

    பைத்தான், ஜாவா ஸ்கிரிப்ட்... இவை இரண்டு மிகவும் சுலபமானவை. ஆனால் அவை எல்லா கோடிங் பயிற்சிகளுக்கும் அடிப்படையானவை. அதனால், இதிலிருந்து கோடிங் பயிற்சியை ஆரம்பிப்பது சிறப்பானதாக இருக்கும். சி, சி++, டாட் நெட்... என பழைய கோடிங் மொழிகள் தொடங்கி, புதிது புதிதாக பல கோடிங் மொழிகள் வந்துகொண்டே இருக்கின்றன. டிஜிட்டல் உலகின் அப்டேட்டுகளுக்கு ஏற்ப நாமும் அப்டேட் ஆவது, அவசியம்.

    கோடிங் பயிற்சியின் அவசியம் என்ன?

    கற்பனை திறனை வளர்க்க, யோசிக்கும் திறனை மேம்படுத்த, சுயமாக வாழும் மனப்பக்குவத்தை உண்டாக்க, கோடிங் பயிற்சி அவசியமாகிறது.

    கோடிங் பயிற்சி எந்தெந்த துறை மாணவர்களுக்கு கை கொடுக்கும்?

    இப்போது எல்லாமே, கணினி மயம்தான். எல்லா துறைகளிலும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிவிட்ட நிலையில், எதிர்காலத்தில் எல்லா துறைகளிலும் சாதிக்க கோடிங் அவசியமான ஒன்றாகிவிடும்.
    கோடிங் பயிற்சிக்கு, பிரத்யேக திறமை வேண்டுமா? கணிதம்/ அறிவியல் போன்ற பாடங்களில் அதிக ஈர்ப்பு வேண்டுமா?

    சிறப்பாக படிக்கும் குழந்தை/ படிக்காத குழந்தை... என்ற பாகுபாடு எல்லாம் கோடிங் பயிற்சியில் இல்லை. கோடிங் பொருத்தவரை, ஜீரோவில் இருந்து ஹீரோவாக மாறலாம். புரிந்துகொள்ளும் திறனும், கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே இதற்கு தேவை. மற்றபடி, பிரத்யேக திறமை என எதுவுமே தேவையில்லை.

    கல்பனா சேட்டு
    யூடியூப்பில் குழந்தைகளுக்கான காணொளிகள் இருந்தாலும் குழந்தைகள் அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறுவிதமான காணொளிகளையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
    குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளைத் தரக்கூடிய சில செயலிகளைப் பார்க்கலாம்.

    நாசா விசுவலைசேஷன் எக்ஸ்ப்ளோரர்

    நாசாவின் இந்தச் செயலியில் பூமியில் நிகழும் மாற்றங்கள், பால்வெளியில் நடக்கும் செயல்பாடுகள் என அனைத்து தகவல்களும் கிடைக்கும். பூமியில் மாறும் வெப்பநிலைகளால் எப்படி மாற்றம் நிகழ்கிறது, சூரியனுக்கு அருகில் செல்லும் செயற்கைக்கோள் எப்படி பாதிப்பு இல்லாமல் தகவல்களை சேகரிக்கிறது போன்ற தகவல்களை அளிக்கிறது இந்தச் செயலி. அனிமேஷன் காணொளிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    ஹவ் டு மேக் ஓரிகாமி

    காகிதத்தில் செய்யும் பொம்மைகளுக்கு குழந்தைகள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்தக் கலைக்கு ஓரிகாமி எனப் பெயர். இதன் சிறப்பம்சமே தாம் விளையாடும் பொம்மைகளை தாமே காகிதத்தில் செய்துகொள்ளலாம் என்பது தான். இது மனதுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சியை அளிக்கும். பொம்மைகளை எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியாதுதான். அதற்காகவே இருக்கிறது இந்த செயலி, ‘ஹவ் டு மேக் ஓரிகாமி'.

    யூடியூப் கிட்ஸ்

    யூடியூப்பில் குழந்தைகளுக்கான காணொளிகள் இருந்தாலும் குழந்தைகள் அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறுவிதமான காணொளிகளையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக யூடியூப் கிட்ஸ் செயலியை உபயோகிக்கலாம். இந்தச் செயலியின் சிறப்பம்சமே இதில் உள்ள பேரன்டல் கன்ட்ரோல்தான். குழந்தைகள் எதைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை இதில் தீர்மானிக்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னும் குழந்தைகள் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் செயலி தானாகவே லாக் ஆகிவிடும்.

    கான் அகாடமி கிட்ஸ்

    பிரபலமான கற்றல் செயலியான ‘கான் அகாடமி' யின் குழந்தைகளுக்கான செயலி கான் அகாடமி கிட்ஸ். இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. எண்கள் மற்றும் எழுத்துகள் கற்றுக்கொள்வது, குழந்தைகளுக்கான அடிப்படைக் கணிதம், ஆங்கில இலக்கியம் போன்றவற்றுக்கான காணொளிகளும் இடம்பிடித்துள்ளன. புத்தக வடிவிலும் தகவல்கள் இருக்கிறது. இது தவிர இயற்கை, விலங்குகள் போன்ற பள்ளிக்கல்வியை தாண்டி குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாக இருக்கின்றன.

    டைனி கார்ட்ஸ்

    புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான செயலியான டுயோ லிங்கோவின் குழந்தைகளுக்கான செயலி டைனி கார்ட்ஸ். இதில் தகவல்கள் அனைத்தும் கார்டு வடிவில் இருக்கும். குழந்தைகள் திரையைப் பார்த்துக்கொண்டு மட்டுமே இல்லாமல், ஒவ்வொரு தகவலுக்கு இடையிலும் கேள்விகளை, எப்படி உச்சரிப்பது மற்றும் மீண்டும் உச்சரித்துக் காட்டுதல் என புதுமையான கற்றல் முறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    ×