என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு பள்ளியில் இருந்து புதிய பள்ளிக்குச்செல்லும் போது நிறைய சவால்களை சந்திக்கும் நிலை உருவாகும்.
    பணியிடம் மாற்றம் காரணமாக சிலர் குடும்பத்துடன் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்வதுண்டு. சிலர் வசதிவாய்ப்பு காரணமாக தங்களது இருப்பிடங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதுண்டு. இன்னும் சிலர் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக சிறந்த கல்வி நிலையங்கள் இருக்கும் இடத்திற்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றுவார்கள்.

    இவ்வாறு ஓரிடத்தில் சில ஆண்டுகள் தங்கிவிட்டு பின்னர் வேறு இடத்திற்கு மாறும்போது, அந்த மாற்றம் எளிதாக இருப்பதில்லை. பழகிய நண்பர்களை விட்டுச்செல்லவேண்டியிருக்கும். புதிய இடத்தில் புதிய நண்பர்கள், புதிய அனுபவங்கள் பெறுவது ஆரம்பத்தில் கடினமாகவே காணப்படும். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு பள்ளியில் இருந்து புதிய பள்ளிக்குச்செல்லும் போது நிறைய சவால்களை சந்திக்கும் நிலை உருவாகும்.

    ஏற்கனவே படித்த பள்ளியில் ஆசிரியர்கள் நன்கு அறிமுகம் ஆகியிருப்பார்கள். அந்த பள்ளியின் சட்டதிட்டங்கள் நன்கு தெரிந்திருக்கும். உடன் படிக்கும் நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். இந்த நிலையில் புதிய பள்ளியில் சேரும்போது முதலில் புதிய நண்பர்களை உருவாக்கி கொள்வதே பெரிய சவாலாக இருக்கும். அடுத்து ஆசிரியர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற கடினமாக உழைக்க வேண்டும். உங்களது கல்வி அறிவை வெளிப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள், சக மாணவர்களின் அன்பை பெறலாம். அதற்காக கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

    இதுபோன்ற சூழ்நிலையில் பள்ளிக்குழந்தைகளின் மனநிலையில் மாற்றங்களும், பாதிப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த கடின சூழ்நிலையில் சிலர் தடம் மாறிப்போவதும் உண்டு. இத்தகைய சிக்கல்களில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்...



    * புதிய இடத்திற்கு செல்லும் போது ஏற்படும் பதட்டத்தை தவிர்க்க வேண்டும். இயல்பாக அனைவரிடமும் பழக தயாராக இருப்பது அவசியம்.

    * நீங்களாகவே முன்வந்து புதிய நண்பர்களுடன் உங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.

    * உங்களது திறமைகள், தனித்தன்மைகள் மூலம் நண்பர்களை எளிதில் உங்கள் வசப்படுத்தலாம். உதாரணமாக உங்களுக்கு ஓவியம் வரைவதில் திறமை இருந்தால் புதிதாக அறிமுகம் ஆகும் நண்பர்களிடம் உங்கள் ஓவியத்திறமையைக்காட்டி அவர்களை அசத்தலாம்.

    * அதுபோல உங்கள் விளையாட்டுத்திறன், பிற கைவினைத்திறன் மற்றும் போட்டித்திறன் போன்றவற்றை வெளிப்படுத்தி புதிய நண்பர்களை கவரலாம்.

    * உணவு இடைவேளையின் போது நீங்கள் எடுத்துச்செல்லும் உணவுகளை சக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் அவர்களது அன்பையும், நட்பையும் பெற முடியும்.

    * புதிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களிடம் பேசுவதற்கு தயங்கக் கூடாது. பாடங்களிலோ அல்லது புதிய பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்தோ ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் அவர்களுடன் பேசி தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

    * புதிய பள்ளியில் உங்களிடம் யாராவது வம்பு செய்தால் அவர்களுடன் மல்லுக்கட்டி போட்டிபோட வேண்டாம். அமைதியாக அவர்களிடம் பேசி புரியவைக்க வேண்டும். அதேநேரத்தில் அவர்களது குறும்பு எல்லை மீறும்போது அதை ஆசிரியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது.
    சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
    சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.

    1. இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.

    2. இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை நல்லது கெட்டதுகளை சொல்லித்தர வேண்டும். பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால், கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் செய்யும் போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் தவறு இல்லை.

    3. சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி துரத்தி உண்ணவைப்பது மிகவும் தவறு. அவர்களின் உணவுகளை அவர்களுக்கு எட்டும் இடத்தில் வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். வலிய போய் உணவைத் தருவது, அவர்களின் பிடிவாதக்குணத்தை அதிகரிக்கும். மேலும், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான உணவைத் தேர்வு செய்ய ஏழு முதல் பத்து சந்தர்ப்பங்கள் தேவைப்படும் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, ஒரு முறை குழந்தை மறுத்த உணவை வற்புறுத்தித் தருவதைவிட, வேறு வகை உணவை அதனிடம் தரலாம். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த உணவை வேறு வடிவிலோ ருசியிலோ மாற்றம் செய்து கொடுத்துப் பார்க்கலாம்.



    4. ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு ஒப்பிட அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது நல்லது.

    5. மொட்டை மாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு சேர்ந்து செய்யுங்கள். அவர்களால் செய்ய இயன்ற வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின் மனவலிமை அதிகரிக்கும்.

    6. தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை மூடுவது, போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
     
    7. ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின் சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சொந்தக்காலில் நிற்பவர்களாகவும் மாற்றும். அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.



    8. குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே,  அவர்கள் தவறு செய்யும்போது, தர வேண்டிய கிப்ட்களைத் தராமல் தாமதபடுத்தலாம். இது அவர்களுக்கு கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.

    9. மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்று காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன எனக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். அவர்களுக்குப் பிடித்தமானக் காய்கறிகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். இதனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்ணும் பழக்கமும் ஏற்படும். சமூகத் தொடர்பும் குழந்தைக்குக் கொஞ்சம் புரியும்.

    10. தினமும் படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். நாளிதழ்களில் வரும் செய்திகளில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து அவர்கள் ஏதேனும் கேட்டால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாதவாறு பாசிடிவ்வான முறையில் அதற்கு விளக்கங்கள் கொடுங்கள். இது சமூகத்தில் என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.
    குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள்.

    சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

    1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

    2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

    3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்

    4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்

    5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

    6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்



    7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

    8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

    9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

    10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

    11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

    12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

    - இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

    மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
    நம்மால் எதையும் செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்ற உறுதியான எண்ணம், இருந்தால் அவன் வாழ்வில் உன்னதமான நிலையை அடைவான்.
    நாம் எந்த செயலை மேற்கொண்டாலும் எல்லாமே வெற்றி பெறும் என்று எண்ணிவிட முடியாது. வெற்றி என்று ஒன்று இருந்தால் தோல்வியும் கூடவே வரும். நாம் தொடர்ந்து வெற்றி பெற்றோமே, இப்படி தோல்வியை சந்தித்து விட்டோமே என்று கலங்கி விடக்கூடாது. இருளும், ஒளியும் உலகின் இயற்கை. அதைப்போலத்தான் வெற்றியும், தோல்வியும். இன்பமும், துன்பமும்.

    இதைத்தான் இடுக்கண் வருங்கால் நகுக... என்கிறார் திருவள்ளுவர். துன்பம் வரும்போது எந்த நிலையிலும் துவண்டு போகக்கூடாது. இவ்விதம் துவண்டு போவதால் பொருளே இல்லை. துன்பத்தின் பின்னால் நிச்சயமாக இன்பம் வரும். இந்த உலகத்தில் சாதனை படைத்து மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் எல்லாம் தம்முடைய அரும்பெரும் முயற்சிகளால் முன்னேறியவர்கள்தான்.

    அவர், இவர் என்றில்லாமல் நம் நாட்டில் மட்டுமின்றி எந்த நாட்டிலும் முன்னேற்றம் கண்டவர்கள் அனைவரும் முயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள்தான். ஆம். கடின உழைப்பால் முன்னேறியவர்கள்தான். பெண்களே எத்துறையை சர்ந்தவர்களாக இருந்தாலும் அத்துறையில் அவர்கள் சாதனை புரிந்தவர்களாக விளங்கிட வேண்டும். அந்த சாதனை சாதாரண சாதனையாக இருத்தல் கூடாது.



    அரும்பெரும் சாதனையாக இருக்க வேண்டும். அதற்கு பெரும் உழைப்பு தேவை. ‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்’ என்று வள்ளுவர் பெருமான் ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் இதையே வலியுறுத்தி கூறுகிறார். கடினமாக உள்ளதே எவ்விதம் செய்யப்போகிறோம் என்கிற ஒருவித கலக்கம், வெற்றி பெறுவோமோ, பெற மாட்டோமோ என்ற தளர்ச்சி கூடவே கூடாது.

    முயற்சி செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும். அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் என்று கூறிய வள்ளுவர் பெருமான், அடுத்த அடியில் ‘பெருமை முயற்சி தரும்’ என்று கூறுகிறார். அதாவது நமது முயற்சிகள் நிச்சயமாக பெருமையை கொண்டு சேர்க்கும் என்கிறார். புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன் இவ்விதம் கேட்பது யார், வள்ளுவர் பெருந்தகைத்தான்.

    புகழை அடைய முடியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல் தங்களை இகழ்ந்து பேசுவோரை ஏன் நொந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஒருவன் புகழ் அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அவன் சார்ந்த துறையில் கஷ்டப்பட வேண்டும். கண் துஞ்சாமல் இரவு, பகல் பாராது உழைக்க வேண்டும். அவனுடைய அரும்பெரும் முயற்சியால் நிச்சயமாக நல்ல பலனை பெறுவான்.



    நம்மால் எதையும் செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழிக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்ற உறுதியான எண்ணம், நம்பிக்கை, முயற்சி, பயிற்சி இருந்தால் அவன் வாழ்வில் உன்னதமான நிலையை அடைவான்.

    இவ்விதம் கேட்பது யார், வள்ளுவர் பெருந்தகைத்தான். புகழை அடைய முடியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல் தங்களை இகழ்ந்து பேசுவோரை ஏன் நொந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஒருவன் புகழ் அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அவன் சார்ந்த துறையில் கஷ்டப்பட வேண்டும்.

    கண் துஞ்சாமல் இரவு, பகல் பாராது உழைக்க வேண்டும். அவனுடைய அரும்பெரும் முயற்சியால் நிச்சயமாக நல்ல பலனை பெறுவான். நம்மால் எதையும் செய்ய முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழிக்க வேண்டும். எதையும் செய்ய முடியும் என்ற உறுதியான எண்ணம், நம்பிக்கை, முயற்சி, பயிற்சி இருந்தால் அவன் வாழ்வில் உன்னதமான நிலையை அடைவான்.
    எப்போதும் குதூகலமாகவும், உற்சாகமாகவும் காணப்படும் குட்டிப்பையன்கள் இருக்கும் இடம் ‘கலர்புல்’-ஆக இருக்கவேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.
    எப்போதும் குதூகலமாகவும், உற்சாகமாகவும் காணப்படும் குட்டிப்பையன்கள் இருக்கும் இடம் ‘கலர்புல்’-ஆக இருக்கவேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புகிறார்கள். மழலை பேச்சால் கலகலப்பான சூழ்நிலையை உருவாக்கும் குட்டிப்பசங்கள் உலகமெங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக இன்றைய சூழலில் குட்டி குழந்தைகளுக்கும்கூட விளையாடுவதற்காக அவர்களுக்கென்று வீட்டில் தனியாக ஒரு இடம் வடிவமைக்கப்படுவது உலகளாவிய வழக்கமாக இருந்து வருகிறது.

    விளையாட்டில் நவீனம் :

    இன்றைய காலகட்டத்தில் அவர்கள் தலையாட்டி பொம்மைகள் அல்லது பொம்மை ரயில் வண்டிகளுடன் விளையாடுவதில்லை. ‘குட்டி கம்ப்யூட்டர்’, நவீன செல்போன் மற்றும் ‘பேட்டரி கார்’ வகையறாக்களுடன் அவர்களது விளையாட்டும் உயர் தொழில் நுட்பமாக மாறிவிட்ட காரணத்தால், வீடுகளில் அதற்கான இடவசதி செய்து தரவேண்டியது அவசியமாக மாறி விட்டது. உள் கட்டமைப்புகளில் பசங்களுக்கு தனி அறை அல்லது ஒரு பகுதி ஒதுக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயன்பாடு, கேரம் அல்லது செஸ் விளையாட இடம், படிக்கவும், எழுதவும், நோட்டு புத்தகங்கள் அடுக்க என்று அவர்களுக்கான இடவசதி தேவைப்படுகிறது. அதன்மூலம், அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்து பழகும் வாய்ப்புகள் ஏற்படும்.

    ‘குஷி’ தரும் அமைப்புகள்:

    குட்டி பசங்கள் பயன்படுத்த வசதியான ‘பர்னிச்சர்’ வகைகள் இப்போது கிடைக்கின்றன. சிறிய சைஸ் மேசைகள், அதற்கேற்ற குட்டி நாற்காலிகள் அல்லது நீளமான டெஸ்க் போன்றவை அவர்களுக்கு பலவிதங்களிலும் உபயோகமாக இருக்கும். அவர்கள் உயரத்திற்கு ஏற்ப இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. இரண்டு பசங்கள் இருக்கும்பட்சத்தில் பங்க் பெட் (இரண்டு அடுக்கு படுக்கை) அமைத்துவிட்டால் அவர்கள் குஷியாகி விடுவார்கள். மேலும், சுவர்களில் அவர்களே பயன்படுத்தும் விதத்தில் ரெடிமேடாக கிடைக்கும் குட்டி ‘வார்டு ரோப்புகள்’ அமைத்தும், தரைத்தளத்தில் பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் உள்ள ‘லான் கார்பெட்’ விரித்தும் அவர்களை பரவசமாக்கலாம். கீழே விழுந்தாலும் அடிபடாமல் புல்தரை போன்று இருப்பதால் அதன் நடுவில் சிறிய சறுக்கு மரம், குட்டி சோபா, சின்ன ஊஞ்சல், பொம்மைகளை அடுக்க அலமாரி போன்றவற்றையும் வைக்கலாம்.



    ண்ண அலமாரிகள் :

    குட்டி பையன்கள் தங்களது அறை அல்லது இடத்தில் உள்ள அலமாரிகளில் அவர்களது துணிகளை அடுக்குவது, விளையாட்டு பொருட்களை சரியாக வைப்பது, தரைப்பராமரிப்புகள் போன்றவற்றை சிறு வயதிலேயே செய்துகொள்வதற்கு மேற்கண்ட பொருட்கள் உறுதுணையாக இருக்கும். அவர்களுக்கான இடம், அவர்களது பொருள் என்ற நிலையில் அவர்களாகவே அடுக்கி வைத்து பழகிக்கொள்வார்கள். போதிய இடவசதி இல்லாத நிலையில் அனைத்து வண்ணங்களையும் கொண்ட பி.வி.சி-யால் தயாரிக்கப்பட்ட புத்தக அலமாரிகள் வைத்து, அவர்கள் விருப்பத்திற்கேற்ற விதவிதமான படங்களையும் ஒட்டி வைக்கலாம்.

    மேசை மற்றும் நாற்காலிகள் :

    தனி அறை அமைக்கும் வாய்ப்பு இல்லாவிட்டால் வீட்டின் ஒரு இடத்தை அவர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றி அவர்கள் உயரத்திற்கு ஏற்ற மேசை, நாற்காலிகள் அல்லது மேசையுடன் கூடிய நாற்காலிகள் அமைத்து தரலாம். அல்லது, ‘பிளாஸ்டிக்‘ நாற்காலிகளையும் பயன்படுத்தலாம். அவை இப்போது தரமாகவும், பல வண்ணங்களுடன் நல்ல டிசைன்களில் கிடைக்கின்றன. சுவர் பெயிண்டிங் அமைப்புக்கு மேட்சிங்-அக இருப்பதுபோல தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இடம் மிச்சமாகும் வகையில் அனைத்தும் ‘செட்டாக’ கிடைக்கின்றன. படிக்கும் மேஜையில் ‘டேபிள் லேம்ப்’ வைக்கும்பொழுது அவர்களுக்கு இடப்புறம் இருந்தால், வெளிச்சம் சரியாக கிடைப்பதோடு, நிழல் புத்தகத்தின் மேல் விழாமல் படிக்க வசதியாக இருக்கும்.

    திவான் அமைப்பு:


    அறைகளில் இடம் போதுமானதாக இல்லாவிட்டால், ‘திவான்’ படுக்கையை அமைத்தால் அமர்வதற்கும், உறங்குவதற்கும் டூ இன் ஒன்-ஆக அதாவது, பகலில் சோபாவாகவும், இரவில் படுக்கையாகவும் பயன்படும். மேலும் அதன் கீழ்ப்புறம் ‘ஸ்டோரேஜ்’ வசதி கொண்டதாக இருப்பது சிறப்பாக இருக்கும்.

    சில வீடுகளில் மாடிப்படிகளின் கீழ்ப்புறம் உள்ள காலியிடத்தில் பழைய பொருட்கள், பழைய சைக்கிள், ஷூ ஸ்டாண்டு ஆகியவை வைக்கப்படும். அந்த இடத்தையும் ‘பிளே ஸ்டேஷன்’ போன்றும் அமைத்து தரலாம். இரண்டு நாற்காலிகள், மேசை ஆகியவற்றை அமைத்து கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம். அவர்களுக்கான அறைகளில் பல்வேறு வண்ணங்கள் இருக்கவேண்டும். குறிப்பாக, வைலட், ரோஸ், நீலம் மற்றும் பச்சை போன்ற நிறங்கள் அவர்களை கவரக்கூடியது.
    இளைய தலைமுறையினரிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள், திறமை இருந்தாலும் அவர்களால் எதிர்பார்த்தபடி வெற்றிகளைப்பெற முடியாததற்கான காரணத்தை அறிந்துகொள்வோம்.
    இன்றைய இளைய தலைமுறையினரிடம் குறிப்பாக மாணவ மாணவிகளிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், திறமை இருந்தாலும் அவர்களால் எதிர்பார்த்தபடி வெற்றிகளைப்பெற இயலவில்லை. அதற்கு காரணம் என்ன என்று அறிந்துகொள்வோம் வாருங்கள்...

    முயலுக்கும், ஆமைக்கும் இடையே நடந்த ஓட்டப் பந்தயம் குறித்த கதையை அறிந்திருக்கலாம். முதலில் வேகமாக ஓடி வந்த முயல், ஆமை வருவதற்கு நேரம் ஆகும், அதுவரை கொஞ்சம் ஓய்வு எடுப்போம் என்று தூங்கியது. அந்த உறக்கம் நீண்ட உறக்கமாக இருந்ததால் மெதுவாக நடக்கும் ஆமை போட்டியில் ஜெயித்தது. ஆமையை விட வேகமாக ஓடும் திறமை இருந்தபோதிலும் தனது அதீத நம்பிக்கையால் முயல் தோற்றுப்போனது.

    இதைப்போலத்தான் இன்றைய இளைய தலைமுறையினர் உள்ளனர். அவர்களிடம் திறமை இருக்கிறது. புத்திசாலித் தனமான செயல்பாடுகள் உள்ளன. ஆனால் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஒரு செயலைச்செய்ய சிறப்பாக திட்டமிடுவார்கள். அதன்படி செயல்படவும் தொடங்குவார்கள். ஆனால் அந்த வேகம் சில காலத்துடன் நின்றுவிடும். இதனால் அவர்களால் எதிர்பார்த்த வெற்றியை பெற இயலாது.



    இதை தவிர்க்க சில யோசனைகள்:

    எந்த ஒரு காரியத்தை திட்டமிட்டாலும், அதன்படி நடக்க முன்வரவேண்டும். எந்த நிலையிலும் அதில் இருந்து பின்வாங்க கூடாது.

    ஒரு காரியத்தில் இறங்கும் முன்பு தீர யோசிக்கவேண்டும், திட்டமிடவேண்டும். ஆனால் காரியத்தை தொடங்கிவிட்டால் ஒருபோதும் அதை நிறைவேற்றுவதில் தாமதம், பின்வாங்குதல் கூடாது.

    பொறுமையுடன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியதால் தான் ஆமை வெற்றி பெற்றது. ஆனால் திறமை இருந்தும், முதலில் ஓடி வந்து வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், தனது சோம்பேறித்தனத்தால், அதிகமான நம்பிக்கையால் வெற்றிவாய்ப்பை இழந்தது முயல். அதுபோல நாம் இருக்க கூடாது.

    எனவே திட்டமிட்டு உழைத்து வெற்றியைப்பெற முயற்சி செய்யவேண்டும்.
    குழந்தைகளுக்கு ஈ.என்.டி. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய அபாயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.
    காது :

    குழந்தைகளுக்கு காது வலி தனியாக வருவதில்லை. சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும்போது காதுவலி, காது அடைப்பு மற்றும் சீழ் வடிதல் ஏற்படும். சளி இல்லாத போதும் கூட குழந்தைகளுக்கு தாங்க முடியாத காதுவலி உண்டாகலாம். பெற்றோர் அடிக்கடி குழந்தைகளின் காதை சுத்தம் செய்வதால் ஏற்படும் எழுச்சி எனப்படும் கட்டி, குருமி ஆகியவற்றால் குழந்தைகளுக்கு கடுமையான காதுவலி ஏற்படலாம். குழந்தைகளின் காது சவ்வு மிகவும் சன்னமாகவும் மிருதுவாகவும் இருக்கும். காதில் அடித்தாலோ ‘சவ்வு கிழிதல்’ ஏற்பட்டு நோய்த் தொற்றுப் பரவலாம்.

    அதிக காய்ச்சலாலும் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறையக்கூடும். பட்ஸ் பயன்படுத்தி காதில் உள்ள அழுக்கை எடுக்க முயற்சிப்பதாலும் கேட்கும் திறன் குறையலாம். காதுகளை மென்மையாகப் பராமரிக்க வேண்டும். குழந்தைக்கு காது வலிக்கிறது என்பதற்காக காதில் எண்ணெய் காய்ச்சி ஊற்றுவது தவறு. அந்தப் பழக்கம்கூட குழந்தைக்கு ஆபத்தை விளை விக்கும்.

    மூக்கு :

    பள்ளி செல்லும் குழந்தைகளும் வீடு அருகே விளையாடும் குழந்தைகளும் புறச்சூழல் காரணமாக அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள். சளித்தொல்லையால் அவதிப்படுவார்கள். மூக்குப்பகுதியில் நமைச்சல் போலத் தோன்றும். அதனால் ஏற்படும் மூக்கடைப்பு, நீர்வடிதல் போன்ற பிரச்னைகளால் சாப்பிடும் உணவை விழுங்க முடியாமல் தவிப்பார்கள்.

    தூங்கும்போதும் மூக்கடைப்பு ஏற்படுவதால் வாயால் மூச்சு விடுவார்கள். தொண்டை வறண்டு அடிக்கடி தாகம் எடுக்கும். அதனால் போதுமான தூக்கமும் உணவும் இல்லாமல் சோர்ந்து காணப்படுவார்கள். காது, மூக்கு, தொண்டைப்பகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதால் சளி அதிகரிக்கும்போது மூன்றிலும் நோய்த்தொற்றுப் பரவும்.



    சில குழந்தைகளுக்கு ‘சில்லி மூக்கு உடைதல்’ பிரச்சனை ஏற்படலாம். பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது எங்காவது இடித்துக்கொண்டு மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வெளிப்படும்.

    அதிக வெப்பம், வேதிப்பொருள், அடிக்கடி சளிப்பிடித்தல், குழந்தைகள் விரலால் மூக்கை நோண்டுதல் ஆகிய காரணங்களால் மூக்கின் சிறு ரத்தக்குழாய்களில் ரத்தம் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது. இதைப் பார்த்து குழந்தைகள் பயப்படுவார்கள். இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.

    தொண்டை :

    சில நேரங்களில் தொண்டையில் ஏற்பட்ட வலியால் குழந்தை எச்சிலை விழுங்கக்கூட சிரமப்படும். டான்சில் கட்டி இன்ஃபெக்ஷனால் காய்ச்சல் ஏற்படலாம். முறையாக பதப்படுத்தப்படாத உணவுகள், குளிர்பானங்களை உட்கொள்வதாலும் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும். சாலையோர குளிர்பானம், கரும்புச்சாறு, பழச்சாறு ஆகியவற்றில் கிருமி இருந்தால் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு தொந்தரவு செய்யும்.

    குரல்வளை மற்றும் மூச்சுக்குழாய் பகுதியில் விஷக்கிருமிகள் சேருவதால் இருமல், குரல் மாற்றம், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் குழந்தைகளின் சுவாசம் தடைபட்டு உயிருக்கே ஆபத்து ஆகலாம். தொண்டையில் சிறு பிரச்சனை உருவாகும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவில் தீர்வு காணலாம்.



    கவனம் தேவை :

    பள்ளி செல்லும் குழந்தைகளை இந்தப் பிரச்சனையிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர், ஆசிரியர் - இருதரப்பினரும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். காதிலோ, மூக்கிலோ நுழைக்கும்படியான, வாயில் போட்டு விழுங்கும்படியான பொருட்களை குழந்தைகள் கைகளில் வைத்திருக்க அனுமதிக்கலாகாது.

    சில குழந்தைகள் கையில் கிடைக்கும் மணி, பென்சில், சாக்பீஸ், கடலை, காசு, கற்கள் ஆகியவற்றை காது, மூக்கு அல்லாது வாயில் போட்டுக் கொள்வார்கள். சிலர் அருகில் உள்ள குழந்தையின் காது, மூக்கு, வாயில் போட்டு விடுவார்கள்.

    காது, மூக்கில் பொருட்களை போடும் போது அடைப்பு, ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வாயில் போட்டு விழுங்கும் போது காசு, கொட்டை வகைகள் போன்றவை உணவுக் குழாய் மற்றும் மூச்சுக் குழாயில் சென்று அடைபடும். மூச்சுக்குழாயில் சென்று அடைக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து.

    சிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், காதுவலி, தொண்டை வலி போன்றவை வராமல் பாதுகாக்க வேண்டும். அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதால் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும். பனி, மழைக்காலங்களில் அதற்கான உடைகளை அணிவித்துப் பாதுகாக்க வேண்டும்.

    தூசு மற்றும் அசுத்தமான சுற்றுப்புறத்தால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாகப் பார்க்க வேண்டும். ஈ.என்.டி. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய அபாயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.
    மசாஜ் செய்வது குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுப்பதுடன் குழந்தை தன் தாயிடம் அன்பான நம்பிக்கையான உணர்வை அனுபவிக்கும்.
    குழந்தைகள் மசாஜ் என்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே ஆறுதலைத் தரவல்லது. ஆமாங்க ! குழந்தைகளுக்கும் பொழுதுபோக்கு இல்லையென்றால் மனா அழுத்தம் உருவாகும். மசாஜ் பல உடல் ரீதியான நன்மைகள் நிறைந்தது என்பதோடு குழந்தையின் உணவுச் செரிமானம், இரத்த ஓட்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

    குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் சரியான வளர்ச்சிக்கும் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளில் தசை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது. துரதிருஷ்டவசமாக சிலக் குழந்தைகள் ஏதாவது ஒரு குறைபாடுடன் பிறக்கின்றன. எனவே மசாஜ் ஆஸ்துமா, சர்க்கரை நோய் அல்லது சரும பிரச்சனைகளால் அவதியுறும் குழந்தைகளுக்கு மிகவும் பயன் தரக்கூடிய ஒன்று.

    தற்போது மருத்துவர்கள் புற்று நோயால் அவதியுறும் குழந்தைகளுக்கும் உடம்பு மசாஜ் மன அழுத்தத்தை குறைத்து எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் இது மிகவும் பயனளிப்பதாக உள்ளது. குழந்தைகளுக்கு மசாஜின் மூலம் கிடைக்கும் நன்மைகள் இதோ :



    - குழந்தைகளின் தீவிரப் போக்கு குறையும் - குழந்தைகளின் தூக்கத்தை மேம்படுத்தவும் அவர்களுடைய தூக்க முறைகளை நெறிமுறைப்படுத்தவும் உதவுகிறது

    - மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஆரோக்கியமாக அதாவது எடை சீக்கிரமாக கூடுவர்.

    - உணர்ச்சிகளை மேம்படுத்தவும் குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்தவும் மசாஜ் உதவுகிறது

    - உணவு உட்கொள்ளுதலை மேம்படுத்துகிறது

    - குழந்தைகளில் அதிகம் காணப்படும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது

    - உடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது



    - குழந்தைகள் புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாக உணரவும் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது. இந்தக் குழந்தைகள் சட்டென எதையும் புரிந்துகொள்ளவும் சமாளிக்கவும் செய்வர்.

    - அது குழந்தையை தாயுடன் ஒரு வாழ்நாள் பந்தத்தை கொள்ள உதவுகிறது. அவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் புத்தி கூர்மை நிறைந்தவர்களாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பேறு காலத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்திற்கு சில தாய்மார்கள் உள்ளாவதுண்டு. இது பொதுவாக ஒரே மாதிரியான செயல்களை செய்துகொண்டு ஒரே அறையில் முடங்கி கிடைப்பதால் இருக்கலாம்.

    குழந்தைக்கு 15-20 நாட்கள் ஆனவுடனேயே மசாஜ் செய்யத் தொடங்கிவிடுங்கள். மசாஜ் செய்தபின்பு வெதுவெதுப்பான தண்ணீரால் குளிப்பாட்டி விடுவதன் மூலம் உங்கள் குழந்தையை ஆசுவாசப்படுத்தவும் நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும்.
    வீட்டில் குழந்தைகளுக்குள் வரும் சண்டைகளை தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
    ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் வீடு கலகலப்பாக உற்சாகமாக தான் இருக்கும். ஆனால் அவர்களே ஒருவருக்கொருவர் அடித்து சண்டை போட்டு கொண்டு அழுது கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கும்? குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தை வளத்துக்கொண்டால் பிற்காலத்திலும் இதே கோபம் நிலைக்க வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளின் சண்டைகளை தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

    நீங்கள் இளைய பிள்ளை வந்த உடன் இளைய பிள்ளையை மட்டுமே அதிகமாக கவனித்துக்கொண்டு இருப்பீர்கள். அது உங்கள் மூத்த பிள்ளைக்கு வருத்தத்தை தரலாம். எனவே இரு பிள்ளைகளுடனும் நேரத்தை செலவிடுங்கள். மூத்த குழந்தை ஒரளவு வளர்ந்திருந்தால், அந்த குழந்தைக்கு என சில வேலைகள் இருக்கும். எனவே இளைய பிள்ளை அளவுக்கு நேரம் செலவிட வேண்டி வராது. ஆனாலும் குறிப்பிட்ட நேரத்தை மூத்த பிள்ளைக்காக செலவிடுவது நல்லது.



    ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் விளையாட்டாக கூட ஒப்பிட்டு பேச வேண்டாம். இது ஒருவர் மீது ஒருவருக்கு கோபத்தை உண்டாக்கும்.

    உங்களது இரு பிள்ளைகளுக்கு இடையே உள்ள பாசத்தை அதிகப்படுத்த வேண்டியது உங்களது கடமையாகும். எனவே உன் மீது அக்கா / அண்ணன் நிறைய பாசம் வைத்து இருக்கிறான். உன்னை நன்றாக பார்த்துக்கொள்வான். நீ எதுவானாலும் அவனிடம் கேள் என்பது போன்ற வார்த்தைகளை கூறி இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்க வேண்டியது உங்களது கடமை.



    உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால், அவர்கள் இருவருக்கும் எது செய்தாலும் சரிசமமாக செய்வது அவசியம். ஒருவருக்கு குறைவாகவும், ஒருவருக்கு அதிகமாகவும் செய்வது நீங்களே அவர்களுக்குள் சண்டையை உண்டாக்குவது போன்றதாகும்.

    இதை எல்லாம் செய்தும் கூட இன்னும் சண்டை போடுகிறார்கள் என்றால், கட்டாயம் வேறு ஏதாவது முக்கியமான காரணம் இருக்கும். அது என்னவென்று தெரிந்து அதை சரி செய்ய தவறாதீர்கள். குழந்தைகளை ஒப்பிட்டு பேசுதல், ஒருவரை அதிகமாகவும் மற்றொருவரை குறைவாகவும் பார்ப்பது ஆகியவை பெற்றோர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் ஆகும்.



    ஒரு ஆரோக்கியமான மனநிலையுடன் குழந்தை வளர இவற்றை எல்லாம் செய்யாதீர்கள். உங்கள் குழந்தையின் திறமையை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆகியவை தான் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கிய கடமை ஆகும்.
    எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதனை பற்றி விவாதித்து, அதன் நிறை குறைகளை பட்டியலிடும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
    வீட்டு விஷயங்கள், நாட்டு நடப்புகள்பற்றி குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். நிறை குறைகளை பற்றி விவாதியுங்கள். எல்லா விஷயங்களையும் அவர்களுடைய கண்ணோட்டத்தில் சிந்திக்க செய்யுங்கள்.

    எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதனை பற்றி விவாதித்து, அதன் நிறை குறைகளை பட்டியலிடும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தெளிவான கண்ணோட்டத்துடன் எதையும் அணுகி நன்மை, தீமைகளை எளிதில் அறிந்து கொள்ளும் பக்குவம் ஏற்படும். எல்லாவற்றையும் விவாதித்து, உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்ட தொடங்கிவிடுவார்கள்.

    பெரியவர்களுக்கு தோன்றாத சந்தேகங்கள் கூட குழந்தைகளிடம் எழலாம். அவர்கள் மத்தியில் எழும் சந்தேகங்களை நோட்டில் எழுத சொல்லுங்கள். அந்த கேள்விகளுக்கான பதிலை யோசித்து அவர்களையே கண்டுபிடிக்க சொல்லுங்கள். அப்படி பயிற்சி கொடுப்பது அவர்களுடைய சிந்தனை ஆற்றலை மேம்படுத்தும். அதன் மூலம் எதையுமே நன்கு சிந்தித்து அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடும்.



    ஏராளமான நூல்களை படித்தவர்கள் கூட தனித்திறன்கள் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் புத்தகங்களை ஆழ்ந்து படிக்காதவர்களும், கல்வி அறிவு அதிகம் இல்லாதவர்களும் கூட சாதனையாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். எவ்வளவு படித்தோம் என்பதை விட எப்படி படித்தோம் என்பதுதான் முக்கியம். படித்த விஷயங்களை சிந்தித்து பார்த்து அதன்படி நடக்க வேண்டும்.

    படித்த விஷயங்களை பற்றி சிந்திக்கும்போது நிறைய புதிய விஷயங்கள் மனதில் உருவாகும். சிந்தித்து செயல்படும் குழந்தைகளிடம் வெறுமனே மனப்பாடம் செய்து படிக்கும் எண்ணம் தோன்றாது. ஆழ்ந்து கற்று அதில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வார்கள். அது அவர்களுடைய அறிவை கூர்தீட்டும். மதிப்பெண் பெறும் எந்திரமாக அல்லாமல் கற்றறிந்த விஷயங்களை கொண்டு தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்வார்கள்.
    குழந்தைகள் பொய் சொல்வதை தடுக்க சில வழிமுறைகளை பெற்றோர் கடைபிடிக்க வேண்டும். பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.
    1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள்.

    2. குழந்தைகளுக்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா“னு கேக்கும்போது, இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு. இந்த பழக்கம் தான் பின்னாளில் குழந்தைகளை பொய் சொல்ல தூண்டும்.

    3. உங்கள் குழந்தை செய்யும் சிறு தவறு செய்யும் போது கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்). தண்டனைக்கு பயந்து குழந்தைகள் பொய் சொல்ல நினைப்பார்கள். குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு அவர்களுக்கு அந்த தவறால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அன்பாக புரிய வையுங்கள்.

    4. குழந்தைகளின் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள்.



    5. இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்).

    6. குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும்.

    7. பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்துக் கூறுங்கள்.

    8. உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பலவகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.

    குழந்தைகளுக்கு பிறரிடம் இருந்து தேவையில்லாத சில பழக்கங்கள் தொற்றிக்கொள்ளும். அந்த பழக்கங்கள் என்ன அதனால் ஏற்படும் அசௌகரியங்கள் என்னவென்று பார்க்கலாம்.
    வேண்டா பழக்கங்கள் :

    தலைசொறிதல், மற்றவர்களை கேலி செய்தல், பொது இடங்களில் பாடல்களை முணுமுணுத்தல், கத்தரிக்கோல் கையில் கிடைத்தால் காகிதங்களை துண்டு போடுதல், கம்பு கைகளில் கிடைத்தால் சும்மா சுழற்றிக் கொண்டிருப்பது, விரல் சப்புவது, மற்றவர்களிடம் வம்பிழுப்பது, சூயிங்கம் மெல்வது, புகைப்பிடித்தல், பேனா, பென்சில், புத்தகம் ஆகியவற்றின் வாசனைகளை நுகரும் வித்தியாசமான பழக்கம் போன்றவையும் குழந்தைகளிடம் உள்ள வேண்டா பழக்கங்களில் சிலவாகும்.

    கத்தரிக்கோலை தேவையின்றி எடுத்து விளையாடக்கூடாது. புதுவித வாசனைகளை நுகரும் பழக்கம் சில நேரங்களில் பேராபத்தாய் முடிய வாய்ப்பு உண்டு. சில வாசனைகள் மயக்கத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற தேவையற்ற பழக்கங்களை தடை செய்ய வேண்டும்.

    கத்தரிக்கோலை முறையாகப் பயன்படுத்தி காகிதங்களை வெட்டி உருவங்கள், வடிவங்களை உருவாக்கும் ‘ஒரிகாமி’ கலையில் ஆர்வம் வளர்த்துக் கொள்ளலாம். காகித கலைப் பொருட்கள் செய்தும் பொழுது போக்கலாம். இதனால் திறமைகள் வளர்வதுடன், நினைவுத்திறனும், கற்பனைத்திறனும் மேம்படும். இது நன்றாக பாடம் படித்து வெற்றி பெற துணை செய்யும். அவசியமற்ற வேடிக்கை செயல்களை கைவிட்டு, அவசியமானவற்றை செய்யும்போது வெற்றிகள் விரைந்தோடி நம்மிடம் வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை!



    மூக்கை சொறிதல் :

    நம்மை அறியாமல் செய்யும் மோசமான செயல்களில் ஒன்று மூக்கை நோண்டுதல். நாசித் துவாரங்களில் தேவையற்ற தூசுகள் நுழைந்தால் மூக்கு இயற்கையாகவே தும்மலை வரவழைத்து, அவற்றை அப்புறப்படுத்திவிடும். இருந்தாலும் சில நேரங்களில் நாசித் துவாரங்களில் சேரும் அழுக்குகளும், தூசிகளும் அவற்றை சொறிந்து அகற்றும் உணர்வைத் தூண்டலாம்.

    அப்போது பொது இடங்களிலும் நம்மை அறியாமலே கைகள் மூக்கைத் தேடிச் செல்லும். இருந்தாலும் அது கட்டுப்படுத்தப்படுத்தப்பட வேண்டும். இந்த பழக்கம் மற்றவர்களிடம் உங்களை சுத்தம் மற்றும் ஒழுக்கமற்றவராக காண்பிக்கும். கேலிப் பேச்சுக்கு வழிவகுக்கும். எனவே இதை தவிர்க்க வேண்டும். குளித்து முடித்தவுடன், காதுகளையும், மூக்கையும் சுத்தமான பஞ்சுத் துணிகளால் ஒற்றி எடுத்து சுத்தமாக்கிக் கொண்டால் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம்.



    கிறுக்கும் பழக்கம் :

    சிலருக்கு பாட வகுப்பிலும், மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதும், ஓய்வாக இருக்கும் போதும் பேனா, பென்சிலை எடுத்து ஏதாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் பழக்கம் இருக்கும். உங்கள் பாடப் புத்தகம், குறிப்பு புத்தகங்களில் இந்த கிறுக்கல்கள் இருந்தால் நீங்களும் அவசியமற்ற அந்தப் பழக்கத்திற்கு அடிமை என்று கூறிவிடலாம்.

    இதனால் நோட்டு புத்தகங்கள் பாழாவதுடன், ஆசிரியர் நடத்திய பாடங்களை கவனிக்க முடியாமல் போகும் வாய்ப்பு ஏற்படும். இது படிப்பில் பின்தங்கிய நிலையை உருவாக்கும். இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பெரியவர்களான பின்பும், அலுவலக நேரத்தில் இப்படி கிறுக்கி அவப்பெயரை சந்திப்பது உண்டு. தவறான இந்த பழக்கத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். கிறுக்கிக் கொண்டிருக்கும் பழக்கத்தை ஓவியம் வரையும் ஆற்றலாக மாற்றி வெற்றி பெறுங்கள்.



    காது குடைதல் :

    மூக்கை நோண்டுவது போலவே சிலருக்கு காது குடையும் பழக்கம் உண்டு. காதுகளில் அழுக்கு எதுவும் சேராமலே, சுகத்திற்காக சும்மா காது குடைபவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகள் பலர் பென்சில், பேனா, கொண்டை ஊசி உள்ளிட்ட பொருட்களையும் காது குடைய பயன்படுத்துவது உண்டு. இது ஆபத்தான செயலாகும். அவசியமற்ற இந்தப் பழக்கத்தால் செவிப்பறைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. காதில் புண்களும் ஏற்படலாம். முடிந்த வரையில் காது குடைவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பஞ்சுத் துணி அல்லது பஞ்சு குச்சத்தால் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். பிஞ்சுக் குழந்தைகள் தாங்களாக காது குடையாமல், பெற்றோர் உதவியுடன் காதுகளை சுத்தம் செய்யுங்கள்.

    கடித்து குதறுதல் :

    நகம் கடித்தல், கையில் கிடைக்கும் பென்சில், பேனா மூடி மற்றும் பொருட்களை கடித்துக் கொண்டிருப்பதும் சிலருக்கு வாடிக்கை. சிலர் சட்டை காலரையும், இன்னும் சில பொருட்களையும் கடித்துக் கொண்டே இருப்பார்கள். தீங்கு விளைவிக்கும் பழக்கங்களில் இதுவும் ஒன்று. நக இடுக்குகள் மற்றும் பொருட்களில் உள்ள அழுக்குகள், கிருமிகள் வாய் வழியே உடலுக்குள் புகுந்துவிட வாய்ப்பு உண்டு. பென்சில் நுனி போன்ற ரசாயன பொருட்களும் வாய்க்குள் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால் நோய்த் தொற்றும் மற்றும் பல்வேறு பின்விளைவுகளும் ஏற்படலாம். எனவே கையில் கிடைத்ததையெல்லாம் கடித்துக் குதறும், வெறிநாய்க் குணத்தை விட்டொழியுங்கள்.
    ×