search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொய்"

    ரபேல் போர் விமான ஊழல் புகாரில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலமாகிவிட்டது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். #DevendraFadnavis #RafaleDeal
    மும்பை :

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.

    இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்துகொண்டு சர்வதேச சமூகம் முன் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டினார். ஆனால் உண்மை சூரியன் போன்றது. சுப்ரீம் கோர்ட்டு எந்த விசாரணையும் இன்றி ரபேல் விமான வழக்கை தள்ளுபடி செய்ததன் மூலம் எங்கள் நிலைப்பாடு நிரூபணமாகியுள்ளது.



    ராகுல் காந்தி தேர்தலுக்காக பாராளுமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி உள்ளார்.

    அவரின் பொய்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ததற்காகவும், நம் நாட்டின் பெருமையை சர்வதேச சமூகம் முன் சீர்குலைத்ததற்காகவும் நாட்டு மக்கள் முன்பும், பிரதமர் மோடியிடமும் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கோரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DevendraFadnavis #RafaleDeal

    உண்மையா பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பரப்பலாம் என ராஜஸ்தானில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அமித்ஷா தொண்டர்களிடம் பேசியுள்ளார். #BJP #AmitShah
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “உண்மையோ பொய்யோ நாம் நினைக்கும் செய்தியை பகிரலாம். சுமார் 32 லட்சம் பேர் நம் வாட்ஸப் குரூப்களில் உள்ளனர். இதனால், எதையும் வைரலாக ஆக்கலாம்” என அவர் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    “சமீபத்தில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தையான முலாயம் சிங்கை அடித்து விட்டதாக வாட்ஸப்பில் புரளி பரவியது. உண்மையில் அப்படி நடக்கவில்லை என்றாலும் அது வைரலானது. நம்மிடம் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் தகுதி உள்ளது. அதனால், உண்மைத்தண்மையை பற்றி கவலைப்பட வேண்டாம்” எனவும் அமித்ஷா பேசினார்.

    அமித்ஷாவின் பேச்சை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அகிலேஷ் யாதவ், “நாட்டின் ஆளுங்கட்சி தலைவர் பொய்களை பரப்ப தனது தொண்டர்களை எப்படி தூண்டிவிடுகிறார். அரசின் மீது உள்ள பல்வேறு பிரச்சனைகளை மறைக்க இப்படி பொய்களை பரப்ப பாஜக முயற்சிக்கிறது. இடைத்தேர்தல் தோல்வியை போல வரும் அனைத்து தேர்தலிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்கும்” என பதிவிட்டுள்ளார்.
    ×