என் மலர்
குழந்தை பராமரிப்பு
மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால், அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது.
இன்றைய மாணவர்கள் செல்போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை போக்குவதால் விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருக்கிறார்கள். இது அவர்களது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். விளையாடுவதால் எத்தனை பயன்கள் உள்ளது என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்...
மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால், அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகின்றது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர், தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கின்றார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ளவராகவும் மாறுகிறார்.
விளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின்போது, ஒவ்வொரு மாணவரும் மற்ற மாணவர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது.

விளையாட்டில் ஈடுபடும்போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக் கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்து கொள்ளல் போன்றவற்றை அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
இவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர்கள் தங்களது இலக்கு களை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றனர். விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவே விளையாட்டில் உண்டாகும் ஏனையோரை மதிக்கும் பழக்கம் பின்னர் அவரை வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்க செய்கின்றது.
விளையாட்டில் ஈடுபடும்போதும் அதற்கான பயிற்சிகளின்போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும்போது அவர் கள் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும் இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. எனவே மாணவர்கள் திறந்தவெளியில் விளையாடுவது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் பெருமிதம் தரக் கூடியதாக இருப்பது எது தெரியுமா? தன்னுடைய உலகமான தன் பெற்றோர் தன்னைப் புகழ்வதைக் கேட்பதே.
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச்சான்றோன் எனக் கேட்ட தாய்.
என்ற வள்ளுவனின் சொல்லுக்கேற்ப ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தன் மகனை இந்த உலகம் சான்றோன் எனக் கூறக்கேட்பதை விட பெருமிதம் தரக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?!
இதுவே ஒவ்வொரு பிள்ளைக்கும் பெருமிதம் தரக் கூடியதாக இருப்பது எது தெரியுமா? தன்னுடைய உலகமான தன் பெற்றோர் தன்னைப் புகழ்வதைக் கேட்பதே.
ஆனால் இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள்.
இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்சினையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுவதோடு அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள், குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச்சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக்கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.
பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரை யாளரான ஜோசப் யுபர்ட், குழந்தை களுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார்.
நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டில் பின் எப்படி திருந்துவார்கள்?
இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை. உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச்சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான். ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம், அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக்கொள்கிறோம். அதைப்பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித் துப் பேசுவதில்லை.
ஆனால் இதுவே குறை களைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு துருவித்துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம். இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம், உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம் நீயும் இப்படித்தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் அப்படியே கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது. வாழ்வியல் பட்டறை ஒன்றில்,எப்போது பார்த்தாலும் என் கணவர் என்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று அங்கலாய்த்த பெண்ணிடம் அந்த பயிற்சியாளர் கேட்டார், ‘உங்கள் பையன் எப்படி இருக்கிறான் நன்றாகப் படிக்கிறானா?’
நாம் கணவரைப் பற்றி பேசினால் இவர் அதற்கு பதில் சொல்லாமல் நம் பையனைப் பற்றி கேட்கிறாரே என்று சம்பந்தமில்லாத அவர் கேள்வியால் கொஞ்சம் எரிச்சலடைந்த அந்தப் பெண், “படிப்பு பரவாயில்லை நல்ல மார்க் தான் வாங்குகிறான். ஆனால் பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அவன் தம்பியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை, அப்படி இப்படி என குறைகளை ஒரு ஆதங் கத்தோடு அடுக்கிக் கொண்டே போகத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகக் காத்திருந்த பயிற்சியாளரும், அது முடி வதாகத் தெரியவில்லை என்ப தால் வேறு வழியில்லாமல் அவர் குறைகளினூடே இடை மறிக்கிறார்.
இதையெல்லாம் நீங்கள் என்னிடம் தான் சொல்கிறீர்களா இல்லை உங்கள் பிள்ளையிடமும் சொல்லி இருக்கிறீர்களா? என்ன கேட்கிறீர்கள் அவனிடம் சொல் லாமலா... ஒவ்வொரு முறையும் அவன் குறைகளை சுட்டிக் காட்டுவதிலே தான் என் பொழுதே போகிறது. “ஏன்?” இது பயிற்சியாளர்.
சொன்னால் தானே தெரியும் .அப்போது தானே திருந்துவான். அவன் அவனைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆனால் எங்கே திருத்திக் கொள்கிறான், கோபம் தான் படுகிறான். நாம் ஏதோ அவனிடம் குறை கண்டு பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்று எரிச்சல் தான் வருகிறது அவனுக்கு என்றார் சற்று முன் தன் கணவர் தன்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக் கிறார் என்று எரிச்சல் பட்ட அந்தப் பெண்.
இது தான் நிதர்சனம். நாம் குறை சொல்லும்போது நாம் அவர்கள் மேல் அக் கறை எடுத்து திருத்துகிறோம் என்று பலமாக நம்புகிறோம். ஆனால் இதுவே நம்மை யாராவது குறை சொன்னால்,” ஏன் இப்படி இருக்கிறாரகள்?! எப்போது இவர் கள் திருந்துவார்கள் என்று பலவீனமாகித் துடிக்கிறோம். படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும் அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப்பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது, முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், சுவீட் வாங்கிக் கேட் டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்து விடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது. நாம் செய்வது சரிதானா? வாழ்வியல் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
பிள்ளைகளை நாம் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள், “தாங்கள்” எதற் கும் தகுதி இல்லாதவர்கள் என தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நம்பத் தொடங்கி விடுகிறார்கள். அதனால் மற்றவர்களை விட்டும் தனித்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தன் மனதில் இருப் பதை பிறரிடம் சொல்ல அச்சப் பட்டு தனக்குள்ளே பேசிக் கொள்ளும் இயல்பை வளர்த்துக் கொள்வதோடு, தன் பெற்றோர்கள் தங்களை வெறுக் கிறார்கள் என மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகிவிடுகிறார்கள் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.
உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப்பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும்போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.
நீ சோம்பேறி, நீ எதற்கும் லாயக் கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும்போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடு கிறான்.
குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவே படும். மட்டுமல்ல அதனால் மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என் றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது. அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.
குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டு நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும் என அறிவுறுத்துகிறார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”. நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப்படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”
இதில் ஆழ்மன இயல் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப் படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும் .ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாக மாறி விடும் வாய்ப்புண்டு என்ற நமக்கு எச் சரிக்கை தருகிறது.
உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.
www.facebook.com/fajilaazad.dr
Email:fajila@hotmil.com

அதிகமாக, டிவி பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அதிகமாக, டிவி பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அத்தோடு அவர்கள் சரியாக துாங்கவும் மாட்டார்கள். ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக டிவி பார்ப்பது தான் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதுகாப்பானது.
ஹைபர்ஆக்டிவ், நடத்தையில் பிரச்னை இருக்கிறதா போன்ற சர்வேக்களை எடுத்துள்ளனர். அதில் 1 வயதுள்ள குழந்தைகள் 1278 பேரும் 3 வயதுள்ள குழந்தைகள் 1345 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தனது 7 வயதுக்குள் 10% குழந்தைகள் இப்பிரச்னைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
கல்வி தொடர்பான விஷயங்களிலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். படிப்பு, பள்ளி மீது ஆர்வம் குறைகிறது.
மொழி திறனும் குறைந்து வருகிறது. டிவியில் உள்ள கார்ட்டூன்களைப் பார்த்து அங்கு பேசப்படும் மொழியை தாங்களும் பேசுகின்றனர்.
மேலும் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்பதானாலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதானாலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன.
இக்குழந்தைகளால் படிப்பில் ஆர்வத்தைக் கண்பிக்க இயலாது. பிற்காலத்தில் இவர்கள் யதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் துன்புறுவர்.
அலைபேசி, கம்ப்யூட்டர், டேப்லட், ‘டிவி’ ஆகியவற்றை இன்றைய குழந்தைகள் நிறைய நேரம் பார்க்கின்றனர். இதனால் குழந்தைகளின் சிந்திக்கும் திறன், துாக்கம் மற்றும் பார்வைத்திறன் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.
எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது தவறு.
தொலைக்காட்சியே பார்க்காமல் இருப்பதும் தவறு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை குழந்தைகளை தினமும் பார்க்கச் செய்வது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும்.
உங்கள் வீட்டுக்குள் வரும் உலகத்தை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுவதாக அமையும். பொதுவாக குழந்தைகள் 8 மணி நேரம் துாங்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவனுக்கும் தனது வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அவர்களது ஆசிரியர்களை நினைவு கூறும் சூழ்நிலை உருவாகும்.
ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள். 1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி திருத்தணியில் உள்ள சர்வ பள்ளி என்ற இடத்தில் மகா தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தார். கல்வியின் செல்வரான இவர் நம் நாட்டிலேயே தான் கற்ற தத்துவ சித்தாந்தங்களை கற்பித்து, சிறந்த ஆசிரியராக திகழ்ந்தார்.
இவர் பிறந்த நாளை 1962-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். எவ்வித உலக அறிவும் இல்லாமல் பள்ளியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு தனது அனுபவ அறிவால் உலகையே உள்ளங்கையில் அள்ளித்தருபவர்களே ஆசிரியர்கள்.
இன்றைய ஆசிரியர் புதிய விஷயங்களை கற்பதிலும், கற்பித்தலிலும் என்றும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டுமானால் உலகியல் மற்றும் பொது விஷயங்களை அன்றாடம் கற்பிக்கும் ஒரு மாணவனாக இருக்கவேண்டும்.
‘எழுத்தாணி பிடித்து விரலுக்கு எழுத கற்றுத்தருபவர்” எழுத்துக்களை படிக்கக் கற்றுத்தருபவர் ஆசான். ஆசிரியர் எனும் சிற்பி, கல்வி எனும் உளிகொண்டு, ஒவ்வொரு மாணவனையும் அறிவு, பண்பாடு, ஒழுக்கம், நன்னடத்தை, தர்ம சிந்தனை கொண்ட சிற்பிகளாக வடிவமைக்கிறார். இவர்கள் வெறும் சிற்பங்கள் அல்ல, நல்லாசிரியர்களால் கவனமுடன் உருவாக்கப்பட்ட இந்தியாவின் வெற்றிச் சிப்பாய்கள். வருங்காலத்தில் அனைத்து துறைகளிலும் தன்பாதங்கள் பதித்து, வெற்றிக்கொடியை நடுவார்கள்.
ஒவ்வொரு மாணவனுக்கும் தனது வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அவர்களது ஆசிரியர்களை நினைவு கூறும் சூழ்நிலை உருவாகும். ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கைக்கும் ஆசிரியர்களே கலங்கரை விளக்காக திகழ்கின்றனர். பள்ளியின் முதுகெலும்பாக திகழும் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆறாம் அறிவிற்கு கல்வி புகட்டி, கூர்மை சேர்ப்பவர்கள் நாளைய சமுதாயத்துக்கு நல்லெண்ணம் போதிப்பவர்களான உங்களுக்கு நன்றி கூறி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சி.

ASD கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பின்வரும் சில பொதுவான அறிகுறிகள் வெளிப்படும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ASD-ன் அறிகுறிகள்
ஒரு குழந்தை வளர்ச்சியின் மூன்று முக்கிய பகுதிகளில் ASD-ன் (Autism spectrum disorder) அறிகுறிகள் வெளிப்படும். Social interaction என்கிற சமூக தொடர்பு, Communication (Verbal & Nonverbal) என்கிற வாய்மொழி தொடர்பு மற்றும் வாய்மொழி அல்லாத சைகைகள், உடல்மொழி, Thinking and behavioral skills என்கிற சிந்தனை மற்றும் நடத்தை திறன் போன்ற இந்த மூன்று வகைகளில் ASD-ன் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. ASD கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பின்வரும் சில பொதுவான அறிகுறிகள் வெளிப்படும்.
* ஏதாவது ஒரு செயலை செய்யும்போது அவர்களின் கண்கள் எந்தவொரு தொடர்புமின்றி இருப்பது அல்லது புன்னகை இல்லாமல் இருப்பது.
* அவர்களின் பெயர் சொல்லி அழைக்கும்போது எதிர்வினையாற்றாமல் இருப்பது அல்லது சீரற்ற முறையில் செயல்படுவது.
* சிறிய சத்தத்திற்கு அதிகளவிலான உணர்வினை வெளிப்படுத்துதல்.
* சொந்த எண்ணங்களை இழத்தல்.
* தன்னைத் தானே அடித்தல் அல்லது கடித்தல்.
* நாம் தொடர்பு கொள்ளும்போது அதற்கு அவர்கள் எந்தவொரு சைகையும் செய்யாமல் இருப்பது.
* பார்க்கும் பொருட்களை கண்களால் பின்தொடர இயலாமை.
* நண்பர்களை உருவாக்க இயலாமை.
* ஏதாவதொரு வார்த்தையை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பது அல்லது ஏதாவதொரு உடல் அசைவினை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பது போன்றவை.
ஆட்டிசத்திற்கான காரணங்கள்
தற்போது வரை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் அதைத் தூண்டும் காரணிகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில அரிய மரபணு மாற்றங்கள், சுற்றுச்சூழல் அழுத்தங்கள், கருத்தரிக்கும்போது பெற்றோரின் வயது, கர்ப்ப காலத்தில் தாய்வழி நோய்கள், பிறக்கும்போது ஏற்படும் சிரமங்கள், குழந்தையின் மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல காரணிகளும் நோயின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது, நகர்ப்புற வாழ்க்கையில் குழந்தைகளை சரியாக பராமரிக்க பெற்றோர் நேரம் ஒதுக்காதது, செல்போன், டிவி, வீடியோகேம், லேப்டாப் போன்ற காட்சித்திரை சார்ந்த பொருட்களில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளிலோ, நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஆட்டிசம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

"ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறிவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான்.
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’
என்பதனை திருக்குறளின் முதல் கவிதையாக அமைத்துள்ளார் திருவள்ளுவர்.
"ஆசிரியர்கள் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறிவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள்தான். ஆசிரியருக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மையுண்டு. மாணவ-மாணவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே.
ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்கள் ஆசிரியர்கள். "உலகில் உள்ள பெரிய மனிதராக இருக்கட்டும், சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இரு தரப்பிற்கு வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார்" என்று கூறியவர் மக்கள் குடியரசு தலைவர் என்று போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்கள் வகுப்பறையை குறித்து இவ்வாறு கூறியுள்ளார்,
"நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம்" என்று.
ஒன்றுமற்ற ஒரு கல்லை ஒரு சிற்பி செதுக்கி எவ்வாறு அழகிய சிலையை வடிவமைக்கிறானோ, அவ்வாறே மண்ணாக இருந்த எம்மை மாணிக்க கல்லாக மாற்றியது தலைசிறந்த சிற்பிகளாக்கிய ஆசிரியர்களே. எனவே தான் "நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார் மாவீரன் அலெக்சாண்டர்.
ஆசிரியரின் பெருமை
ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு நூலகம். ஆசிரியரிடம் பழகும் மாணவனுக்கு அறிவின் அற்புத வளர்ச்சியோடு பெருமையும், தனித்துவமும் கிடைக்கும். உண்மையில் ஒரு மாணவனுக்கு தனது திறனை அடையாளம் காட்டுபவராக, வாழ்வின் அர்த்தங்களை உணர்விக்கின்றவராக இருப்பவர் தான் ஆசிரியர். மாணவ-மாணவிகளின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை' கவுரவப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் முனைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அவரது வேண்டுகோளுக்கு இணங்க 1962-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வண்ணமயமான நாளில் வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் தெரிவித்து ஆசிரியர் தினத்தை கொண்டாடுவோம்.

உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. எந்த உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.
உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. அந்த வகையில், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத சில உணவுகள் இவை:
பிரட் - ரோல்ஸ் (Bread & Rolls)
ஒரு வெள்ளை ரொட்டித் துண்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. அந்த ரொட்டித் துண்டின் மீது வெண்ணெய் தடவினால், அதன் சோடியம் அளவு மேலும் அதிகரிக்கும். ஒரு நாளில் குழந்தைகள் உட்கொள்ளும் சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது குழந்தைகளின் மூளை, சிறுநீரகங்கள், இதயம் போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும்.
ஃபிளேக்ஸ் (Flakes)
காலை உணவாகப் பெரும்பாலான குழந்தைகள் உட்கொள்ளும் ‘ஃபிளேக்ஸ்’ வகைகள் சிலவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிறது. அதனால், குழந்தைகளுக்காக ‘ஃபிளேக்ஸ்’ உணவை வாங்கும்போது அவற்றில் 3 கிராம் அல்லது அதற்கும் அதிகமாகப் புரதமும் நார்ச்சத்தும் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குவது நல்லது. கூடுமானவரை துரித, சக்கை உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஐஸ்கிரீமும் கேக்கும்
ஐஸ்கிரீம், கேக் கலவையில் தயாரிக்கப்படும் சண்டே டிசர்ட்ஸ் (Sundae Desserts) போன்ற இனிப்பு வகைகளையும் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. இந்த வகையான ஐஸ்கிரீம், கேக் கலவையில் சர்க்கரையும் கலோரிகளும் சாப்பிட வேண்டிய அளவைவிட அதிகமான அளவில் இருக்கின்றன. இதற்குப் பதிலாக, வெறும் ஐஸ்கிரீமை மட்டும் வாங்கிக்கொடுக்கலாம்.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
குழந்தைகள் சர்வ சாதாரணமாக ஒருநாளில் ஒன்று, இரண்டு என்று சாப்பிட்டுக் காலிசெய்யும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் முற்றிலும் ஆரோக்கியமற்றவை. ஒரு அவுன்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸில் 50-200 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது. பொதுவாகவே பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
பீட்சா
ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த உப்பின் அளவில் 25 சதவீதம் பீட்சாவில், இருக்கிறது. எந்த மேல் படுகையும் (toppings) இல்லாத சாதாரண சீஸ் பீட்சாவின் நான்கு துண்டுகளில் 370-730 மில்லிகிராம் வரை சோடியம் இருக்கிறது. அதுவே உணவகங்களில் வாங்கும் வழக்கமான சீஸ் பிட்ஸாவில் 510-760 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது.
பொரித்த நொறுக்குத்தீனிகள்

சோடா, பானங்கள்
உணவகங்களில் வழங்கப்படும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவையல்ல. பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அவற்றில் எந்தச் சத்தும் இல்லை. அத்துடன், உணவகங்களில் பழச்சாறுகளை வாங்கித் தருவதையும் தவிர்க்கலாம். உணவகங்களில் கூடுதலான இனிப்புச் சுவைக்காக அதிகமான சர்க்கரையைச் சேர்க்கின்றனர். அதனால், உணவகங்களில் குழந்தைகளுக்குப் பானங்களாக ஏதாவது வாங்கித் தர வேண்டுமென்றால், தண்ணீர் அல்லது பால் மட்டும் வாங்கித் தரலாம்.
பாஸ்தாவும் சிக்கனும்
பாஸ்தாவைத் தற்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆனால், பாஸ்தா, சிக்கன், சீஸ் ஆகிய மூன்றும் சேர்ந்து தயாரிக்கப்படும் உணவைத் தவிர்ப்பது நல்லது. அதிலும், பாஸ்தாவில் சேர்க்கும் சிக்கனுடன் ரொட்டி சேர்க்கப்பட்டிருந்தால், அதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், இந்த பாஸ்தா கலவையில் கலோரிகளும் சோடியமும் அதிகமாக இருக்கின்றன. அதனால், இவற்றுக்குப் பதிலாகச் சாதாரண மக்ரோனி, சீஸ் பாஸ்தாவை மேல்படுகை (Toppings) எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கலாம். இந்த பாஸ்தாவில் ஊட்டச்சத்து பிரச்சினை இல்லை.
பொரித்த கோழிக்கறி
கோழிக்கறி ஆரோக்கியமான உணவுதான். ஆனால், அதை ரொட்டியுடன் நீண்ட நேரம் பொரித்தெடுப்பது ஆரோக்கியமானதல்ல. இவற்றில் அதிகமான கலோரிகளும் சோடியமும் இருப்பதால் அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. ‘சிக்கன்’ சாப்பிட்டே ஆக வேண்டுமென்று உங்கள் குழந்தை அடம்பிடித்தால், ‘கிரில்’ சிக்கன் வாங்கிக் கொடுக்கலாம்.
பர்கர்ஸ் (Burgers)
குழந்தைகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் சீஸ் பர்கர் முதலிடத்தில் இருக்கிறது. குழந்தைகள் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய சோடியம் அளவைவிடப் பன்மடங்கு அதிக சோடியம் பர்கரில் இருக்கிறது. குறிப்பாக அசைவ பர்கர்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

எண்ணெயில் நன்றாகப் பொரித்த கோழிக்கறி எப்படித் தவிர்க்கப்பட வேண்டியதோ, அதே அளவுக்குக் குழந்தைகள் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் ‘பிரெஞ்சு ஃபிரைஸ்’, ‘சிக்கன் நக்கெட்ஸ்’, ‘மொஸெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ்’ ‘ஸ்மைலிஸ்’ போன்றவையும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த வகையான பொரித்த உணவு வகைகளில் இருக்கும் கொழுப்பு, குழந்தைகளின் இதயத்துக்கு நல்லதல்ல.

சோடா, பானங்கள்
உணவகங்களில் வழங்கப்படும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவையல்ல. பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அவற்றில் எந்தச் சத்தும் இல்லை. அத்துடன், உணவகங்களில் பழச்சாறுகளை வாங்கித் தருவதையும் தவிர்க்கலாம். உணவகங்களில் கூடுதலான இனிப்புச் சுவைக்காக அதிகமான சர்க்கரையைச் சேர்க்கின்றனர். அதனால், உணவகங்களில் குழந்தைகளுக்குப் பானங்களாக ஏதாவது வாங்கித் தர வேண்டுமென்றால், தண்ணீர் அல்லது பால் மட்டும் வாங்கித் தரலாம்.
பாஸ்தாவும் சிக்கனும்
பாஸ்தாவைத் தற்போது குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆனால், பாஸ்தா, சிக்கன், சீஸ் ஆகிய மூன்றும் சேர்ந்து தயாரிக்கப்படும் உணவைத் தவிர்ப்பது நல்லது. அதிலும், பாஸ்தாவில் சேர்க்கும் சிக்கனுடன் ரொட்டி சேர்க்கப்பட்டிருந்தால், அதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், இந்த பாஸ்தா கலவையில் கலோரிகளும் சோடியமும் அதிகமாக இருக்கின்றன. அதனால், இவற்றுக்குப் பதிலாகச் சாதாரண மக்ரோனி, சீஸ் பாஸ்தாவை மேல்படுகை (Toppings) எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கலாம். இந்த பாஸ்தாவில் ஊட்டச்சத்து பிரச்சினை இல்லை.
பொரித்த கோழிக்கறி
கோழிக்கறி ஆரோக்கியமான உணவுதான். ஆனால், அதை ரொட்டியுடன் நீண்ட நேரம் பொரித்தெடுப்பது ஆரோக்கியமானதல்ல. இவற்றில் அதிகமான கலோரிகளும் சோடியமும் இருப்பதால் அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. ‘சிக்கன்’ சாப்பிட்டே ஆக வேண்டுமென்று உங்கள் குழந்தை அடம்பிடித்தால், ‘கிரில்’ சிக்கன் வாங்கிக் கொடுக்கலாம்.
பர்கர்ஸ் (Burgers)
குழந்தைகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் சீஸ் பர்கர் முதலிடத்தில் இருக்கிறது. குழந்தைகள் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய சோடியம் அளவைவிடப் பன்மடங்கு அதிக சோடியம் பர்கரில் இருக்கிறது. குறிப்பாக அசைவ பர்கர்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
குளிர், பனிக்காலத்திலிருந்து குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாக்க சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க முடியும்.
குளிர்ந்த வெப்பநிலை குழந்தைகளின் சருமத்தை உலர செய்யும். சருமத்தில் சில வெடிப்புகள் போன்றவையும் காணப்படும். சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் குழந்தைகளின் சருமத்தைக் குளிர் காலத்தில் இருந்து காக்க முடியும்.
குழந்தைகளை நீண்ட நேரமாக குளிக்க வைக்க வேண்டாம். 5 நிமிடத்துக்குள் குளித்து விட்டுவரும்படி ஏற்பாடு செய்யுங்கள். பிறந்த குழந்தைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வைக்கலாம். ஆனால், கால், இடுப்பு, டயாப்பர் உள்ள பகுதிகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். சுடுநீர் இல்லாமல் இளஞ்சூடான நீரில் குளிக்க வைப்பது நல்லது. சூடான நீரில் குளித்தால் சருமம் வறண்டு போகும்.
குளிர் காலத்தில் குழந்தையின் சருமம் உலர்ந்து காணப்படும். ஆகையால், சருமத்துக்குத் தரமான பேபி கிரீம் பயன்படுத்தலாம். 6+ மாத குழந்தைகளுக்கு தேவையான தண்ணீர், ஜூஸ், சூப், பழங்கள் போன்ற நீர்ச்சத்து உணவுகளையும் சரியான அளவில் தர வேண்டும். 0-6 மாத குழந்தைகளுக்கு, தாய்ப்பால் அதிகமாகக் கொடுத்து உடலின் நீர்ச்சத்து அளவை பராமரித்துக்கொள்ள வேண்டும். மீன், நட்ஸ் மற்றும் நட்ஸ் பவுடர், அவகேடோ போன்றவை சருமத்தை காக்கும் உணவுகள்.
அதிக வாசம், அதிக கெமிக்கல்கள் இருந்தால் குழந்தையின் சருமத்தை உலர்தன்மையாக மாற்றும். இதனால் எரிச்சலும் உண்டாகலாம். தரமான லாண்டிரி டிடர்ஜென்ட் பயன்படுத்தி, குழந்தைகளின் துணியை துவைத்தால் இவ்வித பிரச்னைகளிலிருந்து குழந்தைகளைக் காக்கலாம்.
குளிரைத் தாங்க கூடிய கனமான உடைகளை அணிந்து விடுங்கள். ஆனால், குத்தாத, அரிக்காத உடைகளாக இருப்பது நல்லது. முழுக்கை, முழுக்கால் மூடும்படியான ஆடைகளை அணியலாம். காது, தலைக்கு மப்ளர் அணிந்து விடலாம்.
வெப்பநிலையும் குளிர்தன்மையுடன் இருக்க, அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் குழந்தைகளின் நிலையை நினைத்துப் பாருங்கள். அவ்வப்போது டயாப்பர் மாற்றிவிடுங்கள். நீண்ட நேரம் ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டாம். முடிந்த அளவுக்கு குழந்தையின் தொடை, கால், அடி இடுப்பு பகுதிகளை ஈரத்தன்மை அதிகம் இல்லாமல் கவனித்துக் கொள்ளுங்கள். டயாப்பரை மாற்றி, அந்த இடத்தை இளஞ்சூடான நீரில் சுத்தம் செய்த பின்னர் பேபி கிரீம் பயன்படுத்துங்கள்.
பனிக்காலத்தில் குழந்தையின் கன்னங்கள் சிவப்பாக கூடும். உலர்த்தன்மையின் வெளிப்பாடுதான் இந்த பிரச்னை. கன்னங்களில் தடவ, தரமான பேபி லோஷன் பயன்படுத்துங்கள். கன்னங்கள் உலர்ந்து சிவப்பாகும் பிரச்னை தடுக்கப்படும்.
விட்டமின் இ கலந்த எண்ணெயை சருமம் முழுவதும் தடவி, 20 நிமிடங்கள் ஊறவிட்டு இளஞ்சூடான நீரில் குளிக்க வைக்கலாம். வாரம் 1-2 முறை பயன்படுத்தினாலே போதும்.
சில குழந்தைகளுக்கு தலையில் செதில் செதிலாக சருமம் உலர்ந்து காணப்படும். இதை லேசாக ஆலிவ் எண்ணெய் விட்டு தேய்த்தால் நீங்கிவிடும். இது ஒரு பிரச்னையல்ல. இயல்பான ஒன்றுதான். நாளடைவில் சரியாகிவிடும். ஆலிவ் எண்ணெயோ தேங்காய் எண்ணெயோ வைத்துத் தேய்த்து விட்ட பின்னர், பேபி ஷாம்பு போட்டு குளிக்க வைத்து விடுங்கள்.
எப்போதுமே இளஞ்சூடாகவே குழந்தைகளுக்கு நீர் அருந்த கொடுக்கலாம். பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு கொதித்து ஆறவைத்த குடிநீரையே கொடுத்துப் பழகுங்கள். போதுமான அளவு நீர்ச்சத்து குழந்தைகளுக்கு முக்கியம்.

தண்ணீர், பால் குடிக்கும் ஃபீடிங் பாட்டிலில் இருந்து அதிக கிருமிகள் குழந்தைகளுக்கு பரவுகின்றன. ஃபீடிங் பாட்டிலை எந்த முறையில் பராமரிப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
தண்ணீர், பால் குடிக்கும் ஃபீடிங் பாட்டிலில் இருந்து அதிக கிருமிகள் குழந்தைகளுக்கு பரவுகின்றன. அதைத் தடுக்க ஃபீடிங் பாட்டிலை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இந்தப் பதிவை படிக்கும் முன் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்... பிளாஸ்டிக்கில் நல்ல பிளாஸ்டிக் என்று ஒன்று கிடையவே கிடையாது. மிகவும் மோசமான பிளாஸ்டிக், மோசமான பிளாஸ்டிக், குறைந்த மோசமான பிளாஸ்டிக் என்று மட்டுமே வகைப்படுத்த முடியும். நான் நல்ல, தரமான, பாதுகாப்பான பிளாஸ்டிக் வைத்திருக்கிறேன். விலை உயர்ந்தது. இதெல்லாம் நீங்கள் பெருமையாக சொல்லி கொள்ளலாமே தவிர... அறிவியல் படியாகவும் சூழலியல் தொடர்பாகவும் எந்த பிளாஸ்டிக்குமே பாதுகாப்பானது அல்ல. வேறு வழியின்றி குறுகிய காலத்துக்கு பயன்படுத்தி நிறுத்திவிடுவதே புத்திசாலித்தனம்.
குழந்தை பாலோ, தண்ணீரோ குடித்த பின்பு அப்படியே போட்டு வைக்காமல் முடிந்தவரை சீக்கிரமே கழுவி விடுங்கள். குழந்தையின் பாட்டில் சுத்தம் செய்ய பாட்டில் பிரஷ் வைத்திருங்கள். அதை வைத்து நன்கு கழுவிய பின் அந்த பிரஷ்ஷை கட்டாயம் வெயிலில் காய வையுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் பாட்டிலை போட்டு கழுவலாம். கொஞ்சமாக பாத்திரம் சுத்தம் செய்யும் லிக்விட் பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை கல்லுப்பு போட்டு சுத்தம் செய்வது மிகவும் நல்லது.
சோப் வாசம் நீங்கும் வரை நன்கு கழுவுங்கள். தயவு செய்து, கொதிக்கும் நீரிலோ சுடுநீரிலோ பிளாஸ்டிக் ஃபீடிங் பாட்டிலை போட வேண்டாம். தற்போது, ஸ்டீல் பாட்டில்கள் கிடைக்கின்றன. அதை நீங்கள் சுடுநீரில் போட்டு கழுவினால் பிரச்னையில்லை. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் ரப்பர் ஆகியவற்றை போட்டால் பாட்டிலில் இருந்து லித்தியம் (lithium) என்ற கெமிக்கல் வெளி வரும்.

10 மாத குழந்தைகள் வரை நீங்கள் ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பெரியவர்கள் போல குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். 0-6 மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கலாம். ஃபார்முலா மில்க் கொடுப்பவர்கள், ஸ்டீல் ஃபீடிங் பாட்டில் பயன்படுத்துங்கள். குழந்தைகள் சப்பும் அந்த ரப்பர், லேட்டக்ஸ், சிலிக்கோன், பிளாஸ்டிக் போன்றவற்றால் தயாரிக்கப்படும் என்பதால் குழந்தை பால் குடித்த உடனே வாயிலிருந்து எடுத்துவிடுங்கள். வாயில் அப்படியே சப்பி கொண்டு இருந்தால் பற்கள் சீரற்று முளைக்கும். ரூட் கேனல் வரை கிருமிகள் செல்ல வாய்ப்புகள் அதிகம். ஈறு பாதிக்கும். பல் முளைக்க சிரமமான நிலைக்கு போய்விடும்.
20-30 நிமிடங்களுக்குள் பாலை குழந்தைக்கு கொடுத்துவிட முயற்சி செய்யுங்கள். அதற்கு மேல் ரப்பர், பிளாஸ்டிக், லேட்டக்ஸ், சிலிக்கோன் போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் சக்கர், குழந்தையின் உமிழ்நீரோடு கெமிக்கல்கள் கலக்க ஆரம்பிக்கும்.
பாட்டில் நிறம் மாறி இருந்தால் உடனே பாட்டிலை மாற்றுங்கள். பால் கசிந்தால் துர்நாற்றம் வந்தால் பாட்டில் உப்பி இருந்தால் சின்ன சின்ன கோடுகள் இருந்தால் பிளாஸ்டிக் உருகி பாட்டில் மெலிந்து இருந்தால் இந்த அறிகுறிகள் உடனேயே பாட்டிலை மாற்ற வேண்டும். பொதுவாகவே 2 மாதத்துக்கு ஒருமுறை பாட்டிலை மாற்றுங்கள்.

இது குழந்தைகளின் உணவில் கலந்து நஞ்சாக மாறிவிடும். ஆபத்தான கெமிக்கல்களில் லித்தியமும் ஒன்று. சூடான உணவு, திரவம் பட்டால் பிளாஸ்டிக் பாட்டில் இருந்து லித்தியம் வெளியேறும். அதேபோல பிளாஸ்டிக் பாட்டிலில் சூடான பாலையோ ஊற்றி வைக்க வேண்டாம். அந்த பாலில் லித்தியம் கலந்துவிடும். உங்களது அறியாமையால் குழந்தைகளின் உணவு விஷயத்தில் தயவு செய்து அலட்சியமாக இருக்க வேண்டாம். கடைகளில் ஸ்டரிலைசிங் திரவம் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தியும் கழுவலாம்.

10 மாத குழந்தைகள் வரை நீங்கள் ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பெரியவர்கள் போல குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். 0-6 மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கலாம். ஃபார்முலா மில்க் கொடுப்பவர்கள், ஸ்டீல் ஃபீடிங் பாட்டில் பயன்படுத்துங்கள். குழந்தைகள் சப்பும் அந்த ரப்பர், லேட்டக்ஸ், சிலிக்கோன், பிளாஸ்டிக் போன்றவற்றால் தயாரிக்கப்படும் என்பதால் குழந்தை பால் குடித்த உடனே வாயிலிருந்து எடுத்துவிடுங்கள். வாயில் அப்படியே சப்பி கொண்டு இருந்தால் பற்கள் சீரற்று முளைக்கும். ரூட் கேனல் வரை கிருமிகள் செல்ல வாய்ப்புகள் அதிகம். ஈறு பாதிக்கும். பல் முளைக்க சிரமமான நிலைக்கு போய்விடும்.
20-30 நிமிடங்களுக்குள் பாலை குழந்தைக்கு கொடுத்துவிட முயற்சி செய்யுங்கள். அதற்கு மேல் ரப்பர், பிளாஸ்டிக், லேட்டக்ஸ், சிலிக்கோன் போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் சக்கர், குழந்தையின் உமிழ்நீரோடு கெமிக்கல்கள் கலக்க ஆரம்பிக்கும்.
பாட்டில் நிறம் மாறி இருந்தால் உடனே பாட்டிலை மாற்றுங்கள். பால் கசிந்தால் துர்நாற்றம் வந்தால் பாட்டில் உப்பி இருந்தால் சின்ன சின்ன கோடுகள் இருந்தால் பிளாஸ்டிக் உருகி பாட்டில் மெலிந்து இருந்தால் இந்த அறிகுறிகள் உடனேயே பாட்டிலை மாற்ற வேண்டும். பொதுவாகவே 2 மாதத்துக்கு ஒருமுறை பாட்டிலை மாற்றுங்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல, பெற்றோர் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

1. குழந்தைகள் பள்ளி செல்வதில் பெற்றோருக்குத்தான் அதிக பொறுப்பு இருக்கிறது. இரவில் நீண்டநேரம் கண்விழித்திருக்க அனுமதிக்காமல் சரியான நேரத்துக்குத் தூங்குவதற்குப் பழக்க வேண்டும். இதனால் நிம்மதியாக உறங்கி மறுநாள் காலை உற்சாகமாக எழுந்துகொள்வார்கள்.
2. ‘மிஸ் திட்டுவாங்க...' `மத்த பிள்ளைகள் சண்டை போடுவாங்க' என்பன போன்ற நெகட்டிவ்வான விஷயங்கள் பற்றி அறிவுரை கூறுவது குழந்தைகளுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். மாறாக, 'உங்க ப்ரண்ட்ஸை மீட் பண்ணலாம்', 'மிஸ் புதுசு புதுசா நிறைய விஷயங்கள் சொல்லித் தருவாங்க...' என்று பாசிட்டிவாகப் பேசலாம். முதல்தடவை பள்ளி செல்லும் குழந்தைகளாக இருந்தால், `உங்க மிஸ் ரொம்ப நல்லவங்க', `ஸ்கூல்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க, அங்கே விளையாடலாம்' என்று பாசிட்டிவாகப் பேசி அவர்களைத் தயார்படுத்துங்கள்.
3. புத்தகப்பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸ் ஆகியவற்றை, குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் விருப்பத்தின்படி வாங்கிக்கொடுங்கள். இது பள்ளிக்குச் செல்லும் ஆர்வத்தைக் குழந்தைகளிடம் உண்டாக்கும்.
4. குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளைச் செய்து கொடுப்பது நல்லது. காலையில் ஒரு உணவு, மதியம் வேறு உணவாக இருப்பது அவர்களுக்குச் சாப்பாட்டின்மீது ஆர்வத்தை உண்டாக்கும். குறைந்தபட்சம் பள்ளி தொடங்கும் முதல் வாரம் மட்டுமாவது பெற்றோர் இதைப் பின்பற்ற வேண்டும்.
5. பள்ளி செல்லும்போது குழந்தைகளிடம் இரண்டு டிபன் பாக்ஸ்களை கொடுத்தனுப்பலாம். ஒன்றில் சாப்பிடும் உணவையும் மற்றொன்றில் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் அல்லது நறுக்கிய பழங்களை வைத்தும் அனுப்பலாம்.
6. ஆரம்பகாலங்களில் குழந்தைகளைக் கிளப்புவதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். உடன் குளிப்பது, பல் துலக்குவது எனக் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். சிறிது நாள்களுக்குப் பிறகு, 'நீங்களே செய்யுங்கள்...' எனக் குழந்தைகளை உற்சாகப்படுத்தி, காலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடிக்க பழக்க வேண்டும்.
7. பள்ளியைவிட்டு வீடு திரும்பியதும் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிக் கேட்க வேண்டும். முக்கியமாக, `ஆசிரியர் என்ன சொல்லி கொடுத்தார்?' என்று குழந்தையிடம் தினமும் கேளுங்கள். அதோடு குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
8. குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் முத்தம் கொடுப்பது, அணைத்துக்கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களைக் கனிவோடு வழியனுப்பி வையுங்கள். பள்ளியிலிருந்து வந்ததும் அவர்களைக் கட்டியணைத்து முத்தம் கொடுங்கள். இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்; மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான உறவை வலுப்படுத்தும்;
9. `ஏன் பள்ளி செல்ல வேண்டும்?' என்பது போன்ற கேள்விகளை, குழந்தைகள் கேட்கும்போது, அவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் பள்ளிப் பருவத்தை நீங்கள் எப்படி மகிழ்ச்சியாகக் கழித்தீர்கள் என்பதைச் சொல்லி அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்துங்கள். இது மகிழ்ச்சியாக பள்ளி செல்ல உதவும்.

இறைவனின் அருட்கொடையாக கிடைத்துள்ள குழந்தைகளை பேணி பாதுகாத்திட ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
இறைவனின் அருட்கொடையாக கிடைத்துள்ள குழந்தைகளை பேணி பாதுகாத்திட ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்….
* ஆண் /பெண் என்கிற பாகுபாட்டினை அவர்களிடம் காட்டாதீர்கள், இருவரும் சமம் என செயல்படுங்கள்.
* உங்களது குழந்தை ஆணோ/பெண்ணோ எத்தனை வயதானாலும் அது நமக்கு குழந்தை தான், ஆனால் அடுத்தவர் பார்வைக்கு அப்படியல்ல, பிறரது கவனம் நம் குழந்தையின் செயல்பாட்டினை குறைத்துவிடும்.
* வீட்டிற்கு யார் வந்தாலும் திறந்த மேனியாக அவர்களை நிற்கவிடாதீர்கள். வெளியாட்கள் வந்தால் உடையின்றி அவர்கள் முன் வரக்கூடாது என அறிவுறுத்துங்கள்.
* பள்ளிக்கு செல்லும் குழந்தையாக இருப்பின் அதனுடைய உடைகளை தானாக உடுத்த ஐந்து வயதில் இருந்து பழக்கப்படுத்துங்கள்.
* பள்ளிக்கு அனுப்பும் ஆட்டோ, வேன் மற்றும் கார் அல்லது பள்ளியின் பேருந்து இவற்றின் ஓட்டுனர்களை பற்றி முற்றிலுமாக அறிந்துகொள்ளுங்கள் அவர்களது செல்பேசி முதல் அவர்கள் குடியிருக்கும் வீட்டின் முகவரி வரை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
* குழந்தையிடம் பள்ளியின் ஐடென்டிடி கார்டு இருந்தாலும் தனியாக ஒரு நோட்டில் வீட்டின் முகவரி, பெற்றோரின் செல்பேசி எண்களை முழுதுமாக அதில் குறித்து வையுங்கள்.
* பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் குழந்தைகளை பெற்றோரில் ஒருவர் வாசலில் வரவேற்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
* அடுக்குமாடி குடியிருப்புகளில் பலநேரம் லிஃப்ட் ஆபரேட்டர்கள் மதிய நேரத்தில் வேலையில் இருக்கமாட்டார்கள். ஆகவே லிஃப்ட்களில் குழந்தைகளை தனியாக வர அனுமதிக்காதீர்கள்.
* அப்பா இல்லாத நேரத்தில் நன்கு அறிமுகமில்லாத ஆண்கள் யார் வந்தாலும் அவர்களை வீட்டில் அனுமதித்துவிட வேண்டாம்…அம்மாவை அழைத்து அவர்களிடம் விபரம் கூற வேண்டும் என அறிவுறுத்துங்கள்.
* காலிங்பெல் அழைத்த உடன் ஓடிச்சென்று கதவை திறக்கும் குழந்தைகளை அவ்வாறு செய்யகூடாது என அறிவுறுத்துங்கள். லென்ஸ் வழியாக வெளியே நிற்பவர் யார் என தெளிவாக கண்டபிறகு கதவை திறக்க வேண்டும். விளையாட்டிற்காக லென்சில் விரலை வைத்து மூடும் நபர்…விரலை எடுக்கும் வரை கதவை திறக்கவே கூடாது.
* பள்ளிவிட்டு வரும் குழந்தையை வரவேற்று அன்றாடம் பள்ளியிலும் வாகனத்திலும் நிகழ்ந்தவற்றை கேட்டறிந்துகொள்ளுங்கள்.
* தினமும் அவர்களது பள்ளி பைகளை திறந்து பார்த்து பரிசோதனை செய்யுங்கள், அவர்களிடமில்லாத பொருட்கள் அல்லது புதிய பொருட்களை கண்டால் அதை எடுத்து குழந்தைகளிடம் கேளுங்கள். இது யாருடையது, யார் கொடுத்தது என தெரிந்துகொள்ளுங்கள் அப்படி யாரிடமும் எந்த பொருளும் வாங்கியிருந்தால் இனிமேல் அதுபோல வாங்க வேண்டாம் என கூறிவிடுங்கள்.
* பெற்றோர் தவிர யார் என்ன பொருள் வாங்கி கொடுத்தாலும் அதனை பெற்றோரின் அனுமதியின்றி பெற கூடாது என கூறி வையுங்கள்.
* பல வீடுகளில் வேலைக்கு செல்லும் பெற்றோர் பக்கத்து வீடுகளில் சாவியை கொடுத்துவிட்டு மகன்/மகள் வந்தால் கொடுங்கள் என கூறி அலுவலக பணிகளில் இருக்கிறார்கள். பள்ளிவிட்டு வந்த குழந்தை தானாக சாவி வாங்கி திறந்து பெற்றோர் வரும் வரை வீட்டில் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. முடிந்தவரை இதனை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகள் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் அவர்களை பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இப்போது அதிகப்படியான பெற்றோர் கவனக்குறைவாக செய்து ஆபத்தை ஏற்படுத்திய விஷயங்களை பார்ப்போம்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடைய வழியில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். ஆனாலும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடும். இப்போது அதிக படியான பெற்றோர் கவனக்குறைவாக செய்து ஆபத்தை ஏற்படுத்திய விஷயங்களை பார்ப்போம்.
உங்கள் குழந்தை தூங்கும் தொட்டிலில் உங்கள் குழந்தையை தவிர வேறு எந்த பொருளும் இருக்க கூடாது. அதாவது உங்கள் குழந்தையின் தொட்டிலில் பொம்மைகள், தலையணைகள் அல்லது வேறு எந்த குஷனிங் பொருட்களும் இருக்க கூடாது.
இவை உங்கள் குழந்தைக்கு சுவாசத்தை தடுக்கும். எனவே உங்கள் குழந்தையின் தொட்டிலில் இருந்து இவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு சிறிய போர்வையை மட்டும் போர்த்திவிடுங்கள், அதுவும் அவர்கள் கழுத்து பகுதி வரை இருக்க கூடாது. அவர்கள் அதை முகத்திற்கு இழுத்துவிட கூடாது என்பதற்காக.
உங்கள் சூடான கோப்பை தேநீர், காபி அல்லது வேறு எந்த சூடான பானைத்தையும் குடிப்பதற்கு முன்பே, உங்கள் குழந்தையை நீங்களே தொலைவில் இருக்கும் படி வைக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தையை நீங்கள் கையில் வைத்து கொண்டு குடிக்கும் போது என்ன பிரச்சனை இருக்கிறது என்றால், நீங்கள் தற்செயலாக நகர முயற்சிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஓட கூட முயற்சிக்கலாம். அப்போது அது தவறி உங்கள் குழந்தையின் மேல் விழுந்து விட கூடாது என்பதற்காக.
நீங்கள் உங்கள் குழந்தையை ஷவரில் குளிக்க வைக்க போகும் போது, குழாய் நீரில் இருந்து வரும் தண்ணீரின் வெப்பநிலையை சரிபார்க்கவும். தண்ணீர் முழுவதும் அதே போல வரப்போவதில்லை எனும் போது, ஒரு வாளி தண்ணீரை சேகரித்து, உங்கள் குழந்தையை குளிக்க வைப்பது நல்லது. உங்கள் குழந்தையின் தோல் உங்கள் தோலைவிட மிகவும் மென்மையாக இருப்பதால் அதிக வெப்பநிலையால் எளிதில் பாதிப்படையும்.
ஒரு விபத்து ஏற்படும் போது, காற்று பைகள் (airbags) தாக்கத்திற்கு எதிராக முன்னணியில் உள்ள பெரியவர்களைப் பாதுகாத்து, அவர்களது உயிர்களை காப்பாற்றும். அதே நம் வாழ்வை பாதுகாக்கும் காற்று பைகள் (airbags) ஒரு 10 வயது குழந்தையின் கழுத்து மற்றும் முதுகு தண்டு வடதில் சில கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த காற்று பைகள் (airbags) குழந்தைகளுக்கு ஆபத்தானவை. எனவே உங்கள் குழந்தையை முன் இருக்கையில் அமர வைக்காமல், உங்கள் அருகில் பின் இருக்கையில் அமர வைப்பது சிறந்தது.