search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆட்டிசத்திற்கான காரணங்களும், அறிகுறியும்
    X
    ஆட்டிசத்திற்கான காரணங்களும், அறிகுறியும்

    ஆட்டிசத்திற்கான காரணங்களும், அறிகுறியும்

    ASD கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பின்வரும் சில பொதுவான அறிகுறிகள் வெளிப்படும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ASD-ன் அறிகுறிகள்

    ஒரு குழந்தை வளர்ச்சியின் மூன்று முக்கிய பகுதிகளில் ASD-ன் (Autism spectrum disorder) அறிகுறிகள் வெளிப்படும். Social interaction என்கிற சமூக தொடர்பு, Communication (Verbal & Nonverbal) என்கிற வாய்மொழி தொடர்பு மற்றும் வாய்மொழி அல்லாத சைகைகள், உடல்மொழி, Thinking and behavioral skills என்கிற சிந்தனை மற்றும் நடத்தை திறன் போன்ற இந்த மூன்று வகைகளில் ASD-ன் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. ASD கோளாறினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பின்வரும் சில பொதுவான அறிகுறிகள் வெளிப்படும்.

    * ஏதாவது ஒரு செயலை செய்யும்போது அவர்களின் கண்கள் எந்தவொரு தொடர்புமின்றி இருப்பது அல்லது புன்னகை இல்லாமல் இருப்பது.
    * அவர்களின் பெயர் சொல்லி அழைக்கும்போது எதிர்வினையாற்றாமல் இருப்பது அல்லது சீரற்ற முறையில் செயல்படுவது.  
    * சிறிய சத்தத்திற்கு அதிகளவிலான உணர்வினை வெளிப்படுத்துதல்.
    * சொந்த எண்ணங்களை இழத்தல்.
    * தன்னைத் தானே அடித்தல் அல்லது கடித்தல்.
    * நாம் தொடர்பு கொள்ளும்போது அதற்கு அவர்கள் எந்தவொரு சைகையும் செய்யாமல் இருப்பது.
    * பார்க்கும் பொருட்களை கண்களால் பின்தொடர இயலாமை.
    * நண்பர்களை உருவாக்க இயலாமை.
    * ஏதாவதொரு வார்த்தையை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பது அல்லது ஏதாவதொரு உடல் அசைவினை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பது போன்றவை.

    ஆட்டிசத்திற்கான காரணங்கள்

    தற்போது வரை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் அதைத் தூண்டும் காரணிகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில அரிய மரபணு மாற்றங்கள், சுற்றுச்சூழல் அழுத்தங்கள், கருத்தரிக்கும்போது பெற்றோரின் வயது, கர்ப்ப காலத்தில் தாய்வழி நோய்கள், பிறக்கும்போது ஏற்படும் சிரமங்கள், குழந்தையின் மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல காரணிகளும் நோயின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

    கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது, நகர்ப்புற வாழ்க்கையில் குழந்தைகளை சரியாக பராமரிக்க பெற்றோர் நேரம் ஒதுக்காதது, செல்போன், டிவி, வீடியோகேம், லேப்டாப் போன்ற காட்சித்திரை சார்ந்த பொருட்களில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளிலோ, நடவடிக்கைகளிலோ ஈடுபடாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஆட்டிசம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  
    Next Story
    ×