search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை அதிகமாக டிவி பார்ப்பதால் என்னென்ன பாதிப்புகள் வரும்?
    X
    குழந்தைகளை அதிகமாக டிவி பார்ப்பதால் என்னென்ன பாதிப்புகள் வரும்?

    குழந்தைகளை அதிகமாக டிவி பார்ப்பதால் என்னென்ன பாதிப்புகள் வரும்?

    அதிகமாக, டிவி பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
    அதிகமாக, டிவி பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அத்தோடு அவர்கள் சரியாக துாங்கவும் மாட்டார்கள். ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக டிவி பார்ப்பது தான் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதுகாப்பானது.

    ஹைபர்ஆக்டிவ், நடத்தையில் பிரச்னை இருக்கிறதா போன்ற சர்வேக்களை எடுத்துள்ளனர். அதில் 1 வயதுள்ள குழந்தைகள் 1278 பேரும் 3 வயதுள்ள குழந்தைகள் 1345 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தனது 7 வயதுக்குள் 10% குழந்தைகள் இப்பிரச்னைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    கல்வி தொடர்பான விஷயங்களிலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். படிப்பு, பள்ளி மீது ஆர்வம் குறைகிறது.

    மொழி திறனும் குறைந்து வருகிறது. டிவியில் உள்ள கார்ட்டூன்களைப் பார்த்து அங்கு பேசப்படும் மொழியை தாங்களும் பேசுகின்றனர்.

    மேலும் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்பதானாலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதானாலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன.

    இக்குழந்தைகளால் படிப்பில் ஆர்வத்தைக் கண்பிக்க இயலாது. பிற்காலத்தில் இவர்கள் யதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் துன்புறுவர்.

    அலைபேசி, கம்ப்யூட்டர், டேப்லட், ‘டிவி’ ஆகியவற்றை இன்றைய குழந்தைகள் நிறைய நேரம் பார்க்கின்றனர். இதனால் குழந்தைகளின் சிந்திக்கும் திறன், துாக்கம் மற்றும் பார்வைத்திறன் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

    எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது தவறு.

    தொலைக்காட்சியே பார்க்காமல் இருப்பதும் தவறு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை குழந்தைகளை தினமும் பார்க்கச் செய்வது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும்.

    உங்கள் வீட்டுக்குள் வரும் உலகத்தை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுவதாக அமையும். பொதுவாக குழந்தைகள் 8 மணி நேரம் துாங்க வேண்டும்.

    Next Story
    ×