search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலை சுத்தம் செய்யும் முறை
    X
    குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலை சுத்தம் செய்யும் முறை

    குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலை சுத்தம் செய்யும் முறை

    தண்ணீர், பால் குடிக்கும் ஃபீடிங் பாட்டிலில் இருந்து அதிக கிருமிகள் குழந்தைகளுக்கு பரவுகின்றன. ஃபீடிங் பாட்டிலை எந்த முறையில் பராமரிப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
    தண்ணீர், பால் குடிக்கும் ஃபீடிங் பாட்டிலில் இருந்து அதிக கிருமிகள் குழந்தைகளுக்கு பரவுகின்றன. அதைத் தடுக்க ஃபீடிங் பாட்டிலை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இந்தப் பதிவை படிக்கும் முன் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்... பிளாஸ்டிக்கில் நல்ல பிளாஸ்டிக் என்று ஒன்று கிடையவே கிடையாது. மிகவும் மோசமான பிளாஸ்டிக்,  மோசமான பிளாஸ்டிக், குறைந்த மோசமான பிளாஸ்டிக் என்று மட்டுமே வகைப்படுத்த முடியும். நான் நல்ல, தரமான, பாதுகாப்பான பிளாஸ்டிக் வைத்திருக்கிறேன். விலை உயர்ந்தது. இதெல்லாம் நீங்கள் பெருமையாக சொல்லி கொள்ளலாமே தவிர... அறிவியல் படியாகவும் சூழலியல் தொடர்பாகவும் எந்த பிளாஸ்டிக்குமே பாதுகாப்பானது அல்ல. வேறு வழியின்றி குறுகிய காலத்துக்கு பயன்படுத்தி நிறுத்திவிடுவதே புத்திசாலித்தனம்.

    குழந்தை பாலோ, தண்ணீரோ குடித்த பின்பு அப்படியே போட்டு வைக்காமல் முடிந்தவரை சீக்கிரமே கழுவி விடுங்கள். குழந்தையின் பாட்டில் சுத்தம் செய்ய பாட்டில் பிரஷ் வைத்திருங்கள். அதை வைத்து நன்கு கழுவிய பின் அந்த பிரஷ்ஷை கட்டாயம் வெயிலில் காய வையுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் பாட்டிலை போட்டு கழுவலாம். கொஞ்சமாக பாத்திரம் சுத்தம் செய்யும் லிக்விட் பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை கல்லுப்பு போட்டு சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

    சோப் வாசம் நீங்கும் வரை நன்கு கழுவுங்கள். தயவு செய்து, கொதிக்கும் நீரிலோ சுடுநீரிலோ பிளாஸ்டிக் ஃபீடிங் பாட்டிலை போட வேண்டாம். தற்போது, ஸ்டீல் பாட்டில்கள் கிடைக்கின்றன. அதை நீங்கள் சுடுநீரில் போட்டு கழுவினால் பிரச்னையில்லை. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் ரப்பர் ஆகியவற்றை போட்டால் பாட்டிலில் இருந்து லித்தியம் (lithium) என்ற கெமிக்கல் வெளி வரும்.

    இது குழந்தைகளின் உணவில் கலந்து நஞ்சாக மாறிவிடும். ஆபத்தான கெமிக்கல்களில் லித்தியமும் ஒன்று. சூடான உணவு, திரவம் பட்டால் பிளாஸ்டிக் பாட்டில் இருந்து லித்தியம் வெளியேறும். அதேபோல பிளாஸ்டிக் பாட்டிலில் சூடான பாலையோ ஊற்றி வைக்க வேண்டாம். அந்த பாலில் லித்தியம் கலந்துவிடும். உங்களது அறியாமையால் குழந்தைகளின் உணவு விஷயத்தில் தயவு செய்து அலட்சியமாக இருக்க வேண்டாம். கடைகளில் ஸ்டரிலைசிங் திரவம் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தியும் கழுவலாம்.

    குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலை சுத்தம் செய்யும் முறை

    10 மாத குழந்தைகள் வரை நீங்கள் ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பெரியவர்கள் போல குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். 0-6 மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கலாம். ஃபார்முலா மில்க் கொடுப்பவர்கள், ஸ்டீல் ஃபீடிங் பாட்டில் பயன்படுத்துங்கள். குழந்தைகள் சப்பும் அந்த ரப்பர், லேட்டக்ஸ், சிலிக்கோன், பிளாஸ்டிக் போன்றவற்றால் தயாரிக்கப்படும் என்பதால் குழந்தை பால் குடித்த உடனே வாயிலிருந்து எடுத்துவிடுங்கள். வாயில் அப்படியே சப்பி கொண்டு இருந்தால் பற்கள் சீரற்று முளைக்கும். ரூட் கேனல் வரை கிருமிகள் செல்ல வாய்ப்புகள் அதிகம். ஈறு பாதிக்கும். பல் முளைக்க சிரமமான நிலைக்கு போய்விடும்.

    20-30 நிமிடங்களுக்குள் பாலை குழந்தைக்கு கொடுத்துவிட முயற்சி செய்யுங்கள். அதற்கு மேல் ரப்பர், பிளாஸ்டிக், லேட்டக்ஸ், சிலிக்கோன் போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் சக்கர், குழந்தையின் உமிழ்நீரோடு கெமிக்கல்கள் கலக்க ஆரம்பிக்கும்.

    பாட்டில் நிறம் மாறி இருந்தால் உடனே பாட்டிலை மாற்றுங்கள். பால் கசிந்தால் துர்நாற்றம் வந்தால் பாட்டில் உப்பி இருந்தால் சின்ன சின்ன கோடுகள் இருந்தால் பிளாஸ்டிக் உருகி பாட்டில் மெலிந்து இருந்தால் இந்த அறிகுறிகள் உடனேயே பாட்டிலை மாற்ற வேண்டும். பொதுவாகவே 2 மாதத்துக்கு ஒருமுறை பாட்டிலை மாற்றுங்கள். 
    Next Story
    ×