என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்சினைக்கு காரணம் ஆகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்சினையினால் மாதவிடாயின்போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.

    சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது. திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுக்கும்போது இப்பிரச்சினை தெரிய வருகிறது.

    கருப்பை அகப்படலமாக இருக்கும் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும். இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருந்தால் தாம்பத்திய உறவின்போது வலி இருக்கலாம். இந்தப் படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    வயது வந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்சினை வரலாம். அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது, மதுப்பழக்கம் போன்றவையும் இப்பிரச்சினைக்கு காரணங்கள்.

    ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகவும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியம் இல்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும். 
    நாவில் எச்சில் ஊறுவது மாங்காய் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இத்தகைய பச்சை மாங்காயை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மாங்காய் - 1
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - 1 டீஸ்பூன்
    தேன் - 5 டீஸ்பூன்
    ஐஸ்கட்டி - 5
    தண்ணீர் - 2 கப்



    செய்முறை :

    மாங்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    நறுக்கிய மாங்காயை 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

    மிக்சியில் சீரகத்தூள், மிளகு தூள், தேன், உப்பு, புதினா, ஐஸ் தண்ணீர், ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக அடிக்கவும்.

    இந்த ஜூஸை ஒரு கிளாஸில் ஊற்றி ஜில்லென பருகலாம்.

    பச்சை மாங்காய் ஜூஸ் ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆனால் கிரெடிட் கார்டுக்காக என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்று தெரிந்துகொண்டால் அதைப் பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம்.
    கிரெடிட் கார்டு எனப்படும் ‘கடன் அட்டை’, பலரை வசீகரிக்கும், பலரை பயமுறுத்தும் அட்டையாக உள்ளது.

    ஆனால் கிரெடிட் கார்டுக்காக என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்று தெரிந்துகொண்டால் அதைப் பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம்.

    அந்தக் கட்டணங்கள் பற்றி...

    ஆண்டுக் கட்டணம்: கிரெடிட் கார்டு வழங்குவதற்கு பொதுவாக வங்கிகளும் நிதி அமைப்புகளும் எவ்விதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால் சில வங்கிகள் முதலாண்டில் மட்டும் கட்டணங்களுக்கு விலக்கு அளித்துவிட்டு இரண்டாம் ஆண்டிலிருந்து கட்டணங்களை விதிக்கின்றன.

    வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள்: பொதுவாக வங்கிகள், கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளுக்கு 50 நாட்கள் வரை வட்டி வசூலிப்பதில்லை. ஆனால் 50 நாட்களுக்குள் செலவுத் தொகையை வங்கிக்கணக்கில் திரும்பச் செலுத்தவில்லை என்றால் கடனுக்கான வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள் விதிக்கப்படும்.

    பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி .எம்.மில் பணம் எடுக்கலாம். ஆனால், இந்த வசதியை அவசரத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் உடனடியாக அத்தொகைக்கு வட்டி விதிக்கப்படும்.

    அதிகப்படியான செலவுக் கட்டணம்: உங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட தொகைக்கும் மேல் கடன் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ அபராத கட்டணம் விதிக்கப்படும்.

    கால தாமதக் கட்டணம்: கிரெடிட் கார்டு மீதான கால தாமதக்கட்டணம் நமக்குப் பலவகைகளில் பாதிப்பை ஏற் படுத்தும். இதனால் நம் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். மேலும், அபராதக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

    தொகை பரிமாற்றத்துக்கான கட்டணம்: ஒரு கிரெடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கித் தொகையை இன்னொரு கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் பொழுது அதற்கென தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். 
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு நரம்புகள் வலுப்பெறும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: “சலப” என்றால் வெட்டுக்கிளி என்று பொருள். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளி போன்று தோற்றம் அளிப்பதால் சலபாசனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    செய்முறை: முதலில் அத்வாசனம் செய்ய வேண்டும். தலையை மேலே தூக்கி தாடையை தரைவிரிப்பின் மேல் வைக்கவும். கைகளை உடலுக்கு பக்கவாட்டில் நேராக நீட்டி வைத்து, பிறகு இடுப்பை தூக்கி இரண்டு கைகளையும் உடலுக்கு அடியில் வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும். கைவிரல்களை மடக்கியோ, நீட்டியோ வைக்கவும்.

    மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி, கைகளை அழுத்தி இரண்டு கால்களையும் இணைத்தவாறு மேலே 45 டிகிரி அளவு வரை உயர்த்தி நிறுத்த வேண்டும். தொப்புளுக்கு கீழே இருந்து பாதம் வரைக்கும் உள்ள உடல் பகுதி அந்தரத்தில் இருக்க வேண்டும். முழங்கால்களை மடக்கக் கூடாது. இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 வினாடி இருந்து பிறகு, நிதானமாக கால்களை கீழே இறக்கவும். மூச்சை வெளியே விடவும். கால்கள் தரையில் படியும் வரைக்கும் முழங்காலை மடக்கக் கூடாது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கீழ் முதுகு, அடிவயிறு, இடுப்பு, கைகள் மற்றும் தாடையின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: சிலருக்கு கால்களை மேலே உயர்த்தும் போது தலையும் சேர்ந்து மேலே தூக்கும். ஒரு சிலருக்கு இருகால்களையும் சேர்த்து மேலே தூக்க முடிவதில்லை. முயற்சி செய்யும்பொழுது முழங்கால்கள் மடங்கி கோணலாக அகன்று விடும். குதிகால்கள் ஒன்றாக சேராது. இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் சரியான ஆசன நிலை வந்து விடும்.

    தடைக்குறிப்பு: இருதய பலஹீனம், உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு, குடல் புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள்: ஜீரண கருவிகள் நன்கு செயல்படும். இடுப்பு நரம்புகள் வலுப்பெறும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, மூத்திரம் கழிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கிறது.

    இப்போதைய கடும் வெயிலின் மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மேலும் சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம்.
    இப்போதைய கடும் வெயிலின் மைக்ரேன் தலைவலியினால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது. பொதுவில் அதிக பளீர் வெளிச்சம், தூக்கமின்மை, காபி, கேபின், சாக்லெட் இவையெல்லாம் மைக்ரேன் தலைவலியினை தூண்டிவிடும் என்பது பலரின் அனுபவம். ஆயினும் மேலும் சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம்.

    தூக்கமின்மை மைக்ரேன் தலைவலியினைத் தூண்டும் குறைந்தது அன்றாடம் 8 மணிநேர தூக்கம் என்பது அவசியம். முறையான குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க சென்று குறைவான குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவதும் மைக்ரேன் தலைவலியினைத் தவிர்க்க மிக அவசியம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பகலில் தூங்குவது, இரவில் வெகுநேரம் விழித்து காலையில் வெகுநேரம் சென்று எழுவது போன்றவற்றினைச் சொல்வார்கள். மைக்ரேன் பாதிப்பு ஏற்கனவே உடையவர்கள் மேற்கூறியவாறு செய்யும் பொழுது மைக்ரேன் பாதிப்பு உடனடி அதிகமாக ஏற்படுகிறது.

    * பலரும் ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்ளெட் போன்றவை இல்லாது வாழ்வே இல்லை என்று நினைக்கின்றார்கள் தூங்கச் செல்வதற்கு முன்கூட அல்லது படுத்துக் கொண்டே தூங்கும் வரை நீல ஒளி உபயோகிப்பவருக்கு மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

    * சிலருக்கு சில வகை சோபாக்கள், உடைகள், போர்வைகள் அதிலுள்ள டிசைன்கள், வரிகள், வட்டங்கள் போன்றவை மூளையிலுள்ள கார்டெக்ஸ் பகுதியினைக் தூண்டி மைக்ரேன் வலியினை உருவாக்குகின்றன என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே எளிமையான டிசைன் கொண்ட உடைகள், சோபாக்கள், படுக்கை விரிப்புகளை உபயோகிப்பது நல்லது.

    * திடீரென தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றம் மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆக மேற்கூறிய குறிப்புகளை அறிந்து மைக்ரேன் தலைவலி தாக்குதலை தவிர்ப்போம்.

    அதிக வியர்வை: வெய்யில் கொளுத்தும் நேரத்தில் மிக அதிக வியர்வை என்பது சாதாரணமாக ஏற்படும் நிகழ்வுதான். அடிக்கடி சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். என்பதுதான் அறிவுரையாக இருக்கும். இதனால் உடலின் நீர் சத்து சீராய் இருக்கும். பல பாதிப்புகள் இதனால் தவிர்க்கலாம்.



    வியர்வை இயற்கையான ஒன்று. தேவையான ஒன்று. உங்கள் உடலை குளுமை செல்கிறது. உடலில் அதிக  உஷ்ணம் ஏற்படும் பொழுது நரம்பு மண்டலம் வியர்வை சுரப்பிகளை தூண்டி வியர்வை மூலம் உடல் உஷ்ணத்தினை வெளியேற்றுகிறது. 99 சதவீதம் வியர்வை நீர் தான் சிரிதளவு உப்பும். தாது உப்புகளும் வெளியேறுகின்றன. அதிக நச்சு (அ) கழிவுகள் கல்லீரல், நுரையீரல், சிறு நீரகம் மூலமாகவே வெளியேறுகின்றன.

    இது சாதாரண சூழ்நிலையில் நிகழும் ஒன்று. ஆனால்  மிக அதிக அளவில் வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உள்ள சத்து குறைந்து தாது உப்புகள், உள்ள இவற்றிலும் குறைபாடு ஏற்படுகிறது.

    உஷ்ணம், கோடை, ஸ்ட்ரெஸ் போன்ற நேரங்களில் அதிக வியர்வை ஏற்படும். கை மடிப்பு, கால்கள், கைகள், முகம் இந்த இடங்களில் வியர்வை அதிகம் ஏற்படும்.

    *  பரம்பரை
    *  உடல் அளவு
    *  தொடர் உடற்பயிற்சி இவையும் அதிக வியர்வைக்கு காரணம் ஆகின்றன.
    *  காபி, ஆல்கஹால் இவை உடலின் உஷ்ணத்தினை உயர்த்தி வியர்வையினை உருவாக்கும்.
    *  காரசாரமான உணவுகளில் வியர்வை கொட்டும்  ஆயினும் அதிக வியர்வை கொட்டுவதனை நீங்கள் உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறவும்.
    *  சிறிது நேரம் ஷவரில் இருப்பது.
    *  டீ, காபி, மது இவற்றினைத் தவிர்ப்பது.
    *  கார, சார மசாலா உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை சங்கடமான அதிக வியர்வையினைத் தவிர்க்கும்.
    *  அதிக எடையினைக் குறைத்தல் நீரிழிவு நோயாளிகள்  சர்க்கரையினை  கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
    *  கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல்.
    *  மருத்துவ உதவியோடு மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை பல விதங்களில் உடல் நலனை பாதுகாக்கும்.
    காராமணி குழம்பை சாதம், தோசை அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காராமணி - 1 கப்
    புளி - 1 எலுமிச்சை அளவு
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 2
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    வர மிளகாய் - 2
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காராமணியை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்க வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த காராமணியை போட்டு, அதில் 2 கப் தண்ணீர் விட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    மற்றொரு வாணயிலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, வரமிளகாய், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, புளித் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி விட வேண்டும்.

    நன்றாக கொதித்து வரும் போது வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது அருமையான காராமணி கறி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.

    மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது?

    " எந்தப் பழமும் பளபளப்பாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் பழங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.

    * பழுத்த மாம்பழம் கொஞ்சம் கொழகொழப்பாகத்தான் இருக்கும். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் அப்படி இருக்காது.



    * இயற்கையாகப் பழுத்த பழங்கள் லேசாக அடிபட்டு, கசங்கி முறையான வடிவத்தில் இருக்காது.

    * ரசாயனங்கள் மூலமாகப் பழுக்கவைத்தால் பழங்கள் முறையான வடிவத்தில் பழுக்காமல் திட்டு திட்டாக பழுத்திருக்கும்.

    * இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டுமல்லாமல், சற்று இளஞ் சிவப்பு நிறத்தோடு காணப்படும்.

    * மாம்பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால், அது கண்டிப்பாக கார்பைட் கல்லால் பழுக்கவைக்கப்பட்டது.

    * இயற்கையில் காம்புப் பகுதிதான் கடைசியாகப் பழுக்கும். பழம் காம்பை நோக்கித்தான் பழுத்துக்கொண்டு செல்லும். செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவை அப்படி இருக்காது.

    திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம்.
    மாதவிலக்கு முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கரு முட்டை வெளியாகும். மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த இடைவெளி சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி நாட்கள் மாறும்போது கருமுட்டை வெளியாகும் நாள் கணக்கு மாறும்.

    மாதவிலக்கு முடிந்ததும் முதல் ஐந்து நாட்கள், மாதவிலக்கு நாளுக்கு முன் ஐந்து நாட்களிலும் உடலுறவு கொள்வதால் குழந்தை உருவாக வாய்ப்பில்லை. மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான நாட்கள் எவை என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்களில் எந்தத் தயக்கமும் இன்றி தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம்.

    உடலுறவின்போது குழந்தை உருவாவதைத் தடுக்க காண்டம் பயன்படுத்துவதே பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது. இது பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததும் ஆகும். உடலுறவின்போது காண்டம் கிழிந்து விடாமல் இருக்க ஆணுறுப்பில் சரியாகப் பொருத்த வேண்டும். காண்டம் போட்ட பிறகு காற்றுப் புகுவதற்கான வாய்ப்பிருந்தால்தான் உடலுறவின்போது கிழியும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆணுறையை சரியாக, இறுக்கமாகப் போட்டுக் கொண்டால் பயமின்றி உறவை அனுபவிக்கலாம்.

    உடலுறவின்போது பாதுகாப்பு இன்றி இருந்தாலோ, காண்டம் கிழிந்து விட்டாலோ கூடக் கவலைப்படத் தேவையில்லை. இந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையுடன் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்து கருஉருவாகாமல் தடுத்திட முடியும். உடலுறவுக்குப் பின் 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.

    கரு உருவாவதைத் தடுக்க பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் மாத்திரை வைத்தும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். ஆனால், கரு உருவாவதைத் தடுக்க ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் இதுபோன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தக் கூடாது.



    பெண்ணுக்கான கருத்தடை சாதனமாக டயாப்ரம்(Diaphragm) பயன்படுத்தலாம். இந்த சாதனம் 2 முதல் 4 இன்ச் வரை வட்ட வடிவில் ரிங் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருத்தடை சாதனத்தை துவக்கத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்னர் பெண் சுயமாக தனது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம். இதை அணிந்து கொள்வதால் விந்தணு கரு முட்டையுடன் இணைவதைத் தடுக்கலாம்.

    IUD என்கிற Intrauterine device என்ற சிறிய பிளாஸ்டிக் சாதன வடிவிலான கருத்தடை சாதனமும் உண்டு. இதனைப் பொருத்திக் கொள்வதன் மூலமும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். காப்பர் டி கருத்தடை சாதனமும் கருத்தடைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

    இதனைப் பொருத்திக் கொள்வதால் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதேபோல கரு உருவாவதைத் தடுக்க எடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவுகளும் மோசமானவை.

    திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். ஆண்டுக்கணக்கில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல. இதனால் பின்னாளில் குழந்தைப் பேற்றில் பிரச்னை வரலாம். எனவே, தாம்பத்யம் இனிக்க பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்துவதைப் போலவே நீண்ட நாட்கள் தள்ளிப் போடாமலும் இருங்கள்.

    தாம்பத்யம் இனிப்பதோடு இணையின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வாத கருத்தடை முறைகளாக இருந்தால் அவற்றால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகி கண்டிப்பாக தாம்பத்ய இன்பத்தைக் குறைத்திடும். 
    குழந்தைகளுக்கு பலூடா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சப்ஜா பலூடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சப்ஜா விதை - ஒரு ஸ்பூன்
    பால் - ஒரு டம்ளர்
    சேமியா - சிறிதளவு
    ஐஸ்கிரீம் - 2 க்யூப்
    பாதாம், வால்நட், முந்திரி - சிறிதளவு
    ப்ரவுன் சுகர் - தேவையான அளவு
    ஸ்ட்ராபெர்ரி, மாதுளை,  நாவல்பழம் - சிறிதளவு.



    செய்முறை :

    சப்ஜா விதையை இரவே ஊற வைத்துக் கொள்ளவும். அது 3 அல்லது 4 ஸ்பூன் அளவிற்கு வந்து விடும்.

    எல்லா பழத்தையும் தனித்தனியாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.

    சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும். பலூடா கிளாஸில் சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

    ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, மாதுளம் ஜூஸ் விட்டு அதன் மேல் ஐஸ்கிரீம் போட வேண்டும்.

    மறுபடி சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

    ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, நாவல்பழம் ஜூஸ் விட்டு மறுபடி சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

    ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் விட்டு அதன் மேல் ஜஸ்கிரீம் போட வேண்டும்.

    அதன் மீது சர்க்கரை கலக்கிய பாலை விட்டு லேசாக கலந்துவிடவும்.  

    ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

    சூப்பரான சப்ஜா பலூடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டீன் ஏஜ் வயதினரிடம் வாழ்க்கை, காதல் உணர்வு பற்றிய கேள்விகளுக்கு அவர்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் கவனிக்கத்தகுந்தது. பெற்றோர் இதனை கருத்தில்கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறோம்.
    இளம் மனதின் எண்ணங்கள் என்னவாக இருக்கின்றன என்பதை கண்டறிவதற்கான வாழ்வியல் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் பங்குபெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவ- மாணவிகள். 12 முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்கள். அவர்களிடம் வாழ்க்கையை பற்றிய பல்வேறு விஷயங்களை கேள்விகளாக கேட்டுவிட்டு, காதல் உணர்வுகள் பற்றியும் கொஞ்சம் கேட்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் மிகவும் கவனிக்கத் தகுந்தது. பெற்றோர் இதனை கருத்தில்கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கே தருகிறோம்.

    உங்களது காதலைப் பற்றி பெற்றோருக்கு தெரியுமா?

    காதல் இருப்பதாக ஒத்துக்கொண்டவர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதில் 42 சதவீதம் பேர் பெற்றோருக்கு தெரியும் என்றும், 58 சதவீதம் பேர் பெற்றோருக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    ஆனால் 95 சதவீதம் பெற்றோர்கள் இப்போதும், தங்கள் மகனோ, மகளோ இந்த பருவத்தில் காதலில் ஈடுபடமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் அளவுக்கு அதிகமாக தங்கள் பிள்ளைகள் செல்போனை பயன்படுத்தும்போதுகூட, அப்படி செல்போனில் யாரிடம் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள் என்று கண்காணிப்பதில்லை. ஆணும், பெண்ணும் இப்போது விரைவாக உடல் வளர்ச்சி பெற்றாலும், ஆண்களைவிட பெண்கள் அதிக உடல் வளர்ச்சி பெறுகிறார்கள். உடல் வளர்ச்சியால் அவர்கள் விரைவாக மன வளர்ச்சியும் அடைகிறார்கள் என்பதை பெற்றோரும் சமூகமும் புரிந்துகொள்ளவேண்டும். மகளின் மனவளர்ச்சியை அங்கீகரிக்கத் தெரிந்த பெற்றோரால் மட்டுமே அவளது செயல்பாடுகளில் எது சரி? எது தவறு? என்பதை உணர்ந்துகொள்ள முடியும். சரியாக வழிகாட்டவும் முடியும்.

    (சர்வே முடிவு ‘பெற்றோர் தங்களது பிள்ளைகளின் காதலை சற்று கண்காணிக்கவேண்டும்’ என்று கூறுகிறது)

    நட்பாக பழகியவரைத்தான் காதலுக்குரியவராக மாற்றிக்கொள்கிறீர்களா?

    இந்த கேள்விக்கு 57 சதவீதம் பேர் ஆம் என்றும், 43 சதவீதம் பேர் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

    நட்பு இவர்கள் வாழ்க்கையில் காதலாக மாறுவது மிக விரைவாக நடக்கிறது. ஒரே பள்ளியில் அல்லது ஒரே வகுப்பில் உள்ளவர்களிடம்தான் காதல் உருவாகிறது என்று சொல்வதற்கில்லை. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் இந்த வயதில் காதல்வசப்படுகிறார்கள். பெரும்பாலானவர்கள் வலைத்தளம் மூலமே காதல்கொள்கிறார்கள். அவர்களது காதல் பேச்சு பெருமளவு எல்லைமீறியதாகத்தான் இருக்கிறது. அந்த எல்லைமீறல் அவர்களது எதிர்கால வாழ்க்கையையும் பாதித்துவிடக்கூடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    செல்போனில் எந்த ஆப் உங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது?

    82 சதவீதம் பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். 5 சதவீதம் பேர் மெசஞ்சரும், 2 சதவீதம் பேர் ஸ்கைபையும் பயன்படுத்துகிறார்கள். 11 சதவீதம் பேர் மேற்கண்டவைகளில் எதையும் பயன்படுத்துவதில்லை என்கிறார்கள். சவுகரியமும், பாதுகாப்பும் வாட்ஸ்அப்பில் அதிகம் இருப்பதாக டீன்ஏஜ் பருவத்தினர் சொல்கிறார்கள். ஆனால் காதல் அறிமுகம் பெரும்பாலும் பேஸ்புக்கில்தான் நடக்கிறது. நட்பு.. அன்பு.. கல்வி.. பொழுதுபோக்கு.. என்று ஆரம்பிக்கும் தகவல்தொடர்பு அப்படி இப்படி போய் இறுதியில் காதலில் முடிகிறது.

    ப்ராஜெக்ட் செய்கிறேன்.. ஸ்டடி மெட்டீரியல் தேடுகிறேன் என்று மணிக்கணக்கில் இரவு பகல் பாராமல் கம்ப்யூட்டர் முன்பு பிள்ளைகள் அமர்ந்திருந்தால் அதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். பேஸ்புக்கில் அறிமுகமாகி, மெசஞ்சரில் தகவல்களை பரிமாறி, வாட்ஸ்அப்பிற்கு வருவது இப்போது காதலின் பாதையாக இருக்கிறது.



    நீங்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உங்கள் பெற்றோரிடம் வாக்குவாதம் ஏற்படுமா?

    ஆமாம் என்று 82 சதவீதம் பேரும், இல்லை என்று 18 சதவீதம் பேரும் சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    செல்போனை பிள்ளைகளிடமிருந்து பிரிக்க முடியாது என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தங்கள் பிள்ளைகளிடமிருந்து அதை பிரிக்கவேண்டும் என்ற எண்ணமும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இல்லை. பக்கத்து வீட்டு பெண் பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கிறாள் தனது பெண் ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்கும் நிலையில்தான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அதனால் செல்போன் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் பிள்ளைகள் மீது சந்தேகமோ, படிப்பில் பின்னடைவோ, வேறு விதமான பிரச்சினைகளோ உருவாகும்போது, பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அப்போது பெற்றோர்- பிள்ளைகள் தரப்பினரிடையே மோதல் உருவாகிறது. பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல்தான் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.

    வீட்டில் நிலவும் மோசமான சூழ்நிலை உங்களை காதலிக்க தூண்டியதா?

    ஆமாம் என்று 22 சதவீதம் பேரும், இல்லை என்று 78 சதவீதம் பேரும் பதிலளித்திருக்கிறார்கள்.

    பல குடும்பங்களில் கணவன்- மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் ஆளுக்கொரு பக்கமாக இரு துருவங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர் களது பிள்ளைகள் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்றும் அஞ்சுகிறார்கள். அப்போது வீட்டிற்கு வெளியே இருந்து பாசமாக யாராவது பழகினால் அவரிடம் நெருங்கத் துணிகிறார்கள். அது இனக் கவர்ச்சியான காதலாகிவிடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால், பாசமான தம்பதிகளால் வளர்க்கப்படும் பிள்ளைகளும் காதல் வசப்படத்தான் செய்கிறார்கள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்றால் பெற்றோர், தங்கள் பிள்ளைகளிடம் அன்பு பாராட்டவேண்டும். நண்பர்களைப் போன்று அவர்களிடம் பழகவேண்டும். பிள்ளைகள் மனதில் இருப்பதை பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசும் மன நிலையை உருவாக்கவேண்டும்.

    இளம் வயதிலே காதலிப்பது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    சரி என்று 42 சதவீதம் பேரும், சரியல்ல என்று 58 சதவீதம் பேரும் சொல்கிறார்கள். ஆனால் சரியல்ல என்று சொல்கிறவர்கள், தவறென்று கருதிய பின்பும் காதலிக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய டீன்ஏஜினரிடம் காதல் நல்லது என்ற கருத்து பரவிக்கொண்டிருக்கிறது. டெலிவிஷன் தொடர்களோ, சினிமாக்களோ அதற்கு காரணமாக இருக்கின்றன. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள். காதல் இன்றல்ல முன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் முந்தைய காதல் எல்லைமீறாததாகவும், சமூக அக்கறைகொண்டதாகவும் இருந்தது. ஆனால் இப்போது புரிந்துகொள்ளத் தெரியாத, லட்சியங்களும் இல்லாத காதல்களாகத்தான் இருக்கின்றன.

    டீன்ஏஜ் காதல் கல்வியை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    அது நிச்சயம் கல்வியை பாதிக்கும் என்று 62 சதவீதம் பேரும், பாதிக்காது என்று 30 சதவீதம் பேரும், 8 சதவீதம் பேர் அது பற்றி சரியாகத் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

    காதல், கல்வியை பாதிக்காது என்று நினைத்துக்கொண்டுதான் பலரும் காதலிக்கிறார்கள். ஆனால் உண்மையை உணரும்போது அவர்களது கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுவிடுகிறது. வீட்டிலோ, பள்ளியிலோ பெயரும் கெட்டுப்போய்விடுகிறது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல், கல்வியில் தோல்வியடைந்த பின்பு காதலித்தது தப்பு என புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த நிலையில் அவர்கள் வாழ்க்கையிலும் தோல்வியடைந்துவிடுகிறார்கள்.

    இந்த சர்வே தகவல் பெற்றோரிடமும், பிள்ளைகளிடமும் விழிப்புணர்வு ஊட்டுவதாக இருக்கிறது.
    கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது போன்று கூந்தல் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது போன்று கூந்தல் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வெப்ப தாக்கம் கூந்தலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். முடி உதிர்வு, முடி வெடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கோடைகாலத்துக்கு அவசியமான கூந்தல்

    பராமரிப்பு வழிமுறைகள்:

    * கோடையில் சூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலைத்தாக்கும். அதனால், குளித்ததும் கூந்தலை உலர வைப்பதற்கான டிரையரை கோடைகாலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுவும் வெப்பத்தை உமிழ்வதால் கூந்தலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுவிடும்.

    * கோடை காலத்தில் வெளியே செல்லும்போது தலையில் தொப்பி அணிந்துகொள்ளலாம். அல்லது துணியால் தலையை மூடிக்கொள்ளலாம். அதன் மூலம் உச்சந்தலையில் கூந்தலுக்குரிய இயல்பான ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். வெப்பக்காற்றினால் கூந்தல் சேதம் அடைவதையும் தவிர்க்கலாம்.



    * இறுக்கமான சிகை அலங்காரம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூந்தலை தளர்வாக பின்னிக்கொள்வதே நல்லது. இறுக்கமாக இருந்தால் கூந்தலில் வியர்வை படிந்து சூரிய கதிர்களின் தாக்கத்தால் முடி சேதமடைந்துவிடும்.

    * கடற்கரை, நீச்சல் குளம் போன்ற இடங் களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினால் உடனே கூந்தலை கழுவ வேண்டும்.

    * கூந்தலை சீவுவதற்கு பரந்த பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்த வேண்டும். பிரஷ் வைத்து கூந்தலை அலங்கரிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. மயிர்கால்கள் வரை ஆழமாக ஊடுருவும்படி எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். குளியலுக்கு தரமான ஷாம்புகளையும் பயன்படுத்த வேண்டும்.
    சர்க்கரை நோயாளிகள் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பனிவரகு காய்கறி சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பனிவரகு - 1 கப்
    தக்காளி - 1,
    வெங்காயம் - 1
    வெள்ளரிக்காய் - 1,
    கேரட் - 1
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு.



    செய்முறை :

    பனிவரகை நன்றாக சுத்தம் செய்து இரண்டரை கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பனிவரகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறிகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து புதினா, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×