என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    உடல் எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கம் இருந்தாலே எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.
    உடல் எடை குறைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலர் முயற்சித்துக் கொண்டிருக்கையில், ஒழுங்கான தூக்கம் இருந்தாலே எடை குறைய வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. முறையான தூக்கம் எப்படி எடையை குறைக்க உதவும் என்பதைப் பார்ப்போம். நீங்கள் அளவாக உண்பீர்கள் என்றால், தூக்கமானது பசித்தன்மையை தூண்டும். ஹார்மோன் செயல்பாட்டை சீராக்கும்.

    தூக்கமின்மையால் அதிகம் சாப்பிட நேரிடும். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில், சரியாகத் தூங்காத பெண்கள், முறையாகத் தூங்கும் பெண்களை விட 300 கலோரி அதிக உணவு உட்கொள்வதாக தெரியவந்துள்ளது. தொப்பை வர, கவலையும் மன அழுத்தமும் முக்கிய காரணிகள். சரியாக தூங்கும்போது இவை இரண்டையும் விரட்டலாம்.

    ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் தூங்கும் பெண்களை விட குறைவான நேரம் உறங்கும் பெண்களுக்கு எடை வேகமாகக் கூடுகிறது. ஏழு மணி நேரத்திற்கு குறைவாகவோ, ஒன்பது மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள், மற்றவர்களைவிட, பருமனாகவும், எடை போடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இரவு நன்றாக உறங்கும்போது, அடுத்த ஒரு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். நம் தூங்கும் முறையை சரிசெய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள், மருத்துவ துறை நிபுணர்கள்.
    எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன.
    பிரியாணி… அதன் நிறம், மணம், சுவை பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது. பர்த்டே பார்ட்டி முதல், இறப்பு சம்பவம் வரை ‘பிரியாணி விருந்து’ போடுவது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துவிட்டது. இப்போதெல்லாம் ‘பிரியாணி’ இல்லாத கொண்டாட்டமே இல்லை.

    தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைதான் முதலில் ஏற்படும். அதற்குப் பிரியாணியும் விதிவிலக்கல்ல. ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதால் கூடுதலாக சில உடல்நலப் பாதிப்புகளும் உண்டாகும்.

    பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். பிரியாணியால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்

    வயிற்று எரிச்சல் : வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.

    அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வருமா?

    உடல்பருமன் : அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

    சர்க்கரை அளவு : நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதய நோய் : பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

    வயிற்றுப் புண் : பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
    செல்போனை அதிகப்படியான நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றி முகத்தின் அழகு பாதித்து விடுகிறது. பவுர்ணமி நிலா போல முகம் பிரகாசமாக ஜொலிக்க சில எளிய வழிகள் இருக்கின்றன.
    எவ்வளவுதான் சுத்தமாக பராமரித்தாலும், முகப்பருவும், கரும்புள்ளியும் தோன்றி முகத்தின் அழகை கெடுத்து விடுவதாக நினைக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம். பவுர்ணமி நிலா போல முகம் பிரகாசமாக ஜொலிக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

    செல்போனை ஒரு நாளில் அதிகப்படியான நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றி முகத்தின் அழகு பாதித்து விடுகிறது. இந்த சிக்கலை நிவர்த்தி செய்ய பேரீச்சம்பழத்துடன் சிறிது வெண்ணெய் மற்றும் கசகசா கலந்து அரைத்து சில நாட்கள் கண்களின் கீழ் தடவி வர வேண்டும். அதன் மூலம் படிப்படியாக கருவளையம் மறையும்.

    கறிவேப்பிலையை நன்கு காயவைத்து அதனுடன் கசகசா கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியை தினமும் குளிப்பதற்கு முன்னதாக முகத்தில் தடவி ஐந்து நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

    இந்த பொடியை குளியல் பவுடராகவும் உபயோகப்படுத்தலாம். தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம் சருமத்தில் உள்ள கருவளையம், கடினத்தன்மை ஆகியவை நீங்குவதுடன், முகம் பளபளப்பாகவும். பட்டுப்போல மிருதுவாகவும் இருக்கும்.

    கோடை காலத்தில் தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு உதிர்வதும் உடைவதும், நுனி பிளவுபடுவதும் மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும். இந்த சிக்கலுக்கு முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் எண்ணெய் மற்றும் சோற்று கற்றாழை ஜெல் ஆகியவற்றை பசைபோல் கலந்து தலையில் தடவி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிகைக்காய் அல்லது வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு ஆகியவற்றை உபயோகித்து நன்றாக அலச வேண்டும். அதன் மூலமாக முடி உதிர்வது வறண்டு போவது ஆகியவற்றை தவிர்க்க முடியும். இயற்கையான இந்த முறைகளால் தலைமுடி மிருதுவாக மாறும்.

    ஒரு சிலருக்கு வாயிலிருந்து துர்நாற்றம் வருவதுண்டு. இந்த பிரச்சனையை அகற்ற சுலபமான வழி உள்ளது. பன்னீர் ரோஜா இதழ்களை நன்றாக கழுவி, வெற்றிலையுடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்வதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.

    சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு கருமை நிறத்தில் இருப்பதுடன் தோல் உரிந்து ரத்தமும் வரும். இந்த பிரச்சனை அகல அடிக்கடி பாலாடை அல்லது வெண்ணெய் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தடவி வரலாம். அதன் உதடு வெடிப்பு குணமாகி விடும்.
    வெளிநாடுகள் போல் இந்தியாவிலும் பராமரிப்பு மையங்கள் வளர்ந்து வருகின்றன. வீட்டிலிருந்தே தொழிலாக இதை செய்ய திட்டமிடும் இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் சில உள்ளன.
    தனிக்குடும்பங்கள் பெருகி வரும் சூழலில் குழந்தைகள் பராமரிப்பு என்பது பெரிய சவால். இதற்காகவே வெளிநாடுகள் போல் இந்தியாவிலும் பராமரிப்பு மையங்கள் வளர்ந்து வருகின்றன. வீட்டிலிருந்தே தொழிலாக இதை செய்ய திட்டமிடும் இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் சில உள்ளன. அவை

    இடத்தேர்வு

    பராமரிப்பு மையம் அமைந்துள்ள இடம் குழந்தைகள் விளையாட ஏற்ற வகையில் காற்றோட்டமாக இருப்பதும் அவசியம். மேலும் தரைத்தள கட்டிடமாகவும், அனைத்து வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகள் வசிப்பிடத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் மையம் இருந்தால் தான் அவர்களை அழைத்துச்சொல்வது வீட்டில் விடுவது ஆகியவற்றுக்கு வசதியாக இருக்கும்.

    கட்டிட வாடகை, விளையாட்டு உபகரணங்கள் அடிப்படை வசதிகள், ஊழியர்களுக்கான சம்பளம், பராமரிப்பு செலவு என அத்தியாவசிய தேவையை சமாளிக்க முதலீடு அவசியம். இது போன்ற தொழில்களை சிறுதொழிலாக கருத்தில் கொண்டு வங்கிகள் கடன்கள் வழங்குகின்றன. இதுகுறித்த போதிய விழிப்புணர்வு பெற்றிருப்பது அவசியம்.

    தொழிலுக்கான உரிமம் பெறுவது அதை சார்ந்த அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியம். பாதுகாப்பு, உணவு, இதர வசதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து அரசு அனுமதி பெற வேண்டும். மையம் அமைந்துள்ள இடத்தில் தீ விபத்து போன்றவை நடக்காத வகையில் பாதுகாப்பானதாக உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மையத்தை காப்பீடு செய்வதும் அவசியம்.

    ஊழியர்களின் நியமனத்திலும் கவனம் வேண்டும். குழந்தைகளை அன்பாகவும், அரவணைப்புடனும் கவனித்து கொள்வதுடன் தேவை அறிந்து செயல்படும் வகையில் ஊழியர்கள் இருக்க வேண்டும். ஊழியர்களின் செயல்பாடுகள் நமக்கு நன்மதிப்பை பெற்று தருவதுடன் குழந்தைகள் மையத்திற்கு விருப்பத்துடன் வருவதற்கான ஆர்வத்தை தூண்டும்.

    அடிப்படை கல்வி

    ஒரு வயது குழந்தையாக இருந்தாலும், அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்கு விளையாட்டுடன் அடிப்படை கல்வியும் கற்றுத்தர வேண்டும். இதை ஊழியர்கள் மட்டுமின்றி மைய உரிமையாளரும் தெரிந்திருக்க வேண்டும்.

    நேர மேலாண்மை

    அரசின் விதிகளின் படி பகல் நேர பராமரிப்பு மையம் காலை 9.30 மணிக்கு மேல் தொடங்கி மாலை 4.30 மணி வரை செயல்பட வேண்டும். இதில் 1:3 என்ற அடிப்படையில் ஊழியர்கள் இருக்க வேண்டும். அதிக குழந்தைகள் இருந்தால், ஒரு பிரிவுக்கு 15 குழந்தைகளாக சேர்த்து கொள்ளலாம். 3 மணி நேரத்திற்கு ஒரு பிரிவு என்ற வகையில் பிரிந்து கொள்ளலாம்.

    விதிமுறைகள்

    மையத்தின் விதிமுறைகள் குறித்து பெற்றோர்களிடம் ஆரம்ப நிலையிலேயே தெளிவாக தெரியப்படுத்தி ஒப்புதல் பெற வேண்டும். மேலும் மையத்தை எப்படி வழி நடத்தி செல்ல வேண்டும் என்பது பற்றி முன்னதாகவே தெளிவு பெற்றிருக்க வேண்டும்.

    விளம்பரம்

    மையத்தில் உள்ள வசதிகள் வழங்கப்படும் சேவைகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். நவீன உலகில் தொழில் நுட்ப வசதிகளை சரியான வகையில் பயன்படுத்தி கொண்டால் செலவில்லாமல் விளம்பரம் கிடைக்கும்.

    மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றி வீட்டிலேயே இந்த தொழிலை தொடங்கி வெற்றி பெறலாம்.
    யுகாதி பண்டிகை தினமான இன்று இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அதில் வேப்பம் பூ பச்சடி முக்கிய அம்சமாகும்.
    தேவையான பொருட்கள்:

    வேப்பம்பூ - 1 கைப்பிடி அளவு
    காய்ந்த மிளகாய் - 3
    புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
    மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டீ ஸ்பூன்
    பெருங்காயத்தூள் சிறிதளவு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கடுகு - 1/2 டீ ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டீ ஸ்பூன்

    செய்முறை:

    வேப்பம்பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வேப்பம்பூ போட்டு மிதமான தீயில் கருஞ்சிவப்பாக வறுத்துக் கையால் நொறுக்கிப் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    பின் வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்துப் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும்.

    உப்பு போட்டு நன்கு கொதித்ததும் வெல்லம் போட்டுக் கிளறவும்.

    இறுதியில் வெல்லம் கரைந்ததும் அதில் வேப்பம் பூவை கொட்டி கிளறவும்.

    பின்னர் பச்சடி கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் பிரச்சனை அல்லது மனதில் அழுத்தம் ஏற்படும் போது மாதவிடாய் தள்ளிப்போதல் அல்லது முன்னதாகவே ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
    ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான விஷயம். பொதுவான சுழற்சி 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் என்று குறிப்பிடப்படுகிறது.

    தற்போது பெண்களிடம் ஒழுங்கற்ற மாதவிடாய் வயிற்று வலி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் பரவலாக உள்ளன.

    ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் முக்கியமான வழி, வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றுவது தான்.

    சரிவிகித சத்துள்ள உணவை சாப்பிடுவது, சரியான அளவு நீர் அருந்துவது தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகிறது.

    மனஅழுத்தம் என்பதும் மாதவிடாய் சுழற்சி சரியான கால இடைவெளியில் ஏற்படாமல் தாமதம் ஆவதற்கு முக்கிய காரணமாகும். கடும் மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    உடலில் பிரச்சனை அல்லது மனதில் அழுத்தம் ஏற்படும் போது மாதவிடாயுடன் தொடர்புடைய ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் மாதவிடாய் தள்ளிப்போதல் அல்லது முன்னதாகவே ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    இந்த சிக்கலை சமாளிப்பதற்கு கீழ்க்கண்ட வழிகள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

    உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய தொடங்கினாலே மனதிற்குள் ஒருவித அமைதி ஏற்படும். தோட்டக்கலை, குரோஷோ, தையல், இசை போன்ற ஏதேனும் ஒரு ஆக்கபூர்வமான கலையில் ஈடுபடுவதும் நல்லது. மாலை நேரங்களில் தியானம், பிரார்த்தனை வழிபாடு போன்ற ஆழ்மனம் தொடர்புடைய விஷயங்களை செய்து வரலாம்.

    அன்னாசி உடலின் வெப்பத்தை தூண்டக்கூடிய பழம் என்பதால் மாதவிடாய் தாமத சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது.

    அன்னாசியை போல் பப்பாளியும் உடல் வெப்பதை தூண்டக்கூடிய பழ வகையாகும். இதிலுள்ள கரோட்டீன், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டக்கூடியது. அதனால் மாதவிடாய் குறைபாடுகள் அகலும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய முக்கியமான சத்துக்கள் பப்பாளியில் உள்ளன.

    மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் தண்ணீரில் ஓம விதைகளை ஊறவைத்து குடிப்பதும் மாதவிடாய் தாமத பிரச்சனைகள் தீர வழிவகுக்கும்.

    இது கருப்பையை சுற்றி அமைந்துள்ள உடற்பகுதியின் வெப்பத்தை அதிகரிக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. அதனால் இஞ்சி, தேநீர், இஞ்சிச்சாற்றை தேன் கலந்து பருகுவது போன்றவை சீக்கிரமே மாதவிடாய் வெளிப்பட உதவும்.

    வெல்லத்துடன் எள் விதை சேர்த்து இடித்து உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் தாமதங்கள் தவிர்க்கப்படும்.

    மேற்கண்ட உணவு வகைகள் மாதவிடாய் சீராக ஏற்படுவதற்கான பொதுவான வழிகள் மட்டுமே. இவை ஒழுங்கற்ற மாதவிடாய் சிக்கலுக்கான தீர்வாகவோ அல்லது சிகிச்சையாகவோ அமையாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
    குழந்தைகளை பயனுள்ள செயல்களில் ஈடுபடும் வகையில் திசை திருப்புவது அவசியம். அதன் மூலம் அவர்களின் திறமையை வளர்க்கவும் முடியும். அதற்கான வழிகளை இங்கே காணலாம்.
    கொரோனா தொற்று காரணமாக குழந்தைகள் தற்போது வீட்டிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் வழக்கதை விட அதிகரிக்கும் அவர்களின் குறும்புத்தனத்தை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கும் பெற்றோர் நிறைய உள்ளனர். இந்த சிக்கலை தவிர்க்க குழந்தைகளை பயனுள்ள செயல்களில் ஈடுபடும் வகையில் திசை திருப்புவது அவசியம். அதன் மூலம் அவர்களின் திறமையை வளர்க்கவும் முடியும். அதற்கான வழிகளை இங்கே காணலாம்.

    1. பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகத்திலோ, வங்கியிலோ மைனர் அக்கவுண்டு தொடங்கலாம். வங்கியில் உள்ள ஃபார்ம் நிரப்புவது, பணம் செலுத்துவது எப்படி அணுகுவது கணக்கு புத்தகத்தில் வரவு வைப்பது ஆகியவற்றை செய்ய சொல்லலாம். போஸ்ட் ஆபிசுக்கு அழைத்து சென்று பணம் செலுத்துவது எடுப்பது போன்ற நடைமுறைகளை கற்றுத்தரலாம்.

    2. வீட்டிலேயே பழச்சாறுகள் தயாரிப்பது சப்பாத்திக்கு மாவு தேய்ப்பது அதில் வித்தியாசமான உருவங்களை செய்வது, சமையலுக்கு உதவுவது போன்ற விஷயஙகளை ஆண் குழந்தைக்கும் கற்றுத்தரலாம். பாத்திரம் கழுவுவது வீட்டை பெருக்குவது ஆகியவை எல்லோரும் செய்யக்கூடிய வேலைதான் என்பதை மனதில் பதியும்படி சொல்லித்தரலாம்.

    3. அருகில் இருக்கும் நூலகத்திற்கு அழைத்து சென்று படிக்கும் ஆர்வத்தை உருவாக்கலாம். நாளிதழ்கள், பத்திரிக்கைகள், அங்கிருக்கும் புத்தகங்கள் ஆகியவற்றை படிக்க சொல்லலாம். அதில் இருந்து என்ன தெரிந்து கொண்டாய் என்று கேட்டு அவர்களது பொது அறிவை வளர்க்கலாம்.

    4. இரவில் தூங்குவதற்கு முன்னர் இன்று என்ன புதிதாய் கற்று கொண்டாய் என்பது பற்றி டைரியில் எழுதும் பழக்கத்தை மேற்கொள்ள செய்யலாம். விடுமுறை காலங்களில் காலை தாமதமாக எழுவதை பழக்கமாக்கி விடாமல் சரியான நேரத்திற்கு தூங்கி எழுவதை வலியுறுத்த வேண்டும்.

    5. குழந்தைகளை கூட்டமாக உட்காரவைத்து கதையின் தொடர்ச்சியை இன்னொருவர் சொல்ல ஊக்கப்படுத்தலாம். அதாவது ஒருவர் சொல்லத் தொடங்கிய கதையில் ஒரு பகுதியை மட்டுமே சொல்ல வேண்டும். அடுத்தவர் அவரது கற்பனை திறனுக்கேற்ப அந்த கதையின் அடுத்த பகுதியை சொல்லலாம். பின்னர் அடுத்தவர் மேற்கொண்டு கதையின் மற்றொரு பகுதியை சொல்ல வேண்டும். பெரிய குழுவாக இருந்தால் ஒரு சுற்று வந்த பின்னர் ஆரம்பித்த  இடத்தில் கதையை முடிக்க சொல்லலாம். குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை முயற்சிக்கலாம்.

    6.செய்தித்தாள்களில் வரும் குறிப்பிட்ட செய்திகளை சேகரித்து ஒரு நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைக்கும் பழக்கதை ஏற்படுத்தலாம். அது விளையாட்டு, வானிலை, அரசியல், அறிவியல் என எதுவாகவும் இருக்கலாம். செய்தியை சுருக்கி தேதியிட்டு நோட்டில் எழுதி வைக்க சொல்லலாம்.

    7. விடுகதைகளின் விடையை கண்டறிய உதவலாம். நான்கைந்து குழந்தைகளை ஒன்றாக சேர்த்து அவர்களிடம் பொது அறிவு தகவலை கொடுத்து யார் விரைவில் மனப்பாடம் செய்கிறார்கள் என போட்டி வைக்கலாம். இந்த விஷயத்தை குழந்தைகள் விரும்பும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

    மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
    ஆரஞ்சு:

    தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

    பருப்புகள்:

    பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய அனைத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. அவை ஆரோக்கியமான கொழுப்புகளாகும். எனவே அது தோல் அடுக்குகளில் தேங்கியுள்ள ஆரோக்கியமற்ற எண்ணெய்களை அகற்றுவத்தால் உங்களை சூடாக வைத்திருக்கும்.

    பச்சை காய்கறிகள்:

    கீரை, முட்டைக்கோஸ், வெந்தயம், கடுகு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துகொள்ளுங்கள். பின்பு உங்கள் சருமத்தில் ஏற்படும் அதீத மாற்றங்கள் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும்.

    பீன்ஸ்:

    துத்தநாகம் பெரும்பாலும் முகப்பருவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு இயற்கையாகவே இது பயனளிக்கிறது.

    உருளைக்கிழங்கு மற்றும் கேரட்:

    இவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் வியர்வை சுரப்பிகளை சுருக்கவும், துளை அளவைக் குறைக்கவும், பாக்டீரியா தொற்றுகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

    கொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள் , எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

    கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.
     
    இரவு படுக்கைக்குப் போகும் போது,வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.
     
    காரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.  மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
    மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.

    அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு 8 மணிக்கு மிதமான சிற்றுண்டி.

    இதுதான் சரியான உணவுப் பழக்கம். சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படி சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்கு பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது. சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம்.

    பொதுவாக 30 வயதைக் கடந்துவிட்டாலே உணவு பிரமிடை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். நம் உடலை உள்ளும், புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு.

    தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதுடன் விடிகிற பொழுது, நல்லதாகவே முடியும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது. அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம்.

    இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
    தாய்ப்பால் ஊட்டுவது, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது.
    கருவுற்ற 24 வாரத்திலேயே தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பிரசவத்துக்கு, பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். ஆனால் தாய்ப்பால் ஊட்டுவது, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ்தான் இந்தப் பதிவு.

    குழந்தையின் முகம் தாயின் மார்ப்பை நோக்கி இருந்தலும் குழந்தையின் வாய் காம்பை பற்றி இருந்தால், குழந்தை தாய்ப்பால் குடிக்க உதவியாக இருக்கும். ஒரு கையால் குழந்தையின் கழுத்தை பிடித்திருக்கவும் இன்னொரு கையால் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியைப் பிடித்து தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தையின் மூக்கு மார்பில் பட்டு அழுத்திவிடாமல், குழந்தையின் தலையை லேசாகத் தூக்கி பால் கொடுத்தல் வேண்டும்.

    குழந்தைக்கும் மார்புக்குமான உயரத்தை மெல்லிய தலையணை வைத்து சரி செய்யலாம். குழந்தையின் கீழ் உதடு, நாக்கு, முகவாய் அனைத்தும் தாயின் மார்பகத்தில் இருந்தால் குழந்தை மிக எளிதாகப் பால் கொடுக்க முடியும்.

    குழந்தை பால் குடிக்கும்போது, தாயின் மார்புக் காம்பு வலித்தால் தாயின் சுண்டு விரலால் குழந்தை மற்றும் மார்பக காம்பையும் சற்று பிரித்து விடுங்கள். இல்லையெனில் காம்பு வியர்த்து, ஒட்டி புண் உண்டாகலாம். காம்பு வலிக்கும் போது கவனமாகப் பிரித்து விட்டால் மார்பின் புண் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

    முதலில் குழந்தை வேக வேகமாகப் பால் குடிக்கும். பின்னர் அப்படியே தூங்கிவிடும். பிறகு பசி என அழும். இவற்றைத் தடுக்க, குழந்தை தூங்கிவிட்டால் தாய் தன் மார்புக் காம்பை லேசாக இழுத்து விட குழந்தை மீண்டும் தாய்ப்பால் குடிக்க ஆரம்பிக்கும்.

    மார்பைக் கடிக்க முயற்சித்தால், குழந்தை வாயிலிருந்து நகர்த்திக் கொள்ள வேண்டும். காம்பைக் கடிக்கத் தொடங்கும் போதெல்லாம், குழந்தையுடன் அன்பாக பேசி, சிரித்தபடியே முதுகில் செல்லமாக தட்டிக் கொடுத்து கடிக்க கூடாது எனத் தலையை ஆட்டி சொன்னால் குழந்தைக்கு புரியும்

    குழந்தை வயிறு நிரம்பி இருந்தால், பசியில்லாமல் இருந்தால் வலுகட்டாயமாகப் பால் கொடுக்க கூடாது. குழந்தைக்கு பல் முளைக்கும் போது லேசான வீக்கம் ஏற்படும். இதனால் குழந்தை மார்பைக் கடித்து விடும். இதனால் குழந்தையின் ஈறுகளில் வெள்ளைத் துணி சுற்றிய விரலால் லேசாக அழுத்தி மசாஜ் செய்திட ஈறு வீக்கம் சரியாகிவிடும்.

    குழந்தை பால் குடித்தவுடன், குழந்தையைத் தோளில் லேசாக சாய்த்து, முதுகில் தட்டி விட வேண்டும். குழந்தைக்கு ஏப்பம் வந்தப்பின் படுக்க வைக்கலாம். இல்லையெனில் குழந்தை தாய்ப்பாலை எக்களித்து விடும். தோள்ப்பட்டை ஸ்ட்ராப் கனமானதாக, அகலமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்பின் எடையை பிராவால் தாங்க முடியும். பிராவின் முன் பக்கம் மார்பு பகுதியில் திறப்பு உள்ள பருத்தி ஆடை பிராவை பயன்படுத்தலாம்.

    சுத்தமான வெந்நீரால் ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் சுத்தம் செய்யலாம். குளிக்கும் போது வாசனை இல்லாத, தரமான சோப்பை மென்மையாகத் தேய்த்துக் கழுவலாம்.

    மார்பக அழகு போய்விடும் என தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தவறு. பெண்ணின் கர்ப்பக் காலத்திலே மார்பில் மாற்றங்கள் வந்துவிடும். உங்கள் மார்ப்பை, மற்றவருடன் ஒப்பிட வேண்டாம். கருவுற்ற 16 வாரங்களுக்குப் பிறகு மார்பக காம்பு லேசாக வெளிவந்து, அதனை சுற்றி கறுப்பு நிறம் உண்டாகும். மார்பகத்தில், ரத்த நாளங்களில் பச்சை நிற அடையாளமாகத் தெரியும்.

    பிரசவ காலத்தில் வெளிர் மஞ்சள் நிறம் அல்லது இளமஞ்சள் நிற திரவம் காம்பு வழியாக வரும். அதைப் பலரும் வழித்துத் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படி செய்ய கூடாது. இந்த பாலை ‘கொலஸ்ட்ரம்’ என்பார்கள். இது பிறந்த குழந்தைக்கு மிக மிக நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் மார்பகத் தோல் வறட்சியாவதுத் தடுக்கப்படும்.

    மஞ்சள் காமாலை, சளி, மார்பு புண், காச நோய் இருந்தால் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கலாம். ரத்த ஓட்டம், தாய்ப்பால் மார்பில் கட்டாமல் இருக்க, மார்பக வலி ஏற்படாமல் இருக்க வெந்நீர் ஒத்தடம் நல்லது.
    நீங்கள் இட்லி, தோசைக்கு ஏற்கனவே பல பொடிகளை பயன்படுத்தி வருபவர்கள் என்றால், ஒரு மாற்றத்திற்கு இந்த டேஸ்டியான சத்தான எள்ளுப் பொடியை ஒரு முறை முயற்சிக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெள்ளை எள் – 1 கப்
    உளுந்தம்  பருப்பு – 3/4 கப்
    கடலை பருப்பு – ¼ கப்
    காய்ந்த மிளகாய் – 7
    கறிவேப்பிலை – 10-12
    பெருங்காயம் – ½ தேக்கரண்டி
    உப்பு – தேவையான அளவு.

    எள்

    செய்முறை

    அடுப்பில் குறைந்த அளவு தீ வைத்து, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகிய இரண்டையும், தனித்தனியாக, அவற்றின் கலர் மாறும் வரை வறுக்கவும்.

    பின்னர் அவற்றோடு காய்ந்த மிளகாயை போட்டு, அதன் மணம் வரும் வரை வறுக்கவும்.

    தொடர்ந்து கறிவேப்பிலை அதில் இட்டு, சிறிது சுருட்டத் தொடங்கும் வரை வறுக்கவும்.

    இறுதியாக, எள்ளை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வறுக்கவும்.

    இப்போது அடுப்பை அனைத்து, பெருங்காய பொடியை சேர்க்கவும்.

    அது எள் பொடியில் உள்ள சூட்டில் நல்ல மணம் கொடுக்கும். அவற்றை கலந்த பின்னர், நன்றாக குளிவிக்கவும். பின்னர் அவற்றை எடுத்து தூளாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    பொடியை நன்றாக அரைத்த பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்த, தேங்காய் எண்ணெயுடன் தோசை, இட்லிகளுடன் பரிமாறவும்.

    பின்குறிப்பு:

    வெள்ளை எள் விதைகளுக்கு பதிலாக கருப்பு எள் விதைகளைப் நீங்கள் பயன்படுத்தலாம். கருப்பு எள் பயன்படுத்தும் போது பொடி கருப்பானதாக இருக்கும். மற்றும் சுவை மிகவும் வலுவாக இருக்கும்.

    காரம் அதிகம் சேர்ப்பவராக இருந்தால், கூடுதலாக சில சிவப்பு மிளகாயை சேர்த்துக்கொள்ளலாம்.

    நீங்கள் பொருட்களை வறுக்கும் போது குறைந்த தீயில் வைத்து வறுக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற படி பொம்மைகளை வாங்கி தர வேண்டும். அந்த வகையில் 6 வயது வரை எந்த மாதிரியான பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். குழந்தைகளின் வாழ்வில் சில காலத்துக்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். வயதுக்கு ஏற்ற படி நிறைய பொம்மைகள் கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.

    0-6 மாத குழந்தைகள்

    குழந்தைகள் தங்களிடம் நெருங்கும் நபர்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கண்களைத்தான் அதிகமாக குழந்தைகள் பார்ப்பார்கள். முகம், கண், கைகள் அசைவு, பளிச் நிற உடைகள் ஆகியவற்றை பார்ப்பார்கள். தன் கை, கால்களால் என்ன செய்ய முடியுமோ அதைக் கவனித்து கொண்டிருப்பர். தலையைத் தூக்குவது, சத்தம் எழுப்புவது, வாயில் கை வைப்பது இதைத்தான் அதிகம் செய்வார்கள். கைகளில் பிடித்துக்கொள்ள ஏற்றதாக இருப்பதை, குழந்தைகள் வாயில் வைத்து சப்புவார்கள் என்பதால் பெரிய பொம்மைகளாக வாங்கி கொடுக்கலாம். சத்தம் வரக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம். பெரிய ரிங், ஸ்குவீஸ் டாய்ஸ், டீத்திங் டாய்ஸ், சாஃப்ட் டால்ஸ், டெக்ஸ்சர் பால்ஸ், வினைல், போர்ட் புக்ஸ் போன்றவை வாங்கி கொடுக்கலாம். ரைம்ஸ் உள்ள சிடி போடுவது, சின்ன சின்ன மியூசிக் சிடி, தூங்க வைக்கின்ற தாலாட்டு பாடல்கள் போன்றவை வாங்கி ஒலிக்க செய்யலாம். சிறிய பொருட்களை வாங்கி தர கூடாது. வாயில் வைத்து விழுங்கும் அபாயம் உள்ளது.

    7-12 மாத குழந்தைகள்

    இந்தப் பருவத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர கூடியவர்கள். உட்காருவது, புரள்வது, தவழ்வது, நிற்பது, நடப்பது, கத்துவது, அழுவது, இழுப்பது போன்றவற்றை செய்வார்கள். அவர்களின் பெயர் அவர்களுக்கு தெரியும். பொதுவாக ஓரளவு வார்த்தைகளை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். தண்ணீர் டாய்ஸ், சக்கரம் உள்ள மரக்கட்டை பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பப்பட்ஸ், பெரிய பந்து, பெரிய சாஃப்ட் பிளாக்ஸ், கட்டையால் ஆன சதுரங்கள், தவழ்ந்து வரும் பொம்மைகள், எடை இல்லாத பொம்மைகள் வாங்கி கொடுக்கலாம். முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம். வாக்கர் தவிர்க்கவும்.

    1 வயது குழந்தைகள்

    போர்ட் புக்ஸ் - சின்ன, எளிமையான படங்கள் இருப்பது. நிறைய நிஜ படங்கள் இருக்கும் புத்தகங்கள் வாங்கி தரலாம். வாஷ்ஷபிள் மார்க்கர்ஸ், கிரெயான்ஸ், பெரிய பேப்பர், நச்சுகள் இல்லாத கலர்ஸ் வாங்கி தரலாம். பொம்மை ஃபோன், பெண், ஆண், குழந்தை பொம்மைகள், குழந்தைகளுக்கான பர்ஸ், ஸ்கார்ஃப், பொம்மை பேக், விலங்கு பொம்மைகள், பொம்மை வண்டிகள் வாங்கி கொடுக்கலாம். மரகட்டை பிளாக்ஸ், கார்ட் போர்ட் ஆகியவை வாங்கி தரலாம். ஓவிய புத்தகம், கலர் பெயின்டிங்ஸ் கொடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு 6 வயது வரை என்னென்ன பொம்மைகள் வாங்கி தரலாம்

    2 வயது குழந்தைகள்

    மொழியை வேகமாக கற்கும் பருவத்தில் இருப்பார்கள். உயரத்திலிருந்து குதிப்பார்கள், எதிலாவது ஏறுவார்கள், எதையாவது பிடித்துக்கொண்டு தொங்குவார்கள், முரட்டுத்தனமாக விளையாடவும் செய்வார்கள். கைகள், தன் விரல்களால் சின்ன சின்ன பொருட்களைகூட அழகாக எடுத்து விளையாடுவார்கள். பிளாக்ஸ், மர பொம்மைகள் ஏற்றது. பிளாக் பில்டிங் - நிறைய தீம்களில் வரும். வீடு கட்டுதல், ரயில் வண்டி கட்டுதல், கிச்சன் செட், நாற்காலி போன்ற மூளைக்கு வேலை தரும் பொம்மைகள் நல்லது. பொம்மைகளுக்கு உடை அணிவது, அலங்கரிப்பது, மண், தண்ணீரில் விளையாட அதற்கு ஏற்ற பொம்மைகளும் கிடைக்கின்றன. சாக், போர்ட், பெரிய கிரெயான், டிராயிங் புக்ஸ் கொடுக்கலாம். படங்கள் நிறைய இருக்க கூடிய புத்தகங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மியூசிக், ரைம்ஸ் நிறைந்த சிடி, டிவிடி கொடுக்கலாம். இந்த வயதில் மூன்று சக்கர வண்டி வேண்டாம்.

    3-6 வயது குழந்தைகள்

    பள்ளிக்கு செல்லும் வயது இது. ப்ரீகேஜி, எல்.கே.ஜி சேரும் வயது. நிறைய கேள்விகளை கேட்பார்கள். நண்பர்களுடன் விளையாட அதிகம் விரும்புவார்கள். 12 -20 பீஸ் உள்ள பசல்ஸ் கொடுத்து விளையாட வைக்கலாம். இந்த வயதுக்கான பெரிய பொம்மைகள், பில்டிங் பிளாக்ஸ் வாங்கி கொடுக்கலாம். களி மண் கொடுத்து உருவங்கள் செய்ய சொல்லலாம். வரைதல், கிறுக்குவது மிகவும் பிடிக்கும். கீபோர்ட் வாசிப்பது, சத்தம் வர கூடிய கருவிகள் வாங்கி தரலாம். வயதுகேற்ற படங்கள் உள்ள புத்தகங்கள் வாங்கி தரலாம். மூன்று சக்கர வண்டி வாங்கி தரலாம். 3 வயது வரை சின்ன பொம்மைகள் தவிர்க்கலாம். கூர்மையான பொம்மைகள், அதிக எடையுள்ள பொம்மைகள் தவிர்க்கலாம். வாக்கர் வாங்கி தர வேண்டாம். குழந்தைகளின் இயல்பான சில பருவ காலத்தையும், மைல்கற்களையும் மாற்றி விடும். முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம்.
    ×