என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    காலையில் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நுங்கு ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நுங்கு - 4
    மாதுளம் பழம் - 1
    ஆப்பிள் - 1
    மாம்பழம் - 1
    வாழைப்பழம் - 1
    நன்னாரி சர்பத் - 1 டீஸ்பூன்
    திராட்சை (பச்சை, கருப்பு) - கால் கப்

    தேவையான பொருட்கள்

    மாம்பழம், வாழைப்பழம், நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    திராட்சையை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சத்தான சுவையான நுங்கு ஃப்ரூட் சாலட் ரெடி.
    குட்டை முடி அலங்காரத்தை பின்பற்ற தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் 3 முதல் 6 வாரங்களுக்குள் தவறாமல் முடியை கத்தரிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
    தலை முடி நீளமாக வளர்வதில்லை என்ற வருத்தம் நிறைய பேருக்கு இருக்கிறது. அந்த குறையை போக்க விதவிதமான கூந்தல் அலங்காரங்களை முயற்சித்து பார்க்கிறார்கள். கழுத்து பகுதியை ஒட்டிய நிலையிலோ, ஆண்களை போலவோ கூந்தலை குட்டையாக கத்தரித்து ஸ்டைலாக வலம் வரும் இளம் பெண்களும் இருக்கிறார்கள்.

    கூந்தல் நீளமாக இருந்தாலும், குட்டையாக இருந்தாலும் போதிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். சரியான ஷாம்பு அல்லது கண்டிஷனரை தேர்ந்தெடுப்பது முதல் உச்சந்தலை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது வரை முடி பராமரிப்பில் பல விஷயங்களை பின்பற்ற வேண்டியிருக்கும்.

    கூந்தலை குட்டையாக கத்தரித்துவிட்டால் அதிக பராமரிப்பு தேவைப்படாது என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. குட்டை தலைமுடியை பராமரிப்பது எளிதுதான் என்றாலும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குட்டை முடி அலங்காரத்தை பின்பற்ற தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் 3 முதல் 6 வாரங்களுக்குள் தவறாமல் முடியை கத்தரிக்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஏனெனில் மற்ற கூந்தல் ஸ்டைல்களை விட குட்டை முடிக்கு ‘டிரிம்மிங்’ அதிகம் தேவைப்படும். ஒவ்வொரு முறையும் தலைமுடியின் நீளத்தை கவனத்தில் கொண்டு எவ்வளவு நீளத்திற்கு டிரிம்மிங் செய்தால் நன்றாக இருக்கும் என்பதை சிகை அலங்கார நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கூந்தலை வெப்பம் அடைய செய்யும் சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்.

    குட்டை முடிக்கு சீப்போ, கூந்தல் பிரஸோ அதிகம் தேவைப்படாது. அவை முடியில் சிக்கல் விழுவதற்கு காரணமாகிவிடவும் கூடாது. சில சமயங்களில் விரல்களை பயன் படுத்தியே கூந்தல் அலங்காரத்தை மெருகேற்றிக்கொள்ளலாம். சீப்புக்கு பதிலாக ‘பிரிஸ்டல் பிரஸ்’ எனப்படும் அதிக நெருக்கம் இல்லாத இழைகள் கொண்ட பிரஸை உபயோகிக்கலாம்.

    குட்டை முடி என்பதால் குளியலுக்கு பின்பு கூந்தலை உலர வைப்பது எளிது. எனினும் கூந்தலை கழுவுவதற்கு வெவ்வேறு நடைமுறைகளை பரிசோதித்து பார்க்கலாம். சிலர் முடியின் நீளம் குறைவாக இருப்பதால் குறைந்த நீரிலேயே கழுவுவார்கள். அப்படி கழுவுவது தலை முடிக்கு உகந்ததா? என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். அதேபோல் முடியின் நீளம் குறைவாக இருந்தாலும் உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தி ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே அதற்கேற்ப கூந்தலை கழுவும் வழக்கத்தை பின்பற்றுவது நல்லது.

    தலைமுடி மற்றும் உச்சந்தலையை சுத்தம் செய்யும்போது ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். ஏனெனில் குட்டை முடிக்கு கண்டி ஷனரின் பயன்பாடு அதிகம் தேவையில்லை. ஷாம்புவை அதிகம் பயன்படுத்துவது உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். முடியும் உலர்வடையக்கூடும். குட்டை முடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனரை குறைவாக பயன்படுத்துவதே போதுமானது.

    உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை கொள்வது கூந்தல் பராமரிப்பு முறையின் முக்கிய அங்கமாகும். தலைமுடியின் நீளத்தை குறைத்தால் உச்சந்தலையில் அதிக கவனம் செலுத்த தொடங்குங்கள். ரசாயன பயன்பாடு அதிகம் கொண்ட அழகு மற்றும் கூந்தல் தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். அதற்கு பதிலாக ஹேர் ஜெல் உபயோகிப்பது கூந்தலுக்கு அழகு சேர்க்கும். ஆனால் அது உச்சந்தலையில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தக்கூடும். அதனை தவிர்க்க கூந்தலுக்கு அடிக்கடி மசாஜ் செய்யும் வழி முறையை பின்பற்றுவது நல்லது. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுவது கூந்தல் அழகுக்கும் வழிவகுக்கும்.
    பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகின்றனர். தங்களைத் திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதைக்கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர்.
    ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. அதனால், அந்த பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் எல்லா குழந்தையுமே ஏதாவது பரிசை கட்டாயம் வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாகப் பிரித்து நடத்துகிறார்கள்.

    விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளை கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலை தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாகக் காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகின்றனர். தங்களைத் திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதைக்கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களுடைய திறமை, அறிவு குறித்த பாராட்டுகளை எல்லாம் கேட்ட பிறகு, எதிலாவது தோல்வி அல்லது சவால் ஏற்பட்டால் மனம் சோர்ந்துவிடுகின்றனர். சமீபத்தில் ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்து படம் வரையச் சொல்லி அவர்களை கண்காணித்தனர்.

    நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் அதிகப்படியாக புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்கு காரணமாக இருந்தது.

    ஒரு விளையாட்டில் அல்லது கலையில் யார் கெட்டிக்காரர்கள், யார் திறமையற்றவர்கள் என்பதை அவர்கள் துல்லியமாகவே தெரிந்துகொள்கின்றனர். விளையாட முடியாமல் தவிப்பவர்கள், இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் மயங்கும் வேலையை விட்டுவிடுகின்றனர். நன்றாக விளையாடி சாதிப்பவர்கள், நம்மைப் பாராட்டாமல் மற்றவர்களுக்கே பாராட்டை வழங்கினார்களே என்று கொதிப்படைகிறார்கள்.

    ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமைகாட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும் பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. கலந்துகொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? தாண்டுவதற்கு தடைகளே இல்லை எனும்போது, எதற்காக மண்டையைப்போட்டுக் குடைந்துகொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்துவிடும் என்கிறார்கள், குழந்தைகள் மனநல வல்லுனர்கள்.

    குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதைப் போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சி வசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக்காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.
    தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை ரசாயன கலப்பு இல்லாமல் வீட்டிலேயே தயாரித்துவிடலாம்.
    ஊடரங்கு உத்தரவால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் நேர்த்தியாக சிகை அலங்காரம் செய்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். ஆண்கள் நிறைய பேர் தாடி வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். தாடி வளர்த்தால் அதனை நேர்த்தியாக பராமரிப்பது முக்கியம். இல்லாவிட்டால் முகத்தின் அழகும், ஒட்டுமொத்த தோற்றமும் மாறிப்போய்விடும். தாடிக்கு அழகும், ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தாடியை மென்மையாகவும் அழகாகவும் மாற்றி கன்னங்களையும் ஈரப்பதத் தன்மையுடன் வைத்திருக்க உதவும். தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை ரசாயன கலப்பு இல்லாமல் வீட்டிலேயே தயாரித்துவிடலாம்.

    யூக்கலிப்டஸ் எண்ணெயில் பாக்டீரியா மற்றும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இந்த எண்ணெய் வேகமாக தாடியை வளர்க்க உதவும். ஒரு பாட்டிலில் 6 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 3-4 சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்தால் தாடி எண்ணெய் தயார். இந்த எண்ணெய்யை தினமும் பயன்படுத்தலாம். முதலில் ஈரமான துணியை கொண்டு முகத்தை நன்கு துடைத்துக்கொள்ளவும். பின்பு 4-5 சொட்டு எண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தாடியை கழுவிவிடலாம்.

    தேங்காய் எண்ணெய்யையும் தாடிக்கு பயன்படுத்தலாம். 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் பத்து சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய்யை கலந்து கொள்ளலாம். இந்த எண்ணெய் வாசனை மிக்கது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு எண்ணெய்யை ஸ்பூனில் ஊற்றி மிதமாக சூடாக்கி தாடியில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். காலையில் எழுந்ததும் குளிக்கும்போது தாடியை கழுவிவிடலாம். தாடி மென்மையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.இந்த எண்ணெய் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

    ‘டீ -ட்ரீ’ எண்ணெய்யும் தாடிக்கு நலம் சேர்க்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. தாடியை அடர்த்தியாகவும், ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கஉதவும். சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். 50 மி.லி பாதாம் எண்ணெய்யுடன் 8 சொட்டு டீ-ட்ரீ எண்ணெய் கலந்து கொள்ளவும். தாடியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யவும். கால் மணி நேரம் கழித்து முகத்தை நீரில் கழுவிவிடலாம்.
    கடுமையான மற்றும் நாள்பட்ட வலியால் அவதிப்பட்டாலோ, மீண்டும் மீண்டும் வலியை அனுபவித்தாலோ பிசியோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.
    உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் வலிகளை இயற்கை முறைகளாலும், உடற்பயிற்சிகளாலும் குணப்படுத்தும் சிகிச்சை முறை பிசியோதெரபி எனப்படுகிறது. அதாவது வலிகளை கைகள் மூலம் குணப்படுத்தும் சிகிச்சை முறை இதுவாகும். காயம் அல்லது நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகும்போது உடல் இயக்க செயல்பாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் பாதிப்பை பொறுத்து பிசியோதெரபி சிகிச்சை முறைகள் மாறுபடும். அதற்கேற்ப பல்வேறு வகை பிசியோதெரபி சிகிச்சைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. பிசியோதெரபியின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.1. வலியை குறைக்கும்:

    மூட்டுகள் மற்றும் மென்மையான திசு பகுதிகளில் ஏற்படும் வலியை போக்க உதவும். மூட்டு பகுதிகளை ஒன்றிணைக்கவும் துணைபுரியும். காயங்களால் ஏற்படும் வலியை போக்க பிசியோதெரபி சிகிச்சை முறையை பின்பற்றலாம். அதே வேளையில் தசை வலி தொடர்ந்து நீடித்துக்கொண்டிருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கேற்ப மருத்துவ சிகிச்சையை தொடர வேண்டும். அல்ட்ரா சவுண்ட், புற ஊதா கதிர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்களில் மின் அலைகளை தூண்டுவதற்கும், தசை மற்றும் மூட்டு இயக்கத்தை மீட்டெடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கடுமையான மற்றும் நாள்பட்ட வலியால் அவதிப்பட்டாலோ, மீண்டும் மீண்டும் வலியை அனுபவித்தாலோ பிசியோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.

    2. ஒற்றைத்தலைவலி:

    கடுமையான தலைவலியால் அவதிப்படுபவர்கள் பிசியோதெரபியை தேர்ந்தெடுக்கலாம். இது ஒற்றைத் தலைவலியை தணிக்கவும் உதவும். பிசியோதெரபி முறையில் மசாஜ் செய்வது தசைகளை தளர்த்த உதவும். ஒற்றைத்தலைவலியின் தீவிரத்தையும் குறைக்கும். மேலும் பிசியோதெரபி சிகிச்சை உடலில் ரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு வழிவகுக்கும். மன அழுத்தத்தையும் குறைக்கும். இந்த இயற்கையான சிகிச்சை காரணமாக ஹார்மோன்களும் நன்றாக செயல்படும். ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்படு பவர்களுக்கு பிசியோதெரபி சிறந்த தீர்வை தரும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    3. உடல் இயக்கம்:

    உடலின் இயக்கம் மேம்படவும் பிசியோ தெரபி உதவும். ஒருவர், நிற்கும்போது, உட்கார்ந்திருக்கும்போது, நடக்கும்போது ஏதேனும் பிரச் சினையை எதிர்கொண்டால் பிசியோதெரபி பயிற்சியை மேற்கொள்ளலாம். இது உடல் இயக்க திறனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவி புரியும்.

    4. அறுவை சிகிச்சை:

    சில சமயங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் பிசியோதெரபியை முயற்சிக்கலாம். இது அறுவை சிகிச்சை போல் விரைவாக குணப்படுத்தாது. ஆனாலும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பிசியோதெரபியே போதுமானதாக அமைந்திருக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சையும், பிசியோதெரபியும் தேவைப்படலாம். எந்த சிகிச்சை முறையை மேற்கொண்டாலும் முழுமையாக குணமடைவதற்கு பிசியோதெரபி உதவும்.

    5. விளையாட்டு:

    பொதுவாக விளையாட்டு வீரர்கள் பயிற்சியிலோ, போட்டியிலோ பங்கேற்கும்போது காயங்களால் அவதிப் படுவதுண்டு. முழங்கை, விலா எலும்பு, மூட்டு பகுதிகள் காயம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு பிசியோதெரபிதான் நிரந்தர தீர்வை அளிக்கும். விளையாட்டு தொடர்பான காயங்களுக்கு பிசியொதெரபியின் பங்களிப்பு அபரிமிதமானது.

    6. நீரிழிவு:

    நீரிழிவு நோயாளிகள் முழங்கால்கள், தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகு வலியால் அவதிப்பட நேரிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த சில பிசியோதெரபி பயிற்சிகள் உதவும். அவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், வலியை குறைக்கவும் வழிவகை செய்யும். இதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கவும் பிசியோதெரபி உதவும்.

    7. காயம்:

    கடுமையான காயங்களில் இருந்து முழுமையாக மீள்வதற்கு பிசியோதெரபி கைகொடுக்கும். குறிப்பாக எலும்பு முறிவுக்கு பிசியோதெரபிதான் பரிந்துரைக்கப்படுகிறது. அது கால்களையும், மூட்டு பகுதிகளையும் ஒருங்கிணைக்க உதவுகிறது. எலும்பு முறிவுக்கு ஆளானவர்கள் சரியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் நிரந்தரமான குறைபாட்டுக்கு வழிவகுத்துவிடும். காயங்களை படிப்படியாக குணப்படுத்தி முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பிசியோதெரபி பக்கபலமாக செயல்படும்.
    வார இறுதியில் நடந்த தவறுக்காகவோ, காலையில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஏதாவது சற்று தாமதமானாலோ அதற்காக கோபமோ, எரிச்சலோ அடையாதீர்கள். அது அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும்.
    அலுவலகமோ, வீடோ... எங்கிருந்து பணியாற்றினாலும், திங்கட்கிழமை ஒருவித சோர்வு நம்மை ஆட்கொள்ளும். அதிலிருந்து விடுபட்டு, வாரம் முழுக்க உற்சாகமாக பணியாற்ற உதவும் 4 டிப்ஸ்கள் இதோ...

    1. டாப் 3 டாஸ்க்

    3 கி.மீ. நடைப் பயணம், பார்க்கும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் காலை வணக்கம், 20 நிமிட உடற்பயிற்சி இது மூன்றையும் கட்டாயம் செய்யத் தவறாதீர்கள். பிறகு என்ன, திங்கட்கிழமை உற்சாகமாக உதயமாகும். அந்த வாரம் முழுக்க உற்சாகம் ஆட்கொண்டிருக்கும்.

    2. எதிர்மறையாக யோசிக்காதீர்கள்

    உங்களை சோர்வாக்கும் சமூக வலைத்தளப் பதிவு துவங்கி, காலையில் நீங்கள் அலாரத்தை இன்னும் 5 நிமிடம் தாமதமாக்குவது வரை அனைத்துமே உங்களை சோர்வாக்கும் விஷயங்கள் தான். எதிர்மறையாக எதையும் யோசிக்காதீர்கள். யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சிரித்த முகத்தோடு அன்றைய நாளை துவக்குங்கள்.

    3. கோபம் தவிருங்கள்

    அலுவலகத்திற்குள் நுழைந்தவுடனோ அல்லது ‘ஒர்க் பிரம் ஹோம்’ முறையில் வீட்டிலேயே வேலையை தொடங்கும்போதோ... வார இறுதியில் நடந்த தவறுக்காகவோ, காலையில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஏதாவது சற்று தாமதமானாலோ அதற்காக கோபமோ, எரிச்சலோ அடையாதீர்கள். அது அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும். அதனால் முடிந்தவரை கோபம் கொள்ளாமல் கூலாக அணுகுங்கள். பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்து அதனை செயல்படுத்துங்கள்.

    4. உற்சாகமாக இருங்கள்

    வேலையில் மிகவும் உற்சாகமாக இருங்கள். உங்கள் அருகில் உள்ளவர் உங்களைப் பார்த்து உற்சாகமாகும்படி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சோர்வாக இருந்தால் அது அவரையும் தொற்றிக்கொண்டு அவரும் அப்படியே இருந்து விடுவார். அன்றைய நாளை நீங்கள் அதிக உற்சாகத்துடன் துவக்கும்போது அனைவரும் அதே உத்வேகத்தில் வேலை செய்யத் துவங்கி விடுவார்கள்.
    புரதம், வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் சத்துக்களுடன் நீர்ச்சத்தும் நிறைந்த சௌ சௌ, சிறந்த நோய் எதிர்ப்பு நிவாரணியாகவும், திகழ்கிறது..
    தேவையான பொருட்கள்

    சௌசௌ - 1
    காய்ந்த மிளகாய் - 3
    உளுந்து, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    சின்ன வெங்காயம் - 10
    பூண்டு - 2 பல்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    புளி - சிறிதளவு

    செய்முறை

    சௌசௌவைத் தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உளுந்து, கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், நறுக்கி வைத்துள்ள சௌசௌ ஆகியவற்றைத் தனித்தனியாக போட்டு வதக்கி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

    சூடு ஆறியதும் அவற்றுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்தெடுங்கள்.

    சூப்பரான சௌ சௌ துவையல் ரெடி.
    பெண்களின் மாதாந்திர அவஸ்தையான மாதவிடாய் வலியை போக்க ஏராளமான பாட்டி வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    பெண்களின் மாதாந்திர அவஸ்தை மாதவிடாய். சிலருக்கு தேதிகள் நெருங்கினாலே அடிவயிற்றில் அச்சம் கவ்வும். மாதவிலக்கை சுலபமாக எதிர்கொள்ள சில டிப்ஸ்…

    * முருங்கை ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம். இதனால் வயிற்றுவலி குறையும்.

    * முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.

    * முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும். உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.

    * கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.

    * மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும். சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.

    * ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும். எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும். ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.

    * வாழைப்பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, நட்ஸ் ஆகியவற்றை மாத விலக்கு நாட்களில் அதிகமாக உண்ணுங்கள். மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
    குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier) பயன்படுத்துகின்றனர்.

    குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

    அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். குழந்தை பேசுவதில் பிரச்சனை ஏற்படலாம்.

    ரப்பர் நிப்பிளை தொடர்ந்து வாயில் வைப்பதால் கிருமிகள் வளர வாய்ப்பைத் தருகிறது. கிருமிகள் வளர அதிகம் உதவுகிறது. சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகையில் வாயில் தொற்றும் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த செயற்கை நிப்பிளைத் தவிர்ப்பதே நல்லது. அவசியம் தேவைப்பட்டால் சிலிக்கான் நிப்பிள் வாங்கலாம். அதையும் முறையாக சுத்தப்படுத்துதல் அவசியம். குழந்தைக்கு அடிக்கடி கொடுக்க கூடாது.

    குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த ரப்பர் நிப்பளை குழந்தைக்கு கொடுக்க கூடாது. அதிகமாக இதைப் பயன்படுத்தினால் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை விரைவில் நிறுத்திக் கொள்வார்கள். தாய்ப்பால் இல்லாமல் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது.

    குழந்தையின் கழுத்தில், கைகளில் ரப்பர் நிப்பிளை கட்டிவிட கூடாது. தவறுதலாக குழந்தைக்கு திடீர் அடைப்பு ஏற்பட்டு விடலாம். இதனால் குழந்தைக்கு ஆபத்தான பாதிப்பு கூட ஏற்பட்டுவிடும். குழந்தைகளுக்கு அதிகமாக ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் அவர்கள் பேசுவதில் தடையை ஏற்படுத்தும்.

    சில குழந்தைகளுக்கு, வாய், பற்கள் ஆகியவை பாதிக்கப்படும். பற்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது. சரியான வளர்ச்சி இல்லாமல் இருந்தால், குழந்தைகள் பேச முடியாமல் போகும்.

    லேட்டக்ஸ் எனும் மெட்டிரியல் கொண்டு தயாரிக்கப்படும் நிப்பிள், அலர்ஜியையும் ஏற்படுத்தும். ரப்பர் நிப்பிள் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. மூக்கு, கண், வாய் போன்ற இடங்களில் எரிச்சல்தன்மையும் அதிகமாக இருக்கும். தொண்டை வீக்கமடையும். மூச்சு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
    சாப்பிடும்போது டி.வி.யையோ அல்லது வீடியோ காட்சிகளையோ பார்க்காமல் இருப்பவர்களுக்கு தொப்பை ஏற்படுவது குறைவாக உள்ளது அல்லது ஏற்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
    தொப்பை எனப்படும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பருமன் என்பது ஆண், பெண் வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் இன்று பொதுவாக காணப்படுகிறது. இந்த தொப்பையானது பல நோய்களுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொப்பை ஏற்படுவதற்கு உடல் உழைப்பு அதிகம் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சாப்பிடும்போது டி.வி.யையோ அல்லது வீடியோ காட்சிகளையோ பார்க்காமல் இருப்பவர்களுக்கு தொப்பை ஏற்படுவது குறைவாக உள்ளது அல்லது ஏற்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாண பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சுமார் 13 ஆயிரம் பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முக்கியமாக குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும்போது டி.வி. பார்க்காமல், அதிகம் பேசாமல் உண்பதிலேயே கவனம் செலுத்துவோருக்கு தொப்பை பாதிப்பு குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

    அதுபோல, வீட்டு சமையலை சாப்பிடுபவர்களைவிட, ஓட்டல்கள் உள்ளிட்ட இதர இடங்களில் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு தொப்பை ஏற்படுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் உணவு வகைகளில் வேறுபாடு இல்லாவிட்டாலும், அதை சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் சிரத்தை, அதன் சுவை, நமது விருப்பத்துக்கு உகந்த உணவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொப்பைக் குறைக்க வழிவகுக்கிறது என கூறப்பட்டுள்ளது.
    பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது தனித்துவத்தை இழக்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
    தோகை விரித்தாடுவது மயிலுக்கு பேரழகு சேர்ப்பதுபோல், துப்பட்டாக்கள் இப்போது பலவிதமான டிசைன்களில் பெண்களுக்கு பேரழகு சேர்த்துக்கொண்டிருக்கிறது. முன்பு ஜாடிக்கு ஏற்ற மூடி போன்று சாதாரணமாக காணப்பட்ட துப்பட்டாக்கள் இப்போது தனி அழகு பெற்று மிளிர்கிறது. விழாக்காலங்களில் தங்கத்தில் ஒரு சங்கிலி வாங்குவது போன்று, ஒரு ஜோடி கம்மல் வாங்குவது போன்று இதனையும் பெண்கள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி அணிகிறார்கள். அத்தகைய துப்பட்டாக்கள் ஒட்டுமொத்த உடை அழகையும் மெருகேற்றுவதுதான் அதற்கான காரணம்.

    பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது தனித்துவத்தை இழக்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. பார்ட்டிகளில் பலரையும் கவர காஞ்சிபுரம் அல்லது பனாரஸ் துப்பட்டா போதுமானதாக இருக்கிறது. லெஹங்கா, சல்வாருக்கு மட்டுமின்றி ஆங்கிள் லென்த் அனார்கலிக்கு வின்டேஜ் லுக் கொண்ட ஜரிகை துப்பட்டாவும் இப்போது பேஷனாக இருந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் பார்மலாக தோன்றவேண்டும் என்றால் அத்தைகய துப்பட்டாக்கள் போது மானது.

    அடர்ந்த நிறங்களிலும், பலவகையான பிரிண்ட்களிலும் வெல்வெட் துப்பட்டாக்கள் கிடைக்கின்றன. அதில் பலவித அலங்காரங்களும் செய்யப் படுகின்றன. டார்க் சாலீட் நிறங்களில் கோல்டன் பீட்ஸ் டிரான்ஸ்பர் பிரிண்ட், பெரிய மோட்டிப்களில் மல்டி கலர் பிரிண்ட் போன்றவைகள் வெல்வெட் மெட்டீரியலில் கிடைக்கின்றன. அதன் ஓரங்களில் `போம்' இணைத்து முத்து, பவளங்களால் அலங்காரம் செய்த லைட் வெயிட் வெல்வெட் துப்பட்டாக்கள் பெண்களுக்கு பேரழகு தருகிறது.

    பார்டர் அவுட்.. டீட்டெயிலிங் இன்..

    பார்டர் லெஸ் துப்பட்டாக்கள் சமீபகாலமாக அதிக மவுசு பெற்றிருக்கிறது. பிரீச், ப்ளீட்ஸ், கேதர்ஸ், போம் போம், டஸ்சல் இப்படி இந்த புதிய வகை துப்பட்டாக்களுக்கு அழகு சேர்க்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்த வகையிலான டீட்டெயிலிங் துப்பட்டாக்களால் பார்டர் துப்பட்டாக்கள் பொலிவிழந்திருக்கின்றன.

    டை அன்ட் டைய்

    டை அன்ட் டைய் துப்பட்டாக்கள் என்றால் முன்பெல்லாம் வெள்ளை வட்டத்திலான டிசைன்களை கொண்ட சுங்கிடி துப்பட்டாக்கள் மட்டுமே இருந்தன. இப்போது அலங்காரங்களை கொண்ட அபூர்வமான டிசைன்களெல்லாம் இதில் வருகை தந்திருக்கின்றன. இளம் பெண்கள் இதனை விரும்பி வாங்குகிறார்கள். ஷிபோரி, பாந்தினி, க்ளாம்ப் டை, லெகரியா, இக்கத்.. என்று அந்த பட்டியல் நீளுகிறது.

    ஹேன்ட் பெயிண்ட்டட் துப்பட்டா

    ப்ளோரல் பெயிண்டிங்குகளும், கலம்காரி, மதுபானி, வார்லி, மியூரல் போன்றவைகளும்- மரபுசார்ந்த படங்களும் இந்த வகை துப்பட்டாக்களில் இடம்பெறுகின்றன. கையால் பெயிண்ட் செய்யப்படும் இவைகள் எல்லா காலத்திற்கும் ஏற்றவைகளாக இருக்கின்றன. அதனால் இதனை டீன்ஏஜ் பெண்களும், நடுத்தர வயது பெண்களும் விரும்பி வாங்குகிறார்கள்.

    தாபு பிரிண்ட் துப்பட்டா

    கண்களை கவரும் மோட்டிப்களும், நிறங்களும் கலந்த சிம்பிள் துப்பட்டாவாக இது திகழ்கிறது. காட்டன், சந்தேரி, டஸர் பாப்ரிக்குகளுக்கு தாபு பிரிண்ட் பொருத்தமானவை. இண்டிகோ அல்லது கலேஷ் என்று கூறப்படுகின்ற கிளே டையில் தாபு பிரிண்ட் பதிக்கப்படுகிறது. பெர்பெக்‌ஷன் இல்லாத பேட்டன்தான் இதில் அழகு நிறைந்ததாக காட்சியளிக்கிறது. மரபு சார்ந்த பிரிண்டிங் முறை இதில் கையாளப்படுவதால் காலப்போக்கில் நிறம் மங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.

    பாட்ச் துப்பட்டா

    பலவிதமான பாப்ரிக்குகளை இணைத்து தைக்கப்படுவது, பாட்ச் துப்பட்டாவாகும். மேட்சிங் கலர்களில் இணைக்கப்படுவதால் இது பார்ப்பதற்கு வித்தியாசமாக தோன்றும். ஒரே மாதிரியான பாட்ச்களையோ, மாறுபட்ட பாட்ச் களையோ இதில் இணைக்கலாம். நேர்த்தியாக தைப்பதிலும், பொருத்தமான கலர்களை தேர்ந்தெடுப்பதிலும் இதன் அழகு அடங்கியிருக்கிறது. சற்று முரட்டுத் தனமான, வித்தியாசமான லுக்கில் வலம் வர விரும்பும் டீன்ஏஜ் பெண்கள் ஜீன்ஸ்- குர்தாவுடன் இதை அணிந்து வலம் வரலாம்.

    பச்மீனா துப்பட்டா

    காஷ்மீரி ஆர்ட் ஒர்க் நிறைந்த இந்த வகை துப்பட்டாக்கள் காலம் கடந்தும் புகழ் பெற்றுக்கொண்டிருக்கிறது. 20 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இதனை அதிகம் விரும்புவார்கள். ஒரு துப்பட்டாவை தயார் செய்ய ஒருவர் ஒரு மாதம் வரை உழைக்கவேண்டியதிருக்கும். அத்தனை வேலைப்பாடுகள் அதில் உண்டு. இறகு போன்று கனமின்றி காணப்படும் இந்த வகை துப்பட்டாக்கள் எல்லா சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றதாக இருக்கிறது.

    இக்கத் துப்பட்டா

    போல்டு அன்ட் சோபஸ்டிகேட்டட் லுக் தேவைப்படும் பெண்கள் இந்த துப்பட்டாவை தேர்ந்தெடுக்கலாம். இதன் அடிப்படை நிறம் பெரும்பாலும் கேரள புடவை போன்று ஐவரியாக இருக்கும். ஆனாலும் கலர்புல்லான பார்டர் பிரிண்டுகளே இக்கத் துப்பட்டாவின் அழகை தூக்கலாக்கிக் காட்டுகிறது. டெரகோட்டா ஆபரணங்கள், பழங்குடி மக்கள் பயன்படுத்தும் ஆபரணங்கள், கையால் தயார்செய்யப்பட்ட பேக்குகள் போன்றவை இந்த வகை துப்பட்டாவிற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    டபுள் துப்பட்டா

    மணப்பெண்களுக்கான உடை அலங்காரத்திற்கு மிக பொருத்தமாக அமைவது, டபுள் துப்பட்டா. மார்பக பகுதியை கவர் செய்யும் ஒரு துப்பட்டாவோடு- தலையிலோ, வலது தோள்பட்டையிலோ இரண்டாவது துப்பட்டா பரவிக்கிடக்கும். இது ஒரு வித்தியாசமான ஸ்டைலை உருவாக்கும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் இது கலர்புல்லான, கம்பீரமான அழகைத் தருவதால் மணப்பெண்கள் இதனை விரும்புகிறார்கள்.

    பனாரசி சில்க் துப்பட்டா

    இந்த வகை துப்பட்டாவில் இரண்டு வகை பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. சிம்பிள் சில்க் துப்பட்டா ஒரு வகை, இன்டிகேட்டட் டிசைன் இன்னொரு வகை. டிசைன் அதிகம் கொண்ட துப்பட்டாக்களை பார்ட்டிகளுக்கும், முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை தூக்கலாக காட்சியளிப்பதால் சிம்பிளான உடைகளுக்கும் பொருந்தும். பனாரசி துப்பட்டாக்கள் பெரும்பாலும் அடர்த்தியான நிறங்களை கொண்டிருக்கும். அதனால் கான்ட்ராஸ்ட் நிறமுள்ள உடைகளுக்கும் எடுப்பாக காட்சி தரும். சால்வார் கமீஸ், குர்த்தியுடன் இதை பயன்படுத்தினால் இளம் பெண்களுக்கு பளிச்சிடும் அழகு கிடைக்கும். சிம்பிள் பேஸ்டல் கலரிலும் பனாரசி துப்பட்டாக்கள் கிடைக்கின்றன. அலுவலகத்திற்கு செல்பவர்கள் இதை அணிந்து சென்றால் ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.

    எம்ப்ராய்டரி துப்பட்டா

    எவர்கிரீன் டிரெண்டாக இருப்பது எம்ப்ராய்டரி துப்பட்டாக்கள். கிளாசிக் ரீதியிலும், கான்டம்பரரி ரீதியிலும் இதனை வடிவமைக்கிறார்கள். ப்ளோரல் மோட்டிப்களுக்கு மங்காத மவுசு இருந்துகொண்டிருக்கிறது. ஆரி ஒர்க், பீட் ஓர்க், பிரெஞ்ச் நாட் போன்றவைகளை நடுத்தர வயது பெண்களும் விரும்புகிறார்கள். சாதாரண துப்பட்டாவை வசீகரிக்கும் அழகாக மாற்றுவதற்கு எம்ப்ராய்டரிங்கே சிறந்த வழிமுறையாக இருக்கிறது.

    இரு பக்க துப்பட்டா

    இரு பக்கமும் வெவ்வேறு விதமாக அழகுதரும் வித்தியாசமான துப்பட்டா இது. இருபக்கங்களிலும் கவரும் விதமாக டிசைன் செய்திருப்பார்கள். இருபக்கமும் ஐடன்டிக்கலான காந்தா எம்ப்ராய்டரியை பதித்திருப்பார்கள். இரண்டு பக்கங் களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் இரண்டு நாட்கள் இதை பயன்படுத்தலாம் என்பதால் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள்.

    புடவை முந்தானை துப்பட்டா

    இந்த வகை துப்பட்டாக்களை பெண்கள் விருந்து நிகழ்ச்சி களுக்கு விரும்பி அணிகிறார்கள். சாதாரண துப்பட்டாக்களைவிட இதன் நீளமும், அகலமும் அதிகம். பட்டுப்புடவைகளின் முந்தானை டிசைன் போன்று இரண்டு முனைகளிலும் ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது இதற்கு கூடுதல் அழகு தருகிறது.
    எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். முதுமையில் உடல்நல குறைபாடுகள் ஏற்படுவதற்கு எலும்புகள் பலவீனமடைவதும் ஒரு காரணம்.
    மூளை, இதயம் போன்ற உடலின் முக்கியமான உள் உறுப்புகள் எலும்புகளால் பாதுகாக்கப்படுகின்றன. உடலின் கடினமான உறுப்பாக கருதப்படும் எலும்பு, முழு உடல் கட்டமைப்புக்கும் பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது. கடுமையான காயங்கள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் துணைபுரிகிறது. எலும்புகள் இல்லாமல் மனிதர்களால் செயல்பட முடியாது.

    எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். முதுமையில் உடல்நல குறைபாடுகள் ஏற்படுவதற்கு எலும்புகள் பலவீனமடைவதும் ஒரு காரணம். வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள்தான் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. அந்த சத்துக்கள் உடலில் குறையும்போது எலும்புகள் பலவீனமடையும். ஆனால் எலும்புகள் பலவீனமடைவதற்கு அவை மட்டுமே காரணமில்லை. வேறு பல காரணங்களும் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை பார்ப்போம்.

    புகைப்பழக்கம்:

    பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு புகைப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. புகையிலை பொருட்களும் எலும்பு அடர்த்தியின் அளவை குறைக்கும் தன்மை கொண்டவை. எலும்புகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிதைக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை உருவாக்கவும் புகைப்பழக்கம் காரணமாக இருக்கிறது. மெலிந்த தோற்றம் கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள்.

    மதுப்பழக்கம்:

    எலும்புகள் பலவீனமடைவதற்கு மது அருந்துவதும் காரணமாக இருக்கிறது. அதிகமாக ஆல்ஹகால் உட்கொள்வது உடலில் கால்சியம் உறிஞ்சப்படும் அளவை குறைத்துவிடும். தொடர்ந்து மது அருந்துவது எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவையும் குறைத்துவிடும். இதன் விளைவாக எலும்புகளின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் பலவீனமடையும். எனவே எலும்புகளின் நலனை பாதுகாக்க மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

    உப்பு:

    அதிக உப்பு உட்கொள்வது எலும்புகளின் அடர்த்தியை குறைக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. உப்பில் உள்ள சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது அது சிறுநீர் மூலம் அதிக கால்சியத்தை வெளியேற்ற தொடங்கும். இந்த செயல்பாடு எலும்புகளை பலவீனப்படுத்தும். வைட்டமின் டி, கால்சியம் கொண்ட ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதோடு மேற்கண்ட பழக்கவழக்கங்களை தவிர்ப்பது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

    மருந்துகள்:

    உடல்நலக்குறைவு ஏற்படும்போது சுயமாக சாப்பிடும் மருந்துகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அதுவும் எலும்புகள் பலவீனமடைய காரணமாக அமையலாம். ஆகையால் சுய மருத்துவத்தை ஒருபோதும் நாடா தீர்கள். அவை தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு மருந்துகளையும் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளாதீர்கள்.

    உடற்பயிற்சியின்மை:

    நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஓடுதல், நீச்சல், நடனம் போன்ற உடல் செயல்பாடுகளும் எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தவொரு உடல் இயக்க செயல்பாடும் இல்லாமல் தசைகள், எலும்புகளின் நலனை பேண முடியாது. எலும்புகள் பலவீனமடையும் அபாயத்தை தவிர்க்க சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். உடற்பயிற்சி மட்டுமின்றி யோகா போன்றவையும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்தும்.
    ×