என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வாழைக்காயில் உள்ள நார்சத்து குடல்களை சுத்தப்படுத்தி, மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது. கிராம புறங்களில் சர்க்கரை நோய் குறைவாக காணப்படுவதன் காரணமே அங்கு வாழைக்காயை அதிகளவு பயன்படுத்துவது தான்.
    ஏனோ இந்த காயினை அதிகம் இன்றைய மக்கள் மறந்து விட்டனர். கிராம புறங்களில் சர்க்கரை நோய் குறைவாக காணப்படுவதன் காரணமே அங்கு வாழைக்காய், அவரைக்காய், பீர்க்கை, புடலை போன்ற காய்கறிகள் அதிக புழக்கத்தில் இருந்ததால்தான்.

    வாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

    நமது உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் காலையில் மலம் கழிப்பது ஒரு ஆரோக்கிய அறிகுறியாகும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இது குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது..

    * குறிப்பாக வாழைக்காய் அதிக நார் சத்து கொண்டது. ஜீரண கோளாறு மற்றும் குடல் பிரச்சினைக்கு பெரிதும் உதவும்.
    * பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதயத்திற்கு நல்லது.
    * உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க வல்லது.
    * நார்சத்து மிகுந்ததால் எடை குறைப்பிற்கு நன்கு உதவுகிறது.
    * வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தது.
    * நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்தது.
    * சிறுநீரக செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

    இத்தகு சிறந்த குணங்கள் கொண்ட வாழைக்காயினை அமாவாசைக்கு மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் நன்கு பயன்படுத்தலாம்.
    தக்காளி இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் கொழுப்பு படிவதை தடுக்கிறது. மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
    தக்காளியின் சத்து பட்டியல்

    சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப் (150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது போதுமான அளவு வைட்டமின் ஏ,சி,கே போலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும். இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது. உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால் அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும்.

    இது போக 150 கிராம் தக்காளியில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது, தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்து கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச் சத்தும் அதிகமாக உள்ளது. அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் ரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும்.

    சத்தான ஊட்டச் சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும் அதையும் மீறி இன்னும் பல நன்மைகளை உள்ளடக்கிய தக்காளி சருமத்திற்கும், எலும்புகளுக்கும் நல்ல ஒரு ஊட்டமாக விளங்குகிறது.

    இதில் கேரட், பீட்ரூட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோடின் தக்காளியிலும் உள்ளது. அது சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன், புறஊதாக் கதிர்களில் இருந்து காக்கும், சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    வலுவான எலும்புகளுக்கு தக்காளி உதவுகிறது. வைட்டமின் கே, மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. இதில் லைகோபீன், எலும்பின் பெருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் உதவுவது தக்காளி.

    ஆண்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம். தக்காளியில் வைட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து சம அளவில் உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தால் ஆன்டி செப்டிக்காக செயல்படும்.

    தக்காளி ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் கொழுப்பு படிவதை தடுக்கிறது. மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

    தக்காளியில் உள்ள லைகோடீன் தான் இதற்கும் துணை புரிகிறது. முக்கியமாக புரோஸ்டேட், கருப்பைவாய் புற்று, வாய்புற்று, தொண்டை புற்று, வயிற்று புற்று, உணவுக்குழாய் புற்று, குடல் புற்று, கருப்பை புற்று போன்ற பல வகையான மிகவும் துன்பத்தை தரக்கூடிய புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.

    ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்க தக்காளி உதவுகிறது. குரோமியம் அதிகம் இருப்பதால், இது சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

    கண்ணுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வராமல் தடுக்கும், புரை வளர்வதை தடுக்கிறது.

    தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். கூந்தலை அழகாகவும் காண்பிக்க தக்காளி உதவுகிறது.
    சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் பித்தப்பையில் கற்கள் உருவாவதையும் தக்காளி தடுக்கும்.

    லேசானது முதல் கடுமையான வலியை (வாதம் அல்லது முதுகு வலி) சந்திக்கும் நோயாளிகளுக்கு தக்காளி உதவுகிறது, இதில் உள்ள பயோப்ளே மற்றும் கரோடினாய்டுகள் அதிகம் உள்ளதால், அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.

    தினமும் தக்காளி எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகம் ஆகாமல் தடுக்கப்படுகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து எடையை அதிகம் ஆகாமல் தடுக்கிறது. வயிற்றையும் நிறைக்கும், கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவாகவும் இது விளங்கும்.

    தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோ காண்ட்ரியல் டிஎன்ஏ நமது சருமம் வயதாகாமல் பாதுகாக்கிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் வயதாவதையும் தாமதப்படுத்துகிறது.

    நிறைய நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிறந்த மலமிளக்கியாக பயன்படுகிறது.

    தக்காளியில்
        18 மி.கி கால்சியம்
        427 மி.கி- பொட்டாசியம்
        43 மி.கி- பாஸ்பரஸ்
        24.7 மி.கி வைட்டமின் சி

    மேலும் ஆல்பா லிப்போயிக் அமிலம், லைகோபீன், கோலீன், போலிக் அமிலம், பீடா கரோடீன், லூட்டீன் போன்ற சத்துக்கள், ஆண்டி ஆக்ஸிடன்டுகள் இருக்கிறது.

    தேவையான அளவு போலேட் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும் பின்பும் அதிகம் தேவைப்படுகிறது. அதனால் தக்காளி கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.
    சந்தனம் பல விதமான மருத்துவ நலன்களைக் கொண்டுள்ளது. பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகள் முதல் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.
    மாசு நிறைந்த நகர வாழ்க்கையில் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகள் சாதாரணமாக அனைவருக்கும் வர ஆரம்பித்துவிட்டது. ஆயுர்வேதத்தில் சிறப்புவாய்ந்த, உடலுக்கு அழகு சேர்க்கும் பல நன்மைகளைக் கொண்டது சந்தனம். சந்தனம் இயற்கையானது, நம்பகமானது, பயன்த்தரக் கூடியது. நறுமணம் நிறைந்த சந்தன மரத்திலிருந்து பெறப்பட்ட பழுப்பு நிறப் பவுடராக இந்த சந்தனம் கிடைக்கும். சந்தன எண்ணெய் பல விதமான தோல் பிரச்சனைகளுக்கு தீர்வழிப்பதில் சிறந்து விளங்குகிறது. சந்தனம் பல விதமான மருத்துவ நலன்களைக் கொண்டுள்ளது. எனவே பல சரும பிரச்சனைகள் தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.

    இதோ உங்கள் சருமத்திற்கு பயன்தரும் சந்தனத்தின் பயன்கள்

    1. கருமையை நீக்க உதவுகிறது

    சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்களை காப்பாற்ற வேண்டியது அவசியம். சந்தனத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் சூரியனால் ஏற்படும் கருமையை அகற்ற உதவுகின்றன.

    2. அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

    அதன் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு அல்லது சூரியனின் கதிர்கள் காரணமாக ஏற்படும் எரியும் உணர்வைப் போக்க உதவுகிறது. சந்தன எண்ணெய் பூச்சிக் கடி அல்லது வேறு எந்த தோல் காயங்களுக்கும் சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம்.

    3. சுருக்கத்தை போக்க பயன்படுகிறது

    சந்தனம் சருமத்தில் புரதங்களைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் உங்கள் தோலை அனைத்து வகை ஒரு பிரேக்அவுட், ஒவ்வாமை அல்லது சிராய்ப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இது தோல் மென்மையான திசுக்களில் உள்ள சிறிய சுருக்கங்கள் மற்றும் துளைகளை இறுக்குகிறது. பலவிதமான ஃபேஸ் பக்ஸ், டோனர்களில், சந்தனம் முக்கிய பொருட்கள் ஒன்றாக பயன்படுத்தப்படுகின்றன.

     4. கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது

    சந்தனம், பருக்கள், முகப்பரு மற்றும் புண்கள் ஆகியவற்றைத் தடுக்கின்ற ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் தூசி மற்றும் மாசுபடும் போது பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மேலும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் முகத்தில் பாதிப்படைந்த பகுதியில் சந்தனத்தை பாலுடன் கலந்து அந்த கலவையை பயன்படுத்தினால் அது தோலை பாதுகாக்க உதவும்.
    தங்களை மகிழ்ச்சியானவர்களாக சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும், தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? ‘இல்லை’ என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன.
    சமூக ஊடகங்களில் வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் காதலர்கள், தம்பதிகளிடையே பெருகிவருகிறது. தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்ற அந்தரங்கமான தருணங்களின் போது எடுக்கப்பட்ட படங்களை பேஸ்புக், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக ஊடகங்களில் பேரார்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

    தங்களை மகிழ்ச்சியானவர்களாக சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும், தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? ‘இல்லை’ என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. தங்களுடைய மகிழ்ச்சியான உறவை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்களே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்களாம். மற்றவர் களிடம் அப்படிக் காட்டிக் கொள்வதால், தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

    உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்களுக்கு சமூக ஊடகங்களில் அதை நிரூபிக்க வேண்டிய தேவை எழுவதில்லை. அவர்களுக்குப் பொறாமை ஏற்படுத்தும் நோக்கமும் இருப்பதில்லை.

    டென்மார்க்கில் உள்ள மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், பேஸ்புக்கை ஒரு வாரம் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், ஒரு வாரம் பேஸ்புக்கை விட்டு விலகி இருந்தவர்களுக்கு வாழ்க்கையின் மீதான மனத்திருப்தி அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

    காதலர்கள், தம்பதிகளில் யாராவது ஒருவர், பிரச்சினையை எதிர்கொண்டாலோ, மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ அது சமூக ஊடகங்களில்தான் முதலில் வெளிப்படுகிறது. காதலர்கள் தொடர்ந்து தங்களுடைய பரஸ்பர அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக்கொண்டி ருப்பதற்கு முக்கியக் காரணம் தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருக்கிறது என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்குத்தான். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள் கிறார்கள்.

    கொஞ்சம் இதையும் பகிருங்கள்
    அஜீரணம், வயிற்று உபாதைகளால் கஷ்டப்படுபவர்கள் சீரகம் - தனியா சூப் செய்து குடிக்கலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம், மல்லி (தனியா) - தலா கால் கப்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    மிளகு - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சைப் பழம் - 2,
    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.

    சீரகம் - தனியா

    செய்முறை :

    மல்லி (தனியா), சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும்.

    இத்துடன், கறிவேப்பிலை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சக்கையை வடிகட்டி எடுத்துவிடவும்.

    பிறகு, தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் இறக்கவும்.

    எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தைராய்டு பாதிப்புகள் பெண்களிடம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தால் அது கருகலைந்து போவதற்கும், சிசுவின் வளர்ச்சி குறைபாட்டிற்கும் காரணமாகி விடும்.
    தைராய்டு பாதிப்புகள் பெண்களிடம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான அறிகுறிகள் தென்படும்போதே, சிகிச்சையை பெற்றுவிட்டால் இந்த நோயில் இருந்து தப்பிவிடலாம் என்கிறார்கள்.

    இதயத் துடிப்பு உள்பட உடலின் பல்வேறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற ஹார்மோனை சுரக்கும் சுரப்பிதான் தைராய்டு. கழுத்தின் அடிப்பகுதியில் இது அமைந்திருக்கிறது. இந்த சுரப்பியின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், இது சுரக்கும் ஹார்மோனின் அளவில் வித்தியாசம் தோன்றும். இஇரத்த த்தில் இந்த ஹார்மோனின் (டி-3, டி-4) அளவு குறைந்து போகும்போது, ‘ஹைப்போ தைராய்டிஸம்’ தோன்றுகிறது. உடல் குண்டாவது, அதிக சோர்வு, மலச்சிக்கல், குழந்தையின்மை, அதிக குளிர், குரலில் பதற்றம், முகத்திலும்-காலிலும் நீர்க்கட்டு, முடி உதிர்தல் இதன் அறிகுறியாகும்.

    தைராய்டு ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாவது ‘ஹைப்பர் தைராய்டிஸம்’ எனப்படும். அதிக சோர்வு, அதிக பசி, உடல் எடை குறைதல், இதயத் துடிப்பு அதிகரித்தல், உடல் நடுக்கம், அதிக வியர்வை, வெயிலை தாங்க முடியாமை, உறக்கமின்மை, மாதவிலக்கு கோளாறு, கண்கள் வெளியே தள்ளுவது போன்ற நிலை இதன் அறிகுறிகளாகும்.

    தினமும் எட்டுமணி நேரம் தூங்குவது உடலுக்கு போதுமானது. ஆனால் சிலருக்கு எட்டுமணி நேஇஇரத்த ுக்கு மேல் தூங்கிய பின்பும் சோர்வு நிலை உருவாகும். தைராய்டு ஹார்மோனின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் இப்படி இருக்கும். ஆனால் ‘ஹைப்பர் தைராய்டிஸம்’ பாதிப்பு கொண்ட ஒரு சிலர், அதிகமான உற்சாகத்துடன் இருப்பதும் உண்டு.

    சிலர் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிப்பார்கள். ஆனாலும் அவர்களது உடல் எடை குறையாது. இதற்கு தைராய்டு ஹார்மோன் சுரப்பில் உருவாகும் சமச்சீரற்ற நிலையே காரணம்.

    தேவையான அளவு உடற்பயிற்சி செய்தும், உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டும் கொழுப்பின் அளவு குறையாவிட்டால் அது தைராய்டு பாதிப்பாக இருக்கலாம். ஹைப்போ தைராய்டிஸம் கொண்டவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும்.

    சிலருக்கு பாரம்பரிய ரீதியாகவும் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது. அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்களில் யாருக்காவது தைராய்டு பாதிப்பு இருந்திருந்தால், நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.

    மாதவிடாய் கோளாறு, அதிக இரத்த ப்போக்கு, வலி ஆகியவையும், தைராய்டு பாதிப்பாக இருக்கக்கூடும். இந்த அறிகுறிகளை கொண்டவர்கள் சரியான சிகிச்சை பெற்று தீர்வுகாணாவிட்டால், அது எதிர்காலத்தில் குழந்தையின்மைக்கு வழிவகுத்துவிடும். தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தால் அது கருகலைந்து போவதற்கும், சிசுவின் வளர்ச்சி குறைபாட்டிற்கும் காரணமாகி விடும்.

    வெகுகாலமாக மலச்சிக்கல், அடிக்கடி வயிற்றுப்போக்கு இருப்பினும், அது தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். முடி அதிகம் உதிர்ந்தாலும், தேவையற்ற இடத்தில் முடி வளர்ந்தாலும் தைராய்டு பிரச்சினை இருக்கலாம். கழுத்தில் ஏற்படும் வீக்கம், தசை வலி போன்றவையும் இதன் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.
    குழந்தைகளுக்கோ, சிறுமியர்களுக்கோ அடிக்கடி ‘யூரினரி இன்பெக்‌ஷன்’ ஏற்பட்டால், அது உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டிய விஷயம்.
    சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், கோடைகாலத்தில் அதிகரிப்பது வாடிக்கையானது.. அது ஏன் தெரியுமா?

    நமது உடலில் இருந்து சுவாசித்தல் மற்றும் வியர்வை மூலமாக, நீர் வெளியேறிக்கொண்டே இருக்கும். இந்த இருவகை மூலம் தினமும் 600 முதல் 700 மி.லி. நீர் வெளியேறும். கோடை காலத்தில் இந்த வகைகளில் வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கும். ஒருவர் தினமும் ஒன்றரை லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். இந்த அளவுக்கு வெளியேற்றப்பட வேண்டுமானால், 2 முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால், சிறுநீர் வெளியேறும் அளவு இயல் பாகவே குறைந்து போகும். இதனால் உடலுக்கு தேவையில்லாத உப்பு, கழிவுகளை உடலில் இருந்து சிறுநீர் மூலமாக அப்புறப்படுத்தும் தன்மை குறைந்துவிடும்.

    குறைந்த அளவே சிறுநீர் வெளியேறினால், சிறுநீரில் நிறமாற்றம் தோன்றும். அடர்த்தியாக சிறுநீர் வெளியேறும் பட்சத்தில் சிறுநீர் பையில் இருந்து, சிறுநீர் முழுமையாக வெளியேறாது. சிறிதளவு உள்ளேயே தேங்கிவிடும். இதனால் தொற்றுக் கிருமிகள் அதிகம் வளர்ந்து, சிறுநீரகக் கல் உருவாகும்.

    சிறுவர் - சிறுமியர் ‘டாய்லெட்’ சுத்தம் இல்லாததாலோ, அதை பயன்படுத்த விரும்பாததாலோ சிறுநீரை அடக்கி வைத்துவிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ‘இன்பெக்‌ஷன்’ இருந்தால், அவர்களால் சிறுநீரை தேக்கிவைக்க முடியாது. அதனால் நமைச்சலுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓடுவார்கள். நினைத்த உடன் சிறுநீர் கழிக்க முடியாவிட்டால், அவர்களுக்கு நீர் கசிவும் ஏற்படும்.

    குழந்தைகளுக்கோ, சிறுமியர்களுக்கோ அடிக்கடி ‘யூரினரி இன்பெக்‌ஷன்’ ஏற்பட்டால், அது உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டிய விஷயம். முறையாக சிகிச்சை பெறாவிட்டால் அந்த குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியே பாதிக்கப்படும். 15 வயதுக்குரியவர்கள் 7, 8 வயது போல் தோன்றுவார்கள். ஒன்று முதல் 5 வயது வரை குழந்தை களுக்கு சிறுநீரக உறுப்புகள் நன்றாக வளரும் காலகட்டமாகும். அக்கால கட்டத்தில் சிறு நீரக பிரச்சினை ஏற்பட்டு, முறைப்படி சிகிச்சை பெறாவிட்டால், பிற்காலத்தில் சிறுநீரக உறுப்புகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.

    சில குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறும் இடத்தில் பிறவியிலேயே தோல் ஒட்டிப்போய் இருக்கும். அவர்கள் சிறுநீர் கழிக்க விரும்பும்போது முன் பகுதி பலூன் மாதிரி உப்பிப்போகும். சிலருக்கு சிறுநீர்பை வீக்கம், கிட்னி லேசாக இடம் மாறி இருத்தல் போன்ற பல தொந்தரவுகள் பல விதங்களில் உருவாகக் கூடும். அவர்களின் சிறுநீரை சோதனை செய்து ‘இன்பெக்‌ஷன்’ எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறியலாம். ‘அல்ட்ரா சவுண்ட்ஸ் கேனிங்’ மூலம் எல்லாவித சிறுநீரக பாதிப்புகளையும் கண்டறிந்துவிட முடியும். கிட்னி நிலை, சிறுநீர் பையின் பாதிப்புகள், பிறவியிலேயே ஏற்படும் நீர் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள் போன்ற வற்றையும் பார்த்து முறையான சிகிச்சையை உடனுக்குடன் அளித்திட முடியும்.

    ‘அல்ட்ரா சவுண்ட்’ சோதனையை நடத்து வதற்கு ஒருமணி நேஇஇரத்த ிற்கு முன்பு நிறைய தண்ணீர் பருகிவிட்டு, சிறுநீர் கழிக்காமல் சோதனைக்கு செல்லவேண்டும்.

    சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தால், காலையில் எழுந்ததும் முகத்தைப் பார்த்தால் வீக்கமாகத் தோன்றும். அப்போதே உணராவிட்டால் உடலில் நீர் போடும். பின்பு வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும். கோடைகாலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் சிறுநீரக தொந்தரவுகள் ஏற்படாத அளவுக்கு குழந்தைகளின் உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

    அறிகுறிகள்

    நீர் கடுப்பால் குழந்தைகள் அழுது அவதிப்படுதல்

    சிறுநீர் வெளியேறும் நுனிப்பகுதியில் நமைச்சல் ஏற்படுவதால், அடிக்கடி பிறப்பு உறுப்பின் நுனிப் பகுதியை குழந்தைகள் அழுத்துதல்.

    இன்பெக்‌ஷன் ஏற்பட்டு குளிர் காய்ச்சல் தோன்றும்.

    கிட்னியிலோ, சிறுநீர் பையிலோ இன்பெக்‌ஷன் ஏற்பட்டு, சிறுநீர் கலங்கலாக வெளியேறுதல்.

    சிறுநீரில் இஇரத்த ம் வெளியேறுதல்.

    உள்ளே கல் உருவாகி, அதன் மூலம் சிறுநீரகத்தில் வலியோ, வயிற்று வலியோ ஏற்படுதல்.
    கொரோனா வைரசின் உறவு வைரசால் சார்ஸ் வைரஸ் தொற்று பரவியபோதும், இந்த வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு குறைவான பாதிப்பு ஏற்பட்டதை காண முடிந்தது...
    கொரோனா வைரசின் உறவு வைரசால் சார்ஸ் வைரஸ் தொற்று பரவியபோதும், ஓ வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு குறைவான பாதிப்பு ஏற்பட்டதை காண முடிந்தது...

    ஒவ்வொரு கணமும் யாருக்கேனும் இந்த பூமிப்பந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

    ஏறத்தாழ 200 நாடுகளில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி இந்த தொற்று மொத்தம் 83 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து இருக்கிறது, சற்றேறக்குறைய 4½ லட்சம் பேரின் உயிரைப்பறித்தும் இருக்கிறது என்று கணக்கு சொல்கிறது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம்.

    தப்பி விட ஆசை...

    ஒவ்வொருவருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பி விடத்தான் ஆசை இருக்கிறது.

    உலகளவில் விஞ்ஞானிகள், இந்த தொற்று யாருக்கு வரும், யாரை அதிகமாக பாதிக்கும், யார் தொற்றில் இருந்து தப்ப முடியும் என்றெல்லாம் விதவிதமாக ஆராய்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

    இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளின் மரபணுக்களை ஒப்பிட்டு இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை நியு இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    இந்த ஆய்வுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளையும், நோய் பாதிப்பில்லாமல் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்கிற மற்றும் கொரோனாவின் லேசான அல்லது அறிகுறிகள் அற்றவர்கள் என பல்லாயிரகணக்கானோரை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்து இருக்கிறார்கள்.

    இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள முக்கிய உண்மை, கொரோனா வைரஸ் தொற்று ‘ஏ’ வகை ரத்த பிரிவை சேர்ந்தவர்களை அதிகளவில் தாக்கி இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

    அதே நேரத்தில் ‘ஓ’ வகை ரத்த பிரிவை கொண்டவர்களுக்கு மிக குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதுவும் அம்பலமாகி உள்ளது. இதெல்லாம் சீனாவின் முந்தைய ஆய்வுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபற்றி விஸ்கான்சின் மருத்துவ கல்லூரியின் ரத்த நிபுணர் டாக்டர் பரமேஷ்வர் ஹரி கூறும்போது, “ முதலில் சீன ஆய்வு முடிவு பெரிய அளவில் அடிப்படை ஏதுமின்றி (கச்சா ஆய்வு) வந்தது. எனவே அதை நாங்கள் கணக்கில் கொள்ளவில்லை. ஆனால் இப்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வை நான் நம்புகிறேன். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையக்கூடும்” என்கிறார்.

    அதே நேரத்தில் மற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கையுடன் இந்த ஆய்வு முடிவுகளை பார்க்கிறார்கள் என்பதையும் பதிவு செய்தாக வேண்டியதிருக்கிறது,,

    சாண்டீகோவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எரிக் டோபோல், “ரத்த வகைக்கான பங்களிப்பு சான்றுகள் தற்காலிகமானது. ஒரு சமிக்ஞையை உறுதிப்படுத்த இது போதுமானதாக இல்லை” என்று கருத்து கூறுகிறார்.

    அதே நேரத்தில் ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள், 6 மரபணுக்களில் உள்ள மாறுபாடுகளை கடுமையான நோய்க்கான சாத்தியக்கூறுகளுடன் பொருத்திப் பார்த்து இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய ரத்த வகைகளையும் பொருத்தி பார்த்துள்ளனர்.

    “இது போன்ற பெரும்பாலான மரபணு ஆய்வுகள் மிகப்பெரியவை. எனவே மற்ற விஞ்ஞானிகள் இதேபோன்று இணைப்புகளை நோயாளிகளின் மற்ற குழுக்களிடம் பார்க்க முடியுமா என்பதையும் ஆராய வேண்டியதிருக்கிறது என்று டாக்டர் எரிக் டோபோல் சொல்கிறார்.

    கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் ஏன் மிகவும் நோய்வாய்ப்படுகிறார்கள், ஒரு சிலர் மட்டும் லேசான பாதிப்புக்கு ஆளாவது எப்படி என்பதற்கான தடயங்களை பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அதோடு, வயதானவர்கள் அல்லது ஆண்கள் அதிகமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள்; எனவே வைரசின் தீவிர தன்மைக்கு காரணிகளை தேடி வருகிறார்கள்.

    ஆனால் சர்வதேச ரத்தம் மற்றும் மஜ்ஜைமாற்று ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் தலைவர் டாக்டர் மேரி ஹோரோவிட்ஸ் கூறுவதுவும் கவனிக்கத்தக்கது. அவர், “ஏ, பி, ஏபி, ஓ என முக்கியமாக 4 வகை ரத்த பிரிவுகள் இருக்கின்றன. இது உங்கள் ரத்த சிவப்பணுக்களின்மேற்பரப்பில் உள்ள புரதங்களால் நிர்ணயிக்கப்படுகிறது” என்கிறார்.

    இது பற்றி விஸ்கான்சின் மருத்துவ கல்லூரியின் ரத்த நிபுணர் டாக்டர் பரமேஷ்வர் ஹரி சொல்லும்போது, “ஓ வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு, சில புரதங்களை அயலானாக அடையாளம் காண முடிகிறது. இது வைரஸ் மேற்பரப்புகளில் உள்ள புரதங்களுக்கும் பொருந்தும்” என்கிறார்.

    அது மட்டுமல்ல, கொரோனா வைரசின் உறவு வைரசால் சார்ஸ் வைரஸ் தொற்று பரவியபோதும், ஓ வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு குறைவான பாதிப்பை ஏற்பட்டதை காண முடிந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறார். காலரா, சிறுநீர்பாதை நோய்த்தொற்றுகள் போன்றவற்றிலும்கூட ரத்த வகை தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மரபணு மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டேவிட் வேலி குறிப்பிடுகிறார்.

    அவர் தொடர்ந்து சொல்லும்போது, “ இது தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆய்வு. இது வெளியிடுவதற்கும், வெளியே செல்வதற்கும் மதிப்பு வாய்ந்தது. அதே நேரத்தில் இன்னும் கூடுதலான நோயாளிகளின் தரவுகளை கொண்டு இது சரிபார்க்கப்பட வேண்டும்” என்று முடிக்கிறார்.

    இந்த ஆய்வு முடிவு உணர்த்தும் உண்மை, கொரோனா தாக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் உணர்த்தியுள்ள நிலையில் ஏ ரத்த வகை பிரிவினர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. ஓ வகை ரத்த பிரிவினர் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம், ஆனாலும் அவர்களும் கவனமாக இருக்கத்தான் வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
    சில பெண்கள் தங்களை ஆண்களாகவே கருதி செயல்படும் சிக்கலான மனநிலைக்கு ஆளாகிறார்கள். அது எதிர்காலத்தில் ‘டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ எனப்படும் மனநிலைக் கோளாறாக மாறிவிடும்.
    நெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ பெண்களுக்கு தைரியம் தேவை. அந்த தைரியத்தை அவர்கள் தங்கள் நடை, உடை, செயல்பாட்டில் காட்டவேண்டியது அவசியம்தான். ஆனால் அதில் இன்னொரு பக்கம் சற்று முரண்பாடு கொண்டதாக இருக்கிறது. சில பெண்கள் ஆண்கள் அணிவது போன்ற உடைகளை அணிந்துகொள்கிறார்கள். கூந்தலையும் ஆண்களை போன்று வெட்டிக் கொள்கிறார்கள். ஆண்களோடு தங்கள் நட்புவட்டத்தையும் உருவாக்கிக்கொண்டு, ஆண்களைப்போலவே செயல்படவும் ஆசைப்படுகிறார்கள். இத்தகைய போக்கு ஒரு எல்லைவரை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும் எல்லைமீறும்போது அவர்களுக்கு தாங்கள் பெண் என்பதே மறந்துபோய்விடுகிறது. அப்படி ஒரு சில பெண்கள் தங்களை ஆண்களாகவே கருதி செயல்படும் சிக்கலான மனநிலைக்கு ஆளாகிறார்கள். அது எதிர்காலத்தில் ‘டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ எனப்படும் மனநிலைக் கோளாறாக மாறிவிடும்.

    இந்த முரண்பட்ட மனோபாவம் கொண்ட பெண்கள் பெரும்பாலும் பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளை வகிக்கலாம். தொழில்ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களாக இருப்பார்கள். மாலையில் நேரத்தோடு பணி முடிந்தாலும், இரவு வரை வேலைசெய்துவிட்டு தாமதமாக வீடு திரும்புவார்கள். தான் தாமதமாக வீடு திரும்புவதை பற்றி பெற்றோர் கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு அதிக கோபம்வரும். அதோடு இரவு ஷிப்ட்டில் வேலைபார்க்கவும், அடிக்கடி வீடு திரும்பாமல் இருக்கவும் விரும்புவார்கள்.

    முதலில் புடவை, சுடிதார், சல்வார் போன்றவைகளை அணியும் அவர்கள் காலப்போக்கில் தங்கள் உடையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆண்களைப்போல் பேண்ட், சட்டை அணிந்துகொள்வார்கள். ஜீன்ஸ் அணிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். கூந்தலையும் குட்டையாக்கிவிடுவார்கள்.

    தங்களை ஆண்களை போன்று காட்டிக்கொள்ள இத்தகைய பெண்கள் அதிகமாக மெனக்கெடுவார்கள். சிகரெட், மதுப்பழக்கம்கூட இவர்களிடம் ஏற்படலாம். திமிரான பேச்சு, ஆண்களோடு அதிக சகவாசம் போன்றவைகளும் ஏற்படக்கூடும். பெரும்பாலான நேரத்தை ஆண்களோடுதான் கழிக்க விரும்புவார்கள். அவர்களது உடல்மொழியும் ஆண்களை போன்று மாறிக் கொண்டிருக்கும்.

    பெண்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை காட்ட சில ஆண்கள் அதிரடியில் இறங்குவதுண்டு. பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவுகள் ஏற்படும்போது அவர்கள் அதிரடியாக தாக்கி, பெண்களை காப்பாற்றி அவர்கள் மனதில் இடம்பிடிப்பார்கள். அதுபோன்ற செயல்பாடு இந்த டெல்யூஷனல் டிஸ்ஆர்டருக்கு உள்ளான பெண் களிடமும் ஏற்படலாம். தங்களை ஆண்கள்போல் பாவித்துக்கொள்ளும் அவர்கள், பெண்களுக்காக அதிரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு, அவர்களது அன்பை பெறும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இந்த செயல்பாடு சில நேரங்களில் அவர்களுக்கே ஆபத்தாக அமைந்துவிடுவதும் உண்டு. இவர்கள் தங்களை ஆண்கள்போல் பாவித்துக்கொள்வதால், சில நேரங்களில் பெண்களை வசீகரித்து, தங்கள் ஆண்மை மனோ பாவத்தை நிலைநிறுத்த முயற்சிப்பார்கள். அப்போது எதிர் மறையான விளைவுகள் ஏற்பட்டு, அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்ற முத்திரை குத்தப்படுவதும் உண்டு.

    இதனை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, பெண்களிடம் ‘டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ உருவாக என்ன காரணம்? என்ற கேள்வி எழும்.

    அதற்கு அந்த பெண்களின் குடும்பமோ, அவர்கள் வசிக்கும் சமூகமோ காரணமாக இருக்கும். எப்படி என்றால், அவளுக்கு நினைவு தெரிந்த காலகட்டத்தில் அவளது பெற்றோர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கலாம். அப்போது அவளது தந்தை யால் தாய் பலமாக தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்திருக்கலாம். தாய் தாக்கப்படும் போதெல்லாம் அழுதுபுரளும் அவள் ‘பெண்ணாக இருந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. எப்போதும் அடிதான் வாங்கிக் கொண்டிருக்க வேண்டியதிருக்கும். ஆணாக இருந்தால்தான் அடிகொடுப்பவராக இருக்க முடியும்’ என்ற கருத்தை மனதில் பதித்து, வளர்ந்த பின்பு தன்னை ஆண்போல் பாவிக்கும் நிலைக்கு வந்திருக்கலாம்.

    இன்னும் சில பெண்கள் சிறுவயதில் ஆண்களால் பாலியல் பாதிப்பிற்கோ, வன்முறைக்கோ உள்ளாகியிருக்கலாம். அது அவர்கள் மனதில் தீராத வடுவை உருவாக்கியிருக்கும். அப்போது அவர்கள் ‘பெண்ணாக இருப்பதால்தான் இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படுகிறது. ஆண் போன்று நடந்துகொண்டால்தான் இந்த சமூகத்தில் வாழமுடியும்’ என்ற கருத்தை தங்கள் மனதிற்குள் பதித்துக்கொண்டு இவ்வாறான குணாதிசயங்களை கொண்டவர்களாக ஆகிவிடுவதும் உண்டு.

    முரண்பாடு கொண்ட இந்த ஆண் மனோபாவ தாக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகிவிடும் பெண்களுக்கு முதற்கட்டமாக அவர்களது மூளையில் ஏற்பட்டிருக்கும் ரசாயன மாற்றங்களை சீர்செய்ய மாத்திரைகளை மனநல நிபுணர்கள் வழங்குவார்கள். அது ஓரளவு பலன் தந்த பின்பு அவர்களையே அவர்களுக்கு புரியவைக்கும் சைக்கோதெரபி சிகிச்சை அளிப்பார்கள். 
    இயற்கை முறையில் சுகபிரசவம் அல்லது சிசேரியன் மூலம் பிரசவம் இவை இரண்டில் எந்த பிரசவத்திற்கு பின்னர் எப்போது தாம்பத்தியம் வைத்து கொள்வது நல்லது என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? அப்படி உடலுறவு கொண்டால் என்ன ஆகும்? உடலுறவு கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பது போன்ற கேள்விகள் ஆண் பெண் இருபாலருக்கும் இடையே எழும் ஒரு பொதுவான சந்தேகங்களாகும். பலருக்கும் கர்ப்ப காலத்தில் இந்த ஆசைகள் இருந்தாலும் யாரிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுவது என்ற தயக்கம் இருக்கும்? இதை போய் யாரிடம் கெட்டு தெரிந்து கொள்வது என்ற கூச்சம் இருக்கும். அத்தகையவர்கள் மேற்கொண்டு இந்த பதிவை படியுங்கள்.

    கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். கருவானது கருப்பையில் சரியாகப் பதிந்து இருக்காது என்பதால் அந்த நேரத்தில் உடலுறவு மேற்கொண்டால் உடலளவில் வலு குறைந்த பெண்களுக்கு கருச்சிதைவு (Abortion) ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த சமயத்தில் மசக்கை காரணமாக பெண்களுக்கு வாந்தி, குமட்டல், சோர்வு காரணமாக உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். ஆனால் உடலுறவில் ஈடுபடலாம் என தோன்றினால் தாரளமாக ஈடுபடலாம். இந்த சமயத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று பெண்ணின் வயிற்றை அழுத்தாத வகையில் உடலுறவில் ஈடுபடலாம் என்பதே. இதற்க்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ, ரத்த கசிவு இருந்தாலோ உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

    முதல் மூன்று மாதங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தால் அடுத்து வரும் நான்கு முதல் எட்டு வரையிலான மாதங்களில் அதிக அசௌகரியம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். சொல்ல போனால் 8-ம் மாதங்களில் உடலுறவு கொள்ளவே பெண்கள் விரும்புவார்கள். அதேபோல், ஒன்பதாவது மாதத்தில் உடலுறவை அறவே தவிர்த்து விடுங்கள். ஏனெனில் பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கோ, அல்லது வயிற்றில் வளரும் குழந்தைக்கோ எந்தவிதமான இன்பெக்ஷனும் ஏற்பட கூடாது என்பதால்.

    இயற்கை முறையில் சுகபிரசவம் நிகழ்ந்திருந்தால் குறைந்தது 2 மாதத்திற்கு பிறகு உடலுறவு கொள்வதே நல்லது. அதுவே உங்களுக்கு சிசேரியன் மூலம் பிரசவம் நிகழ்ந்திருந்தால் குறைந்தது 2.5 மாதங்களுக்கு பிறகு உடலுறவு கொள்ளலாம். ஆனால் அதற்குள் உங்களுக்கு பிரசவ சமயத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆறிவிட்டதா என நன்கு சரி பார்த்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி இருக்கும். ஆனால் அது நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடும்.
    உடலுக்கு குளுமை தரும் கேழ்வரகுடன் முருங்கைக்கீரை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான உணவு இது.
    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு  மாவு - 1 கப்
    உளுந்தம் பருப்பு - கால் கப்
    முருங்கை கீரை - 1 கைப்பிடி
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    கேழ்வரகு உளுந்து முருங்கை கீரை தோசை

    செய்முறை

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

    உளுந்து நன்றாக நைசாக அரைந்ததும் அதில் கேழ்வரகு மாவை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

    பின் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அத்துடன் முருங்கை கீரை சேர்த்து நன்கு கலந்து மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் தடவி மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு  உளுந்து முருங்கை கீரை தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை காலத்தில் நிறைய பேருக்கு உச்சந்தலையில் நமைச்சல், அரிப்பு பிரச்சினை தலைதூக்கும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கோடை காலத்தில் நிறைய பேருக்கு உச்சந்தலையில் நமைச்சல், அரிப்பு பிரச்சினை தலைதூக்கும். தலைமுடியில் வியர்வையும், எண்ணெய்யும் படிந்திருப்பதே அதற்கு காரணமாக இருக்கும். ஷாம்பு போட்டு குளித்தால் சிலருக்கு சரியாகிவிடும். நமைச்சல் அதிகமாக இருந்தால் அழுக்கு படர்ந்துகொண்டிருப்பது, பேன் தொல்லை, ஒவ்வாமை, உச்சந்தலை சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால் தோன்றும் தொற்று, ஷாம்பு ஒத்துக்கொள்ளாதது போன்றவை காரணமாக இருக்கலாம்.

    பொடுகு தொல்லைதான் உச்சந்தலையில் நமைச்சல் ஏற்படுவதற்கு பொதுவான காரணமாகும். அதனால் உச்சந்தலையில் பூஞ்சை, பாக்டீரியா போன்ற தொற்றுகள் உருவாகும். அதன் காரணமாக அரிப்பு பிரச்சினை உண்டாகும். உச்சந்தலையில் போதுமான ஈரப்பதத்தன்மை இல்லாவிட்டாலும் அரிப்பு ஏற்படலாம். தலைமுடியை சுத்தமாக பராமரிக்காதது, தலைமுடிக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதது, தலையில் அதிகபடியாக வியர்ப்பது போன்ற காரணங்களும் நமைச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் மன அழுத்தமும், உணவு பழக்கமும் கூட பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

    பெரும்பாலானோர் நமைச்சல் பிரச்சினைக்கு தீர்வாக எலுமிச்சை சாறுவைத்தான் பயன்படுத்துவார்கள். உச்சந்தலை உள்பட கூந்தல் முழுவதும் எலுமிச்சை சாறை கொண்டு அழுத்தி தேய்த்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். அரிப்பு நீங்குவதோடு முடியும் வலிமையாகும். கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். அதனை தலையில் நன்றாக தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து நீரில் அலசலாம். லாவண்டர் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், சாமந்தி எண்ணெய் போன்றவையும் அரிப்புக்கு சிறந்த நிவாரணம் தரும். இந்த எண்ணெய்களை சிறிதளவு தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து வரலாம்.

    ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய்யும் பயன்படுத்தலாம். ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய் கலவை பொடுகுக்கு சிறந்த தீர்வு தரும். தூங்க செல்வதற்கு முன்பு ஐந்தாறு முறை தலை சீவுவது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அரிப்பு தொந்தரவு வராமலும் தடுக்கும். உணவு பழக்கமும் கூந்தல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் பி, சி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளை தவிர்க்க உதவும். உச்சந்தலையில் அரிப்பு தொல்லை இருந்தால் கீரை, சாலட், பயறு மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். 
    ×