என் மலர்
ஆரோக்கியம்
சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடும். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.
சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடும். இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ் என்று கூறுவர். இதுவும் ஒரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதை பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்.
வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வருவதில்லை.
மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவர்கள் இதை வயது முதிர்ச்சியால் வருவது, இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி விடுவதால் இதை அப்படியே விட்டு விடுகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள் தான் அதிகம். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், இப்போது இந்நிலை மாறி விட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும்.
ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை.
உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம். இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது. ஸ்லிங் என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும்.
இது தவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும். தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும். குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.

சிலருக்கு அடிக்கடி விக்கல் வந்து கொண்டே இருக்கும். அப்படி அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் அது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.
சில நேரங்களில், மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளை கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாக திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாக திறப்பதில்லை. அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்த காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதை போல, தொண்டையில் ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் விக்கல்.
வேக வேகமாக உணவை சாப்பிடுவது, மிகச்சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள். வலி நிவாரணி மாத்திரைகள், சில குறிப்பிட்ட வகை மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி ஆகும். உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.
மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதை தானாக கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.
அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்த காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு சற்று நேரம் செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

பெண்கள் தனது அந்தரங்க உறவு குறித்த சந்தேகங்களை தங்கள் கணவரை விட இவர்களிடமே பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெண்கள் தனது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப் படுகின்றனர். இது பற்றிய ஒரு முடிவில், பெண்கள் தனது கணவரை விட அவர்களது தோழியிடம் தான் அதிகமாக தனது அந்தரங்க தகவல் குறித்து பேசுகின்றனர்.
இதில் அவர்களது தோழிகளுடன் இரவில் வெளியே செல்லும் போது அதிகமான அந்தரங்கம் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் பேசுகின்றனர்.
35 சதவீதம் பெண்கள் இந்த மாதிரி பரிமாறி கொள்வதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. ஆனால், 15 சதவீத பெண்கள் தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது அந்தரங்கம் தொடர்பான விசியங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் பார்த்தால், பெண்கள் அதிகமாக ஆண்களை பற்றியே பேசுகின்றனர். அதில் 64 சதவீதம் பேர் தங்களது கணவர்களை பற்றியே பேசுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அதில் சிலபேர் மற்றவர்களின் அந்தரங்க விசியங்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடிய வில்லை. குழந்தைகளை அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம்.
எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர்.
அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத் திறனையும் வெளிப்படுத்துவார்கள்.
எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும். எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது.
தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும். அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும் போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது.
தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது. அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை.

தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று இவை இரண்டையும் வைத்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி - 3 கப்
வெள்ளரி - 1/2 கப்
கிராம்பு - 1
தயிர் - 1/4 கப்
புதினா இலைகள் - 10
டிஸ்டீவியா (தேன் புல்) - 1/4 தேக்கரண்
கல் உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:
தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெள்ளரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அடுத்து அதில் தயிர், ஸ்டீவியா மற்றும் உப்பைச் சேர்த்து மென்மையாகும் வரை நன்கு அரைக்கவும்.
அடுத்து அதில் ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் மற்றும் புதினா சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி பரிமாறவும்.
சத்தான சுவையான தக்காளி வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடி
பழுத்த தக்காளி - 3 கப்
வெள்ளரி - 1/2 கப்
கிராம்பு - 1
தயிர் - 1/4 கப்
புதினா இலைகள் - 10
டிஸ்டீவியா (தேன் புல்) - 1/4 தேக்கரண்
கல் உப்பு - 1/4 தேக்கரண்டி
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை:
தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெள்ளரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அடுத்து அதில் தயிர், ஸ்டீவியா மற்றும் உப்பைச் சேர்த்து மென்மையாகும் வரை நன்கு அரைக்கவும்.
அடுத்து அதில் ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் மற்றும் புதினா சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி பரிமாறவும்.
சத்தான சுவையான தக்காளி வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடி
கலந்த கலவையை அதில் ஊற்றி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 40% வரை தான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள்.
ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள் தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.
தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம்.
அந்தச் சமயத்தில் உறவு கொண்டால் தான் கருதரிப்பு ஏற்படும். அந்த தேதிகளை தவற விடும் போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம். கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம்.
சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல் நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம். அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம். சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம்.
இப்படி செய்யும் போது விந்தணு அழிந்து போகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருத்தரிப்பு தள்ளிப் போகலாம். இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.

சந்தனம், பருக்கள், முகப்பரு மற்றும் புண்கள் ஆகியவற்றைத் தடுக்கின்ற ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் தூசி மற்றும் மாசுபடும் போது பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சந்தனம், பருக்கள், முகப்பரு மற்றும் புண்கள் ஆகியவற்றைத் தடுக்கின்ற ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் தூசி மற்றும் மாசுபடும் போது பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மேலும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் முகத்தில் பாதிப்படைந்த பகுதியில் சந்தனத்தை பாலுடன் கலந்து அந்த கலவையை பயன்படுத்தினால் அது தோலை பாதுகாக்க உதவும்.
1. முகப்பரு மற்றும் பிளாக்ஹெட்ஸ் நீக்க
சந்தன எண்ணெய் ஒரு தேக்கரண்டி , மஞ்சள் மற்றும் கற்பூரம் ஒரு சிட்டிகை கலந்து. முகப்பரு மற்றும் பிளாக்ஹெட்ஸ் நீக்க இரவு முழுவதும் ஃபேஸ்பேக் போடுங்கள். நீங்கள் அத்துடன் 1 தேக்கரண்டி சந்தன பவுடர், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சில எலுமிச்சை சாறுகளை ஒரு பசையாக தயாரித்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் விட்டு விடுங்கள். பின்னர், உலர்ந்த பின்பு இதமான சுடுத் தண்ணீரில் முகத்தைக் கழுவுங்கள்.
2. தோலை மென்மையாக்க
சந்தன எண்ணெயை உங்கள் முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அதை விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இதமான சுடுத் தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.
3. சூரியானால் ஏற்படும் கருமையை போக்குகிறது
ஃபேஸ் பேக் தயார் செய்ய ஒரு தேக்கரண்டி வெள்ளரிச் சாறு, ஒரு தேக்கரண்டி தயிர், தேன் ஒரு தேக்கரண்டி, சில எலுமிச்சை சாறு மற்றும் சந்தன பவுடர் ஒரு தேக்கரண்டி பயன்படுத்துங்கள். இந்த கலவையாலான ஃபேஸ் பாக்கை உங்கள் முகத்தில் தடவவும், சுமார் 15 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். இது சூரியனால் ஏற்பட்ட கருமை மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது.
4. கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது
1 டீஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து அதை முகத்தில் தடவி மசாஜ் செய்து அதை இரவு முழுவதும் விட்டு விடுங்கள். தொடர்ந்து இதைப் பயன்பாடுத்துவதால், கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.
5. எண்ணெய் படிந்த சருமத்துக்கு
சந்தன தூளை ரோஜா நீர் சில துளிகள் சேர்த்து கலந்து உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நேரம் அதை விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

பெண்கள் காலை நேரத்தில் அதிக டென்ஷசனுடன் இருப்பார்கள், இந்த டென்ஷனை போக்க எளிமையான வழிகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பெண்களின் காலை வேளைகளில் எப்பொழுதுமே பரபரப்பாக இருப்பார்கள். சிலர் வேலைக்கு புறப்படுவார்கள். சிலர் உணவு சமைத்து கொண்டும், அதே நேரத்தில் குழந்தைகளுக்கு தேவையான உணவை தயார் செய்து கொண்டு இருப்பார்கள். இந்த காலை வேலையில் அதிக டென்ஷசனுடன் இருப்பார்கள், இந்த டென்ஷனை போக்க எளிமையான வழிகள் உள்ளன.
எப்பொழுதும் காலை வேலைக்கு தேவையான பொருட்கள் மற்றும் வெளியில் செல்லும் பொழுது எடுத்து உடுத்தக் கூடிய உடைகள் அனைத்தையும் இரவே தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். காலையில் எழுந்து தேவையான பொருட்களை தேட வேண்டியதில்லை. உங்கள் குழந்தைகளை சரியான நேரத்திற்கு தூங்க வைக்க வேண்டும்.
இப்படி செய்தால், அவர்களும் காலையில் எழுந்து விடுவார்கள், நீங்கள் அதிக நேரம் எழுப்ப வேண்டிய வேலை குறைவாக இருக்கும். அனைத்து பொருட்களுக்கும் தனியாக இடம் வைத்து, அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் எந்த பொருள், எந்த இடத்தில் இருக்கும் என உங்களுக்கு நியாபகம் இருக்கும், மறதி வராது.
காலை எழுந்து என்ன செய்யப்போகிறோம் என்பதை முன் தினமே பட்டியல் போட்டுவிடுங்கள். இப்படி செய்தால் உங்கள் நேரம் மிச்சமாகும். டென்சன் குறைந்துவிடும். உங்கள் வீட்டில் மற்றவர்கள் எழுந்திருக்கும் நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்பாகவே எழுந்து விடுங்கள்.
இந்த செயல் உங்களுக்கு பரபரப்பு மற்றும் டென்ஷனில் இருந்து உங்களை விலக செய்யும். காலை நேரத்தில் எழுந்தவுடன் கடவுளை வணங்குவது உங்களுக்கு ஒரு நல்ல மன அமைதியை தரும்.

குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் போது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தையின் தவழ்தல் என்பது மிகவும் முக்கியமான தருணமாகும். குழந்தை தவழும் பழக்கமானது குழந்தைக்கு தானாக வரும் பழக்கமே தவிர எவராலும் வரவைப்பது இல்லை. பொதுவாக குழந்தைகள் தனது ஆறு மாதங்களில் தவழ தொடங்குவார்கள். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் தவழும் காலங்களில் மிகவும் துருதுரு என இருப்பார்கள்.
அதனால் குழந்தைகளுக்கு அதிக விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தவழும் நேரத்தில் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்வார்கள்.
எனவே பெற்றோர்களாகிய தாங்கள் வீட்டில் எந்த ஒரு ஆபத்தான பொருளையும் குழந்தைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் தவழ ஆரம்பித்துவிட்டாள், அவர்கள் நடக்கும் பருவமானது நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிவைத்துக்கொண்டே இருந்தால் அதன் பிறகு குழந்தைகள் தூக்கி வைத்து சொல்வார்கள், இதனால் குழந்தைகள் தவழ்வதற்கு மற்றும் நடப்பதற்கு அதிக காலம் எடுத்து கொள்வார்கள். எனவே யாராக இருந்தாலும் சரி குழந்தைகளை தூக்கியே வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிடவும்.
குழந்தைகளை எளிதில் தவழ வைப்பதற்கு இப்பொதுழுது கடைகளில் நிறைய தவழும் மொம்மைகள் விற்கப்படுகிறது.அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தால் அந்த மொம்மை தவழ்வது போல், தங்கள் குழந்தைகளும் தவழ ஆரம்பிப்பார்கள்.
உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், தினமும் தவறாமல்வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த வித நோய்த்தொற்றுகளும் குழந்தைகளை அண்டாமல் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது பாகற்காய். இன்று பாகற்காய் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
ப.மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு

செய்முறை:
பாகற்காயை நன்றாக கழுவி தண்ணீரை நன்றாக வடித்து விட்டு விரும்பியபடி வெட்டி கொள்ளவும். ஆனால் மெலிதாக வெட்ட வேண்டும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாகற்காய், வெங்காயம், தக்காளி, ப. மிளகாய், எலுமிச்சைசாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்போது சுவையான பாகற்காய் சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முகம், கைகள், கால்களில் சரும பராமரிப்புக்கு செலுத்தும் கவனத்தை நிறைய பேர் பின்புறத்தில் இருக்கும் முதுகை பராமரிப்பதற்கு செலுத்துவதில்லை.
முகம், கைகள், கால்களில் சரும பராமரிப்புக்கு செலுத்தும் கவனத்தை நிறைய பேர் பின்புறத்தில் இருக்கும் முதுகை பராமரிப்பதற்கு செலுத்துவதில்லை. முதுகு பகுதியை நன்றாக பராமரித்து வருவது அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம்.
உடலில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக முதுகுதான் அமைந்திருக்கிறது. முகத்தையும், கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்து கொள்பவர்களுக்கு முதுகு பகுதி சட்டென்று நினைவுக்கு வராது. முகத்திற்கு ‘ஸ்க்ரப்’ செய்து இறந்த செல்களை நீக்குவதுபோல முதுகுக்கும் ஸ்க்ரப் செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.
முதுகு பகுதியில் கருமை படிந்திருந்தால் எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு சருமத்தை இயற்கையாகவே பிளிச்சிங் செய்யும் தன்மை கொண்டது. பொலிவிழந்து போன சருமத்திற்கு பளபளப்பையும், பிரகாசத்தையும் கொடுக்கும். முதுகு பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.
சருமத்திற்கு ஈரப்பதம் எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல் முதுகுக்கும் அவசியம். முதுகு பகுதியை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதற்கு ஈரப்பதம்தான் உதவும். முதுகு பகுதியின் சரும தன்மையை இயற்கையாகவே புதுப்பிக்கவும் உதவும். அங்கு ஈரப்பதம் இல்லாவிட்டால் சரும பராமரிப்பில் சிக்கல் நேரும்.
முதுகுக்கு பொருத்தமான லோஷன் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். அது சரும பராமரிப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குளிக்கும்போது முதுகு பகுதியையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். குளிக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் கை கால்களை கழுவுவதுபோல் வாரத்திற்கு மூன்று, நான்கு முறையாவது முதுகை நன்றாக கழுவ வேண்டும்.
நீராவி பயன்படுத்தி சுத்தம் செய்வது சருமத்திற்கும், முதுகுக்கும் சிறந்த சிகிச்சையாக அமையும். மாதத்திற்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ நீராவி பிடிப்பது சரும துளைகளை திறக்க உதவும். சருமத்தில் இருக்கும் அழுக்குகள், நச்சுக்களை அழிக்கவும் செய்துவிடும். முகத்திற்கு நீராவி சிகிச்சை மேற்கொள்வது எளிதானது. வீட்டிலேயே எளிதாக நீராவி பிடித்துவிடலாம். முதுகு மற்றும் உடலுக்கும் நீராவி சிகிச்சை மேற்கொள்வது அவசியம். அத்தகைய சிகிச்சை வழங்கும் ஸ்பா, அழகு நிலையத்திற்கு மாதம் ஒருமுறை சென்று வரலாம். அதன் மூலம் முழுஉடலுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமெங்கும் விஞ்ஞானிகள் தடுப்பூசிகளையும், மருந்துகளையும் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றின் பிற அம்சங்கள் பற்றியும், அது உலகை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
பெண்கள் குணம் அடைய அதிக வாய்ப்பு...
உலகளவில் ஏறத்தாழ 88 லட்சம் பேரின் உடல்களுக்குள் இந்த வைரஸ் புகுந்து விட்டது. 4 லட்சத்து 65 ஆயிரம் உயிர்களை பறித்தும் இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள். பெண்களை விட ஆண்கள்தான் உலகளவில் இந்த வைரசின் அதிகபட்ச தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் இந்த விஞ்ஞானிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் சரி, மருந்து கண்டுபிடிப்பதிலும் சரி, ஆண், பெண் என இரு பாலாரிடத்திலும் உள்ள உயிரியல் வேறுபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இவர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராாய்ச்சி பதிவு இப்படி சொல்கிறது-
“உலகைச்சுற்றிலும், ஒவ்வொரு கண்டத்திலும், கடுமையான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் ஆண்கள்தான் கணிசமாக அனுமதிக்கப்படுவதை பார்க்கிறோம். கொரோனா வைரசால்தான் அவர்கள்தான் அதிகளவில் உயிரிழப்பதற்கும் வாய்ப்பு அதிகம். சில ஆய்வுகள் ஆண்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்காக இருக்கிறது என சொல்கின்றன. ஆண்களை போன்றே பெண்களும் சம அளவில் பாதிக்கப்பட்டாலும்கூட, பெண்கள்தான் குணம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது”.
பெண்களே பலமானவர்கள்...
பொதுவாக ஆண்களைப் போலவே பெண்கள் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறையிலும் வந்து விட்டபோதிலும், இன்னும் பெண்களை உடலளவில் பலவீனமானவர்களாக பார்க்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் கொரோனா வைரஸ் முன் பெண்கள்தான் பலசாலிகள் என நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் பொதுவாக வைரஸ்களுக்கு மிக விரைவான மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கிறார்கள். இதுவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவ் 2-க்கு எதிராக பெண்களின் பாதுகாப்புக்கு பங்களிக்கும் காரணியாக இருக்கலாம் என்று அந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
உகான் தரவுகள்
சீனாவின் உகான் நகரில், கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது எடுத்த தரவுகள், ஆண்களை விட பெண்கள்தான் கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக அழிக்கிறார்கள் என்று காட்டுவதாக அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
ஆண், பெண் என்னும் பாலின வேறுபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறதாம்.
நோய் எதிர்ப்பு சக்தி, பாலின வேறுபாடுகள், மரபணு மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையேயான ஹார்மோன் வேறுபாடுகளால் ஏற்படுகின்றன என்பதை விளக்கும் பிற வைரஸ்களுக்கான தரவு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
கொரோனாவை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்கு பாதகமாக உள்ளது என்பதற்கு சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று 66 சதவீதம் ஆண்களையும், 34 சதவீதம் பெண்களையும் பாதிக்கிறது என தெரியவந்துள்ளதாக ‘ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் சயின்ஸ்’ பத்திரிகையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசிடம் இருந்து ஆண், பெண் என பேதமின்றி இரு தரப்பினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், பெண்களை விட ஒரு படி ஆண்கள் அதிக எச்சரிக்கையாக இருங்கள் என்பதுதான் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்.