என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    சமூக வலைதளங்களையும் தாண்டி இணையத்தின் பயன்பாடு அளப்பரியது; எல்லையற்றது, சமூக வலைதளங்களையும்கூட நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து பயனுள்ளவையாக மாற்றிக்கொள்ள முடியும்.
    இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் கட்டற்ற இணைய இணைப்புடன் கூடிய உயர்ரக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறோம். பிறரை தொடர்புகொள்ள, மின்னஞ்சல் பார்க்க என்பது போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை தாண்டி, காலை கண் விழிப்பதில் தொடங்கி, உணவருந்தும்போது, பயணத்தின்போது, இரவு தூங்க செல்வதற்கு முன்புவரை என ஒரு நாளின் பெரும் பகுதியை சமூக வலைதளங்களில் செலவிடுகிறார்கள்.

    இவற்றின் அதீத பயன்பாடு, வாசிப்பை இன்று பெருமளவு குறைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக கவனச் சிதறல், தொடர்ந்து பத்து வரிகளுக்கு மேல் வாசிக்க இயலாமை என்பது போன்ற சிக்கல்கள் வாசிப்பில் ஏற்படுகின்றன. மேலும், இன்றைக்கு எந்தவொரு தகவலையும் சில வினாடி நேரத்தில் எடுத்துவிடக்கூடிய நிலையில் நாம் இருந்தாலும், அது குறித்த ஆழ்ந்த அறிவையும் புரிதலையும் பெற்றிருக்கிறோமா என்பது கேள்விக்குரியாகும்.

    இத்தகைய சிக்கல்கள் இருந்தாலும், இணையத்தை வாசிப்பு களமாக நாம் மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு தேவை வாசிப்பில் நம்முடைய விருப்பத்தையும் தேர்வையும் கண்டு அடைவதே. கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், நேர்காணல், மொழிபெயர்ப்பு இன்னும் பிற என பல்வேறு வகைப்பாடுகளால் ஆன கட்டுரைகள் தினமும் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகவே வாசிக்க கிடைக்கின்றன.

    எனவே சமூக வலைதளங்களையும் தாண்டி இணையத்தின் பயன்பாடு அளப்பரியது; எல்லையற்றது, சமூக வலைதளங்களையும்கூட நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து பயனுள்ளவையாக மாற்றிக்கொள்ள முடியும்.
    பிரிட்ஜில் காய்கறிகளை வைப்பது அதன் தரத்தை மாற்றும். மேலும் அதில் உள்ள சில சத்துக்களும் வெளியேறுகிறது. பிரிட்ஜில் காய்கறிகளை வைப்பதால் எப்படி சத்துக்குறைவு ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.
    பால் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது டீக்கோ பயன்படுத்தக்கூடாது.

    உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. பிரீசரில் உருளைக்கிழங்கை வைத்து எடுக்கும்போது அது உருளைக்கிழங்கை மென்மையானதாக மாற்றிவிடும். இந்த உருளைக்கிழங்கை சமைக்கும்போது அது உங்களின் உணவின் சுவையை மாற்றும். மேலும் அதில் உள்ள சில சத்துக்களும் வெளியேறுகிறது.

    முட்டையை பிரீசரில் வைக்கக்கூடாது. முட்டையில் உள்ள நீர்ச்சத்துக்கள் உறையும்போது அதன் பரப்பளவு அதிகரிக்கும், இதனால் முட்டையின் ஓடு உடையவோ அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படவோ வாய்ப்புள்ளது.

    அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒருபோதும் பிரீசரில் வைக்காதீர்கள். குறிப்பாக வெள்ளரிக்காய், கீரை, தர்பூசணி போன்ற பொருட்களை வைத்தால் அவற்றில் உள்ள நீர்ச்சத்துகள் ஐஸ்கட்டிகளை உருவாக்கிவிடும். பிறகு அதனை உபயோகப்படுத்தும்போது அதன் உண்மையான சுவையும், வடிவமும் காணாமல் போயிருக்கும். சில சத்துக்களையும் இழக்க நேரிடும்.

    பிரீசரில் இருந்து எடுத்து சமைத்தது போக மீதம் உள்ள இறைச்சியை ஒருபோதும் மீண்டும் பிரீசரில் வைக்காதீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட இறைச்சிகள் சாதாரண இறைச்சியை விட இரு மடங்கு பாக்டீரியாக்களை ஈர்க்கும். இதற்கு ஒரேவழி தேவைப்படும்போது மட்டும் இறைச்சி வாங்குவதுதான். சாப்பாட்டை வீணாக்க கூடாது என்பதற்காக அதனை பிரீசரில் வைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் இது மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். இதனால் ஆபத்து இல்லையென்றாலும், அந்த சாப்பாட்டில் சுவையோ, சத்துக்களோ எதுவும் இருக்காது.

    மீதமான குழம்பை என்ன செய்வது என்ற குழப்பம் பெரும்பாலும் அனைத்து சமையலறையிலும் தோன்றும் ஒரு பிரச்சினையாகும். பிடித்த குழம்பாக இருந்தால் அதனை பிரீசரில் வைத்து சாப்பிடும் பழக்கம் கிட்டத்தட்ட அனைவருக்கும் உள்ள ஒரு பழக்கமாகும். பிரீசரை விட்டு எடுத்தபின் அந்த குழம்பு மிகவும் கட்டியாக மாறிவிடும். மேலும் இது சமைத்தபோது இருந்த சுவையுடனும் இருக்காது. உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமானது பூண்டு. தேசிய உணவு பாதுகாப்பு மையத்தின் ஆலோசனைப்படி பூண்டானது பிரீசரில் வைக்கப்படும்போது கடினமானதாக மாறிவிடும், மேலும் அதன் சுவை கசப்பாக மாறிவிடும். இந்த பூண்டை உணவில் சேர்க்கும்போது அது உணவின் மொத்த சுவையையும் மாற்றக்கூடும்.

    பிரீசரில் வைப்பதால் உணவின் சுவையை மாற்றுவது பூண்டு மட்டுமல்ல, வெங்காயம், மிளகாய் போன்ற பொருட்களின் சுவையும் கூட மாறக்கூடும். இவை மட்டுமின்றி மிளகு, பச்சை மிளகாய், கிராம்பு போன்ற பொருட்களும் கூட பிரீசரில் வைக்கும்போது தன் சுவையை இழக்கும்.  
    குடும்பத்தில் எவ்வளவுதான் பிரச்சனை வந்தாலும் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த கூடாது.
    உறவுமுறையில் விரிசல் ஏற்படுவதற்கு சண்டையின் போது தம்பதியினர் பயன்படுத்தும் ஒரு சில மோசமான வார்த்தைகளே காரணம் ஆகும்.

    ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு’

    வள்ளுவரின் வாக்கிற்கேற்ப தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்,  ஆனால் நாவினால் கூறிய தீய சொல்லின் வடு என்றும் ஆறாது. நாவினால் சுட்ட சொல்லுக்கு, நீங்கள் எந்த வகையில் மன்னிப்பு கேட்டாலும் அது பாதிக்கப்பட்டவர்களின் மனதில் இருந்து ஆறவே ஆறாது.

    இந்த உலகில் மன்னிக்க முடியாதது என்ற ஒரு குற்றம் கிடையாது. ஆனால் அதனை மன்னிப்பதற்கு நம் மனது பக்குவப்படவேண்டும். அப்படி நம் மனது பக்குவபடவில்லையென்றால் நமது உறவு முறைகளில் விரிசல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது ஆகிவிடும்.

    குடும்பத்தில் எவ்வளவுதான் பிரச்சனை வந்தாலும் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த கூடாது. கோபத்தில் பேசிவிட்டேன் என்று கூறினாலும் அந்த வார்த்தை என்றென்றைக்கும் அவர் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். அவை என்னென்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

    உங்களிடம் ஒரு திறமை இருந்தால் உங்கள் துணையிடம் மற்றொரு திறமை இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளை அவரால் செய்ய முடியாது அதே போல அவர் செய்யும் வேலைகளை உங்களால் செய்ய முடியாது. எனவே உன்னை விட என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது தம்பதியினர் உறவில் இடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும்.

    சம்பாத்தியம் மற்றும் குணநலன்கள் சார்ந்த விஷயத்தில், பக்கத்து வீட்டில் இருப்பவரை ஒருபோதும் ஒப்பிட்டு பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் வாழும் வாழ்கை முறை வேறு, அவர்கள் வாழும் வாழ்க்கை முறை வேறு.

    எதிர்பாராமல் ஏற்படும் சண்டையின் போது என்னிடம் நீ நடிக்கிறாயா? என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், மனதுக்குள் நம்மை போலியானவன் என்று நினைத்துக்கொண்டுதான் இவ்வளவு நான் நம்முடன் வாழ்ந்துள்ளார் என்று துணைக்கு நினைக்கத் தோன்றும்.

    சண்டைபோட்டுக்கொண்டிருக்கும்போது கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கும் போது நீ ஒரு தண்டம், வேஸ்ட் போன்ற வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டால் போதும், அந்த இடமே ஒரு போர்க்களமாக மாறிவிடும். எதற்குமே லாயக்கில்லை என்ற வார்த்தை அவர்கள் மனதில் பசுமரத்து ஆணி போன்று பதிந்துவிடும். வாழும் காலம் உள்ளவரை அந்த வார்த்தை மனதில் ஒருவித வலியினை துணைக்கு ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கும்.

    திருமணம் ஆன புதிதில் தம்பதியினர் தங்களுடைய கடந்த காலம், திருமணதிற்கு முந்தைய காதல் பற்றி பேசி சந்தோஷமாக சிரித்து கொள்வார்கள். ஆரம்பத்தில் இதுபோன்ற விஷயம் தம்பதியினர்களுக்கு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், காலப்போக்கில் சண்டை ஏற்படும்போது கடந்த காலத்தை பற்றியோ, திருமணதிற்கு முந்தைய உறவினை சொல்லிக்காட்டும்போது, இவ்வளவு நாள் சந்தேகத்துடன் தான் என்னுடன் குடும்பம் நடத்தி கொண்டிருக்கிறாயா என்ற கேள்வி அங்கு எழுந்து உறவில் மிக பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்.

    இவற்றை கடந்து சென்றாலே இல்லறமானது நிச்சயம் இனிமையானதாக இருக்கும்.
    கார்ட்டூனை அதிகளவு பார்க்கும் குழந்தைகள் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. கார்ட்டூனை அதிகளவு பார்க்கும் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    குழந்தைகளை, உணவு சாப்பிட வைப்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், கார்ட்டூன் திரைகளின் முன், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் அதிகளவில் உள்ளனர். நீங்கள், அப்படிப்பட்ட பெற்றோரில் ஒருவராக இருந்தால், குழந்தைகளின் வளர்ச்சியில், கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும், சிந்திக்க வேண்டிய நேரம் இது.

    கார்ட்டூன் பார்ப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மனவளர்ச்சியை பெரிதாக பாதிக்கிறது. கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது, குழந்தைகளின் கற்பனைத் திறனை பாதிப்பதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புறவெளியில் விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை, அவர்கள் உணர்வதில்லை. புறவெளியில் விளையாடுவது, அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ள உதவுகிறது; கூடவே, துடிப்போடு இருக்கவும் வைக்கிறது.

    பெரும்பாலான கார்ட்டூன்கள், சரியான சொல்லகராதியை உபயோகிப்பதில்லை. இதனால், தவறான மொழி ஆளுமையை பின்பற்ற வைக்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை விட்டு விட்டு, தங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் பேச முயற்சிக்கின்றன. இது, கார்ட்டூன்களால் குழந்தைகள் பாதிப்படையும் காரணிகளில் ஒன்று. கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர்.

    இதுவே, குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூலக் காரணம். குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே, இறுதி வரை நிலைத்திருக்கும். கார்ட்டூன்கள் முன், அதிக நேரம் செலவழிப்பது, குழந்தைகளுக்கு தனிமை மனப்பான்மைக்கும், அலட்சிய மனப்பான்மைக்கும் வித்திடும். இதனால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது, அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.
    தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அந்த வகையில் இன்று மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
    மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை பரவலாக எல்லோருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது. பெண்களுக்கான உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அந்த வகையில் இன்று மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
    இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
    கருப்பட்டி - சிறிய துண்டு
    மிளகு  அரை - டீஸ்பூன்
    தண்ணீர்  - ஒரு கப்
    ஏலக்காய் - 2

    ஆவாரம் பூ கருப்பட்டி டீ

    செய்முறை :

    ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெட்ரோலியம் ஜெல்லி தடிப்புகள், சிறிய வெட்டுக்காயங்கள், பாத வெடிப்புகள், உதடு வெடிப்புகளை மட்டுமில்லாமல் தலை முதல் கால் வரை பல்வேறு அழகு பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது.
    எல்லா வீடுகளிலும் பெட்ரோலியம் ஜெல்லி தடிப்புகள், சிறிய வெட்டுக்காயங்கள், பாத வெடிப்புகள், உதடு வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.  ஆனால் இவற்றை தவிர பெட்ரோலியம் ஜெல்லி தலை முதல் கால் வரை பல்வேறு அழகு பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது. அவற்றை குறித்து இங்கு பார்ப்போம்.

    மேக் அப் ரிமூவர் தீர்ந்து விட்டதா? பதட்டப்பட வேண்டாம். சிறிது பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் எடுத்து மேக் அப்பை சுலபமாக எடுத்துவிடலாம்.

    உங்களுக்கு பிடித்த ஐ ஷாடோவை சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியுடன் சேர்த்தால் உங்களுக்கு பிடித்தமான லிப் க்ளாஸ் தயார்.

    நீண்ட நேரம் வெளியே சுற்ற வேண்டுமா? கவலைப்பட வேண்டாம். சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் கை கால் முட்டிகளில், கைகளில், கால்களில் தடவிக் கொள்ளுங்கள். அதன் மீது உங்களுக்கு பிடித்தமான வாசனை திரவியத்தை பூசுங்கள். நாள் முழுவதும் மணமாக இருக்கும்.

    புருவங்கள் சரியான வடிவத்தில் இல்லையா? சிறிது பெட்ரோலியம் ஜெல்லி எடுத்து தடவி அழகான வடிவத்திற்கு கொண்டு வாருங்கள்.

    ஹேர் டை தடவும் பொழுது அது ஒழுகி உங்களின் நெற்றிக்கு வரலாம். எனவே, அதிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் நெற்றியில் தடவிகொள்ளுங்கள். இனி கறை படாது.

    தடிமனான முடி இருப்பவர்கள், அவர்களுக்கு பிடித்த ஹேர் ஸ்டைல் போடுவதில் பெரும் சிரமத்தை சந்திப்பார்கள். இந்த பிரச்சனைக்கும் சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவி, உங்களுக்கு பிடித்தமான ஹேர் ஸ்டைலை போட்டுக்கொள்ளுங்கள்.

    பழைய லிப்ஸ்டிக் உபயோகப்படுத்தி உங்களுக்கு சலிப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்களின் பழைய லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி, அதன் மீது சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவுங்கள். உதடுகள் பளபளப்பாக இருக்கும்.

    சிறிது சமையல் சோடா மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து, முகத்தில் தடவ, சருமத்தில் உள்ள வறட்சியை போக்கி, ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை மென்மையாக்குகிறது.

    சக்கரை மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து சருமத்தில் தடவ, அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.

    நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் இரவு கிரீம் உங்களுக்கு பிடிக்கவில்லையா? சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை முகத்தில் இரவு கிரீமாக தடவிக்கொள்ளுங்கள். காலையில் முகம் பளபளப்பாக இருக்கும்.

    நுனி முடியில் நிறைய பிளவுகள் உள்ளனவா? பார்லருக்கு சென்று முடி வெட்ட நேரமில்லையா? பதட்டப்பட வேண்டாம். சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை முடியில் தடவி உங்களுக்கு விருப்பமான ஹேர் ஸ்டைலை போட்டுக்கொள்ளுங்கள்.

    சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கண் இமைகளில் படுக்க செல்வதற்கு முன் பூசுங்கள். இதனால் உங்கள் இமை முடிகள் ஈரப்பதத்துடனும் பளபளப்பாகவும் இருக்கும்.

    நெய்ல் பாலிஷ் வைக்கும் பொழுது, அது கை விரல்களில் படுகிறதா? இப்போது நெய்ல் பாலிஷை மிக சுலபமாக வைக்கலாம். சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கை விரல்களில் சுற்றித்தடவி பின்பு நெய்ல் பாலிஷ் இடுங்கள். இப்போது நெய்ல் பாலிஷ் விரல்களில் படியாது.
    கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
    குழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.

    கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.

    கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

    மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.

    மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும். வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.

    பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்
    டீ-காபி இரண்டும் சேர்ந்து பல நன்மைகளையும் சில தீமைகளையும் நமக்குத் தருகின்றன. உங்கள் காலை உணவுடன் குடிக்க சிறந்தது டீயா. காபியா என்று அறிந்து கொள்ளலாம்.
    காலை எழுந்தவுடன் குடிப்பதற்கு டீ நல்லதா? காபி நல்லதா? என்ற கேள்வு காலம் காலமாக ஏன் டீ காபி கண்டுபிடிப்பதற்கு முன் இருந்திருக்கலாம். இந்த கஃபைன் நிறைந்த இரண்டு பானங்களும் உலக மக்கள் அனைவராலும் காலையில் குடிப்பதற்கு சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சில மக்கள் டீயை பாலுடனும் அல்லது சுடு தண்ணிரில் தேன் மற்றும் லெமன் சேர்த்து பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று காபியையும் தங்களுக்கு புத்துணர்வு அளிக்கக்கூடிய வகையில் அதைக் குடிக்கின்றனர். இரண்டுமே காலை சோர்வைப் போக்கி புத்துணர்வை அளிக்கக்கூடியது.

    ஆனாலும் மக்களிடையே உள்ள ஒரு கேள்வி. இரண்டில் எது சிறந்தது. அதிகப்படியான கஃபைன் உடலுக்குத் தீங்கானது என்று நாம் அனைவருமே அறிவோம். அளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சு தானே. அதிக அளவில் உடலில் கஃபைன் சேரும்போது நரம்பு தளர்ச்சி கவலை எரிச்சல் வயிறு மற்றும் வாயு பிரச்சனை சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனாலேயே கஃபைன் சார்ந்த பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாதென்று எக்ஸ்பர்ட்டுகள் எச்சரிப்பார்கள். அமெரிக்க அரசு உணவு ஆராய்ச்சி மையம் 4-5 ஸ்மால் கப் காபியில் 400மிகி அளவு மட்டுமே கஃபைன் இருக்க வேண்டும் கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. இந்த டீ-காபி இரண்டில் எது சிறந்தது என்று பார்ப்போம்.

    டீ-காபி இரண்டும் சேர்ந்து பல நன்மைகளையும் சில தீமைகளையும் நமக்குத் தருகின்றன. பொதுவாக டீயோ காபியோ பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதே நல்லது. அதையும் மீறி பால் சர்க்கரைத் தேவைப்பட்டால் அதை அளவோடு குடிப்பதே நல்லது. ப்ளாக் காபி ப்ளாக் டீயை விட அதிகமான கஃபைன் கொண்டது. ஒரு கப் ப்ளாக் டீயில் 55மிகி கஃபைன் இருந்தால் ஒரு கப் ப்ளாக் காபியில் 100மிகி அளவுக்கு கஃபைன் உள்ளது. ஒருவேளை உங்களுக்கு கஃபைனால் கேஸ் ப்ராப்ளம் அல்லது அலர்ஜி இருக்குமான ப்ளாக் காபியை விட ப்ளாக் டீக்கு மாறுவது உங்களுக்கு நல்லது.

    ப்ளாக் காபி இரண்டு விதமான பிரச்சனைகளை சரிசெய்வதாக ஆராய்ச்சி ஒன்று விளக்குகிறது. அவை டைப் 2 டயாபடீக்ஸ் எனெர்ஜி மற்றும் உடல் வலிமையை பெருக்கவும் உதவுகிறது. அல்ஸைமர் மற்றும் டெமின்டியாவின் பாதிப்பில் இருந்தும் காக்கிறது. டீயை விட ப்ளாக் காபி வளர்சிதை மாற்றத்தை பெருக்குகிறது. டீ இப்பொழுது பலவகையான ஃப்ளேவர்களில் கிடைக்கிறது. க்ரீன் டீ ப்ளாக் டீ வொயிட் டீ மற்றும் ஊலாங். டீயில் நிறிய ரிச் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. இது இதயத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. இந்த இரண்டு கஃபைன் நிறந்த பானங்களில் உங்களுக்கு சரியானது எது என்று தேர்ந்தெடுத்து குடியுங்கள்.
     
    அதிகப்படியான வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை நீக்க இன்ஸ்டன்ட் எனர்ஜி வேண்டும் என்றால் காபி நல்லது. ஆனால் அதீத கஃபைனால் பாதிப்பு ஏற்படாமல் உடல் சோர்வை போக்க டீ ஒரு சிறந்த் தீர்வு. ஹெர்பல் டீ ஒரு சிறந்த் கஃபைன் ப்ரீ காலை பானம். முடிந்த அளவு காபி டீயில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொளவதை தவிருங்கள். ஆரோக்கியமான உடலைப் பெறுங்கள். 
    திருமணத்தின் போது ஆண்களிடத்திலிருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பது தொடர்பான நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ள ருசிகரமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    திருமண உறவில் ஆண்கள் தங்களை சமமாக நடத்த வேண்டும் என்று அதிகமான பெண்கள் எதிர்பார்ப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.  திருமணத்தின் போது ஆண்களிடத்திலிருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பது தொடர்பான ஆய்வை பாரத் மேட்டரி மோனி நடத்தியுள்ளது.

    இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் பின்வருமாறு.

    44 சதவிகித பெண்கள் தங்களின் வாழ்க்கை துணை தங்களை சமமாக நடத்த வேண்டும் என்றும் நன்றாக வேலையில் இருக்கு வேண்டுமென்றும் எதிர் பார்க்கின்றனர்.

    90 சதவிகிதமான பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு எல்லா வேலைகளையும் சமமாக பிரித்து செய்ய வேண்டும் என்று எதிர்ப் பார்க்கின்றனர். அதில் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பில் ஆண்களின் சம பங்கு வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    86% சதவிகித பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணை தனது பெற்றோரை அவரின் பெற்றோர் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    64 சதவிகித பெண்கள் தங்களது மத நம்பிக்கைகளை திருமணத்திற்கு பிறகு விட்டு கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

    35 சதவிகிதம் பெண்கள் தங்களது தனித்தன்மை வாய்ந்த திறமையை திருமணத்திற்கு பிறகு விட்டுக் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

    68 சதவிகித பெண்கள், கணவர்கள் தங்களை தினமும் அலுவகலகத்திற்கு கொண்டு விட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

    மேலும் 54 சதவிகித பெண்கள் ஷாப்பிங் செல்லும் போது, கணவரும் உடன் வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை .

    இந்த ஆய்வு தொடர்பாக பேசிய பாரத் மேட்டரி மோனியின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த ஆய்வு மூலம் இளம் பெண்கள் எதை எதிர்பார்க்கின்றனர் என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு எங்களால் செயல்பட முடியும்’’,என்று தெரிவித்தார். 
    பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது இருக்கத்தான் செய்யும். அந்த பயத்தை நிரந்தரமாக அப்படியே விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை.
    பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும்.  அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.

    குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும்.  எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!

    1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது.  அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம். ஏனெனில் குழந்தைகள் உலகத்தை பெற்றோர்கள் மூலமாக காண்கின்றனர். அவர்களின் வாழ்வானது புதிய படைப்பாக இந்த உலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

    அதனால் அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள் பார்ப்பது, கேட்பது போன்றவை களை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும் பாதிப்பிற் குள்ளாகி விடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

    2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

    3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.

    4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.

    5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக் கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும்.  அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர் மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.

    6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

    7. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு எதிர் கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும் மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.

    8. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும்.
    சியா விதையும், இளநீரும் கலந்து உட்கொள்ளும் பொழுது உடல் சிறந்த ஊட்டச்சத்தினை பெறுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. சிறு நீரக கல் உருவாவதை தடுக்கின்றது.
    இளநீருக்கு எண்ணற்ற நல்ல குணங்கள் உண்டு. இயற்கையின் ஆரோக்கிய உணவு இது. இதனைப் போன்று சியா விதைகளும். இந்த சிறிய விதையில் நார்சத்து, புரதம், நோய் எதிர்ப்பு சக்திகள் கொட்டிக் குவிந்துள்ளது. சியா விதைகள் உடல் வீக்கத்தினைக் குறைக்கும். சர்க்கரை அளவினைக் கட்டுப்படுத்தும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கும் தன்மைகள் உண்டு.

    தேவையான பொருட்கள்

    இளநீர் - 1 கப்
    சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சிறிதளவு

    இளநீர் சியா விதை லெமன் மிக்ஸ்டு ஜூஸ்

    செய்முறை

    அனைத்தினையும் ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

    இதனை 10-15 நிமிடங்கள் கழித்து நன்கு கலந்து குடிக்கவும்.

    சூப்பரான இளநீர் சியா விதை லெமன் மிக்ஸ்டு ஜூஸ் ரெடி.

    இதனை தொடர்ந்து தினமும் (அ) வாரம் மூன்று முறை குடிக்கலாம். ஆனால் மிக அதிக அளவில் உட்கொண்டால் வயிறு கோளாறு ஏற்படும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. இன்று காபி பொடியை வைத்து எப்படி சருமத்தை அழகாக்கலாம் என்று பார்க்கலாம்.
    காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. இன்று காபி பொடியை வைத்து எப்படி சருமத்தை அழகாக்கலாம் என்று பார்க்கலாம்.

    காபி தூள் 2 டீஸ்பூன் , ஏலக்காய் பொடி 2 ஸ்பூன் , தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.

    2 டீஸ்பூன் காபி பொடியில் 1ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறையாக செய்து பாருங்கள். நீங்களே ஆச்சரிய படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.

    கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    4 ஸ்பூன் காபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை , கால்கள் , கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

     4 ஸ்பூன் காபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால் , கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

    ×