என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி டவுனில் அமைந்துள்ளது, பாதாமி குகைக் கோவில். கர்நாடகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று.
    பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி டவுனில் அமைந்துள்ளது, பாதாமி குகைக் கோவில். கர்நாடகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று.

    முற்காலத்தில் பாதாமியை தலை நகராகக் கொண்டுதான், சாளுக்கியர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். இங்கு பாறைகளை குடைந்து 4 கோவில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் குகையில் சிவனுக்கும், 2 மற்றும் 3-வது குகைகளில் விஷ்ணுவுக்கும், 4-வது குகையில் ஜெயின் தீர்த்தங்கரருக்கும் கோவில்கள் உள்ளன.

    6 முதல் 8-ம் நூற்றாண்டுக்குள் அந்த கோவில்கள் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டவை ஆகும். பெங்களூருவில் இருந்து 512 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமையப்பெற்றுள்ளது.
    விஜயநகர பேரரசின் சிறந்த மன்னராக விளங்கிய கிருஷ்ணதேவராயரின் சமாதி, 64 தூண்கள் கொண்டு இந்த ஆற்றின் நடுவில் நிறுவப்பட்டு உள்ளது.
    ஜெயினர்களின் புனிதத் தலமாக கருதப்படும் ‘கொபான’ தான் கொப்பல் மாவட்டமாக அழைக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து 357 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த மாவட்டம். இங்கு துங்கபத்ரா ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்தது ‘ஆனேகுந்தி.’ இது அசோகரின் தலைநகராக இருந்திருக்கிறது.

    இது ராமாயண காலத்தில் வாழ்ந்த வாலியின் தலைநகரமான ‘கிஷ்கிந்தா’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு துங்கபத்ரா ஆற்றின் நடுவே இருக்கும் நவபிருந்தாவனத்தை படகில் சென்று ரசிக்கலாம். மேலும் விஜயநகர பேரரசின் சிறந்த மன்னராக விளங்கிய கிருஷ்ணதேவராயரின் சமாதி, 64 தூண்கள் கொண்டு இந்த ஆற்றின் நடுவில் நிறுவப்பட்டு உள்ளது.

    அத்துடன் இங்குள்ள இட்டகி மஹாதேவா கோவில், ஹூலிகம்மா கோவில், குக்கனூர் நவலிங்க கோவில் உள்ளிட்ட கோவில்கள் புராதன கட்டிடக்கலைகளை விளக்கும் நினைவுச் சின்னங்களாக உள்ளன.
    திட்டை ஆலயத்தின் மூலவராக, வசிஷ்ட முனிவர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார். இவரை சுற்றிலும் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன.
    தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித் திட்டை என்ற இடத்தில் அமைந்துள்ளது, வசிஷ்டேஸ்வரர் கோவில். இது குரு தலமாக விளங்குகிறது. இங்கு வசிஷ்டேஸ்வரர் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளிள் திருநாமம் உலகநாயகி அம்மை என்பதாகும். குருவிற்கு தனிச் சன்னிதி கொண்ட இந்த ஆலயத்தில், குருப்பெயர்ச்சி நேரத்தில் நடைபெறும் வழிபாடு பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புகளைப் பற்றி சிறு குறிப்பாக பார்க்கலாம்.

    * கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு காலங்களும் இணைந்தது ஒரு மகாயுகம் என்றும், ஒவ்வொரு மகா யுகத்தின் போதும் இந்த பிரபஞ்சம் பிரளயத்தின் காரணமாக அழிவை சந்தித்து மீண்டும் மறுஉருவாக்கம் பெறும் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அப்படி ஒரு மகா யுகத்தின் முடிவில் இந்த பூமி வெள்ளப்பெருக்கால் அழிவை சந்தித்தது. அப்போது பூமியில் ஒரு பகுதி மட்டும் வெள்ளத்தில் மூழ்காமல் திட்டாக நின்றது. இறைவனின் ஆசிகள் நிறைந்த அந்த திருத்தலமே, ‘தென்குடித் திட்டை’ என்கிறது இந்த ஆலய வரலாறு.

    * பரம்பொருள் ஒருவரே என்பது பரவலான கருத்து. அந்தப் பரம்பொருளான இறைவன், தன்னில் இருந்து ஒரு பகுதியை பிரித்து, உமாதேவியை படைத்தார். அந்த அன்னையை, தனக்கு நிகரான சக்தியாக உருவாக்கினார். இதை நினைவுறுத்தும் வகையில் திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகரான, உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னிதிக்கு மேல் விதானத்தில் 12 ராசிக்கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக் காரர்கள், தங்கள் ராசியின் கீழ் நின்று அம்பாளை வழிபட்டால், அவர்களின் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

    * பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்கும் வேளையில் பார்வதியுடன் இணைந்து செயல்பட்டார், ஈஸ்வரன். அண்டங்களைப் படைத்து அவற்றை பரிபாலனம் செய்ய மும்மூர்த்தி களான ருத்ரன், விஷ்ணு, பிரம்மன் ஆகியோர் படைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் பெரு வெள்ளத்தால் மூடி பேரிருள் நிறைந்திருந்த இந்த பிரபஞ்சத்தைப் பார்த்து பயந்தனர். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, திட்டை பகுதியை அடைந்து, இறைவனை வேண்டினர். சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். அவர் உடுக்கையில் இருந்து எழுந்த மந்திர ஒலிகள், மூவரின் மனதையும் அமைதிப்படுத்தியது. மேலும் அவர்களின் மாயையை நீக்கி, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்வதற்கு உரிய சக்தியையும், ஞானத்தையும் அருளினார். அது நிகழ்ந்த அதிசயத் தலமாக திட்டை உள்ளது.

    * தட்சனின் மகள்களான 27 நட்சத்திரப் பெண்களை, சந்திரன் மணந்தான். அவர்களில் ரோகிணி மீது மட்டும் சந்திரன் அதிக பாசம் காட்டியதால், தட்சனின் சாபத்திற்கு ஆளானான். அந்த சாபத்தால் தேயும் நிலைக்கு தள்ளப்பட்டான். இதையடுத்து திங்களூர் வந்த சந்திரன், அங்கு கயிலாசநாதரை வழிபட்டான். இதையடுத்து மூன்றாம் பிறையாக தன்னுடைய சிரசில் சந்திரனை ஈசன் அணிந்து கொண்டார். இதையடுத்து சந்திரனின் சாபம் நீங்கியது. இதற்காக திட்டையில் வந்து சந்திரன் நன்றிக் கடன் செலுத்துவதாக தல வரலாறு சொல்கிறது. அது எப்படி என்றால், திட்டை வசிஷ்டேஸ்வரர் சன்னிதியின் விமானத்தில் சந்திர காந்தக் கல்லாக சந்திரன் வீற்றிருக்கிறாராம். அதன் மூலமாக காற்றில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகை (24 நிமிடம்)க்கு ஒரு சொட்டு என்ற ரீதியில் இறைவனுக்கு தினமும் அபிஷேகம் செய்கிறாராம். இந்த அதிசயத்தை இந்த ஆலயத்தில் இன்றும் நாம் காண முடியும்.

    * சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரம், ‘நமசிவாய.’ அந்த எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம்தான், சிவலிங்க வழிபாடு. திட்டை ஆலயத்தின் மூலவராக, வசிஷ்ட முனிவர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார். இவரை சுற்றிலும் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. எனவே இது பஞ்ச லிங்க தலமாகவும் திகழ்கிறது.

    * பொதுவாக ஒரு ஆலயத்தில் மூலவராக இருக்கும் தெய்வம் மட்டுமே சிறப்புகள் நிறைந்து காணப்படும். ஆனால் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோவிலில், சிவன், பார்வதி, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய 6 தெய்வங்களும் தனித் தனியாக அற்புதங்கள் நிறைந்ததாகவும், வழிபாட்டுக்குரியதாகவும் விளங்குகின்றன. எனவே சிவன் மட்டுமல்லாது மற்றவர்களும் மூலவர்களைப் போலவே அருள்புரிகிறார்கள்.

    * ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட பைரவர், பல தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். அதன் ஒருபகுதியாக திட்டைக்கு வந்து தங்கியிருந்து வசிஷ்டேஸ்வரை வழிபட்டார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. மேலும் ‘இந்த ஆலயத்தின் கால பைரவராக எழுந்தருளி அருளும்படி’ பைரவருக்கு வசிஷ்டேஸ்வரர் அனுமதியளித்தார். எனவே இது காலபைரவ ஷேத்திரமாகவும் திகழ்கிறது. தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை வழிபட்டு வந்தால் சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

    * நவக்கிரகங்களில், சுப கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர், குரு பகவான். இவர் இந்த ஆலயத்தில் வசிஷ்டேஸ்வரருக்கும், உலகநாயகி அம்மைக்கும் நடுவில் சன்னிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இப்படி ராஜ குருவாக வீற்றிருக்கும் அவரை குருப்பெயர்ச்சி காலத்தில் லட்சார்ச்சனை செய்து வழிபட்டால், வேண்டிய நன்மைகள் கிடைக்கும்.
    துறவி அளித்த சாபத்தினைக் கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும், மரத்தின் அருகில் குவிந்தனர். துறவியின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர்.

    நாராயணரின் தீவிர பக்தராக இருந்தார், அந்த துறவி. அவர் பல தலங்களுக்குச் சென்று பெருமாளை தரிசித்து வந்து கொண்டிருந்தார். அவர் அப்படி செல்லும் இடங்களில் எல்லாம், அவரது தோற்றத்தைப் பார்த்து, அவரை அங்கிருந்த மக்கள் அனைவரும் வணங்கி ஆசி பெற்றுச் சென்றார்கள். அதில் அவருக்கு ஒரு பெருமிதமும் இருந்தது. ஒரு முறை அந்த துறவி, விவசாயம் செழித்திருந்த ஒரு ஊருக்குள் நுழைந்தார். அந்த வழியாகத்தான், அவர் அடுத்து வழிபட வேண்டிய திருத்தலத் திற்குச் செல்ல வேண்டியதிருந்தது.

    ஊருக்கு மத்தியில் இருந்து மரத்தின் அடியில் அமர்ந்தார், துறவி. ஆனால் கிராம மக்கள் அனைவரும் வேளாண் பணியில் பரபரப்பாக இருந்ததால், துறவியை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் துறவிக்கு கோபம் வந்துவிட்டது. அவர் உடனடியாக, “இந்த ஊரில் இன்னும் 50 ஆண்டு களுக்கு மழையே பெய்யாது. வானம் பொய்த்து விடும்” என்று சாபமிட்டார்.

    வைகுண்டத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, ‘தன்னுடைய பக்தன், மக்களின் நிலையைப் பற்றி சிந்திக்காமல் இப்படி ஒரு சாபத்தை அளித்துவிட்டானே. இவனுக்கு நாமும் துணை போக வேண்டியிருக்கிறதே’ என்று வருத்தப்பட்டவர், இருப்பினும் பக்தனுக்காக அதற்கு துணை போக முடிவு செய்தார். இதையடுத்து அவர் தன் கரத்தில் இருக்கும் சங்கை, தன் தலைக்கு கீழே வைத்து படுத்து விட்டார். விஷ்ணுவின் சங்குக்கும், மழைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழலாம். வருண பகவான் மழை கடவுளாக இருந்தாலும், திருமால் சங்கு ஊதி கொடுக்கும் இசைவின்படியே அவர் மழையை பெய்விப்பதாக சொல்லப்படுகிறது.

    துறவி அளித்த சாபத்தினைக் கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும், மரத்தின் அருகில் குவிந்தனர். துறவியின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். ஆனால் முனிவரோ, “சாபத்திற்கு விமோசனம் கிடையாது” என்று கூறிவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல், துறவியின் காலடியிலேயே ஊர் மக்கள் அனைவரும் அமர்ந்துவிட்டனர். இன்னும் 50 வருடத்திற்கு மழை பெய்யாது என்றால், விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஊர் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது. அனைவரும் கவலையோடு துறவியை சாந்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றன. ஒரு வாரம் கடந்து விட்டது.

    அதே நேரம் ஊரில் இருந்த ஒரு விவசாயி மட்டும், தினமும் தன்னுடைய நிலத்திற்குச் சென்று, நிலத்தை உழுது வேளாண் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை அழைத்து, “ஏனப்பா.. துறவி அளித்த சாபத்தால், நம்முடைய ஊரில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு மழை பெய்யாதே.. நீ ஏன் வீணாக உழவு செய்து கொண்டிருக் கிறாய்?” என்று கேட்டனர்.

    அதற்கு அந்த விவசாயி, “50 வருடங்கள் மழை பெய்யாது என்று எனக்கும் தெரியும். ஆனால் உங்களைப் போலவே, நானும் இப்படி உட்கார்ந்து விட்டால், இன்னும் 50 வருடங்களுக்குப் பிறகு, எப்படி உழவு செய்வது என்பதே எனக்கு மறந்து போய்விடும். அதனால்தான் தினமும் ஒரு முறை நிலத்தை உழுது கொண்டிருக்கிறேன்” என்றான். அந்த பதிலைக்கேட்ட ஊர் மக்கள் அனைவரும் வாயடைத்துப் போய்விட்டனர். அந்த விவசாயி சொன்னதில் ஓர் உண்மை இருப்பதை அனைவரும் உணர்ந்தனர். மரத்தடியில் இருந்த துறவியும் கூட அந்த விவசாயியின் வார்த்தையைக் கேட்டு மனம் உருகிப்போனார். அவர் தன்னுடைய சாபத்தை திரும்பப் பெற முன்வந்தார்.

    இந்த நிலையில் அந்த விவசாயி சொன்னதை, திருப்பாற்கடலில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவுக்கு ஓர் அச்சம் ஏற்பட்டுவிட்டது. ‘50 வருடமாக சங்கை ஊதாமல் இருந்தால், எப்படி ஊதுவது என்பது நமக்கு மறந்து போய்விடுமோ’ என்று நினைத்தவர், சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். இது ஒன்று போதாதா? அடுத்த நொடியே அந்த ஊரில் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது.
    நம்மை அறியாமல் நம்மை துஷ்ட சக்திகள் பிடிக்கின்றன. அத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் முனீஸ்வரரை நாம் வழிபடுவதால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
    முற்காலத்தில் இந்தியாவில் கிராமங்களில் அதிகமாக இருந்தன அந்த கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான குல தெய்வத்தை வழிபடும் வழக்கம் இருந்தது அதில் தங்களின் குடும்ப கஷ்டங்கள் தீரும் தங்களுக்கு சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கவும் அதிகம் மக்களால் வழிபடப்படும் ஒரு தெய்வமாக முனீஸ்வரன் இருந்து வருகிறார். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த முனீஸ்வரனின் இந்த மூல மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    முனீஸ்வரன் மூல மந்திரம்

    ஓம் ஹம் ஜடா மகுடதராய
    உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய
    சத்ரு சம்ஹாரனாய ஜடா
    முனீஸ்வராய நமஹ

    தமிழக மக்கள் பெரும்பாலானோரின் காவல் தெய்வமாக இருக்கும் முனீஸ்வரருக்குரிய மூல மந்திரம் இது. இந்த துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சென்று முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும். வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். உடல் நலக்குறைவு, மனகுழப்ப நிலை நீங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். ஊரில் முனீஸ்வரர் கோயில் இல்லாதவர்கள் வீட்டிலேயே முனீஸ்வரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடலாம்.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் 13-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை 3 நாட்கள் ஷாத்ஷாத்கார வைபவ உற்சவம் நடக்க உள்ளது.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் 13-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை 3 நாட்கள் ஷாத்ஷாத்கார வைபவ உற்சவம் நடக்க உள்ளது. அதையொட்டி நேற்று அதிகாலை சாமிக்கு தோமால சேவை, கொலு ஆகியவை நடந்தன. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூைஜ பொருட்கள் ஆகியவற்றை ஊழியர்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் நாமகொம்பு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பச்சைகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமப்பூ மற்றும் கிச்சிலிகட்டா ஆகிய சுகந்த பொருட்கள், திரவியங்களால் கோவில் முழுவதும் பூசி, தெளிக்கப்பட்டது. மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது, பகல் 11.45 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சியில் இணை அதிகாரி சாந்தி, கண்காணிப்பாளர் ரமணய்யா, அர்ச்சகர்கள் நாராயணாச்சார்யா, பார்த்தசாரதி, அர்ஜித சேவை இன்ஸ்பெக்டர் யோகானந்தரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
    மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதையொட்டி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் சேலம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்தநிலையில் ஆனி மாத அமாவாசையையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக கோவில் செயல் அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.
    தமிழக அரசு ஊரடங்கு தளர்வை படிப்படியாக குறைத்ததை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.
    ராமேசுவரம்

    தமிழகத்தில் தொற்று நோய் பரவல் குறைந்ததை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு தளர்வை படிப்படியாக குறைத்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் திறக்க உத்தரவிட்டது.

    அதன்படி பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். ஆனால் அங்குள்ள 22 தீர்த்தங்கள் திறக்கப்படவில்லை. கொரோனா பரவலை கருத்தில்கொண்டு அக்னி தீர்த்தக் கடலிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனத்தில் வந்தனர். இதனால் ரெயில், பஸ் நிலையம், கோவில் பகுதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    இவர்கள் தடையை மீறி ராமேசுவரம்
    அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். அதன்பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் ராமநாதசுவாமி - பர்வத வர்த்தினியை தரிசனம் செய்தனர்.

    கொரோனா பரவும் ஆபத்து இருப்பதால் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தத நிலையில் அதனையும் மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் குவிந்து நீராடியதால் அதிகமாக கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் கடந்த 5-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை நீக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
    விழுப்புரம் :

    தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் கடந்த 5-ந்தேதி முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

    அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் கடந்த 2 மாதமாக 2-ம்அலை தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்திருந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் தரிசனத்திற்கான தடை நீக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று காலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை வரை தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அதேபோல் அன்று இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிகளுக்குட்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அமாவாசை நாள் என்பதால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இன்று அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கமான தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்.
    கோவில் பெயர்   : அருள்மிகு  பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்

    சிவனின் பெயர்   : பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர்

    அம்மனின் பெயர் :  மரகதாம்பிகை

    தல விருட்சம் :  வில்வம்

    கோவில் திறக்கும் :காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    முகவரி :  அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில்,
    சுருட்டப்பள்ளி, சித்தூர்-517 589, ஆந்திரா. Ph:  08576-278 599.

    கோவில் சிறப்பு :

    * 1000-3000 வருடங்களுக்கு முன் பழமையானது.

    * எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்

    * தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

    * பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.
    எது ஒன்றுடன் பக்தியை இணைத்தாலும், அது புனிதத்துவம் பெற்றதாகவும், சிறப்புக் குரியதாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில் பக்தியால் சிறப்பு பெறும் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    எது ஒன்றுடன் பக்தியை இணைத்தாலும், அது புனிதத்துவம் பெற்றதாகவும், சிறப்புக் குரியதாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில் பக்தியால் சிறப்பு பெறும் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    பக்தியோடு இறைவனுக்கு சாதத்தை படைத்து, அதை பிறருக்கு கொடுக்கும்போது பிரசாதமாக மாறிவிடுகிறது.

    பக்தியோடு பட்டினி கிடக்கும் போது, அது விரதம் என்ற பெயரைப் பெறுகிறது.

    தண்ணீரோடு பக்தியை சேர்க்கும் பொழுது, அது புனித தீர்த்தமாகி விடுகிறது.

    பக்தியின் நிமித்தமாக ஆலயங்களுக்கு பயணப்படும்போது, அது யாத்திரையாக மாறுகிறது.

    இறைவனைப் பற்றி பக்தியோடு இசைத்துப் பாடும்போது, அது கீர்த்தனை ஆகிறது.

    வீட்டில் உள்ள அனைவருமே பக்தியில் திளைக்கும்போது, அது கோவிலாகிறது.

    ஒருவருக்காக ஒரு செயலை செய்யும்போது அதில் பக்தி கலந்தால், அந்த செயல் சேவையாகிறது.

    நமது கடமைகளை பக்தியோடு செய்யும் போது, அது கர்மவினைப் பயனாக செயல்படுகிறது.

    பிரம்மச்சரியத்தோடு பக்தி இணையும்போது, அங்கே துறவறம் பிறக்கிறது.

    இல்லறத்துடன் பக்தி சேரும் போது, அங்கே ஆன்மிகம் நிலைக்கிறது.

    ஒருவனுக்குள் பக்தி நுழையும்போது, அவன் புனிதனாகிறான்.

    அந்த பக்தி அவன் மனம் முழுவதையும் ஆக்கிரமிக்கும்போது, அவன் ஞானியாகிறான்.
    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மலைப்பகுதியில் அமைந்ததால், திருமலை நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.

    இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் யோகேஸ் சிங், களக்காடு துணை இயக்குனர் அன்பு உத்தரவின்பேரில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ அனுமதி கிடையாது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
    ×