என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 8-ம் நாளான நேற்று தங்கக்குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.
இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளில் உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது.
விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
2-ம் நாளான 13-ம் தேதி அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
3-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் 7-ம் நாளான நேற்று பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று தங்கக்குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும். சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
9-ம் நாளான இன்று இந்திர விமானம், 10-ம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.

ஆஷாடநவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், கொரோனா பரவல் காரணமாக கோவிலின் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
3-வது நாளான 11-ம்தேதி வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4-ம் நாளான 12-ம்தேதி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4-ம் நாளான 13-ம் தேதி வராஹி அம்மன் தேங்காய்த்துருவல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
5-ம் நாளான 14-ம்தேதி மாலை மாதுளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6-ம் நாளான 15-ம் தேதி வராஹி அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டது.
7-ம் நாளான 16-ம் தேதி வராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது.
9-ம் நாளான 17-ம் தேதி காய்கறி அலங்காரத்தில் வராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்றுடன் ஆஷாட நவராத்திரி விழா நிறைவடைந்தது. ஆஷாடநவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொரோனா பரவல் காரணமாக கோவிலின் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
பேரையூர்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது.
மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கோவில் அமைந்துள்ள பகுதி வனத்துறைக்குட்பட்டதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் நாளை (21-ந்தேதி) ஆடி பிரதோஷம் மற்றும் 23-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 24-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏற வரும் பக்தர்கள் அடிவாரத்தில் கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன. பீடி, சிகரெட் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
மலை பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான், மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்பவன்”. (திருக்குர் ஆன் 67:2)
உலக வாழ்வை ‘சோதனைக்களம்’ என்கிறது இஸ்லாம். இறைநம்பிக்கை, இறைவனுக்கு அடிபணிதல், இறைவன் கூறியபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை சோதிக்கும் இடமாக உலகம் படைக்கப்பட்டுள்ளது. இதைப் பல இடங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான், மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்பவன்”. (திருக்குர் ஆன் 67:2)
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் பெருநாளை கொண்டாட்டம் என்ற பார்வையில் இலகுவாகக் கடந்து விட இயலாது. அது, இறைவனின் கட்டளையை ஏற்று, பிரியமான மகனைப் பலி கொடுக்க துணிந்த ஒரு குடும்பத்தாரின் அர்ப்பணிப்பு மற்றும் இறை நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.
இறைநம்பிக்கையின் ஆத்மார்த்தமான பொருள் என்ன? என்பதை உலகத்திற்கு உணர்த்த தந்தை, தாய் மற்றும் மகனை இறைவன் சோதனைக்கு உள்ளாக்கினான். இந்த சோதனையில் அவர்கள் பெற்ற வெற்றிகளை ஏற்றுக்கொண்டு, அந்த செயலை இறை வணக்கமாக மாற்றியதன் நிகழ்ச்சி தான் தியாகத் திருநாளாக (பக்ரீத் பண்டிகையாக) பார்க்கப்படுகிறது.
இறைவனின் தூதுவர்களில் ஒருவர் இப்ராகிம் (அலை). அவருக்கு திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்டது. இப்ராகிம் நபியின் குடும்பத்தினரைச் சோதிக்க இறைவன் விரும்பினான்.
இஸ்மாயீல் பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, இப்ராகிம் அவர்களுக்குக் கனவில் கட்டளையிட்டான் இறைவன். தன் பாசம் முழுக்க கொட்டி வளர்க்கும் மகனை இறைவன் பலியிட கூறுகிறானே! என்று கிஞ்சிற்றும் யோசிக்காமல். கண்ட கனவை மகன் இஸ்மாயீலிடம் தெரிவித்தார் இப்ராகிம் நபி.
இது இறைவனின் கட்டளை என்பதால் தன்னை பலியிட முழுமனதுடன் அனுமதி கொடுத்தார் மகன் இஸ்மாயீல். இறைவனின் கட்டளையை நிறைவேற்றத் துணிந்த நேரத்தில், இப்ராகிம் நபியின் இறையச்சம், இறைவனுக்கு அடிபணியும் தன்மையைக் கண்டு வியந்து இறைவன் தடுத்து நிறுத்திய சம்பவத்தை இவ்வாறு திருக்குர்ஆன் காட்சிப்படுத்துகிறது.
“பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: ‘என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக’. (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்”. (திருக்குர்ஆன் 37:102)
மனித ரத்தமோ, பிராணிகளின் ரத்தமோ இறைவன் விரும்பவில்லை. முழுமையான இறையச்சத்தை சோதிப்பதற்காக இந்த நிகழ்வை நடத்திக் காட்டினான் இறைவன்.
“(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக” (திருக்குர்ஆன் 22:37)
தங்களை இறைவனுக்காக முற்றிலும் அர்ப்பணித்த இப்ராகிம் நபி, அவரது மனைவி மற்றும் மகன் இஸ்மாயீல் நபியின் பொறுமை, இறைவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்க முன்வருதலை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென அல்லாஹ் விரும்பினான். இதனால் தான், இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையின் போது குர்பானி கொடுக்க வேண்டும் என்பதன் மூலம் தன் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினான் இறைவன்.
சோதனைக் களமான உலகில் மனிதகுல எதிரியான ஷைத்தானின் பிடியில் சிக்கிப் போகாமல் இறைவனின் பொருத்ததைப் பெற இறைநம்பிக்கை, இறைபக்தியின் நிழல்களில் நம் வாழ்வை அமைத்துக்கொண்டு வெற்றிபெறுவோம்.
- ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.

அழகர்கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிபெரு திருவிழாவின் 4-ம் நாளான நேற்று கருட வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிப் பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
கொரோனா பரவல் காரணமாக ஆடி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் அழகர் கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்களின்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
11 நாட்கள் நடைபெறும் ஆடி பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கொடியேற்றம் 16-ம்தேதி நடந்தது. கொரோனா பரவல் காரணமாக காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அழகர் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிபெரு திருவிழாவின் 4-ம் நாளான நேற்று கருட வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமியை வழிபாடு செய்தனர்.

கொரோனா தாக்கத்தின் 2-ம் அலை தீவிரம் காரணமாக சபரிமலை கோவிலில் 2 மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பக்தர்களும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் கொரோனா தாக்கத்தின் 2-ம் அலை தீவிரம் காரணமாக சபரிமலை கோவிலில் 2 மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அதே சமயத்தில் பக்தர்கள் இன்றி பூஜை மட்டும் நடந்து வந்தது.
இந்த நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 16-ம்தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 18-ம் தேதி முதல் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் நெய்யபிஷேகம், உஷபூஜை, களபாபிஷேகம் நடந்தது.
நேற்று கோவிலில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை நடந்தது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அம்பாளை வழிபாடு செய்வதில், ஆடி மாதம் முக்கியமானதாக இருக்கிறது. ஆடி வெள்ளி வழிபாடு போலவே, ஆடி செவ்வாய்க்கிழமையும் சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.
அம்பாளை வழிபாடு செய்வதில், ஆடி மாதம் முக்கியமானதாக இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறை வேறும். ஆடி வெள்ளி வழிபாடு போலவே, ஆடி செவ்வாய்க்கிழமையும் சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில், அம்பாளை வழிபட்டு ‘மங்கல கவுரி விரதம்’ கடைப்பிடித்து வந்தால், நற்பலன் களைப் பெறலாம்.
ஆடி செவ்வாய் அன்று அன்னதானம் செய்வது, மற்ற தினங்களில் அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களைப் பெற்றுத் தரும்.
பெண்கள் அனைவரும் ஆடி செவ்வாய்க்கிழமைகளில், எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி நீராடி விரதம் மேற்கொண்டு அம்மனை வழிபட்டால், மாங்கல்ய பலம் கூடும்.
ராகுவின் அதிதேவதையாக காளிதேவி இருக்கிறாள். எனவே செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்றவற்றால் திருமணத் தடை ஏற்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், செவ்வாய்க்கிழமையில் வரும் ராகு கால பூஜையில் கலந்துகொள்ளலாம்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனை மட்டுமின்றி, முருகப்பெரு மானையும் வழிபடுவதற்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருந்து தீபம் ஏற்றி, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
ஆடி மாத செவ்வாய் அன்று அவ்வையார் விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்வையாரை நினைத்து விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். பச்சரிசி மாவில், வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரித்து, அதை அவ்வையாருக்கு நைவேத்தியமாக படைப்பார்கள். இரவு நேரத்தில்தான் அவ்வையார் விரதம் இருப்பார்கள். இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருக்கும் போது, நைவேத்தியமாக படைக்கப்பட்ட கொழுக்கட்டையை உண்பார்கள். இந்த விரதத்தை மூத்த சுமங்கலி பெண்களின் வழிகாட்டுதல்படி, இளம் பெண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். இதில் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை. ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் அவ்வை யாருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.

உலக வாழ்வில் இரக்கமில்லாமல் வாழ்ந்த செல்வர், மரணத்திற்குப்பின் தம் குற்றத்தை உணர்ந்தாலும், அவர் மன்னிக்கப்படவில்லை.
செல்வம் சேர்ப்பதையே நோக்கமாக வைத்திருந்தவர்களுக்கு, இயேசு ஒரு உவமை வழியே போதித்தார். அதுவே செல்வரும், லாசரும் உவமை. அதன் கருத்துக்களை உள்வாங்கி கொள்வோம். மக்கள் கூட்டத்தின் முன்பு இயேசு கூறியதாவது...
செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். லாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
செல்வர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும், அவரது மடியில் லாசரையும் கண்டார். அவர், “தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். லாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்” என்று உரக்கக் கூறினார்.
அதற்கு ஆபிரகாம், “மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய். அதே வேளையில் லாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது” என்றார்.
அவர், “அப்படியானால் தந்தையே, லாசரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே” என்றார். அதற்கு ஆபிரகாம், “மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்” என்றார்.
அவர், “அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்” என்றார். ஆபிரகாம், “அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்” என்றார்.
பணத்தை சேர்ப்பதோடு, கொஞ்சம் புண்ணியத்தை சேர்க்க வலியுறுத்துகிறது, ‘செல்வரும் லாசரும்’ உவமை. செல்வரிடம் பொருள் இருந்தது, ஆனால் அருள் இல்லை. லாசரிடம் பொருள் இல்லை. பொறுமை இருந்தது. இதைதான் இயேசு ‘‘செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’’ என்றார்.
உலகில் வாழும் மனிதர் அனைவரும் சரிநிகர் சமமாகப் பிறப்பதில்லை. நாம் இறைவனிடமிருந்து பெற்ற செல்வங்களை, இல்லாதவர்களுடன் பகிர்ந்தளித்து உதவுவதே வாழ்வின் நோக்கம் என்பதை ஆபிரகாம் வாயிலாக இயேசு அறிவிக்கிறார். தம்மிடம் தேவைக்கு மிஞ்சிய உணவு இருந்தபோதும், கண்ணெதிரில் கிடந்த ஏழை லாசருக்குச் செல்வர் இரங்கவில்லை. மரணத்திற்குப்பின் இப்போது அதை அவர் உணர்ந்தார். எனவே, மேற்கொண்டு அவர் ஆபிரகாமிடம் வாக்குவாதம் செய்யவில்லை. உலக வாழ்வில் இரக்கமில்லாமல் வாழ்ந்த செல்வர், மரணத்திற்குப்பின் தம் குற்றத்தை உணர்ந்தாலும், அவர் மன்னிக்கப்படவில்லை. எனவே அது செல்வரின் உள்ளத்தில் நிலைத்திருந்து, என்றும் அவரை வதைத்துக்கொண்டே இருக்கிறது.

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்த்து, முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் சுயம்பு புற்று வடிவிலானது ஆகும். கேரள பெண் பக்தர்கள் இருமுடிக் கட்டி இங்கு வந்து அம்மனை வழி படுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
கடந்த மாதம் 2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோவிலின் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலில் தேவ பிரசன்னம் பார்த்து, முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
சுசீந்திரம் பிரதீபன் நம்பூதிரி வாஸ்து பார்த்தார். கோவில் கருவறை கட்டிடத்தின் நீளம், அகலம் அளவுகள் அளந்து குறிக்கப்பட்டது. இதில் கோவில் தந்திரி சங்கர நாராயணன் அய்யர், திருவனந்தபுரம் ஜோதிடர் ராஜேஷ், கோவில் ஸ்ரீகாரியம் மோகன்குமார், இந்து முன்னணி, இந்து கோவில் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாஸ்து அறிக்கை ஒரு வாரத்திற்குள் சுசீந்திரம் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என வாஸ்து நிபுணர் பிரதீபன் நம்பூதிரி கூறினார்.
வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆரூடம் பார்க்கப்படும். ஆரூட அறிக்கை அடிப்படையில் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் நடைபெறும்.

ஜூலை மாதம் 20-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 26-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
20-ம் தேதி செவ்வாய் கிழமை :
* சர்வ ஏகாதசி
* மதுரை மீனாட் சட்டத்தேர் புஷ்பக விமானத்தில் பவனி
* நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி
* சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி
21-ம் தேதி புதன் கிழமை :
* பிரதோஷம்
* பக்ரீத் பண்டிகை
* சங்கரன் கோவில் கோமதியம்மன் ரதோற்சவம்
* சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை
22-ம் தேதி வியாழக்கிழமை :
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம்- கார்த்திகை, ரோகிணி
23-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* பெர்ணமி
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசு காட்சி
* படைவீடு ரேணுகாமபாள் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீருஷம்
24-ம் தேதி சனிக்கிழமை :
* திருவோண விரதம்
* கள்ளழகர், வடமதுரை சௌந்திரராஜ பெருமாள் தலங்களில் ரதோற்சவம்
* சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை
25-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* திருமலிருஞ்சோலை கள்ளழகர் ஸப்தாவரணம், சாத்தூர் வெங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு
* சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
26-ம் தேதி திங்கள் கிழமை :
* கரிநாள்
* செவ்வாய்பேட்டை மாரியம்மன் உற்சவாரம்பம்
* வடமதுரை சௌந்திரராஜர் வசந்த உற்சவம், முத்து பல்லக்கில் பவனி
* சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய புஷ்ப மகா புஷ்ப யாகம் வருகிற 24-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கனகாம்பரம் மற்றும் கோடி மல்லி பூக்களால் மகா புஷ்ப யாகம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மகா புஷ்ப யாகம் வருகிற 24-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
தினமும் ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாவதனம், ரக்ஷா பந்தனம், அனுஜ்னா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 3-வது நாளான நேற்று காலையில் சுப்ரபாதம், சஹஸ்ரநாம அர்ச்சனை, குங்கும அர்ச்சனை, ராமாயணம், பாகவதம், மகாபாரத பாரயணம், தர்ப்பணம் மற்றும் புஷ்ப யாகம் நடந்தது.
நிகழ்ச்சியில் துணை செயல் அலுவலர் கஸ்தூரி பாய், உதவி செயல் அலுவலர் பிரபாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணா ரெட்டி, சேஷகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த 5-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
எனினும் கோவில் கடல், நாழிக்கிணறு பகுதியில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 15-ந்தேதி சஷ்டி திதி, 16-ந்தேதி வெள்ளிக்கிழமை, நேற்று முன்தினம் ஆடி மாத பிறப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.