என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருட வாகனத்தில் எழுந்தருளி சுந்தரராஜப் பெருமாள்
    X
    கருட வாகனத்தில் எழுந்தருளி சுந்தரராஜப் பெருமாள்

    ஆடிபெரு திருவிழா: கருட வாகனத்தில் எழுந்தருளி சுந்தரராஜப் பெருமாள்

    அழகர்கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிபெரு திருவிழாவின் 4-ம் நாளான நேற்று கருட வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

    ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிப் பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    கொரோனா பரவல் காரணமாக ஆடி பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள்  அழகர் கோவில்  உள் பிரகாரத்தில் பக்தர்களின்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    11 நாட்கள் நடைபெறும் ஆடி பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கொடியேற்றம் 16-ம்தேதி நடந்தது. கொரோனா பரவல் காரணமாக காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அழகர் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிபெரு திருவிழாவின் 4-ம் நாளான நேற்று கருட வாகனத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமியை வழிபாடு செய்தனர்.
    Next Story
    ×