என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரமும், உற்சவருக்கு கண்ணன் ஆண்டாளின் சிற்றில் சிதைத்தல் அலங்காரமும் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விழா நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நாளான இன்று சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 6.30 மணிக்கு 3-ம் திருப்பலியும் நடை பெற்றது.
காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு மண்ணின் மைந்தர்களின் 5-ம் திருப்பலி நடைபெற்றது. 10 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட பிஷப் நசரேன் தலைமையில் 6-ம் திருப்பலியும், காலை 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி தலைமையில் 7-ம் திருப்பலியும் நடைபெற்றது.
வழக்கமாக நடைபெறும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் பார்க்கும் வண்ணம் உள்ளூர் தொலைக் காட்சிகளிலும், யூ-டியூப் சேனல்கள் மூலமும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பார்த்தனர்.
பேராலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வராமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நந்தியம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமையில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
வருடத்தில் 365 நாட்களுமே நந்தியை விரதம் இருந்து வழிபட்டு வருவதில் தவறில்லை. ஆனால் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ள, தடைகள் அகல வேண்டுமானால் விரதம் இருந்து பிரதோஷ நாளில் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நந்தியம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமையில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
ஞாயிற்றுக்கிழமையில் இருந்து விரதம் இருந்து வழிபட்டால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.
திங்கட்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் மனச் சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகும்.
செவ்வாய்க்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் உணவுப் பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும், உதிரி வருமானங்களும் பெருகும்.
புதன்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் கல்வியில் விருத்தி உண்டாகும்.
வியாழக்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் படிப்பில் இருந்த தடை அகலும். புத்திரப்பேறு உருவாகும்.
வெள்ளிக்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் செல்வ விருத்தியும், செல்வாக்கும் அதிகரிக்கும்.
சனிக்கிழமை இருந்து விரதம் இருந்து வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

கோவில்களுக்கு பக்தர்கள் வருகை புரிவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில், தென்காசி மேல சங்கரன் கோவில் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இதேபோல் நாளை மட்டும் தென்காசி அரசூர் நங்கை அம்மன் கோவில், மேல முத்தாரம்மன் கோவில் ஆகியவற்றிலும், 8-ந் தேதி மட்டும் தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோவில், கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவில் மற்றும் சிவசைலம் சிவசைலநாதர் கோவிலிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கோவில்களில் நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். எனவே இந்த நாட்களில் மேற்குறிப்பிட்ட கோவில்களுக்கு பக்தர்கள் வருகை புரிவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
4-ம் திருவிழாவான நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்று வருகிற வைபவம் நடந்தது.
பகல் 11.30 மணிக்கு காந்திமதி அம்மன், கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அப்போது மேளதாளம் முழங்க அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. பின்னர் அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொரோனா பரவல் காரணமாக இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கட்டளைதாரர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் கோவிலுக்கு வெளியே அம்மன் சன்னதி முன்பு ஏராளமான பெண்களும், பக்தர்களும் வளைகாப்பு நிகழ்ச்சியை பார்த்து தரிசனம் செய்தனர்.
வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 10-ம் நாள் விழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பிரதான கோவில்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை 3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோவில்களில் பக்தர்கள் அதிகஅளவில் கூடும்போது கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கருதி தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில், கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோவில், திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில், உப்பிலியப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து பிரதான கோவில்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை 3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆகவிதிப்படி சாமி அலங்காரங்கள், பூஜைகள் மட்டும் வழக்கம்போல் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் கோவில்களுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தஞ்சை பெரியகோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சையை அடுத்த திட்டை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என தகவல் பரவியது. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, இது தவறான தகவல் எனவும், எல்லா கோவில்களை போல் திட்டை கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்தார்.

கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலையில் உள்ள நார்த்தாம்பூண்டி திருத்தலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளனர்.
இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு, மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றுகிறது.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கூட்டுரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப்பூர திருவிழாவின் 2-வது நாளில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர்.
108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.
இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா 3-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடியேற்ற விழா களை இழந்தது.
சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆடிப்பூரத் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஆடிப்பூர விழாவில் 5-ம் திருநாள் 7-ம்தேதியும், கருட சேவை 9-ம்தேதியும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.

பனிமயமாதா கோவிலில் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது. கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பக்தர்களின்றி கொடியேற்று விழா எளிமையாக நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலய வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பேராலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வராமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய திருவிழா நிறைவு நாள் விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பனிமய மாதா கோவிலில் சப்பர பவனிகள் ஏதும் நடத்தப்பட மாட்டாது. கோவிலின் உள்ளாக நடத்தப்படும் ஆராதனை நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
மேற்படி நாளில் பனிமய மாதா திருக்கோவிலில் நடைபெறும் அனைத்துவித ஆராதனை நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை இருக்கின்ற காரணத்தால், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியுப் சேனல்கள் மூலமும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய மாதா கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆகவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளலாம். இந்த விடுமுறைக்கு பதிலாக 07.08.2021 அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆவணி திருவிழாவில் தான் சுவாமி நிகழ்த்திய 10 திருவிளையாடல லீலைகள் நடக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா வருகிற இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் தான் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். அந்த ஆவணி திருவிழாவில் தான் சுவாமி நிகழ்த்திய 10 திருவிளையாடல லீலைகள் நடக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா வருகிற இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இன்று காலை 10.50 மணிக்கு மேல் 11.14 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. தற்போது கொரோனா பரவலையொட்டி கோவிலில் வருகிற 8-ந் தேதி வரை பக்தர்கள் அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற உள்ளது. திருவிழாவில் 11-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 12-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 13-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 14-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 15-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 16-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.
17-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 18-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 19-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 20-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது.
கொரோனா காரணமாக கோவிலை விட்டு வெளியே சுவாமி புறப்பாட்டிற்கு தடை உள்ளதால் திருவிழாக்கள் மற்றும் திருவிளையாடல் லீலைகள் அனைத்தும் ஆடி வீதியில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை லாலி ரோட்டில் பிரசித்தி பெற்ற சங்கிலி கருப்பராய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி ஆண்டு தோறும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
கோவை லாலி ரோட்டில் பிரசித்தி பெற்ற சங்கிலி கருப்பராய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி ஆண்டு தோறும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில்ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சங்கிலி கருப்பராயசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சந்தன கவசத்தில் சங்கிலி கருப்பராயசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.இதேபோல ஏழு கன்னிமார் அம்மன்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், காளிகாம்பாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
மகத்துவம் தரும் ஆடி, பக்திக்கு உகந்த மாதமாகும். இந்த ஆடி மாதத்தில் கோவில்களில் திருவிழாக்கள், அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல், தீ மிதி திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் இல்லாமலே பூஜைகள் நடத்தவும், அதை இணையதளத்தில் ஒளிபரப்பவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையே கொரோனா தொற்று கடந்த மாதத்தில் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குச் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும், ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமையில் இருந்து 3 நாட்களுக்கு கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பல இடங்களில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நின்று, இறைவனை தரிசனம் செய்து திரும்பிய காட்சிகளை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டு, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், காளிகாம்பாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக சமூக இடைவெளியுடன் கூடிய தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், கந்தகோட்டம், காளிகாம்பாள் கோவில்களில் நேற்று திரளான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல், அனைத்து கோவில்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, ‘3 நாட்களுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்தனர்.