search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாரை படத்தில் காணலாம்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாரை படத்தில் காணலாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப்பூர திருவிழாவின் 2-வது நாளில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர்.
    108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

    இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா 3-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடியேற்ற விழா களை இழந்தது.

    சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    ஆடிப்பூரத் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

    ஆடிப்பூர விழாவில் 5-ம் திருநாள் 7-ம்தேதியும், கருட சேவை 9-ம்தேதியும் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.
    Next Story
    ×