search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் பனிமய மாதா ஆலயம்.
    X
    மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் பனிமய மாதா ஆலயம்.

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா: பி‌ஷப் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி

    தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.
    தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விழா நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நாளான இன்று சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், 6.30 மணிக்கு 3-ம் திருப்பலியும் நடை பெற்றது.

    காலை 7.30 மணிக்கு பி‌ஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு மண்ணின் மைந்தர்களின் 5-ம் திருப்பலி நடைபெற்றது. 10 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட பி‌ஷப் நசரேன் தலைமையில் 6-ம் திருப்பலியும், காலை 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பி‌ஷப் அந்தோணி சாமி தலைமையில் 7-ம் திருப்பலியும் நடைபெற்றது.

    வழக்கமாக நடைபெறும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் பார்க்கும் வண்ணம் உள்ளூர் தொலைக் காட்சிகளிலும், யூ-டியூப் சேனல்கள் மூலமும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பார்த்தனர்.

    பேராலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வராமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×