என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'கங்குவா' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் விஜய் சமீபத்தில் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கினார்.
- இது போன்று நடிகர் விஷாலும் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த விழாவில் விஜய் பேசியது பெரும் பரபரப்பானது.
இந்நிலையில், இது போன்று நடிகர் விஷாலும் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது, விஷால், தேவி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு வருடம் தோறும் உதவி செய்து வருகிறார். இவர் உதவியால் சுமார் 300 பேர், கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு விழா நடத்த விஷால் திட்டமிட்டு வருகிறாராம். இந்த விழாவில் மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
- இந்த பேச்சு வார்த்தையானது சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, விஷால், சிம்பு, யோகி பாபு, அதர்வா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று அந்த நடிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த பேச்சு வார்த்தையானது சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படவுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹனு-மான்’.
- இப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படம் மே 12-ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.

ஹனு-மான் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஹனு-மான்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.
- அசோக் செல்வன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘போர் தொழில்’.
- இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. 'போர் தொழில்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் பேசும்போது, ''விக்னேஷ் ஒரு நல்ல இயக்குனராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப் பெரிய இயக்குனராக வந்து விட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இயக்குனர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். இயக்குனர் ஒரு ஹாலிவுட் தரத்தை இப்படத்திற்குக் கொடுத்துள்ளார். இந்தப் படமும் ஹாலிவுட் பட வெற்றி போலப் பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும்.

விக்னேஷ் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அசோக் ஒரு நல்ல நடிகர் மற்றும் நடிகை நிகிலா அருமையாகத் தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை நம்பி படமாக்கியதற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மிகவும் அற்புதமாகப் பணி செய்துள்ளார். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழு அனைவருக்கும் நன்றி. இதையெல்லாம் தாண்டி பத்திரிக்கையாளர்கள் உங்களுக்குத்தான் மிகவும் நன்றி கூற வேண்டும். உங்களின் கருத்துதான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் நன்றி'' என்று பேசினார்.
இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசியதாவது, '' என்னோட முதல் நன்றி தயாரிப்பாளர்களுக்கு தான். இந்தகதையை கேட்டு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. அப்ளாஸ் படம் ஒப்பந்தமானவுடன் படத்தை கமர்ஷியல் ஆக்குகிறோம் என கெடுக்காமல், நீங்கள் நினைத்ததை.. எழுதியதை... எடுங்கள் என்றார்கள். அறிமுக இயக்குனருக்கு இது எவ்வளவு பெரிய வரமென்பது உங்களுக்கு புரியும். யுவராஜ் பம்பரமாக சுழன்று வேலை செய்தார். சக்திவேல் சார் ஒவ்வொரு படத்தையும் பக்காவாக டிசைன் செய்கிறார். அவருக்கு நன்றி. தீபா மேடமுக்கு நன்றி. எடிட்டர் ஶ்ரீஜித் சாரங் மிக அட்டகாசமாக செய்துள்ளார்.

இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டியிருந்தார். அவர் தான் அடம்பிடித்து படத்தின் கடைசியில் பாட்டு வைத்தார். இப்போது அந்த பாட்டில்லாமல் அந்தப்படத்தை நினைக்க முடியவில்லை. படத்தை 2010- ல் நடப்பதாக எடுத்தோம். அதற்கான சிஜி படம் முழுக்க இருக்கிறது. நிகிலா விமல் கேரக்டர் அவர் கதையில் இல்லாத பலத்தை நடிப்பில் கொண்டு வந்தார். அசோக் செல்வன் காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும், அப்போதே யாராவது குறும்படம் எடுத்தால் ஓடிப்போய் நடிப்பான். அப்போது அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் இப்போது எல்லோரும் இயக்குனர்களாக இருக்கிறார்கள். இன்னும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்துவான்.
சரத்குமார் சாரை நன்றாக நடிக்க வைத்துள்ளேன் என்கிறார்கள். ஆனால் 150 படத்தில் நடித்தவருக்கு என்ன சொல்ல முடியும். இந்தப்படத்தில் செய்தது எல்லாமே அவரே செய்தது தான். என்னை விட அவருக்கு தான் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. சரத்பாபு சார் முதலில் நடிப்பாரா ?, அவருக்கு புரியுமா? என்று பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக அப்டேட்டாக இருந்தார். அவர் கேட்ட கேள்வியால் படத்தில் சில பகுதிகளை மாற்றி எழுதினோம். அவர் படம் பார்க்க முடியாதது வருத்தம்" என்று பேசினார்.
- பாலிவுட்டின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் ஆலன் ஆர்கின்.
- இவர் "லிட்டில் மிஸ் சன்ஷைன்" என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது வென்றார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ஆலன் ஆர்கின் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான "லிட்டில் மிஸ் சன்ஷைன்" என்ற திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இந்த படத்திற்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
அதுமட்டுமல்லாமல், 1963-ஆம் ஆண்டு 'என்டர் லாபிங்' என்ற படத்திற்காக டோனி விருதை வென்றார். தொடர்ந்து, 1968-ஆம் ஆண்டு 'லிட்டில் மர்டர்ஸ்' திரைப்படத்தை இயக்கியதற்காக டிராமா டெஸ்க் விருதையும் வென்றார்.
சமீபத்தில், நெட்பிளிக் ஓடிடி தளத்தில் வெளியான 'தி கோமின்ஸ்கை மெத்தட்' வெப் தொடரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதற்காக ஆலன் ஆர்கின், எம்மி, கோல்டன் மற்றும் எஸ்.ஏ.ஜி போன்ற விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில், 89 வயதான ஆலன் ஆர்கின் வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் மறைவை அவரது மகன்களான ஆடம், மேத்யூ மற்றும் அந்தோணி உறுதிப்படுத்தியுள்ளனர். பன்முகத்தன்மைக் கொண்ட ஆலன் ஆர்கின் மறைந்த செய்தி பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அதீத பக்தி கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கிரிவலப் பாதையில் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தார். அதனை தொடர்ந்து ராஜ கோபுரங்கள் மீது அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்குகள் பொருத்த நிதி அளித்தார். 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதைகளிலும் நடிகர் ரஜினி கிரிவலம் சென்று தரிசனம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரஜினி திருவண்ணாமலை வந்தார். அவர் அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தங்கி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அம்மணி அம்மன் கோபுரம் முன்பு இறங்கியதும் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி வணங்கினார். நடிகர் ரஜினிகாந்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

முதலில் அவர் தங்க கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்தார். பின்னர் அண்ணாமலையார் சன்னதிக்கு சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டன. அதில் கலந்து கொண்டு மனமுருக தரிசனம் செய்தார். தொடர்ந்து அம்மன் சன்னதிக்கு சென்று அங்கு தரிசனம் செய்தார்.
இதற்கிடையே ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தகவல் திருவண்ணாமலை நகர பகுதியில் பரவியது. இதனால் கோவிலுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அம்மன் சன்னதி அருகே ரஜினிகாந்த் இருப்பதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டம் அதிகரித்ததால் உடனடியாக அங்கிருந்து ரஜினி வெளியேறினார். அம்மணி அம்மன் கோபுரம் வழியாக காரில் புறப்பட்டு சென்றார். சனி பிரதோஷத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இன்றுடன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இந்த பகுதியில் நிறைவடைகிறது. அவர் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என தெரிவித்தனர்.
- பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'.
- இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படம் மே 12-ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.

ஹனு-மான் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஹனு-மான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு நாளை காலை 10.08 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'மாமன்னன்' திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் திராவிட கருத்துகளாக இருக்கட்டும், பெரியார் கருத்துகளாக இருக்கட்டும் திரைப்படங்கள் மூலமாக தான் இருந்தது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முன்னுரிமை அதிகம் இருக்கிறது. மாரி செல்வராஜ் மத மோதல்களை உருவாக்குகிறார் என்பதை நான் ஏற்கவில்லை. ஒரு சமூகத்தினர் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வலியை திரைப்படம் மூலமாக மாரி செல்வராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். எனக்கு தெரிந்து இந்த கருத்துகள் மோதல்களை ஏற்படுத்தும் கருத்தாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாகதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
- மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தின் டிரைலர் வருகிற ஜூலை 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இந்த வெற்றிக்காக படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது. சில தினங்களுக்கு முன்பு 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. 'போர் தொழில்' திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றிக்காக படக்குழு செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமாரிடம், "விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது" இதற்கு பதிலளித்த சரத்குமார், அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் கூறுகிறோம். விஜய் என்னோடு கூட்டணி வைக்க வேண்டும். நீங்கள் ஏன் கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். முதலில் விஜய் அரசியல் களத்திற்கு வரவேண்டும் அதை வரவேற்கிறோம் என்று பேசிவிட்டோம் என்று கோபமாக பேசினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் விவாதம் செய்த சரத்குமார் வாங்க மேடையில் போய் பேசுவோம் என்று மீண்டும் மேடைக்கே சென்றுவிட்டார்.






