என் மலர்
சினிமா செய்திகள்

விஷால் எடுத்த திடீர் முடிவு.... விஜய்யை பாலோ பண்ணுகிறாரா?
- நடிகர் விஜய் சமீபத்தில் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கினார்.
- இது போன்று நடிகர் விஷாலும் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த விழாவில் விஜய் பேசியது பெரும் பரபரப்பானது.
இந்நிலையில், இது போன்று நடிகர் விஷாலும் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது, விஷால், தேவி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு வருடம் தோறும் உதவி செய்து வருகிறார். இவர் உதவியால் சுமார் 300 பேர், கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு விழா நடத்த விஷால் திட்டமிட்டு வருகிறாராம். இந்த விழாவில் மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






