என் மலர்
சினிமா செய்திகள்
- கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அண்மையில் கைது செய்யப்பட்டார்.
- இதனை தொடர்ந்து கனல் கண்ணன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அண்மையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 'மாமன்னன்' திரைப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர்.
இதையடுத்து 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை, விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில், மகிழ்ச்சியில் திளைக்கும் மாரி செல்வராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாமன்னன் கதை எந்த புள்ளியில் தொடங்கியதோ சரியாக அந்த புள்ளியில் நின்று ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் கரம் பற்றி பெரும் நெகிழ்ச்சியோடும் சொல்கிறேன் அத்தனைக்கும் நன்றியும் ப்ரியமும் உதயநிதி ஸ்டாலின் சார்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
- பவன் கல்யாண் நடிபில் வெளியான டோலி பிரேமா படம் நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டது.
- அப்போது படம் பார்க்க வந்தவர்கள் கூச்சலிட்டு, திரையை கிழித்தும் சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
ஆந்திராவின் பிரபல நடிகர் பவன் கல்யாண் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு டோலி பிரேமா என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான பவன் கல்யாண் ஜனசேனா என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியையும், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் உள்ள குறைகளை சுற்றி காட்டி வராகி பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாண் நடித்த டோலி பிரேமா திரைப்படம் ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டது.
நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் டோலி பிரேமா படத்தை கண்டு ரசித்தனர். நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள திரையரங்கில் டோலி பிரேமா திரையிடப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்தவர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். திரையரங்கின் திரையை கிழித்தும் சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க வந்த திரையரங்க ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து திரையரங்க நிர்வாகிகள் கூறுகையில் நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் இந்த செயலில் ஈடுபடவில்லை. டோலி பிரேமா திரைப்படத்திற்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் சதி செய்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
- கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
- இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸானது. முதல்நாள் முதல் காட்சியின்போது பல திரையரங்குகள் ஹவுஸ்புல்லானதாக திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், ரசிகர் ஒருவர், எனக்கென்னமோ யார் ஆண்டவரின் பெஸ்ட் பேன் பாய் டைரக்டர் என்ற சண்டையில் முதலிடத்தை பிடித்தது கௌதம் மேனன் தான் என்று தோன்றுகிறது. இதனை சொல்வதற்கு என்னை மன்னிக்கவும் லோகேஷ் கனகராஜ் என குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், டவுட்டே வேண்டாம் ப்ரோ, கௌதம் மேனன் தான். என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு 'விக்ரம்' படத்தை குறிப்பிட்டு ''அது நீங்களும் நாயகன் மீண்டும் வரான் வரும் வரைக்கும் தான் . நான் அதை விட பெரிதாக பண்ண முயற்சிக்கணும். இது ஒரு நல்ல சேலஞ்ச். ஆனா இந்த சண்டையில சட்ட கிழியாது. அன்பு மட்டுமே'' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'.
- இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஆதி, பாண்டியராஜன், ஜான்விஜய், ரோபோ சங்கர், ஹன்சிகா மோத்வானி, இயக்குனர்கள் ஏ.சற்குணம், தங்கம் சரவணன், தாஸ் ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆதி பேசியதாவது, ''பாட்னர் படத்தின் கதையை இயக்குனர் மனோஜ் எனக்கு முதலில் போனில் தான் சொன்னார். 'ஐந்து நிமிடத்தில் படத்தின் ஒன்லைனை சொல்லிவிடுகிறேன். பிடித்திருந்தால் கதையாக விவரிக்கிறேன்' என்றார்.

'பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.. ரூம் மேட்ஸ்... மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக் கொள்வார்கள். குட் நைட். சொல்லி தூங்குகிறார்கள். மறுநாள் காலையில் பார்த்தால் பெஸ்ட் பிரண்ட்... அழகான ஃபிகராக மாறிவிடுகிறார்.' இதை கேட்டதும் சுவாரசியமாக இருக்கிறது என சொல்லி முழு கதையும் கேட்டேன். ஆனால் பிரண்டு ஃபிகராக மாறுவது எப்படி? பின் விளைவு என்ன? என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
நான் சீரியஸாக கதைகளை கேட்டு உணர்வு பூர்வமாக நடித்து வருபவன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு இயக்குனரிடம் இப்போது எடுக்க போகும் காட்சி என்ன? இதற்கு முன் காட்சி என்ன? நான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்க வேண்டும்? என கேட்டேன். அப்போது இயக்குனர், 'ரொம்ப யோசிக்காதீங்க' என்றார். அதற்குப் பிறகு எனக்கு புரிந்து விட்டது. ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து சுற்றுலா செல்வது போல் ஜாலியாக இருக்க வேண்டும் என சொன்னதும் ,அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிக்கத் தொடங்கி விட்டேன்.

சக கலைஞர்களுடன் ரசிகர்களை எப்படி சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டும் யோசித்து நடித்தோம். ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்கிறோம். எங்களுடைய சந்தோஷம் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம். நடிகர் நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஜாலியாகவும் அதே சமயத்தில் கஷ்டப்பட்டும் உழைத்திருக்கிறோம். தயாரிப்பாளர் தமிழில் முதல் படத்தை தயாரிக்கிறார்.
படத்திற்கான பட்ஜெட்டை விட கூடுதலாக செலவழித்திருக்கிறார். இந்த 'பாட்னர்' படத்தை குழந்தைகளுடன் திரையரங்குகளுக்கு சென்று, பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே சந்தோஷமாக பார்க்க வேண்டிய படம். ரொம்ப யோசிக்காமல் படம் பார்த்தீர்கள் என்றால்.. படம் நிச்சயம் பிடிக்கும். கதை, திரைக்கதை என ஆழமாக சென்று பார்த்தால் எதுவும் இல்லை. அதற்கான படம் இது இல்லை. சந்தோசமாகவும்.. மனக்கவலைக்கு மருந்தாகவும் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்'' என்றார்.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் 'மாமன்னன்'.
- இப்படத்தின் வெற்றிக்காக உதயநிதி காரை பரிசாக வழங்கியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர்.

இந்நிலையில் மாமன்னன் பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை, விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் இருந்தனர்.
- மணிகண்டன் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட்நைட்’.
- இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் 'குட்நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கினார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்தனர். மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'குட்நைட்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'குட்நைட்' திரைப்படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் உருவாகியுள்ள படம் “ராயர் பரம்பரை”.
- இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இயக்குனர் ராம்நாத் டி இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் உருவாகியுள்ள படம் "ராயர் பரம்பரை". மேலும் கஸ்தூரி, கேஆர் விஜயா, ஆர்என்ஆர் மனோகர், பாவா லக்ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, ஒரு நல்ல படம் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறையச் செலவு செய்திருக்கிறார்கள், இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள்.

ஆனால் இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களை காட்டுங்கள், யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். ஒரு படம் வெற்றி பெறத் தயாரிப்பாளர் தான் காரணம் இயக்குனர் கலைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற அனைத்து தகுதியும் இப்படத்திற்கு உள்ளது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி என்றார்.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், 'மாமன்னன்' படம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பி-யுமான தொல்.திருமாவளவன் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், சமூகநீதிக்கும் சாதிஆதிக்க வெறிக்கும் இடையிலான கரடுமுரடான முரண்களை விவரிக்கும் கலைச்சித்திரமே இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் மாமன்னன். சாதி ஒரு கருத்தியலாக மட்டுமின்றி; அது ஒரு கலாச்சாரமாகவும் வலுவடைந்து கெட்டித்தட்டிக் இறுகிக் கிடக்கிறது.

அதனைத் தகர்ப்பது என்பதைவிட; தளர்வுறச் செய்வதே ஒரு பெரும் போராகும். அப்போரினை குருதிக் களத்தில் விவரிப்பதே மாமன்னன். இறுதியில் சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரைஇலக்கியமே மாமன்னன். சபையின் நாயகமாக சமூகநீதியை அமர வைக்கும் அதிவீரனின் மாபெரும் வெற்றியே மாமன்னன். அன்பு இளவல்கள் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதயநிதி பதிவிட்டிருப்பது, மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, படத்தில் பேசப்பட்டுள்ள சமூக நீதி அரசியலை மேற்கோள்காட்டி உள்ளன்போடு வாழ்த்திய வி.சி.க தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு நம் படக்குழு சார்பில் என் அன்பும், நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- இதனை பாராட்டும் வகையில் விஜய் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை பாராட்டும் வகையில் நடிகர் விஜய் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் சரவணன் செய்த பணிகள் குறித்து ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், அவரது சிறப்பான செயல்பாடுகளைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் எழுதிய கடிதம் அவரது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.
- ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- நடிகர் சங்கம் நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
- இதில் நடிகர், நடிகைகள் மீது வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சங்கம் நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், நடிகர், நடிகைகள் மீது வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்ததாகவும் இதற்காக ஒரு மாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. எனவே இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக நடிகர் தனுஷ் நடித்து தரவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் முன் முறையீடு செய்யப்பட்டது. இந்த படத்திற்காக நடிகர் தனுஷிற்கு ரூ.20 கோடி முன்பணமாக தரப்பட்டதாக தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக கூறப்பட்டது.
இதையடுத்து நடிகைகள் மீதும் பகிரங்கமாக தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடிகை லட்சுமி ராய் மற்றும் அமலாபால் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னணி நடிகைகள் படப்பிடிப்பிற்கு வரும்போது பத்திற்கும் மேற்பட்ட பாதுகாவலர்களை நியமிக்கின்றனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர்களே சம்பள தொகையை வழங்கவேண்டியுள்ளது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட முடிவை எடுத்துள்ளனர். இனி வரும் காலங்களில் நடிகைகளின் பாதுகாவலர்களுக்கு தயாரிப்பாளர்கள் எந்த காரணம் கொண்டும் சம்பளம் வழங்க மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடிகைகளின் பாதுகாவலர்களுக்கு அவர்களே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் பரிசீலனை செய்து ஒரு வாரத்தில் பதிலளிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.
தொடர்ந்து முக்கிய நடிகைகள் புரொமோஷன்களில் பங்கேற்காததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகைகள் புரொமோஷன் நிகழ்ச்சிகள், டிரைலர் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்க வேண்டும் அதற்கும் சேர்த்து தான் அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பரிசீலனை செய்து ஒரு வாரத்தில் தகவல் தெரிவிப்பதாக நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.






