இந்த சண்டையில சட்ட கிழியாது.. லோகேஷுக்கு பதிலளித்த கவுதம்

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு.இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
இந்த சண்டையில சட்ட கிழியாது.. லோகேஷுக்கு பதிலளித்த கவுதம்
Published on

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸானது. முதல்நாள் முதல் காட்சியின்போது பல திரையரங்குகள் ஹவுஸ்புல்லானதாக திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், ரசிகர் ஒருவர், எனக்கென்னமோ யார் ஆண்டவரின் பெஸ்ட் பேன் பாய் டைரக்டர் என்ற சண்டையில் முதலிடத்தை பிடித்தது கௌதம் மேனன் தான் என்று தோன்றுகிறது. இதனை சொல்வதற்கு என்னை மன்னிக்கவும் லோகேஷ் கனகராஜ் என குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், டவுட்டே வேண்டாம் ப்ரோ, கௌதம் மேனன் தான். என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு 'விக்ரம்' படத்தை குறிப்பிட்டு ''அது நீங்களும் நாயகன் மீண்டும் வரான் வரும் வரைக்கும் தான் . நான் அதை விட பெரிதாக பண்ண முயற்சிக்கணும். இது ஒரு நல்ல சேலஞ்ச். ஆனா இந்த சண்டையில சட்ட கிழியாது. அன்பு மட்டுமே'' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com