என் மலர்
சினிமா செய்திகள்
- 'மாமன்னன்' திரைப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர். இதையடுத்து 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியது.

இந்நிலையில் 'மாமன்னன்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், கிர்திகா உதயநிதி, கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் இருந்தனர். இது தொடர்பான வீடியோவை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஃபைண்டர்'.
- சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அரபி புரொடக்ஷன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைக்கிறார்.

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஃபைண்டர் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- 'மாமன்னன்' திரைப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
- 'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றியை நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டானர்.

இந்நிலையில், அ.தி.மு.க. செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். இவரிடம் 'மாமன்னன்' திரைப்படம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி, "நான் மாமன்னன் படம் பார்க்கவில்லை. பார்க்காததை குறித்து நான் எப்படி பேச முடியும். எங்களுடைய இயக்கம் வேறு, அவர்களுடைய இயக்கம் வேறு. எங்கள் இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால், அதில் எதாவது திரைக்கு வந்திருந்தால் அதில் இருந்த கருத்துகளை கேட்டால் படம் நான் பார்த்திருந்தால் அதற்கான பதிலை நான் சொல்ல தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.
'மாமன்னன்' பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஹன்சிகா தற்போது ஆதியுடன் பார்ட்னர் படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது.
நடிகை ஹன்சிகா, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஹன்சிகா குறுகிய காலத்தில் 50 படங்களை நிறைவு செய்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மகா என்ற படம் வெளியானது. அது ஹன்சிகாவின் 50-வது படமாகும். அதில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த தொழில் அதிபர் தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா தற்போது தமிழில் நடிகர் ஆதியுடன் இணைந்து பார்ட்னர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக சென்னை வந்துள்ள நடிகை ஹன்சிகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த படத்தில் நான் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது மிகவும் எனக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தது. திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. திருமணத்திற்கு பிறகு நான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
தமிழில் 5 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு பிறகும் நான் படங்களில் நடிக்க எனது கணவர் ஆதரவு அளித்து வருகிறார். அவர் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். அவர்தான் என் முதல் ரசிகர். எனது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. எனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. அவை நிறைவேறும் போது உங்களிடம் தெரிவிக்கிறேன். தமிழில் நான் 51-வது படத்தில் நடித்து முடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
பேட்டியின் போது நிருபர்கள் ஹன்சிகாவிடம், நீங்கள் நிஜ வாழ்க்கையில் யாராக மாற விரும்புகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த போது, "நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனாக மாற விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
- இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'.
- இப்படத்தின் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் ரோபோ சங்கர் ஹன்சிகா குறித்து பேசினார். அதில், "ஹன்சிகா மெழுகு பொம்மை தான். மைதா மாவை பிசைந்து சுவரில் அடித்தால் ஒட்டிக் கொள்ளும் அது மாதிரி தான். படத்தில் ஒரு காட்சியில் ஒரு பொருளை தேடி அவர் காலை நான் தடவ வேண்டும். அந்த காட்சிக்கு நானும் இயக்குனரும் ஒப்புக் கொள்ள கேட்டு ஹன்சிகாவிடம் போராடினோம் ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு ஜாலியான படம் எல்லோரும் பாருங்கள்" என்று பேசினார்.
இதற்கு பத்திரிகையாளர் ஒருவர், "ரோபோ சங்கர் மேடையில் இருக்கும்போதே இதை நான் கேட்டிருக்க வேண்டும். ஒரு சபை நாகரிகம் இல்லாதவர்களை மேடையில் ஏறவிடாதீர்கள். மேடையில் ஹன்சிகா ஒரே ஒரு பெண்மணி தான் இருக்கிறார். ரோபோ சங்கர் எல்லை மீறி பேசியிருக்கிறார். இந்த மாதிரியான ஆட்களை மேடையில் ஏற்றாதீர்கள். இன்று ஹன்சிகா மேடையில் சிரித்துக் கொண்டிருக்க மாதிரி இருக்கும் நாளை வேறொரு நடிகர் உட்காரும் போது காலை தொட்டு பார்க்க வேண்டும் என்று பேசுவது நீங்கள் செவித்திற்குள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். சமூக வலைதளத்தில் நடிகையை பற்றி இழிவாக பேச இது வழிவகுக்கும்" என்று பேசினார். இந்த பேச்சிற்காக படக்குழு மன்னிப்பு கேட்டனர்.
- நடிகர் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் குறித்த புரோமோ நாளை வெளியாகும் என படக்குழு மற்றொரு புரோமோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகை பிரியாமணி பல படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார்.
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழில் மசாலா படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ்சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த பிரியாமணி, இதன் மூலம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில், முத்த காட்சியில் நடிக்க எனக்கு அனுமதியில்லை என்று நடிகர் பிரியாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, திருமணத்திற்கு பிறகு முத்த காட்சிகளில் நடிக்க கூடாது என முடிவு செய்து கொண்டேன். அதற்கு எனக்கு அனுமதி இல்லை. அது ஒரு கதாபாத்திரம்தான் என்ற போதிலும் ஒரு பெண்ணாக அதனால் மிகவும் கஷ்டப்படுவேன். முத்த காட்சிகளில் நடிப்பதை கணவரும் விரும்ப மாட்டார். அப்படி நடித்தால் கணவருக்கு பதில் சொல்ல வேண்டி வரும். நடிக்க ஒப்பந்தமாகும் முன்பே இதுகுறித்து சொல்லி விடுவேன். நான் நடிக்கும் படங்களை என் இரு வீட்டு குடும்பத்தினரும் பார்ப்பார்கள் முத்த காட்சிகளில் நடித்து அவர்கள் மனதை கஷ்டப்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை என்று பேசினார்.
- நடிகர் அருண் விஜய் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்தின் தணிக்கைக்கு முந்திய பணிகளில் அருண் விஜய் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
- நடிகர் முனீஸ்காந்த் ‘காடப்புறா கலைக்குழு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் ஜூலை 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காடப்புறா கலைக்குழு'. சக்தி சினி புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் சார்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், நடிகர் முனிஸ்காந்த் பேசியதாவது, இந்த படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம். அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குனர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். இந்த படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குனர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் புரொடக்ஷனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார், அவருக்கு வாழ்த்துக்கள். ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முனீஷ்காந்த் ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவர்களுக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார் என்று பேசினார்.

மேலும் இயக்குனர் ராஜா குருசாமி பேசியதாவது, முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை , அவருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள். முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும். நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி என்று பேசினார்.
- பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதனால் விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் விக்ரம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.

இந்நிலையில், தங்கலான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
- நடிகை திஷா பதானி ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இதைத்தொடர்ந்து இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், இவர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், திஷா பதானி சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.






