மீண்டும் தள்ளிப்போன ஹனு-மான் ரிலீஸ் தேதி

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹனு-மான்’.இப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
ஹனு-மான்
ஹனு-மான்
Published on

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படம் மே 12-ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.

ஹனு-மான் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஹனு-மான்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com