என் மலர்
சினிமா செய்திகள்
- விஷால் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஷால் நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இதில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் விஷால் வளர்க்க தொடங்கி 14 ஆண்டுகள் ஆனது. இதை நாயின் பிறந்தநாளாக குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விஷால் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் மகனே" என்று குறிப்பிட்டுள்ளார்.
- செல்வமனி செல்வராஜ் இயக்கும் படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
- இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான ராணா மற்றும் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். செல்வமனி செல்வராஜ் இயக்கும் இப்படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
காந்தா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் குறித்து ராணா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில், மிகவும் சிறப்பான கதையை கண்டறிவது மிகவும் அரிதான காரியம் ஆகும். காந்தா அதுபோன்ற ஒரு கதை தான்.

இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது. இந்த பயணத்தை துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். மிகவும் திறமை மிக்க துல்கர் சல்மான் மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் உடன் இணைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது பிறந்தநாளை ஒட்டி, என்ன நடக்க போகிறது என்பதற்கான சிறு முன்னோட்டம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் துல்கர் சல்மான், காந்தா உலகிற்கு வரவேற்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
- நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார்.
- இவர் சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த பதிவில், நண்பர்களுக்கு வணக்கம், எனக்கு கொஞ்சம் டெடாக்சிஃபிகேஷன் தேவை என்பதால், ரேடாரில் இருந்து வெளியேறுகிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள், நன்றாக இருங்கள், பாசிடிவ்வாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் குஷ்பு அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அல்லு அர்ஜுன் நடிப்பில் ’புஷ்பா 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு பிரபல நடிகை குத்தாட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 'புஷ்பா-தி ரூல்' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு பிரபல நடிகை ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'புஷ்பா ' படத்தின் முதல் பாகத்தில் சமந்தா 'ஊ சொல்றியா' மாமா பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சுஷ்மிதா சென்.
- இவர் தற்போது நடித்துள்ள தாலி வெப்தொடரின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 47 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடலான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததையடுத்து, தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே திரைப்படம் நடிப்பதில் இருந்து சற்று விலகியுள்ள அவர், சில வெப் தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தற்போது சுஷ்மிதா சென் தாலி (Taali) என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கி உள்ளார். இந்நிலையில் இந்த வெப் தொடரின் டீசரை சுஷ்மிதா சென் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். சுஷ்மிதாவின் குரலில் தொடங்கும் இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த படம் 'கண்ணே கலைமானே'.
- இந்த படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த 'கண்ணே கலைமானே' படம் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023-ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது.

தற்போது 'கண்ணே கலைமானே' படம் சிறந்த படத்துக்கான 17-வது அமெரிக்க சோகால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் செப்டம்பர் 12-ந்தேதி நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது.
இதுகுறித்து டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது, "நல்ல படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படும். அந்த வகையில் 'கண்ணே கலைமானே' படம் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகிறது. உலக படத்துக்கான தன்மைகள் இந்த படத்தில் இருப்பதால் சோகால் விருதை வென்று அமெரிக்க சர்வதேச பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது'', என்றார்.
- சார்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஃபைண்டர்'.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது.
இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அரபி புரொடக்ஷன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சூர்ய பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்த விழாவிற்கு வந்த தயாரிப்பாளர் குஞ்சு மோகனுக்கு நன்றி, சார்லி மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பான வணக்கம், சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை அது ஒரு பல்கலைகழகம், நாம் அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இயக்குனரும் இசையமைப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர். அவர்களை உற்று கவனித்தேன் அவர்கள் கதை சொல்ல மட்டும் வந்தவர்கள் அல்ல சரித்திரம் படைக்க வந்தவர்கள்.

நான் புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களை பார்ப்பதில்லை அவர்களது உழைப்பை தான் பார்ப்பேன், இவர்களது உழைப்பு அருமையாக இருந்தது. தயாரிப்பாளர் சுப்ரமணியனுக்கு எனது வாழ்த்துகள் இன்று சினிமாவில் தயாரிப்பாளர்கள் கண்டு பிடிப்பது அரிது. இந்த தயாரிப்பாளருக்கு எந்த அய்யமும் இல்லை படத்தை நன்றாக தயாரித்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு நிகழ்வை சொல்லுமாறு அமைந்துள்ளது. சினிமாவில் குறை சொல்வது எளிது ஆனால் நிறை காண்பது அரிது, அதனால் யாரும் எழுதட்டும் யாரும் பாடட்டும் அதில் யாரும் நடிக்கட்டும் ஆனால் தமிழை நன்கு அறிந்து விட்டு அதை செய்யட்டும். இதைத்தான் நான் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன்.

இந்த படத்திற்கு தமிழில் தலைப்பை வைக்க வேண்டுமென்று கேட்டேன் ஆனால் படக்குழுவினர் வியாபாரத்தில் அது பிரச்சினை ஏற்படுத்துகிறது என்றனர். தமிழுக்கு அது தவறு என்றாலும் தயாரிப்பாளர் தமிழன் என்பதால் இதை நான் ஒப்புக் கொண்டேன். சார்லி ஒரு கெட்டிகார நல்லவன். நாற்பது வருடம் இந்த சினிமாவில் இருந்து வருகிறான். அவனது கலை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அனைவரையும் நான் சந்திப்பேன். படக்குழு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி என்று பேசினார்.
- ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில், "ரஜினிக்கு 72 வயது ஆன போதிலும் தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கிறார்கள். அப்படி உங்களுக்கும் நின்றால் நீங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் என" கலாநிதி மாறன் பேசினார்.

ரஜினி- எஸ்.ஆர்.பிரபு
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைத்துறையில் ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர். இதன் மதிப்பும் வெளியீட்டு தேதி, உள்ளடக்கம், போட்டி போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும்.
இதைப் புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரையொருவர் ஆதரிக்கத் தொடங்கும் போது ஒட்டுமொத்த சந்தையை உயர்ந்து எல்லைகளைத் தாண்டி விரிவடைகிறது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு திரைத்துறை. அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தரத்திற்கு உயரும் என்றும் நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் ’லியோ’.
- இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இவருடைய கதாபாத்திரமான ஆண்டனி தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஷோபனா.
- பரதநாட்டிய கலைஞரான இவர் நடன பள்ளியும் நடத்தி வருகிறார்.
பிரபல திரைப்பட நடிகையான ஷோபனா பரதநாட்டிய கலைஞராகவும் உள்ளார். இவர் ரஜினி, கமல், பாக்யராஜ் உள்பட பல திரைப்பிரபலங்களுடன் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் வசித்து வரும் நடிகை ஷோபனாவின் வீட்டில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலை சேர்ந்த விஜயா என்பவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் ஷோபனாவின் தாயை விஜயா உடனிருந்து கவனித்து வந்த நிலையில், தாயார் வைத்திருந்த பணம் அடிக்கடி மாயமானதால் குழம்பி போன ஷோபனா போலீசில் புகாரளித்திருக்கிறார்.
இந்நிலையில், வீட்டிலிருந்து பணத்தை தான் திருடியதாகவும், சிறுக சிறுக சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை திருடி, அப்பணத்தை ஜிபே மூலம் தனது மகளுக்கு அனுப்பியதாகவும் கூறி பணிப்பெண் விஜயா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், போலீசிடமிருந்து புகாரை வாபஸ் பெற்ற நடிகை ஷோபனா, பணிப்பெண்ணை வேலையில் இருந்து நீக்காமல், திருடிய பணத்தை வீட்டில் வேலை பார்த்தே கழிக்குமாறு கூறி எச்சரித்திருக்கிறார்.
- நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், வெங்கட் பிரபு பதிவு சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, புதிய படத்தின் அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என பதிவிட்டுள்ளார். இதற்கு 'தளபதி 68' குறித்த அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- நடிகர் அட்டகத்தி தினேஷ் பல படங்களில் நடித்து வருகிறார்.
- ஒவ்வொரு படத்திலும் தினேஷ் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்.
பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து விசாரணை, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டுபோன்ற படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அட்டகத்தி தினேஷ்
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தினேஷ் தற்போது, ஜே பேபி, தண்டகாரண்யம் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் கருப்பு பல்ஸர், லப்பர் பந்து படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அட்டகத்தி தினேஷ் மீண்டும் இயக்குனர் பா. இரஞ்சித்துடன் இணைகிறார். இப்படத்திற்காக மிக வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது இந்த புதிய லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.






