என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகை அனுஷ்கா தற்போது 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது இவர் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 4-ஆம் தேதி 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி மீண்டும் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
- ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசியதாவது, "நெல்சன் முதலில் 'ஜெயிலர்' படத்தின் ஒன்லை சொன்னார். சொல்ல சொல்ல என்னை அப்படியே உத்து பார்த்தாரு. 'இவன் ஹீரோவா எப்டி?' ன்னு அவர் மனசுல நினைச்சது எனக்கு கேட்டுடிச்சு. ஆனாலும் அந்த ஒன்லைன் எனக்கு பிடிச்சிருந்தது. அப்பறம் பீஸ்ட் படத்த முடிச்சிட்டு வரேன்னு கிளம்பிட்டாரு.

அந்த படத்த முடிச்சிட்டு வந்து முழுக்கதையும் சொன்னாரு. 'ஜெயிலர்' அறிவிப்புக்குப் பிறகுதான் பீஸ்ட் வெளியானது. பீஸ்ட் சரியா போகல அப்போ நிறைய பேர் என்னிடம் நெல்சனுக்குதான் படம் கொடுக்க வேண்டுமா என யோசிக்க சொன்னார்கள். ஆனால், எப்போதுமே ஒரு இயக்குனர் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள்தான் தோற்கிறது.
படத்துல பிளாக் காமெடி எல்லாம் இருக்கு. சீரியஸான சீன்ல எல்லாம் காமெடி பண்ணுவார் நெல்சன். 'காவாலா' சாங்க்ல எனக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருக்குனு பில்டப் கொடுத்து கூட்டிட்டு போனாங்க. ஆனா, ரெண்டே ஸ்டெப் கொடுத்துட்டு போதும்னு சொல்லிட்டாங்க.
- இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சுப்ரமணியபுரம்'.
- இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்துள்ளது.
சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சுப்ரமணியபுரம் போஸ்டர்
இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் ரீ-ரிலீசாக உள்ளது. இதனை இயக்குனர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் பேசியதாவது, இது என்னுடைய 4வது படம் ஆனால் இது என்னுடைய முதல் ஆடியோ லாஞ்ச். தலைவர் பாராட்டும்போது கிண்டலாக பேசுகிறாரா அல்லது உண்மையாக இருக்கிறாரா என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.
படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் போன்ற கட்டுப்பாடு மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் ஒரு பக்கம். மறுப்பக்கம் விடிவி கணேஷ் போன்ற கட்டுப்பாடு இல்லாத நடிகர்கள். இரண்டையும் நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ரஜினிகாந்த் சார் எனக்கு உதவினார்.. நன்றி சார். என்று பேசினார்.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்று வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் 'ஹுக்கும்' பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அனிருத் இந்த பாடலை இரண்டாவது முறை பாடி ரசிகர்களை கவர்ந்தார்.
- தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
- இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளான இன்று (ஜூன் 28) நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த டீசர் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் பரிசாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் கருப்பு நிற கண்ணாடி அணிந்திருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், 'சந்திரமுகி 2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் வடிவேலு 'சந்திரமுகி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், விரைவில் அப்டேட்கள் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் மிஸ்டர்.எக்ஸ்.
- இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.
பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சரத்குமார் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
- இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளான இன்று (ஜூன் 28) நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இந்த டீசர் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
- இப்படத்தின் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடல் இன்று (ஜூன் 28) வெளியாகவுள்ளது.
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடல் இன்று (ஜூன் 28) வெளியாகவுள்ளது. இந்நிலையில் துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'.
- இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சூர்யாவின் பிறந்த நாளன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
இந்நிலையில் சூர்யா 43 படத்தின் தகவல் இணையத்தில் வைதலாகி வருகிறது. அதன்படி இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
- இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடலையும் படக்குழு நீக்கியது. இந்நிலையில், இந்த பாடல் புதிய காட்சிகளுடன் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.






