சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான்
Published on

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சூர்யாவின் பிறந்த நாளன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

இந்நிலையில் சூர்யா 43 படத்தின் தகவல் இணையத்தில் வைதலாகி வருகிறது. அதன்படி இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com