search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இசை வெளியிட்டு விழாவில் ரசிகர்களுக்காக இரண்டு முறை ஹுக்கும் பாடலை பாடிய அனிருத்
    X

    இசை வெளியிட்டு விழாவில் ரசிகர்களுக்காக இரண்டு முறை 'ஹுக்கும்' பாடலை பாடிய அனிருத்

    • நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் 'ஹுக்கும்' பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அனிருத் இந்த பாடலை இரண்டாவது முறை பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

    Next Story
    ×