அடுத்து என்ன..? 'தளபதி 68' தான்.. ட்ரெண்டாகும் வெங்கட் பிரபு பதிவு

நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
அடுத்து என்ன..? 'தளபதி 68' தான்.. ட்ரெண்டாகும் வெங்கட் பிரபு பதிவு
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், வெங்கட் பிரபு பதிவு சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, புதிய படத்தின் அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என பதிவிட்டுள்ளார். இதற்கு 'தளபதி 68' குறித்த அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com