என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலாபால்.
    • இவர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.

    தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.



    இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். இணையத்தில் இவர் புகைப்படங்களை ரசிப்பதற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


    இந்நிலையில் , நடிகை அமலாபால் நீலகிரியிலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ள இவர் சிவப்பினால் ஓவியம் தீட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.



    • கயல் ஆனந்தி தற்போது நடித்துள்ள படம் 'ஒயிட் ரோஸ்'.
    • இப்படம் சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகி உள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கயல் ஆனந்தி தற்போது கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ஒயிட் ரோஸ்'. இப்படத்தை இயக்குனர் சுசி கணேசனிடம் முன்னாள் அசோசியேட்டாக பணியாற்றிய ராஜசேகர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.



    இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் கூறும்போது, "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும்.



    கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில் பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள். இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்" என்றார்.

    • ஷாருக்கான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'.
    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'வந்த இடம்' பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 




    • சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'.
    • இப்படம் குறித்து நடிகர் நட்டி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.



    இந்நிலையில், 'கங்குவா' படம் குறித்து நடிகர் நட்டி நட்ராஜ் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் படத்தை பாருங்கள், கங்குவா கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும். படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. படத்தின் திரையில் பிரம்மாண்டத்தை காண்பீர்கள். நானும் இப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் சந்தோஷம் என்றார்.

    • நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் விநாயகர் சதுர்த்தியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.


    சந்திரமுகி2 போஸ்டர்

    'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'சந்திரமுகி 2' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வேட்டையன் ராஜாவாக லாரன்ஸ் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





    • பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.
    • படங்களை தேர்வு செய்வது குறித்து மாளவிகா மோகனன் மனம் திறந்து பேசியுள்ளார்.

    துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்.



    இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.



    இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் படங்களை தேர்வு செய்வது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், இனிமேல் எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளேன். ரூ.500 கோடி வசூலிக்க கூடிய படமாக இருந்தாலும் எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அதில் நான் நடிக்க மாட்டேன். படம் ஓடி வசூலில் சாதனை படைத்தாலும் முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரமாக இருந்தால் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.

    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வசந்த் ரவி நடித்துள்ளார்.
    • இப்படம் குறித்து வசந்த் ரவி நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.



    இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்து நடிகர் வசந்த் ரவி நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், இந்த படத்தை நான் ஒப்புக் கொள்ள ரஜினி சார் மற்றும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளும் விஷயங்களுக்காக மட்டும் தான். என்னை 70 வயதிலும் பிசியாக வைத்துக் கொள்ளும்படி ரஜினி சார் அறிவுரை கூறினார். இந்த படத்தை பற்றி ஒரு விஷயம் என்னால் உறுதியாக சொல்ல முடியும், ஜெயிலர் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது. நெல்சனிடம் ரியலிஸ்டிக் மீட்டரை கமர்ஷியல் டெம்ப்ளேட்டில் சொல்லும் திறமையுள்ளது. டார்க் காமெடியை டெட்பான் முக பாவனையோடு சொல்லும் அவருடைய ஸ்டைல் தமிழ் சினிமாவிற்கு புதியதாக உள்ளது என்றார்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'தளபதி 68'.
    • 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜெய் விஜய்யுடன் இப்படத்தின் மூலம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.



    'தளபதி 68' படத்தின் நடிகர், நடிகைக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய்-ஐ நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஜெய், விஜய்க்கு தம்பியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பகவதி' படத்தை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் உடன் நடிகர் ஜெய் இணையவுள்ளதாக வெளியாகும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28, சரோஜா, கோவா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 -2 உள்ளிட்ட படங்களில் ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று வெங்கட் பிரபு "நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்ற படத்தின் அப்டேட் வெளியிட்டார். இதில் ஏமாற்றமடைந்த ரசிகர் ஒருவர் தான் விஜய் படத்தின் அப்டேட் என நினைத்ததாகவும், இருந்தும் என் வாழ்த்துக்கள் என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு கமெண்ட்டில் பதிலளித்த இயக்குனர் வெங்கட் பிரபு, "தளபதி 68 சும்மா தெறிக்கும். காத்திருங்கள்" என பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • மாரி செல்வராஜ் இயக்கத்தி ல்உதயநிதி நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் நேற்று முன்தினம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.



    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர்.



    மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படம் ஜூலை 27ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • தமன்னா தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் இடம்பெற்ற காவலா பாடலுக்கு நடனமாடிய தமன்னாவுக்கு ரசிகர்கள் பட்டாளமே குவிந்துள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரிஸ் 2-வில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.



    இந்த வெப் தொடரில் படுக்கை அறை காட்சிகளும் லிப் லாக் காட்சிகளிலும் விஜய் வர்மாவுடன நெருக்கமாக நடித்தார். தமன்னா-விஜய் வர்மாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.



    அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் தமன்னா, தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவப்பு நிற உடையில் இருக்கும் தமன்னாவின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    இந்த சிவப்பு நிற உடையை தமன்னா ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவுக்கு அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • விஷால் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஷால் நடிப்பில் மட்டுமல்லாது பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இவர் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இதில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    இந்த நிலையில் நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் விஷால் வளர்க்க தொடங்கி 14 ஆண்டுகள் ஆனது. இதை நாயின் பிறந்தநாளாக குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விஷால் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் மகனே" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×