என் மலர்

  நீங்கள் தேடியது "white rose"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கயல் ஆனந்தி தற்போது நடித்துள்ள படம் 'ஒயிட் ரோஸ்'.
  • இப்படம் சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகி உள்ளது.

  தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கயல் ஆனந்தி தற்போது கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ஒயிட் ரோஸ்'. இப்படத்தை இயக்குனர் சுசி கணேசனிடம் முன்னாள் அசோசியேட்டாக பணியாற்றிய ராஜசேகர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் கூறும்போது, "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும்.  கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில் பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள். இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்" என்றார்.

  ×