என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’.
    • இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர்.

    'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



    'இறைவன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் 2 நிமிடம் 33 வினாடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டிரைலரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 'வினோதய சித்தம்' படத்தை தற்போது 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.
    • பவன் கல்யாண், சாய் தேஜ் நடிப்பில் உருவான இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார்.



    தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்நிலையில் ப்ரோ திரைப்படம் ஐஎம்டிபி-யில் நல்ல வரவேற்பை பெற்று 10-க்கு 9 மதிப்பெண் பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக இயக்குனர் சமுத்திரக்கனி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
    • இப்படத்தின் அஜித் பட பிரபலம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.




    தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் என்ன அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது கதாநாயகியாக நடித்து வருவதால் இப்படத்தில் இவருக்கு எந்த மாதிரியான கதாப்பாத்திரம் கொடுக்கப்படும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கவிஞர் வைரமுத்து பல படங்களுக்கு பாடல்கள் எழுதி ரசிகர்களை கவர்ந்தவர்.
    • இவர் பாரதிராஜாவுக்காக பாட்டு பாடி வீடியோ பதிவிட்டுள்ளார்.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து பாட்டு பாடி நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பதிவிட்டு, எழுந்து வா இமயமே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.
    • இப்படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.



    இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விடாமுயற்சி படத்தில் தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த வாய்ப்பு திரிஷாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் நல்ல வரவேற்பை பெற்றதாலும் லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்ததாலும் இதில் தமன்னாவை நடிக்க வைக்கு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • விக்ரம் பிரபு, விதார்த் இணைந்து தற்போது 'இறுகப்பற்று' படத்தில் நடிக்கின்றனர்.
    • இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் 'இறுகப்பற்று' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜப்பான்' படத்திற்காக 'குட் நைட்' பட இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மெலடி பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "ஜப்பான் படத்திற்காக ஷான் ரோல்டன் குரலில் மெலடி பாடலை பதிவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது திரைப்பயணத்தில் இது சிறந்த மெலடியாக இருக்கும்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.





    • நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்' .
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார்.


    இப்படம் கடந்த 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'டிடி ரிட்டன்ஸ்' படக்குழு நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 





    • நடிகர் ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ’ஜெயிலர்’.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.


    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நூதன கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், "ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என்று பேசினார். அது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிடி ரிட்டன்ஸ்' .
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து சமீபத்திய பேட்டியில் நடிகர் சந்தானத்திடம் நயன்தாரா குறித்த கேள்வி கேட்கப்பட்டது.


    இதற்கு பதிலளித்த அவர், "வல்லவன் என்ற படத்தில் நடித்ததில் இருந்து நயன்தாராவை நன்றாக தெரியும். எனக்கும் அவருக்கும் உள்ள உறவு அண்ணன்- தங்கை உறவு. சினிமாதுறையில் எனக்கு கிடைத்த தங்கை என கூறினார். மேலும் நான் அவர் வீட்டிற்கு சென்ற போது எனக்கு தட புடலாக விருந்து வைத்தனர். நயன்தாரா என்னை 'அண்ணா' என்று தான் அழைப்பார். அவரது குழந்தைக்கு எனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் அப்போது தான் தாய்மாமன் சீர் செய்வேன் என்று காமெடியாக கூறியதாக தெரிவித்தார்.

    • நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடித்துள்ள ’ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

    தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்'திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இதைத்தொடர்ந்து, கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பிலும் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜப்பான் படத்தின் கடைசி பாடல் காட்சிக்காக கார்த்தி நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த பிரமாண்டமான பாடலை படமாக்க பல கோடி மதிப்பிலான செட் அமைக்கப்படுகிறது.


    பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நலன் படத்தின் படப்பிடிப்பை முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு பெரிய படங்களை முடித்த பிறகு, கார்த்தியின் 27-வது படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

    2022 ஆம் ஆண்டில் 'பொன்னியின் செல்வன்- 1', 'விருமன்' மற்றும் 'சர்தார்' என மூன்று வெற்றிப்படங்களை தந்ததன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார் கார்த்தி. மேலும் 2023 ஆம் ஆண்டை 'பொன்னியின் செல்வன்- 2' எனும் பிளாப்பஸ்டர் வெற்றியுடன் துவங்கியுள்ளார். அடுத்ததாக ஜப்பான் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவரத் தயாராகி வருகிறது.


    கார்த்தி இந்த ஆண்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால், தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படப்பிடிப்புக்கு முன்பாகவே சிறந்த ஓடிடி தளங்கள், சாட்டிலைட் சேனல்கள் மற்றும் முக்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து வியாபார அழைப்பு வரப்பெற்று, லாபகரமான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. ப்ரீ ரிலீஸ் பிசினஸ் எனப்படும், பட வெளியீட்டுக்கு முன்பான வியாபாரத்தில் தற்போது நடிகர் கார்த்தியின் படங்கள் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, தீவிரமாகப் படங்களில் கார்த்தி நடித்து வருவது திரைத்துறையினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • நடிகர் டேனியல் ஆனி போப் மூன்று நாட்கள் பயிற்சி பட்டறையை சமீபத்தில் தொடங்கினார்.
    • இதன் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

    நகைச்சுவை நடிகரான டேனியல் ஆனி போப் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்ற டேனியல் ஆனி போப் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் -2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

    நடிகர் டேனியல் ஆனி போப் சமீபத்தில் டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோ (DANI'S THEATRE STUDIO) என்னும் நடிப்புப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தார். இந்த நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராதாரவி, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகைகள் அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி  மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் டேனிஸ் பயிற்சி பட்டறையின் லோகோவை (Logo) நடிகர் ராதாரவி வெளியிட்டார். அதன்பின் ராதாரவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் சிறப்பு விருந்தினரான ராதாரவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசியதாவது, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவேன், அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஏடாகூடமாப் பேசமாட்டேன். உள்ளதைச் சொல்வேன், நான் உள்ளதை சொல்வது உங்களுக்கு ஏடாகூடமாகத் தெரிகிறது. "டேய் நீ என்ன நல்லவனா..?" என்று கேட்டார் ராதாரவின்னு போட்டுவிடுவார்கள். ஏனென்றால் அப்படிப் போட்டால் தான் ஆடியன்ஸ் அதை க்ளிக் செய்து பார்க்கிறார்கள். அதை க்ளிக் செய்துவிட்டால் இவர்களுக்கு காசு. அதனால் இது போன்று வசீகரமான தலைப்பு வைத்து வரும் எந்த வீடியோக்களையும் நான் பார்ப்பது இல்லை.


    நீங்கள் எல்லாம் இது போன்ற சிறுசிறு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். இவர்களில் யாராவது எதிர்காலத்தில் ஒரு புரட்சித் தலைவரோ, நடிகர் திலகமோ இல்லை காதல் மன்னனாகவோ வரலாம். எல்லோரும் பெரிய பெரிய நிகழ்வுகளுக்குத் தான் வருவோம் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. ஒரு நாள் பெரிய இடம் சின்ன இடமாக மாறும், சின்ன இடம் பெரிய இடமாக மாறும். இதுதான் வாழ்க்கை. மேடையில் அமர்ந்திருக்கும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் அவர்களுக்கும் வணக்கம். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், அவர் இயக்கவிருக்கும் ஒர் வெப் சீரிஸ் ஒன்றில் என்னை நடிக்க வைக்கலாம் என்று நினைத்ததாகவும், பின்னர் சிலர் வேறு மாதிரி சொன்னதால் அதற்கான முயற்சி எடுக்கவில்லை என்றும் கூறினார். அதனால் தான் பிரபாகரனிடம் இனி நான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீயே என் வீட்டுக்கு வந்துவிடு, நான் பத்து இலட்சம் கேட்பேன், நீ முடியாது ஒரு இலட்சம் தான் கொடுக்க முடியும் என்று கூறு, எதுவாக இருந்தாலும் நாமே பேசிக் கொள்வோம். அப்பொழுது தான் நான் என்ன பேசுகிறேன் என்பதாவது உனக்குத் தெரியும் என்றேன்.


    ராதாரவி என்றால் கெட்ட வார்த்தையில் பேசுவார் என்று ஒரு கருத்து பரவுகிறது. நான் கெட்ட வார்த்தையில் பேசக் கூடாது என்கிற திடகாத்திரமான முடிவோடு தான் வந்தேன். கோபம் வந்தால் எதைப் பற்றியும் பயப்படமாட்டேன், எனக்கு தோன்றியதைப் பேசிவிடுவேன். ஆனால் இங்கு நான் கோபப்படும் படி எதுவுமே இல்லை.  இந்த நடிகர்களுக்கு அவர்களின் நிலை உயர்ந்துவிட்டால் எங்கிருந்து தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருமோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேசும் அந்தப் பேச்சையும் கைதட்டி ரசிக்கத் தானே செய்கிறார்கள் மக்கள். தமிழ்நாட்டு மக்கள் போல் முட்டாள்கள் வேறெங்கும் கிடையாது.  இதை தைரியமாகத் தான் சொல்கிறேன். வேண்டுமென்றால் என் படங்களைப் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள்.  என்னைச் சார்ந்து படங்கள் எடுக்கப்படுவதில்லை. ஹீரோவைச் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் நான் இருக்கிறேன். நீங்கள் என்னை உதாசீனப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் ஹீரோக்களை உதாசீனப்படுத்த வேண்டும். இன்றும் நான் 5 படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒருவர் கேட்டார் ஏன் படங்களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது என்று. நான் இதாவது இருக்கிறதே என்று கூறினேன்.



    இன்று டேனியல் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றால், பல சிரமங்களுக்கு இடையில் தான் இதை நடத்துகிறார்.  இந்த சிரமங்களுக்கு இடையிலும் அவர் சிரிப்பது தான் அவருக்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கும்.  இன்னும் ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார் என்பதை ஒரு சவாலாகவே இங்கே கூறிக் கொள்கிறேன். டேனியல் தொடங்கியிருக்கும் பள்ளி சிறப்பாக செயல்பட ஏதேனும் ஆலோசனை கொடுங்கள். நானும் கண்டிப்பாக அவனுக்கு ஆலோசனை கொடுப்பேன். உன் கைக்காசைப் போட்டு அதிகம் செலவு செய்யாதே என்று கூறுவேன். ஏனென்றால் நாளைக்கி இதிலிருந்து வரும் ஒரு மாணவனே பெரிய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றால், பழையதை மனதில் வைத்து நடந்து கொள்வார் என்று சொல்ல முடியாது.

    ஏனென்றால் சினிமாவின் வியாதி அது. டேனியல் நீ சோர்ந்து போகும் போது எனக்கு போன் செய். நான் எங்கிருந்தாலும் உன்னைத் தேடி வருவேன். நான் உன்னை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்வேன். உன் வளர்ச்சிக்கு உதவ நிறைய நண்பர்கள் உன்னோடு இருக்கிறார்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். யாரும் தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள். அவர்கள் உங்களோடு இருப்பது தான் உங்களுக்கு ஆசிர்வாதம். குழந்தைகளை சுதந்திரமாகவும் அதே நேரம் கண்டிப்புடனும் வளருங்கள்.  இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.

    ×