search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் வைத்து தான் காதுகுத்து -சந்தானம்
    X

    நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் வைத்து தான் காதுகுத்து -சந்தானம்

    • நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிடி ரிட்டன்ஸ்' .
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து சமீபத்திய பேட்டியில் நடிகர் சந்தானத்திடம் நயன்தாரா குறித்த கேள்வி கேட்கப்பட்டது.


    இதற்கு பதிலளித்த அவர், "வல்லவன் என்ற படத்தில் நடித்ததில் இருந்து நயன்தாராவை நன்றாக தெரியும். எனக்கும் அவருக்கும் உள்ள உறவு அண்ணன்- தங்கை உறவு. சினிமாதுறையில் எனக்கு கிடைத்த தங்கை என கூறினார். மேலும் நான் அவர் வீட்டிற்கு சென்ற போது எனக்கு தட புடலாக விருந்து வைத்தனர். நயன்தாரா என்னை 'அண்ணா' என்று தான் அழைப்பார். அவரது குழந்தைக்கு எனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் அப்போது தான் தாய்மாமன் சீர் செய்வேன் என்று காமெடியாக கூறியதாக தெரிவித்தார்.

    Next Story
    ×