விக்ரம் பிரபு-விதார்த்தின் 'இறுகப்பற்று' பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரல்

விக்ரம் பிரபு, விதார்த் இணைந்து தற்போது 'இறுகப்பற்று' படத்தில் நடிக்கின்றனர்.இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
விக்ரம் பிரபு-விதார்த்தின் 'இறுகப்பற்று' பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வைரல்
Published on

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் 'இறுகப்பற்று' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com