என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏ.ஆர்.ரகுமான் பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    • இவர் மணிரத்னம் இயக்கும் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் 'ரோஜா' திரைப்படத்தில் தொடங்கி பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களுக்கும் இசையமைக்கிறார்.


    இவர் இசையமைத்துள்ள 'அயலான்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து 'லால் சலாம்' திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கும் 'தக் லைப்', தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்திற்கும் இவர் இசையமைக்கிறார்.


    இந்நிலையில் ரசிகை ஒருவர் ஏ.ஆர். ரகுமானிடம் பாடல் பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், காரில் உட்கார்ந்திருக்கும் ஏ.ஆர். ரகுமானிடம் வெளிநாட்டு ரசிகை ஒருவர் உங்களின் தீவிர ரசிகர் என்று கூறி உங்களுக்காக ஒரு பாட்டு பாடலாமா எனக் கேட்கிறார். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் ஆம் என்றவுடன், 'வந்தே மாதரம்' பாடலைப் பாடி காண்பிக்கிறார்.

    உடனே அதை தனது செல்போனில் வீடியோ எடுத்த ஏ.ஆர்.ரகுமான் தனது இணைய பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


    • இயக்குனர் எழில் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

    துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்கு ராஜா'. இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். மேலும், ரவி மரியா, சிங்கம் புலி, சூரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.


    மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

    கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாகவும் இந்த படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படம் நேற்று ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வெளியான முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் தனுஷுக்கு மாலை போட்டு பாராட்டினார். மேலும், படத்திற்கு பிளாக்பஸ்டர் ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது. பொங்கலுக்கு பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படம் பொங்கல் ரேஸில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' திரைப்படம் வெளியானதையடுத்து நடிகர் அருண்விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய், கதாநாயகி எமி ஜாக்சன் ஆகியோர் ஈஷா ஆதியோகியை தரிசித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படம் முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படம் நேற்று ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வெளியான முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' படக்குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து 'கேப்டன் மில்லர்' என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ், சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. இப்படம் இன்று ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது. இப்படத்தின் முதல் காட்சியை நடிகர் தனுஷ் தன் மகன்களுடன் கண்டுகளித்தார்.


    இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதைத்தொடர்ந்து கமலின் அடுத்த படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், கமலின் 237-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கமலின் 237-வது படத்தை ஸ்டண்ட் இயக்குனர் அன்பறிவு இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2025-யில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


    • சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'.
    • இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்துன ராமசாமி தான நீ' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார் பாலா.
    • இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்தும் வருகிறார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்தும் வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார்.

    இந்நிலையில், நடிகர் பாலா தற்போது மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது. அனைவராலும் அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல முடியவில்லை. அதனால் தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம்.

    இந்த இலவச ஆட்டோ காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். அனகாபுதூர், பம்மல், பல்லாவரம் போன்ற இடங்களை சுற்றியுள்ள மக்கள் மருத்துவத்திற்காக இந்த ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதை பார்த்துவிட்டு மற்ற பகுதிகளுக்கு ஆட்டோ வழங்குவேன். இந்த ஆட்டோ ஒட்டுனரின் சம்பளம் மற்றும் பெட்ரோல் என் சொந்த செலவில் வழங்கப்படும்" என்று கூறினார்.

    • ஹிருத்திக் ரோஷன் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

    பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான 'கஹோ நா... பியார் ஹை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.


    அதிலும் இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. தன் ஒவ்வொரு படத்திலும் தன் நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி தன் திறமையால் தனக்கான மையில்கல்லை எட்டியுள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷன் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.


    இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ரசிகர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவு பரிமாறி கொண்டினார்கள்.

    • நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' .
    • இந்த படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்து வருகின்றனர்.

    இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.


    மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் சமீபத்தில் வீடியோ வெளியானது.


    கல்கி 2898- ஏடி போஸ்டர்

    இந்நிலையில், 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

    வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்-நடிகைகள் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

    இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்து வருகிறது.


    நேற்று ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். படப்பிடிப்பு முடிந்த பின் கேரவன் செல்லும் போதும், மீண்டும் ஒட்டலுக்கு திரும்பும் போதும் ரசிகர்களை பார்த்து ரஜினி கை அசைத்தபடி சென்றார். இன்றும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.

    ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×