முதல் நாளில் முதலிடம் பிடித்த கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
முதல் நாளில் முதலிடம் பிடித்த கேப்டன் மில்லர்
Published on: 

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. இப்படம் இன்று ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது. இப்படத்தின் முதல் காட்சியை நடிகர் தனுஷ் தன் மகன்களுடன் கண்டுகளித்தார்.

இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com