என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • "யு1 வைப்ஸ்" (#U1vibes) என்கிற ஹேஷ்டேக் சேர்த்து மின்மினியில் பதிவிட வேண்டும்.
    • யுவன் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது.

    உலகின் முதல் தமிழ் ஹைப்பர் லோக்கல் செயலியான மின்மினி பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக் லேபிள் நிறுவனமான U1 ரெகார்டஸ்-வுடன் இணைந்து ஹேஷ்டேக் "யு1 வைப்ஸ்" (#U1vibes)என்கிற சிறப்பான போட்டியை அறிவித்துள்ளது.

    யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள தனிப்பாடலான "ஷி இஸ் எ கில்லர்" (She's a Killer) என்ற பாடலை கொண்டாடுவதற்காக மின்மினி செயலி இந்த சிறப்பான போட்டியை அறிவித்துள்ளது.

    ஜூலை 5 ம் தேதி தொடங்கியுள்ள இந்த போட்டி, ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ளது. "ஷி இஸ் எ கில்லர்" (She's a Killer) என்கிற பாடலுக்கு உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை எடுத்து அதை "யு1 வைப்ஸ்" (#U1vibes) என்கிற ஹேஷ்டேக் சேர்த்து மின்மினியில் பதிவிட வேண்டும்.

    இந்த போட்டி குறித்து மின்மினி செயலியின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், "#U1vibes என்கிற இந்த போட்டிக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.

    மேலும், இந்த போட்டி மூலம் தாங்கள் ரசிக்கும் இசைக்கு ஏற்ப தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், தனித்துவமான ஒரு அனுபவத்தை பெறவும் எங்களது பயனர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

    இந்த போட்டி குறித்து இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது.

    அந்தக் காணொளியில் "மின்மினி செயலியின் பயனர்களுக்கு ஆச்சர்யமூட்டும் ஏராளமான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது எனவே ஷி இஸ் எ கில்லர்"(She's a Killer) பாடலை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி அதை மின்மினி செயலியில் பதிவிடுங்கள்" என யுவன் சங்கர் ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2019 ஆம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளியான காளிதாஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
    • காளிதாசர் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

    ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் . இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளியான காளிதாஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு 2ம் பாகம் உருவாகிறது. 

    இரண்டாவது பாகத்தையும் செந்தில் வேல் தான் இயக்குகிறார். பரத், அஜய் கார்க்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

    இந்நிலையில், காளிதாசர் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வணங்கான் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
    • ரசிகர்கள் மத்தியில் வணங்கான் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் அவரால் நடிக்க முடியவில்லை அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா.

    ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

    அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.

    இந்நிலையில், வணங்கான் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

    அதிரடி ஆக்ஷன் களத்தில் அமைந்துள்ள வணங்கான் டிரைலர் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் வணங்கான் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.

    கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு,  மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகிய புதிய படம் "ஹிட் லிஸ்ட்".
    • இப்படம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகியது.

    இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகிய புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே பாசிட்டிவ் ரெஸ்பான்சை பெற்றது. அறிமுக நாயகனான விஜய் கனிஷ்காவின் நடிப்பு பெருமளவு பாராட்டுப்பெற்றது.

    ஒரு சைக்கோ கொலைக்காரன் வித்தியாசமான முறையில் கதாநாயகனின் குடும்பத்தை கொலை செய்கிறான். அதை எப்படி கதாநாயகன் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் ஒன் லைன்.

    படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் அஹா தமிழ் வாங்கியுள்ளது. இந்த ஓடிடி தளத்தில் நாளை திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் பார்க்க தவர விட்ட ரசிகர்கள் ஓடிடியில் கண்டு களியுங்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
    • மனரீதியான பிரச்சினைகளையும் சந்தித்தேன்.

    இந்தி திரை உலகில் பிரபல தயாரிப்பாளராகவும் வர்ணனையாளராகவும் தொகுப்பாளராகவும் திகழ் பவர் கரண் ஜோகர். முன்னணி கதாநாயகர்களை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். காபி வித் கரண் ஜோகர் நிகழ்ச்சி மூலம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கரண் ஜோகர் பாடி டிஸ் மார்பியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி கரண் ஜோகர் கூறியதாவது:-

    எனக்கு 8 வயதில் இருந்தே பாடி டிஸ் மார்பியா என்ற நோய் இருக்கிறது. என் தோற்றத்தை பற்றி எதிர்மறை சிந்தனை ஆக இருக்கும். இதையடுத்து பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொண்டேன் மனரீதியான பிரச்சினைகளையும் சந்தித்தேன்.

    உடல் தோற்றத்தை வெளியில் காட்டக் கூடாது என்பதற்காக தளர்வான உடைகளை எல்லாம் அணிந்து கொள்வேன். உடல் ரீதியாக நான் நன்றாக இருப்பதாக பலர் சொன்னாலும் மனரீதியாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
    • பல்வேறு கருத்துக்களை வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும் நடிகருமான பிரேம்ஜி சமீபத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வெங்கட்பிரபு சகோதரரான பிரேம்ஜி திருமண விழாவில் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினர்.

    திருமண விழா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தொடர்ந்து இருவரும் தேனிலவுக்கு சென்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் பிரேம்ஜி வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் பிரேம்ஜி துணி துவைப்பது, வீடு துடைப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை அவரது மனைவி இந்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்தோடு அதன் பின்னணி பாடல்களாக ஆடிய ஆட்டம் என்ன என்ற பாடலை சேர்த்து வெளியிட்டுள்ளார்.

    இந்த புகைப்படங்களுக்கு எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு... என் தலைவனுக்கு வந்த சோதனையை பாரு... என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன்.
    • இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன். இவர் இயக்கிய முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்று இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்து வருகிறார்.

    பல்வேறு திரைப்படங்களில் ஏராளமான கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவர் கடைசியாக தயாரித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இதைத் தொடர்ந்து இவர் தயாரித்து, இயக்கிய படம் இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்த நிலையில், இவர் இயக்கி, தயாரித்திருக்கும் அடுத்த படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படம் ஒரு திரில்லர் பாணியில் கதைக்களம் அமைந்துள்ளது.

    இப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே நாளில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.

    அண்மையில் படத்தை குறித்து சர்ச்சை ஒன்று எழுந்தது. படத்தின் VFX காட்சிகளை கையாண்ட நிறுவனம் குறித்த நேரத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை செய்து தரவில்லை எனவும், ஒப்பந்தத்தில் போடப்பட்ட தொகையை விட அதிகமாக கேட்கிறார்கள் என கோயம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் பார்த்திபன். அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த நிறுவனமும் பதிலுக்கு படத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.

    இந்நிலையில் பார்த்திபன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். அதன்படி படத்தின் டிக்கெட் விலையை 100 ரூபாய்க்கு குறைத்துள்ளார். படம் வெளியாகி சில நாட்களுக்கு மட்டுமே இச்சலுகை என குறிப்பிட்டுள்ளார்.

    தற்பொழுது அனைத்து தனியார் கார்பரேட் திரையரங்குகளிலும் ஒரு சிக்கெட்டின் விலை சராசரியாக 150 முதல் 200 ரூபாய் வரை இருக்கிறது. இதனால் பார்த்திபனின் இந்த முடிவு பாராட்டுக்குறியது.

    இதுக் குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் " எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை, பட் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு 100/- மட்டுமே, இதில் நட்டமே இல்லை, வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமே" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'.
    • படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் அவரால் நடிக்க முடியவில்லை அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

    அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.

    படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இதுக்குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
    • இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

    படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. படம் வெற்றிகரமாக 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

    மகாராஜா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    திரையரங்கில் பார்க்க தவரவிட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி படத்தை பார்க்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வித்தியாசமான ஒரு நல்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும்.
    • சாய்பல்லவிக்கு காமெடி படத்தில் நடிக்க ஆசை

    தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியில் தயாராகும் ராமாயண படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவிக்கு காமெடி படத்தில் நடிக்க ஆசை உள்ளதாம்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'நான் தெலுங்கில் நடித்த பிதா, லவ் ஸ்டோரி, சியாம் சிங்கராய், விராட்ட பருவம், எம்சிஏ இப்படி எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்கள் தான்.

    நடனத்தின் மூலமும் எனக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்த படங்கள் இவை. ஆனால் நான் இந்த படங்களை எல்லாம்விட வித்தியாசமான ஒரு நல்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

    அந்த படத்தில் எனக்கென்று முழு அளவிலான காமெடி கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நடிக்க சம்மதிப்பேன்' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார்.
    • சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது.

    நடிகை அஞ்சலி ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற கேங்க்ஸ் ஆப் கோதாவரி என்ற தெலுங்கு படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதில் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன.

    தற்போது மீண்டும் பஹிஷ்கரன் என்ற வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட தொடராக உருவாகி உள்ளது. இந்த தொடரை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார்.

    இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, 'இந்த தொடரில் புஷ்பா என்ற பெண் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அப்பாவியான விலைமாதுவாக இருந்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது. புஷ்பா என்றால் மர்மம். பிரச்சினைகளை எப்படி சமாளித்து அவள் முன்னேறினாள் என்ற கதையம்சத்தில் உருவாகி உள்ளது' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×