பாலாவின் `வணங்கான்' - இன்று மாலை முதல் டிரைலர்

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பாலாவின் `வணங்கான்' -  இன்று மாலை முதல் டிரைலர்
Published on

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் அவரால் நடிக்க முடியவில்லை அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.

படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இதுக்குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com