அதிரடியாக தெலுங்கு வெப்தொடரில் களமிறங்கிய அஞ்சலி

வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார்.சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது.
அதிரடியாக தெலுங்கு வெப்தொடரில் களமிறங்கிய அஞ்சலி
Published on

நடிகை அஞ்சலி ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற கேங்க்ஸ் ஆப் கோதாவரி என்ற தெலுங்கு படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதில் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன.

தற்போது மீண்டும் பஹிஷ்கரன் என்ற வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட தொடராக உருவாகி உள்ளது. இந்த தொடரை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார்.

இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, 'இந்த தொடரில் புஷ்பா என்ற பெண் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அப்பாவியான விலைமாதுவாக இருந்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது. புஷ்பா என்றால் மர்மம். பிரச்சினைகளை எப்படி சமாளித்து அவள் முன்னேறினாள் என்ற கதையம்சத்தில் உருவாகி உள்ளது' என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com