பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' படத்தின் சூட்டிங்கை தொடங்கி வைத்தார் சிவகார்த்திகேயன்

2019 ஆம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளியான காளிதாஸ் நல்ல வரவேற்பை பெற்றது. காளிதாசர் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.
பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' படத்தின் சூட்டிங்கை தொடங்கி வைத்தார் சிவகார்த்திகேயன்
Published on

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் . இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் வெளியான காளிதாஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு 2ம் பாகம் உருவாகிறது. 

இரண்டாவது பாகத்தையும் செந்தில் வேல் தான் இயக்குகிறார். பரத், அஜய் கார்க்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இந்நிலையில், காளிதாசர் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com