எப்படி இருந்த நா... இப்படி ஆயிட்டேன் கதறும் பிரேம்ஜி

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.பல்வேறு கருத்துக்களை வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
எப்படி இருந்த நா... இப்படி ஆயிட்டேன் கதறும் பிரேம்ஜி
Published on

இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும் நடிகருமான பிரேம்ஜி சமீபத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வெங்கட்பிரபு சகோதரரான பிரேம்ஜி திருமண விழாவில் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினர்.

திருமண விழா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தொடர்ந்து இருவரும் தேனிலவுக்கு சென்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் பிரேம்ஜி வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பிரேம்ஜி துணி துவைப்பது, வீடு துடைப்பது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை அவரது மனைவி இந்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்தோடு அதன் பின்னணி பாடல்களாக ஆடிய ஆட்டம் என்ன என்ற பாடலை சேர்த்து வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு... என் தலைவனுக்கு வந்த சோதனையை பாரு... என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com