என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி நடிப்பில் உருவாகி வரும் ‘தண்ணி வண்டி’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்ணி வண்டி. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், 'ஆடுகளம்' நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, 'பிச்சைக்காரன்' மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.
வெங்கட் (ஒளிப்பதிவு), வீர சமர் (கலை), ஏ.எல்.ரமேஷ் (படத்தொகுப்பு), மோசஸ் (இசை), ஏ.வி.பழனிசாமி (தயாரிப்பு நிர்வாகம்), மோகன்ராஜ் - கவிஞர் சாரதி - கதிர் மொழி (பாடல்கள்), சுப்ரீம் சுந்தர் (சண்டைப்பயிற்சி), தினேஷ் - தீனா (நடனம்), புச்சி (ஆடைகள்), மூவேந்தர் (மேக்கப்), மூர்த்தி (ஸ்டில்ஸ்) மற்றும் ஸ்ரீதர் (டிசைனர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.
ஜி சரவணன் அவர்களின் ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், பல கோடி மதிப்புள்ள கேரவன் ஒன்றை வாங்கி அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களிள் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவர் விலை உயர்ந்த கேரவன் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் உள் மற்றும் வெளி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
சுமார் பல கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு பால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லு அர்ஜூன். மேலும் ஆங்கிலத்தில் ஏஏ என்று தன்னுடைய சிம்பிளை அதில் பதித்துள்ளார். பல கோடிக்கு வாங்கிய இந்த கேரவனுக்கு மேலும் கூடுதலாக ரூ. 3 கோடியை டிசைனுக்கு செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளது, “என் வாழ்க்கையில் நான் பெரிதாக எதையாவது ஒன்றை வாங்கினால், எனக்கு ஒன்றே ஒன்றுதான் என் நினைவில் தோன்றும். அது என்ன என்றால், ‘மக்களின் அன்பு. அந்த அன்புதான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது' மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘தண்ணி வண்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகும் படம் ‘தண்ணி வண்டி’. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் மாணிக்க வித்யா கூறும்போது, “தண்ணீர் பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம். அதே நேரத்தில் கதை, நீர் நெருக்கடியை பற்றியதும் அல்ல, எல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை" என்றார்.

இந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி சரவணனின் ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.
பாடகி, நடிகை என பன்முகம் கொண்ட ஆண்ட்ரியாவை ரஜினியின் இளைய மகளும் இயக்குனருமான சவுந்தர்யா புகழ்ந்து பேசியிருக்கிறார்.
ரஜினியின் இளைய மகளும் இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் தற்போது நடிகை ஆண்ட்ரியாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதில், ‘நாம் எத்தனை பேரை நண்பர்களாக வைத்திருக்கிறோம் என்பது விஷயமல்ல.
எத்தனை பேர் நம்மிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பதுதான் விஷயமே. அந்த வகையில், வாழ்க்கை முழுவதுக்கும் உண்மையான நட்பாக இருக்கும் ஒருவரைப் பெற்றிருக்கிறேன்’ என புகழ்ந்து இருக்கிறார்.

சவுந்தர்யாவும் ஆண்ட்ரியாவும் இதுவரை இணைந்து பணியாற்றியதில்லை. பார்ட்டிகளுக்கு செல்லும்போது இருவரும் நெருங்கிய தோழிகளாகி இருக்கிறார்கள் என்கின்றனர்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ளார்.
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இப்படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டீசரில் அமலா பால் நிர்வாணமாக காட்சிகள் இடம்பெற்றதால் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் இன்று வெளியிட்டார். பெட் கட்டுறீயா என்று தொடங்கும் இந்த டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ரசிகர்களுக்கு புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டு சிறப்பு விருந்து கொடுத்திருக்கிறார்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு முதன் முதலாக உலக கோப்பையை வென்றது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, ‘83’ என்ற பெயரில் பாலிவுட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தை ‘பஜ்ரங்கி பைஜான்’, ‘ஏக் தா டைகர்’ படங்களின் இயக்குநர் கபீர் கான் இயக்குகிறார். இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, நடிகர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

இன்று ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு 83 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் காட்சி அளிக்கிறார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ படத்தில் பிரபல இரட்டையர்கள் இணைந்திருக்கிறார்கள்.
'இறுதிச்சுற்று' படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கி வரும் படம் 'சூரரைப் போற்று'. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து குனீத் மோங்கா இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை நிகேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இப்படத்தில் காதலில் சொதப்புதவது எப்படி? வாயை மூடி பேசவும் படங்களில் நடித்த அர்ஜூனனின் இரட்டைக் குழந்தைகளான இலன் மற்றும் இயல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘ஓ பேபி’ படத்திற்கு ரசிகர்கள் பெரிய கட்-அவுட் வைத்து அவரை பயப்பட வைத்திருக்கிறார்கள்.
சமந்தா நடித்துள்ள ‘ஓ பேபி’ தெலுங்கு படம் நேற்று திரைக்கு வந்தது. இதையொட்டி ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சமந்தாவுக்கு, ரசிகர்கள் நடிகர்களுக்கு இணையாக பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். முதல் தடவையாக அவருக்கு கட் அவுட் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
“ஐதராபாத் தியேட்டரில் ரசிகர்கள் எனக்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை பார்த்து பயமாகவும் இருக்கிறது. நான் ஏற்கனவே நடித்த யூ டர்ன் படம் நன்றாக உள்ளது என்று பலர் பாராட்டியும் வசூல் எதிர்பார்த்தபடி இல்லை. எந்த படத்துக்கும் வசூல் முக்கியம்.

நல்ல வசூல் கிடைத்தால்தான் சினிமா துறை நன்றாக இருக்கும். வசூல் வரவில்லை என்றால் எவ்வளவு நல்ல படத்தில் நடித்தாலும் திருப்தி வராது. எனது கணவர் சைதன்யாவிடம், எனக்கு கட் அவுட் வைத்து இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனர். படத்துக்கு வசூல் வரவில்லை என்றால் ஓடிப்போய்விடுவேன் என்று தமாஷாக கூறினேன்.
இவ்வாறு சமந்தா கூறினார்.
இயக்குனர் ஒருவரிடம் கதையை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதற்காக அந்த படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.
காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்து இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க மணிகண்டன் விரும்பி அணுகினார். ஆனால் ரஜினி நடிக்கவில்லை. அதற்கான காரணத்தை மணிகண்டன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:- கதையை எழுதி முடித்த உடன் இந்த கதை சொல்லும் கருத்து மிகப்பெரியது. எனவே ரஜினி போன்ற ஒரு கதாநாயகன் சொன்னால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதையை சொன்னேன். ஆனால் அவர் இந்த கதையில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. நான் அவரை சந்தித்து கதை சொன்ன அடுத்த வாரம் அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்’.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும், தமிழில் 4 ஜி படத்தில் நடிக்கும் காயத்ரி சுரேஷ், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கதாநாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ‘மீடூ’வில் தொடர்ந்து புகார்கள் வருகிறது. சில இயக்குனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இப்போது மலையாள நடிகை காயத்ரி சுரேசும் பாலியல் புகார் கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த காயத்ரி சுரேஷ் தமிழில் வெங்கட் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 4ஜி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
காயத்ரி சுரேஷ் அளித்த பேட்டியில் “என்னை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறினர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று கேட்டு செல்போனில் குறுந்தகவலும் அனுப்பினர். அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு நான் பதில் அளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கிவிடுவார்கள்” என்று கூறினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள பட உலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக ஏற்கனவே சில நடிகைகள் புகார் கூறியிருந்தனர். மரியான் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த பார்வதியும் படுக்கைக்கு சம்மதிக்காததால் பல படவாய்ப்புகளை இழந்தேன் என்றார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தில், இந்துஜா, சத்யராஜ், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே ரசிகர்கள் பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பேன் மேடு போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், ரசிகர்களின் இந்த முயற்சியை ஊக்கப்படுத்தும் விதமாக படக்குழு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Share your fan-made posters of #Bigil today and get a chance to be featured on our page! 😎#FanArtisticFriday#FanArtFriday@archanakalpathipic.twitter.com/pJf4Bv0xJZ
— AGS Entertainment (@Ags_production) July 5, 2019
அதில் உங்களுடைய பேன் மேடு போஸ்டர்களை #FanArtisticFriday #FanArtFriday என்ற ஹேஷ்டாகில் பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து 'ஆண்கள் ஜாக்கிரதை' என்ற தமிழ் படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் 'ஆண்கள் ஜாக்கிரதை'. இந்த படத்தை முத்து மனோகரன் இயக்கியுள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், 'இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.

கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கும் அதுதான் இந்த படத்தின் ஹைலைட் காட்சி என்றார் இயக்குனர்.
இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். படம் விரைவில் வெளியாக உள்ளது.






