என் மலர்
சினிமா செய்திகள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பிகில்' படம் குறித்த முக்கிய தகவல் இன்று மாலை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிகில் படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது பிகில்' படத்தின் சிங்கிள் டிராக், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், ரசிகர்கள் ஆச்சரியப்படும் ஒரு அறிவிப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா, விக்னேஷ் காந்த், கஞ்சா கருப்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் விமர்சனம்
9 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் களவாணி. அந்த கதைக்களத்தில், இடம்பெற்ற கதாபாத்திரங்களை கொண்டு புதுமையான கதையுடன் களவாணி2 என்ற கலகலப்பான படத்தை கொடுத்து இருக்கிறார் சற்குணம். விமல் ஊருக்குள் களவாணித்தனம் செய்துகொண்டு திரியும் இளைஞர். அவரது நண்பர் விக்னேஷ் காந்த். விமலை வெளிநாட்டுக்கு வேலைக்கு போக சொல்லி அப்பா இளவரசு கண்டிக்கிறார். ஆனால் அம்மா சரண்யாவோ விமலுக்கு ஆதரவு கொடுக்கிறார்.

விமல் போட்டியிடுவது குறித்து ஊரில் யாருமே கவலைப்படவில்லை. ஒரு கட்டத்தில் துரை சுதாகரால் அவமானப்படுத்தப்படும் விமல் சீரியசாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை.

களவாணி முதல் பாகத்தில் பார்த்த அறிக்கியை கண்முன் கொண்டு வந்து இருக்கிறார். அவர் விக்னேஷ் காந்துடன் சேர்த்து கஞ்சா கருப்பை ஏமாற்றும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. விமலுக்கு பக்கபலமாக விக்னேஷ் காந்த். மைண்ட் வாய்சில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஓவியாவுக்கு இதில் பாவடை தாவணியில் வரும் வேடம். விமலுக்கு தைரியம் சொல்லும் இடங்களில் கவனிக்க வைக்கிறார்.

நடராஜன் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.மணி அமுதவன், வி2, ரொனால்டு ரீகன் கூட்டணியில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ராஜா முகமதுவின் படத்தொகுப்பில் கச்சிதம். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்து இருக்கிறது. இந்த களவாணியும் நம்மை ரசிக்க வைக்கிறான்.
மொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து.
இப்படியே சென்றுகொண்டு இருக்கும்போது ஊரில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதில் விமலின் மாமா துரை சுதாகர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓவியாவின் அப்பாவும் முன்னாள் பிரசிடெண்டுமான வில்லன் ராஜ் போட்டியிடுகிறார். இவர்களிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்ற நோக்கத்தில் விமலும் போட்டியிடுகிறார்.

விமல் போட்டியிடுவது குறித்து ஊரில் யாருமே கவலைப்படவில்லை. ஒரு கட்டத்தில் துரை சுதாகரால் அவமானப்படுத்தப்படும் விமல் சீரியசாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை.
தஞ்சை கிராமங்களை அப்படியே கண்முன் நிறுத்துவது முதல், நகைச்சுவை, பாடல்கள் என எந்த விஷயத்திலும் களவாணி 2 களவாணிக்கு முன் சோடை போகவில்லை. கலகலப்பாக படத்தை நகர்த்தி கடைசி அரை மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள். விமலுக்கு இது அல்வா சாப்பிடுவது போன்ற வேடம்.

களவாணி முதல் பாகத்தில் பார்த்த அறிக்கியை கண்முன் கொண்டு வந்து இருக்கிறார். அவர் விக்னேஷ் காந்துடன் சேர்த்து கஞ்சா கருப்பை ஏமாற்றும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. விமலுக்கு பக்கபலமாக விக்னேஷ் காந்த். மைண்ட் வாய்சில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஓவியாவுக்கு இதில் பாவடை தாவணியில் வரும் வேடம். விமலுக்கு தைரியம் சொல்லும் இடங்களில் கவனிக்க வைக்கிறார்.
இளவரசுவும் சரண்யாவும் தஞ்சாவூர் கிராமத்து தம்பதியை தங்கள் அனுபவ நடிப்பால் கொண்டு வந்து இருக்கிறார்கள். துரை சுதாகர் தனது கதாபாத்திரத்துக்கு மிக சரியாக பொருந்துகிறார். விமலை அவமானப்படுத்தும் இடத்தில் சிறப்பான நடிப்பு. வில்லன் ராஜுக்கும் இது முதல் படம் போல தெரியவில்லை. மசானியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.

நடராஜன் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.மணி அமுதவன், வி2, ரொனால்டு ரீகன் கூட்டணியில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ராஜா முகமதுவின் படத்தொகுப்பில் கச்சிதம். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்து இருக்கிறது. இந்த களவாணியும் நம்மை ரசிக்க வைக்கிறான்.
மொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து.
சாதாரணமான எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புவதாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘த அயன்லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் நித்யாமேனன். சைக்கோ என்ற இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்கிறார். ‘மிஷின் மங்கல்’ என்ற படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார். மலையாளத்திலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:- “நடிகர்-நடிகைகளை ரசிகர்கள் பார்க்கும் கோணம் வேறு. எங்களை நாங்களே பார்த்துக் கொள்ளும் கோணம் வேறு. பிரபலமான நடிகை என்ற உணர்வு எனக்கு இல்லை. சாதாரண பெண்ணாகவே என்னை பார்க்கிறேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனியாக இருக்கும்போது மற்றவர்களைபோல் நானும் ஒரு பெண் என்றுதான் சிந்திப்பேன்.
நடிகை என்ற ரீதியின் ரசிகர்களுக்கு என்மீது எதிர்பார்ப்புகள் இருக்கலாம். வெளியே இருந்து என்னை ஒரு நடிகையாக பார்த்து ஏற்படுத்திகொண்ட எண்ணங்கள் அவை. ஆனால் என்னை பொறுத்தவரை நடிகை நித்யாவாக இல்லாமல் சாதாரணமான எளிமையான நித்யாவாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
படப்பிடிப்பில் வேலை செய்து சோர்வாகும் போதெல்லாம் இயற்கை எனக்கு சக்தி கொடுக்கிறது. நம்மோடு நாம் தொடர்பு கொண்டால்தான் இயற்கையோடு தொடர்பு கொள்ள முடியும். எனக்கு தேவையான சக்தி எல்லாவற்றையும் இயற்கையில் இருந்துதான் எடுத்துக்கொள்கிறேன். இயற்கையை மட்டுமே எனது வாழ்வின் வழிகாட்டியாக பார்க்கிறேன்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
பாவெல் நவகீதன் இயக்கத்தில் அருண் ராம் கேஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா நடித்துள்ள ’வி1’ படத்தின் முன்னோட்டம்
வி1 எனப் பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. வி1 என்ற எண்ணை கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது.
அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “வி1” படத்தின் கதை.

துப்பறியும் திரில்லரான இப்படம் முழுக்க விருவிருப்பும் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளையும் அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன். நாயகன்- அருண் ராம் கேஸ்ட்ரோ, நாயகி- விஷ்ணுபிரியா, குணச்சித்திர வேடங்கள்- லிஜீஷ், மைம் கோபி, லிங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆதி போட்டோஸ் நிறுவனம் தயாரிக்கும் விருது படத்தை 17 வயதே ஆன இளம் இயக்குனர் ஆதவன் இயக்கியுள்ளார்.
ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி தயாரிக்கும் படம் “விருது”. இதில் கதாநாயகனாக பதினைந்து வயதே நிரம்பிய அச்சயன் என்கிற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு மன்மதராசா புகழ் தீனா இசையமைக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் 17 வயது நிரம்பிய ஆதவன். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:-
“ பார்வையற்ற தந்தையை கவனித்து கொள்ளும் மகனை பற்றிய கதை இது. தந்தைக்கும் மகனுக்கு மான உறவை மிக அழுத்தமாக சொல்லி இருக் கிறோம். படத்தில் ஐந்து பாடல்களும், நான்கு சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுவதும் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லாபுரம், புத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
இப்படத்திற்கு மன்மதராசா புகழ் தீனா இசையமைக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் 17 வயது நிரம்பிய ஆதவன். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:-
“ பார்வையற்ற தந்தையை கவனித்து கொள்ளும் மகனை பற்றிய கதை இது. தந்தைக்கும் மகனுக்கு மான உறவை மிக அழுத்தமாக சொல்லி இருக் கிறோம். படத்தில் ஐந்து பாடல்களும், நான்கு சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுவதும் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லாபுரம், புத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயன்தாராவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக 'லவ் ஆக்சன் டிராமா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லனாக சின்னத்துரை பிரபலம் பிரஜன் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஓணம் பண்டிகையின் போது திரைக்கு வரவுள்ளது.
உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதின் தேர்வுக்குழுவில் இந்திய பிரபலங்கள் சிலர் இடம் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும். அடுத்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான தேர்வுக் குழுவினர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை தற்போது ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி 59 நாடுகளைச் சேர்ந்த 842 புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஆஸ்கர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், அனுபம் கேர் மற்றும் ரித்தேஷ் பத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.
நடிகர் சிம்பு திரையுலகிற்கு வந்து 35 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக மதுரையில் அவரது ரசிகர்கள் 500 அடி நீள போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சிம்பு தன்னுடைய தந்தையான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான 'உறவை காத்த கிளி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வெள்ளித்திரையில் அவர் கால்பதித்து 35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தல்லாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் 500 அடி நீள பிரம்மாண்ட போஸ்டரை அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். அதில் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த புகைப்படங்களை சிம்பு ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த போட்டோவும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் விஜய்க்கு 440 அடியில் போஸ்டர் ஒட்டப்பட்டது. தற்போது அதை மிஞ்சும் வகையில் 500 அடியில் சிம்புவுக்கு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய இந்தி பட தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் வெளியான 'கொலைகாரன்' படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, நல்ல வசூல் செய்தது.
இந்நிலையில், இந்த படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை பெற இந்தி பட அதிபர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு அதன் உரிமையை கொடுப்பது என்று `கொலைகாரன்’ பட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக இந்தி பட அதிபர்களுக்கு `கொலைகாரன்’ படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த இந்தி பட அதிபர்கள், இந்த படத்தை வாங்குவதற்கு போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் ஒரே இரவில் வாரிசுகள் முன்னுக்கு வந்து விடுகிறார்கள், ஆனால் சினிமாவில் அப்படியில்லை என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. உதயநிதி தீவிர அரசியலில் இறங்கி ஒருசில மாதங்களே ஆன நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய பதவியா? என அரசியல் விமர்சகர்கள் உதயநிதியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள 'அசுரகுரு' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாக்யராஜ், 'சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள்' என கூறினார்.

இதன்மூலம் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து பாக்யராஜ் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
‘ஆடை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அமலாபால், பாஞ்சாலிக்கே 5 கணவர்கள் தான், எனக்கு 15 கணவர்கள் என கூறினார்.
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இப்படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளதால் தணிக்கை குழு இப்படத்திற்கு ''ஏ'' சான்றிதழ் அளித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற 19-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
அதில் அமலாபால் பேசுகையில், "ஆடை படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், அந்த காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பு அளித்தனர்.

அந்த காட்சி படமாக்கப்பட்டபோது கேமரா மற்றும் லைட்டிங் குழுவில் உள்ள 15 பேர் தவிர அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான் பாதுகாப்பாக இருந்தனர்.
ஆனால் எனக்கு இந்த 15 பேரும் கணவர்கள் போல தேவையான முழு பாதுகாப்பை அளித்தனர். இந்த அளவுக்கு அவர்கள் எனக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால் என்னால் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது'' என அவர் கூறினார்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி நடிப்பில் உருவாகி வரும் ‘தண்ணி வண்டி’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்ணி வண்டி. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், 'ஆடுகளம்' நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, 'பிச்சைக்காரன்' மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.
வெங்கட் (ஒளிப்பதிவு), வீர சமர் (கலை), ஏ.எல்.ரமேஷ் (படத்தொகுப்பு), மோசஸ் (இசை), ஏ.வி.பழனிசாமி (தயாரிப்பு நிர்வாகம்), மோகன்ராஜ் - கவிஞர் சாரதி - கதிர் மொழி (பாடல்கள்), சுப்ரீம் சுந்தர் (சண்டைப்பயிற்சி), தினேஷ் - தீனா (நடனம்), புச்சி (ஆடைகள்), மூவேந்தர் (மேக்கப்), மூர்த்தி (ஸ்டில்ஸ்) மற்றும் ஸ்ரீதர் (டிசைனர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.
ஜி சரவணன் அவர்களின் ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.






