என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனது பிறந்த நாளில் பனை மரங்களை நட்டு, உசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கி இருக்கிறார் நடிகர் சௌந்தரராஜா.
    சுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு (11-08) பனை விதைகளை நட்டதோடு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

    பொதுவாக பிறந்த தினத்தில் மரக்கன்றுகளை நடுவது அனைவராலும் அறிந்த விசயமே, ஆனால் பனைமரத்தின் பயன்கள் பலருக்கு தெரியாது அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டுபோன பிறகும் கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது. அதனை காக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பனை விதைகளை நட்டார்.

    நடிகர் சௌந்தரராஜா

    இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினுபாலு, ரோட்டரி சங்கசெயலாளர் பொன்ரமேஸ், லையன்ஸ் கிளப் பிரேம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் மற்றும் 58 கிராம கால்வாய் சங்கத்தினர், மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளை சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் பெண் குழந்தைகள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தரராஜா பேசுகையில், ‘எனது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை நட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதே போல் பசுமை ஆர்வலர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் பனை விதைகளை நட உள்ளோம். ஒவ்வொருவரும் தங்களது ஊரில் உள்ள கண்மாய் குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரி சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் அதனை முறையாக பராமரிக்கவும் வேண்டும். இளைஞர்கள் இதனை ஆர்வத்தோடு செய்ய வேண்டும். நான் இந்த பனை மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல், இதனை பராமரிப்பதை சவாலாக எடுத்துள்ளேன். இந்த கண்மாயை சுத்திகரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
    ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் ஆக்‌ஷன் படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.
    விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆம்பள’. இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது. இதில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரபு, சந்தானம், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

    காமெடி, ஆக்‌ஷன் கலந்து உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது விஷால், சுந்தர்.சி, ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் புதிய படம் மூலம் இணைந்துள்ளார். இந்த புதிய படத்திற்கு ‘ஆக்‌ஷன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். 

    ஆக்‌ஷன் படத்தில் விஷால்

    மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    சென்னையில் நடைபெற்ற கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை என்று கூறியிருக்கிறார்.
    சென்னையில் கதாசிரியர் கலைஞானத்திற்கான பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

    ரஜினி பேசும்போது, ‘கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கிறார் என்ற தகவல் எனக்கு இப்போதுதான் தெரியும். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவருக்கு நானே வீடு வாங்கித் தருகிறேன். தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். 

    கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ இயக்குநர்களோ இருக்க முடியாது. கதையில் சிக்கல் ஏற்பட்டால் உடனே கலைஞானத்தை தான் அழைப்பார்கள். இயக்குநர் தயாரிப்பாளருக்கு அடுத்து கதாசிரியரின் பெயரை முன்னிலைப்படுத்தி போட வேண்டும். 

    இயக்குநர் பாரதிராஜா என்னை தனிமையில் சந்திக்கும் போது தலைவர் என்று அழைப்பார். பாரதிராஜாவுக்கும், எனக்கும் கருத்துகள், எண்ணங்கள் மாறுபடலாம், ஆனால் நட்பு மாறாது. 

    ஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை, பைக், வீடு என சந்தோஷமாக இருக்க நினைத்தேன். வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன். பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. பைரவி படத்திற்குபின் நானும், கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது’ என்றார். 

    இந்த பாராட்டு விழாவில் கதாசிரியர் கலைஞானத்திற்கு ரஜினிகாந்த் தங்கச்சங்கிலி அணிவித்து ஆசிர்வாதம் பெற்றார்.
    விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சங்கத்தமிழன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
    விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார்.

    இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை காலை 10.30 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள்.
    ஐ, 2.0 படத்தில் நடித்து மிகவும் பிரபலமான எமி ஜாக்சன், தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், யோகா செய்யும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.
    தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.

    மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    எமி ஜாக்சன்

    எமி கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். சமீபத்தில் அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். தற்போது யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

    சமீபகாலமாக குழந்தை பிறப்பதற்கான உடற்பயிற்சிகளில் தீவிரமாக எமி ஜாக்சன் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரில்லா படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
    கொரில்லா படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது ‘ஜிப்ஸி’ திரைப்படம் உருவாகியுள்ளது. ராஜுமுருகன் இயக்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    இப்படத்தை தொடர்ந்து அருள்நிதியுடன் இணைந்து ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் ஜீவா. இந்நிலையில், றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா இயக்கத்தில் நடித்து வந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘சீறு’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.


    ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். அக்டோபர் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது என்று கன்னிராசி பட விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி கூறியுள்ளார்.
    விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள கன்னி ராசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது:-

    இந்த படத்தின் தயாரிப்பாளர் ‌ஷமீம் இப்ராகிம் ஒரு பத்திரிகையாளர். பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்து தற்போது தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். இந்த படத்தில 3 பாடல்கள் எழுதி இருக்கிறேன். அதில் ஒரு கொலு பாடலும் அடக்கம். அந்த பாடலில் கொலுவின் இடையில் பெரியார் படத்தை கொண்டு வந்து சாமி சிலைகளுக்கு இடையில் வைத்தார். அவர் தான் சொல்ல வந்த அரசியலை காட்டி விட்டார்.

    பாடலாசிரியர் யுகபாரதி

    காஷ்மீர் பற்றி ரஜினி பேசியதற்கு விஜய் சேதுபதி பேசியதற்குமான வித்தியாசம் இதுதான். இந்த படம் தேசிய விருது பெறும் என்று நான் சொல்ல மாட்டேன். காரணம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு எந்த தேசிய விருதும் தமிழ் சினிமாவுக்கு கிடைக்காது என்பது சமீபத்தில் தெரிந்து விட்டது.

    எனவே யாரும் தேசிய விருதுக்காக படம் எடுக்க வேண்டாம். விரக்தியில் நான் கூறிய வார்த்தைகள் இது. தேசிய விருது பட்டியலில் தமிழ் சினிமாவுக்கு இன்னும் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அஜித் மற்றும் இயக்குனர் எச்.வினோத் ஆகியோரை பாராட்டி இருக்கிறார்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘பிங்க்‘ படத்தின் ரீமேக். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 8-ந்தேதி வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்த வசூல் சுமார் ரூ.45 கோடியை தாண்டியுள்ளது.

    இந்த படத்தை பார்த்துவிட்டு அஜித் மற்றும் இயக்குனர் எச்.வினோத் இருவருக்கும் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி. ‘ரொம்ப நல்ல படம். சரியாக ரீமேக் பண்ணியிருக்கீங்க. ஹாட்ஸ் ஆப்’ என்று ரஜினி தெரிவித்ததாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

    ரஜினி, அஜித்

    ரஜினியின் பாராட்டால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது அஜித்தின் அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் எச்.வினோத். இதன் படப்பூஜை ஆகஸ்ட் 29-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
    மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, மகா மாநாடு என்ற படத்தை சிம்பு இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பே சிம்பு திடீரென நீக்கப்பட்டார். வேரொரு நடிகரை வைத்து மாநாடு படம் புதிய பரிணாமத்தில் உருவாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

    மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் சிம்பு அமைதி காத்து வந்தார். இந்நிலையில், அவரது தந்தை டி.ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பு அடுத்ததாக ’மகா மாநாடு’ என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும். சுமார் 125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ’சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

    பெற்றோருடன் சிம்பு

    சமீபத்தில் சிம்பு குடும்பத்துடன் பாங்காக்கிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது ’மகா மாநாடு’ படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இப்படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் உருவாக உள்ளதாகவும் அவர் கூறினார். 
    ஐசரி கணேஷ் தயாரிப்பில் வருண், யோகிபாபு நடிப்பில் உருவாகும் பப்பி படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டது.
    வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பப்பி’. இப்படத்தை நட்டு தேவ் இயக்கியுள்ளார். இப்படம் மூலம் வருண் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன் வனமகன், போகன் போன்ற படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். 

    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகிபாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். 

    பப்பி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதனை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டார். இது வெளியான சில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்டானது. இளைஞர்களை கவரும் வகையில், இந்த போஸ்டரில் எழுத்து-இயக்கம் ’முரட்டு சிங்கிள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 
    சமூக வலைதளமான டுவிட்டரில் பிகில்ரிங் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    நேற்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதனை அடுத்து 'பிகில்' படக்குழுவினர் அனைவரையும் விஜய் கௌரவித்தார். படத்தில் தன்னுடன் பணியாற்றிய 400 பேருக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்தார். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

    விஜய் பரிசளித்த பிகில் ரிங்குடன் படக்குழுவினர்

    இந்நிலையில், டுவிட்டரில் ‘BigilRing’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. படக்குழுவினருக்கு விஜய் அளித்த மோதிரம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு, அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
    ‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள வடிவேலு, வலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் நடிக்க போவதாக கூறினார்.
    ‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அதுதொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். வடிவேலு நடிப்பில் உருவாகும் படம் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. 

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’கொஞ்ச நாள் அமைதியா இருப்போம் என்று நான்தான் நடிக்காம இருந்தேன். ஆனால், இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. ஒதுக்கவும் ஒதுக்காது. என்னை சார்ந்த எல்லோருக்கும் அது தெரியும். 

    வடிவேலு

    எனது அடுத்த பட வேலைகளை செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்போறேன். அந்த அறிவிப்பே ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதை கேட்டாலே, ஜனங்க ஜாலியாகிடுவாங்க. வலுவான கூட்டணி, அசத்தலான கதைக்களம், மிரட்டுற பர்ஸ்ட் லுக் என்று தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கறமாதிரி பிச்சு உதறப்போறோம்’ என்று கூறியிருக்கிறார்.
    ×