என் மலர்
சினிமா செய்திகள்
ஆதி நடிப்பில் உருவாகி வரும் க்ளாப் படத்திற்காக ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக ஒரு தடகள ஸ்டேடியம் செட் உருவாக்க இருக்கிறார்கள்.
ஆதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘க்ளாப்’. பிக் பிரிண்ட் பிட்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்க, பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் இப்படம் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்ததை பற்றி தயாரிப்பாளர் கார்த்திகேயன் பெருமிதத்தோடு கூறுகிறார்.
‘எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. இதன் மூலம் இந்த படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்ட படியே, துரித வேகத்தில் இதை செய்து முடித்ததற்கு இயக்குனர் பிருதிவி ஆதித்யா, மற்றும் அவரது குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவருக்கு சிறப்பாக ஒத்துழைத்த கதாநாயகன் ஆதி, கதாநாயகி அகன்ஷா சிங், கிருஷ்ணா குரூப், நாசர் சார், பிரகாஷ் ராஜ் சார், முனீஸ்காந்த், மைம்கோபி, மற்றும் எல்லோரும் இந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

அறிமுக இயக்குனர்கள் எல்லோருமே கதை சொல்லும் விதத்திலும், அதை நேர்த்தியாக படமாக்குவதிலும் திறமையானவர்களாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அதை திட்டமிட்டு, தரம் கெடாமல் துரித நேரத்தில் முடிப்பது மட்டுமே அந்த இயக்குனரின் முழுமையான திறமை ஆகும். அந்த வகையில் இயக்குனர் பிருதிவியை அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் என்கிற முறையில் எனக்கு பெருமையே.
செப்டம்பர் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக, ஏராளமான பொருட்செலவில் ஒரு தடகள ஸ்டேடியம் உருவாக, அங்கே தொடங்குகிறது. இளையராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பதே மிக மிக பெருமை" என்றுக் கூறினார்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் படைத்த உலக சாதனைக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி செய்திருக்கிறார்.
73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.
இந்த சாதனை ஓவியத்தை விஜய் சேதுபதி துவக்கி வைத்திருக்கிறார். இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து வொண்டர் புக் ஆப் உலக சாதனை படைத்தது.

இது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரைய காரணம், பாலின சமத்துவத்தை பற்றி பேசிய ஒரே சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம்.

திருநங்கைகளை கேலி கிண்டலுக்கும் உருவாக்கும் அந்த சமூக மக்களுக்கு பாலின சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதிக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பாக நடந்த இந்திய சுதந்திர தின விழாவில, மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது என்று டேனியல் பாலாஜி கூறியுள்ளார்.
மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பாக இந்திய சுதந்திர தின விழா சென்னை எம்.எம்.டி.ஏ-வில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், அரசின் பல்வேறு துறைகளில் சிறந்து முறையில் பணியாற்றுபவர்களுக்கு ‘உழைப்பால் உயர்ந்தவர் விருது’ ஆகியவை வழங்கப்பட்டது.

அதன்பின் பேசிய திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ், ‘மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.

டேனியல் பாலாஜி பேசும்போது, ‘மாணவர்கள் படிப்பை கைவிட கூடாது. பள்ளி அளவில் இல்லாமல் கல்லூரி அளவில் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். நான் நன்றாக படித்து விட்டுதான் நடிகராக வந்தேன். சிறப்பாக படித்தால் சிறந்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்' என்றார்.
சமீபத்தில் வெளியான தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற பிரபல இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கிறார்.
இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் ‘அந்தாதுன்’ திரைப்படம் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

இது குறித்து தியாகராஜன் பேசுகையில், 'அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்' என்றார்.
தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது.
நடிகர் விக்ரமின் மகனு, ஆதித்ய வர்மா படத்தின் கதாநாயகனுமான துருவ் விக்ரம், முதல் படத்திலேயே புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
விக்ரம் மகன் துருவ், ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. ஏற்கனவே இந்த படத்தை வர்மா என்ற பெயரில் பாலா இயக்கினார்.
ஆனால் காட்சிகள் திருப்தியாக இல்லை என்று முழு படத்தையும் கைவிட்டு விட்டனர். அதன்பிறகு மீண்டும் புதிதாக ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், இசைகோர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் ஆதித்ய வர்மா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை துருவ் விக்ரம் பாடி உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதன் மூலம் முதல் படத்திலேயே பாடகராகவும் அவர் அறிமுகமாகி உள்ளார். விக்ரமும் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்ய வர்மா படத்தில் துருவுடன் பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அர்ஜுன் ரெட்டி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
நடிகை நயன்தாரா, இயங்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குடும்பத்தினர் அனைவருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.
வருகிற 16-ந்தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, இயங்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குடும்பத்தினர் அனைவருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். கோவில் பட்டாச்சாரியர் நயன்தாராவுக்கு அத்திவரதர் படத்தையும், கோவில் பிரசாதமும் வழங்கினார். தீடீரென நயன்தாரா கோவிலுக்குள் வந்ததால் சுற்றி இருந்த பொது மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வருகிற 16-ந்தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா, இயங்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குடும்பத்தினர் அனைவருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். கோவில் பட்டாச்சாரியர் நயன்தாராவுக்கு அத்திவரதர் படத்தையும், கோவில் பிரசாதமும் வழங்கினார். தீடீரென நயன்தாரா கோவிலுக்குள் வந்ததால் சுற்றி இருந்த பொது மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் விமர்சனம்.
சிறுவயதில் இருந்தே ஜெயம் ரவியும், யோகி பாபுவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஸ்கூலில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இதே ஸ்கூலில் சம்யுக்தா ஹெக்டே சேருகிறார். இவரை பார்த்தவுடன் ஜெயம் ரவிக்கு பிடித்து விடுகிறது. இவரிடம் தன்னுடைய காதலை 1999ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சொல்ல செல்கிறார்.
அப்போது ரவுடியாக இருக்கும் கே.எஸ்.ரவிகுமாரால் ஜெயம் ரவிக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் ஜெயம் ரவி கோமா நிலைக்கு செல்கிறார். 16 வருடங்களுக்கு கோமாவில் இருந்து விடுபடுகிறார்.

கோமாவில் இருந்து எழுந்த ஜெயம் ரவிக்கு எல்லாம் புதுசாக இருக்கிறது. இதிலிருந்து ஜெயம் ரவியின் வாழ்க்கை மாறுகிறது. இதன்பின் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தார். எப்படி வாழ்க்கை சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி இரண்டு காலகட்டங்களுக்கு ஏற்றார் போல் திறமையாக நடித்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ்சாக சிறுவயதில் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். சில குறும்பு காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவருக்கு போட்டியாக யோகி பாபு வேற லெவலில் காமெடி செய்துள்ளார்.
நாயகிகளாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். தன்னுடைய அனுபவ நடிப்பால் கவர்ந்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

16 வருடமாக கோமாவில் இருந்த 90-ஸ் கிட் திடீரென்று தற்போது நவீன உலகத்தில் கண்முழித்து பார்க்கும்போது அவர் காணும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார். மேலும், 90ஸ் கால கட்டத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போது 2கே வாழும் வாழ்க்கை முறையையும் எப்படி அவருக்கு மாற்றத்தையும் வலியை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன். நவீனம் என்ற பெயரில் நாம் எவற்றையெல்லாம் துளைத்துள்ளோம் என்பது நமக்கு உணரவைக்கிறது.
படத்தின் மிகப்பெரும் பலம் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை. ஆனால், பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ரிச்சர்ட் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கோமாளி’ காமெடி கலாட்டா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த இருக்கும் நடிகர் வடிவேலுக்கு பட அதிபர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வருடத்துக்கு 8, 10 படங்களில் ஓய்வில்லாமல் நடித்த வடிவேலு 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக சிவலிங்கா, மெர்சல் ஆகிய 2 படங்கள் 2017-ல் திரைக்கு வந்தன.
‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பட சர்ச்சையால் தொடர்ந்து நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த படம் ஷங்கர் தயாரிக்க சிம்புதேவன் இயக்கத்தில் உருவானது.
சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். வடிவேலு சில நாட்கள் நடித்தார். அதன்பிறகு இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு நடிக்க மறுத்துவிட்டார். இதனால் ஷங்கர் நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய படங்களுக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடைவிதித்தனர்.

இதுகுறித்து வடிவேலு கூறும்போது, “தயாரிப்பாளர் சங்கத்தில் எனது தரப்பு நியாயத்தை சொன்ன பிறகும் யாரோ தொடர்ந்து பிரச்சினை செய்கிறார்கள். நடிகர் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை என்ற வருத்தம் இருக்கிறது” என்றார்.
இந்த நிலையில் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளதாகவும் படம் பற்றிய அறிவிப்பை செப்டம்பர் மாதம் வெளியிடுவேன் என்றும் அறிவித்து உள்ளார். இந்த படத்தை சுராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழுவை சேர்ந்த டி.சிவாவிடம் கேட்டபோது “இயக்குனர் ஷங்கருக்கான இழப்பீடு தொகையை வடிவேலு கொடுப்பது வரை எந்த தயாரிப்பாளரும் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முன்வர மாட்டார்கள்” என்றார். இதன் மூலம் அவருக்கு எதிரான தடை நீடிப்பது உறுதியாகி உள்ளது.
தர்ஷன், அர்ஜூன், சினேகா, சோனு சூட் உள்ளிட்ட பலர் நடிப்பில் நாகன்னா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் குருஷேத்ரம் படத்தின் விமர்சனம்.
மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கு இடையேயான குருஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும் விதமாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த காவியத்தின் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுத்திருக்கிறார்கள்.
கவுரவர்களான துரியோதனன், துச்சாதனன், பாண்டவர்கள் தர்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் இவர்களுக்கு இடையே எப்படி குருஷேத்ரம் போர் உருவானது என்பதை படமாக எடுத்திருக்கிறார்கள்.

இதில் துரியோதனன் கதாபாத்திரத்தில் தர்ஷனும், துச்சாதனனாக ரவி சேதான் நடித்திருக்கிறார்கள். பாண்டவர்களில் தர்மன் - சஷி குமார், பீமன் - தனிஷ் அக்தர், அர்ஜூனன் - சோனு சூட், நடித்திருக்கிறார்கள். கர்ணனாக அர்ஜூன் நடிக்க, திரௌபதி ஆக ஸ்நேகாவும் சகுனியாக ரவிசங்கரும் நடித்திருக்கிறார்கள்.
வரலாற்று படங்களை இயக்குவதற்கு தனி தைரியம் வேண்டும். சிறப்பாக கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவர்களை திறமையாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் நாகன்னா. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருக்கிறார். வரலாற்று படங்களில் முக்கியமானது பிரம்மாண்டம். ஆனால், இந்த படத்தில் பிரம்மாண்டம் இருந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகள் வரும் அந்த பிரம்மாண்டம் பெரியதாக எடுபடவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

தமிழில் மிகவும் தெரிந்த முகமான அர்ஜூன் மற்றும் சினேகா ஆகியோர் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்துள்ளனர். இருவரும் அவர்களுக்கான வேலையை கச்சிதமாகவும் அழகாகவும் செய்திருக்கிறார்கள்.
ஹரிகிருஷ்ணாவின் இசையும், ஜெய் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சண்டைக் காட்சிகளை வரலாற்று படங்களுக்கு ஏற்றார்போல் அமைத்திருக்கிறார் கனல் கண்ணன்.
மொத்தத்தில் ‘குருஷேத்ரம்’ பிரம்மாண்டம் குறைவு.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான ஓவியா, 9 ஆண்டுகள் கழித்து மலையாள திரையுலகில் புதிய படம் மூலம் கால் பதிக்க இருக்கிறார்.
கேரளாவை சேர்ந்த ஓவியா, மலையாள திரையுலகில்தான் அறிமுகமானார். அங்கு அவர் மூன்று படங்கள் நடித்தபின்தான் தமிழில் நாளை நமதே என்ற படத்தில் நடித்தார். விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற ஓவியாவை தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் கொண்டாடி தீர்த்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா அளவுக்கு பிரபலமானது யாரும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதில் கிடைத்த அறிமுகத்தைக்கொண்டு பலரும் திரைத்துறை வாய்ப்புகளை பெற்ற நிலையில், தனக்கு வந்த வாய்ப்புகளையும் ஏற்க மறுத்தார் ஓவியா. வாய்ப்புகள் வருகின்றன என்பதற்காக படங்களில் நடிப்பதைவிட மனதுக்குப் பிடித்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன் என இருந்தார்.

இடையில் கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவந்த ஓவியா 2011-ம் ஆண்டுக்கு பின் தாய்மொழியான மலையாளத்தில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து மலையாளப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். “எனக்கு இது அறிமுகப்படம் போல உள்ளது. இங்கு யாருக்கும் என்னைத் தெரியாது” என்று பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சாய் தன்ஷிகா , நம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் என்று கூறியிருக்கிறார்.
சினிமாவில் ஒரு பெண் வெற்றியடைய வேண்டுமானால் கவர்ச்சியாக நடித்தால் தான் வெற்றியடைய முடியும் என்ற சூத்திரத்தை உடைத்து தங்களுக்கென ஒரு பாணியை வகுத்தவர்கள் பலர். அதில் முற்றிலும் வேறுபட்டவர் சாய் தன்ஷிகா. 'பேராண்மை' படத்தின் மூலம் தன்னை அதிரடி நாயகியாக நிலைநிறுத்திக் கொண்டதோடு, படத்திற்கு படம் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் அவர் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தினத்திற்காக கூறியதாவது:
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணமும் சந்தோஷமாக இருப்பதற்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான் காரணம் என்பதை இந்த சுதந்திர தினத்தன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல தியாகங்களைச் செய்து அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறைக்காக நமது நாட்டை நல்ல முறையில் கொடுக்க வேண்டும்.

நம்மை சுற்றியிருக்கும் மக்களுக்கும், சமுதாயத்திற்கும் உங்களால் இயன்ற அளவு செயலாற்றுங்கள். நம்முடைய சிறு பங்களிப்பும் நம்முடையச் சுற்று வட்டாரத்தின் மாற்றத்திற்கு பெரிதும் உதவும். இதுவே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமையும்’ என்றார்.
விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சங்கத்தமிழன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை வெளியிடப்பட்டது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.






