என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புதிய படத்தை அஜித் பட வில்லன் தயாரிக்கிறார்.
    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகளும் கண்டித்தன. தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பு ஏற்றது.

    பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமை குண்டு வீசி அழித்து தரை மட்டம் ஆக்கியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புதிய படம் தயாராகிறது. இப்படத்தை விவேக் ஓபராய் தயாரிக்கிறார். படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்குகிறது. பாகிஸ்தான் படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது.

    அஜித்துடன் விவேக் ஓபராய்

    இந்த படம் குறித்து விவேக் ஓபராய் கூறும்போது, “நமது படையினரின் வீரத்தை போற்றவேண்டியது ஒரு இந்தியன் என்ற முறையில் எனது கடமை. அபிநந்தன் உள்ளிட்ட நமது வீரர்களின் சாகசங்கள் இந்த படத்தின் மூலம் வெளிப்படும். பாலகோட் தாக்குதலை இந்திய விமானப்படை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியது. அபிநந்தன் இந்தியர்களுக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார். இந்த படத்தை எடுக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது” என்றார்.
    யுனிசெப் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவை பதவியிலிருந்து நீக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
    ஜம்மு-காஷ்மீர் குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை  பிரியங்கா சோப்ரா  பகிரங்கமாக ஆதரித்ததால் சில நாட்களுக்கு முன்பு, ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ரா ஜோனாஸை நீக்கக்கோரி பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி யுனிசெப்பிற்கு ஒரு கடிதம் எழுதினார்.

    அவர் அந்த கடிதத்தில் "ஐ.நா யுனிசெப் அமைதிக்கான நல்லெண்ண தூதராக நீங்கள் நியமித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் பிரச்சினை குறித்து உங்கள் கவனத்தில் கொண்டு வர விரும்புகிறேன். பிரியங்கா சோப்ரா இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரித்துள்ளார், மேலும் பாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அணுசக்தி அச்சுறுத்தலையும்  ஆதரித்துள்ளார்" என கூறி இருந்தார்.

    பிரியங்கா சோப்ரா

    இப்போது, பாகிஸ்தானின் கடிதத்திற்கு பதிலளித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், "யுனிசெப் நல்லெண்ண தூதர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் பேசுகிறார்கள், அவர்கள் ஆர்வமுள்ள அல்லது அக்கறை கொண்ட பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. 

    அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் அல்லது செயல்கள் யுனிசெப்பின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் யுனிசெப் சார்பாக பேசும்போது, அவர்கள் யுனிசெப்பின் சான்றுகள் சார்ந்த பக்கச்சார்பற்ற நிலைப்பாடுகளை கடைபிடிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறினார்.
    குழந்தைகள் மற்றும் கேம் பிரியர்களை கவர்ந்த தி ஆங்ரி பேர்ட்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்தின் விமர்சனம்.
    ஆங்ரி பேர்ட்ஸ் ஒரு தீவிலும், பன்றிகள் ஒரு தீவிலும் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையிலான மோதல்கள் தினமும் நடந்து வருகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் பன்றிகளின் தீவை நோக்கி ஒரு பெரிய ஐஸ் குண்டு வந்துவிழுகிறது. இதனை கண்டு அச்சப்படும் பன்றிக் கூட்டம், இது எங்கிருந்து வந்தது என்பதை மிக சாதுர்யமாக செயல்பட்டு கண்டுபிடிக்கிறார்கள். 

    அப்பொழுதுதான் மற்றொரு தீவு இருப்பது பன்றிகளுக்கு தெரியவருகிறது. அதில் வசிக்கும் கழுகுகள் தாக்குதல் நடத்துவதை அறிந்த பன்றிகள், ஆங்ரி பேர்ட்ஸ்களின் உதவியை நாடுகிறது. முதலில் மறுக்கும் ஆங்ரி பேர்ட்ஸ் தீவினர் பின்னர் உதவ சம்மதம் தெரிவிக்கின்றனர். 

    ஆங்ரி பேர்ட்ஸ் 2

    கழுகுகள் தீவை அழிப்பதற்கு ஆங்ரி பேர்ட்ஸ்டுடன் சேர்ந்து பன்றிகள் ஒரு சூப்பர் டீமை உருவாக்குகின்றனர். இந்த டீம் கழுகு கூட்டத்தின் சதியை முறியடிக்க, கழுகு தீவிற்கு சென்று, அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள். இதில் இவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.

    ஆங்ரி பேர்ட்ஸ் முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் இப்படம் உள்ளது. குழந்தைகளை கவரும் நோக்கில் படம் எடுத்து அதில் இயக்குனர் வென்றிருக்கிறார் என்றே கூறலாம். வசனங்கள், விஷுவல், மியூசிக் என அனைத்தும் குழந்தைகளை வெகுவாகக் கவரக் கூடியதாக உள்ளது. 

    ஆங்ரி பேர்ட்ஸ் 2

    தமிழில் குழந்தைகளுக்கு பிடித்தார் போல் டப்பிங் செய்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். 3D விஷுவல் எபெக்ட்ஸ் மிக அழகாக உள்ளது. மொத்தத்தில் குழந்தைகளைக் கவரும் படமாக ஆங்கிரி பேர்ட் அமைந்திருப்பது சிறப்பு.
    விஷாலின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    விஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறினார்கள். இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார்.

    விஷால், அனிஷா

    இதனால், விஷால், அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பினரிடையே எந்த தகவலும் வெளியாகவில்லை. இது வதந்தியா, உண்மையா என்று விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஜாக்சன் துரை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிபிராஜ், சத்யராஜ் கூட்டணி புதிய படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.
    தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் சிபிராஜுடன் இணைந்து 'ஜாக்சன் துரை' வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. 

    கடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள். முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்கள். 

    சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தின் குழு

    இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார். படத்தின் மற்ற தொழில்நுட்பக்குழு உறுப்பினர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது. 
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் வெறித்தனம் பாடல் இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கி வரும் இப்படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீபாவளி தினத்தில் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய், முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கும் நிலையில், இணைய தளத்தில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிகில் படக்குழுவினர்

    ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் பாடிய ‘சிங்கப்பெண்ணே’ பாடலும் இதே போல் இணையத்தில் லீக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
    பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்த பாரதிராஜா, உலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
    ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒத்த செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் விவேக் பங்கு பெற்று, பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

    இதில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, ‘படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் என்னைப் பேச அழைக்காதீர்கள் படத்தைப்பற்றி நான் நீண்ட கடிதம் ஒன்றை உங்களுக்கு பிறகு எழுதுகிறேன் என்றேன். காரணம் இன்னமும் என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. தனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ அரை மணி நேரமோ திரையில் தோன்றி நடிக்கலாம். 

    பாரதிராஜா

    ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விஷயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன். யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம், யாரை வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லும் நானே, புதிய பாதையில் பார்த்திபன் நாயகனாக நடிக்கிறார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன்.

    புதிய பாதையில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார். உனக்கு உரிய உயரத்தை நீ இன்னும் அடையவில்லை என்று நான் பார்த்திபனிடம் அடிக்கடி சொல்வேன். ஒற்றை செருப்பு படம் மூலம் உலகத்தையே தமிழ்ப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் பார்த்திபன்’ என்றார்.


    அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் ட்விட்டரில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
    அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்தது.

    விஸ்வாசம்

    தற்போது ட்விட்டரில் விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ட்விட்டரில் அதிக ஹேஷ்டேக் பயன்படுத்திய பெயர்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தில் விஸ்வாசம் பிடித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
    குயின் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.
    கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான படம் ‘குயின்’. இந்த படம் அவருக்கு தேசிய விருது பெற்று கொடுத்தது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குயின் படம் தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆகிறது. காஜல் அகர்வாலை நாயகியாகக் கொண்டு தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ எனவும், தமன்னாவை நாயகியாகக் கொண்டு தெலுங்கில் ‘தட் இஸ் மகாலெட்சுமி’ எனவும் மஞ்சிமா மோகனை நாயகியாகக் கொண்டு மலையாளத்தில் ‘ஜம் ஜம்’ எனவும் பருல் யாதவ்வை கதாநாயகியாகக்கொண்டு கன்னடத்தில் ‘பட்டர்பிளை’ எனவும் உருவாகியுள்ளது.

    தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் வெளியானது. அதில் காஜல் நடித்துள்ள தமிழ் டீசரில் ஆபாச வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், காஜல் அவரது தோழியுடன் தோன்றும் காட்சி ஆபாசமாக இருப்பதாகவும் பலரும் விமர்சித்தனர்.

    காஜல் அகர்வால்

    இந்தப் படத்தில் விருதுநகரைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணாக நடித்துள்ள காஜல், ஒரு இளைஞரை காதலிக்கிறார். ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் திடீர் என காஜலுடனான திருமணத்தை அவரது காதலன் நிறுத்துகிறார். பின்னர் தேனிலவுக்காக இருவரும் இணைந்து புக் செய்திருந்த பாரிஸ் நகருக்கு காஜல் மட்டும் தனியாக செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் அனுபவங்களே படத்தின் கதை.

    ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்பிய படக்குழுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சென்சார் துறை பல இடங்களில் காட்சிகளின் சில பகுதிகளை மங்க செய்தனர். சில காட்சிகளில் ஆடியோவை மட்டும் வெட்ட, சில காட்சி ஆடியோ, வீடியோ இரண்டையும் வெட்டி உள்ளனர். படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்கு கொண்டு சென்றனர். ரிவைசிங் கமிட்டியிலும் இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த காட்சியை நீக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

    குயின் படத்திலும், தமிழ், தெலுங்கு, கன்னட ரீமேக்கிலும் இந்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் தமிழில் மட்டும் இந்தக் காட்சியை நீக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
    கமல் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலிருந்து பிரபல நடிகை விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கமல் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்தியன் 2, தொடங்கிய வேகத்திலேயே பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ள படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

    இந்தியன் முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த நிலையில்,  ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. 
    ஏ.செந்தில் குமார் இயக்கும் ’காக்கி’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிகில் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    `கொலைகாரன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படம் ‘காக்கி’. வாய்மை படத்தை இயக்கிய ஏ.செந்தில் குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேயாத மான் புகழ் இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்துள்ளார். 

    இந்துஜா, விஜய் ஆண்டனி

    காக்கி படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காக்கி படத்தை தொடர்ந்து, `அக்னிச் சிறகுகள்', `தமிழரசன்' மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படம் என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
    வி.சி.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `இருட்டு' படத்தின் முன்னோட்டம்.
    ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வி.சி.துரை இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் `இருட்டு'. திகில் கலந்த காமெடி படமான `அரண்மனையின்' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 

    படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    இருட்டு படக்குழு

    படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, `இது புதுமையான ஹாரர் படமாக இருக்கும். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்' என்றார். 
    ×