என் மலர்
சினிமா செய்திகள்
கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வா ஆகிய படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சுஜா வருணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வா ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக இணைந்தார். இவரும் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாரும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து சுஜா வருணி கர்ப்பமாக இருந்த புகைப்படங்களை அவரது கணவர் சமீபத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சிவக்குமார்- சுஜா வருணி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு இருக்கும் சிவக்குமார், ’இறுதியாக ஆண் குழந்தை. என் பையன் சிம்பா வந்தாச்சு. விரைவில் உங்களை சந்திப்பான். ஆகஸ்ட் 21-ந்தேதி என் வாழ்வில் மறக்க முடியாத நாள். நான் நடித்த வெப் சீரியலும் இந்த நாளில் தான் ரிலீஸ். என் மகனும் இந்த பூமிக்கு வந்த நாள்’ என்று கூறியுள்ளார்.
தான் பிரபல நடிகரின் பெரிய ரசிகை என்றும், அவருடன் ஒரு படத்துலயாவது நடிக்க வேண்டும் எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து மலையாளம், தெலுங்கு என வெவ்வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபுவுக்கு தங்கையாகவும் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒரு படத்துல என்னுடைய கேரக்டர், அது என்ன சொல்லப்போகுது, அதுல எவ்வளவு முக்கியத்துவம் இருக்குனு தான் பார்ப்பேன். `நடிச்சா ஹீரோயின்தான்’ என்பதில்லை.

`நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்துல தங்கச்சி கதாபாத்திரம் ரொம்ப சூப்பரா இருக்கும். இது படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். அதே மாதிரி, `கனா’ படத்துல சத்யராஜ் சார்தான் ஹீரோ. எல்லா படத்துலேயும் ஒருவருடைய கதாபாத்திரத்தை கேரக்டர்தான் முடிவு பண்ணும். நான் ரஜினிக்கு பெரிய ரசிகை. அவர்கூட ஒரு படத்துலயாவது நடிக்கணும்னு ஆசை. இனியாவது நடக்குதான்னு பார்க்கலாம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சினிமாவில் கதை திருட்டு தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ளார்.
ஆரி-ஷாஷ்வி பாலா ஜோடியாக நடித்துள்ள படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ முகமது அபுபக்கர், பகவதி பெருமாள், ஷரத்ராஜ், பழனி, பிஜேஜ் நம்பியார், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கவிராஜ் இயக்கி உள்ளார். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:- “ஏலியனை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர் என்று கருதுகிறேன். எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்று கடவுளை நினைத்துக்கொண்டு இருக்க முடியாது. உலகத்தை கடவுள் படைத்தார் என்றால் கெட்டவர்களை ஏன் உருவாக்கினார் என்ற கேள்விகள் எழுகின்றன. பேய் அடிக்கும் என்று சொல்வதிலும் நம்பிக்கை இல்லை.

சினிமாவில் அதிகமான கதை திருட்டுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. பொதுவான விஷயங்களில் ஒரேமாதிரி படங்கள் எடுக்கலாம், சந்தன கடத்தல் வீரப்பன் கதையை யாரும் எடுக்கலாம். ஆனால் ஒரு கதையை அப்படியே காப்பி அடித்து எடுப்பது தவறு. குளோனிங் பற்றி நான் ஒரு கதை தயார் செய்து இருந்தேன். ஒரு வருடம் கழித்து அதே மாதிரி ஒரு படம் வந்ததால் நான் எழுதிய கதையை படமாக்கவில்லை.” இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், அமீர், நடிகர் ஆரி, இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சாரியா, ஒளிப்பதிவாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமேசான் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறித்து அக்ஷய் குமார், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட இந்தி திரை பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
புது டெல்லி:
உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘2 வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகளில் பற்றி எறியும் தீயின் புகைப்படங்களை பார்க்கும்போது மிகுந்த மன வேதனையாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது.
இந்த காடுகள்தான் 20% ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இது நம்மில் ஒவ்வொருவரையும் பாதிக்கும். பூமி காலநிலை மாற்றத்தைத் தக்கவைக்கக்கூடும். ஆனால், நம்மால் அது சாத்தியமில்லை ’ என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், ‘அமேசான் காடுகள் கடந்த சில வாரங்களாக எரிந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான செய்தி. அமேசான் இந்த உலகின் நுரையீரலாக கருதப்படுகிறது. இப்போது இங்கு ஏற்பட்டுள்ள தீ, மிகவும் வருத்தமளிக்கிறது. உலக மீடியாக்களின் கவனத்தை இந்த சம்பவம் ஈர்க்கும் என நம்புகிறேன்’ என கூறினார்.
இதேபோல் அர்ஜூன் கபூர், பூஜா பத்ரா, ஆயுஷ்மான் குரானா ஆகிய பாலிவுட் பிரபலங்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். #AmazonRainforest, #savetheamazon போன்ற ஹேஷ்டேகுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.
அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘2 வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகளில் பற்றி எறியும் தீயின் புகைப்படங்களை பார்க்கும்போது மிகுந்த மன வேதனையாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது.
இந்த காடுகள்தான் 20% ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இது நம்மில் ஒவ்வொருவரையும் பாதிக்கும். பூமி காலநிலை மாற்றத்தைத் தக்கவைக்கக்கூடும். ஆனால், நம்மால் அது சாத்தியமில்லை ’ என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், ‘அமேசான் காடுகள் கடந்த சில வாரங்களாக எரிந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான செய்தி. அமேசான் இந்த உலகின் நுரையீரலாக கருதப்படுகிறது. இப்போது இங்கு ஏற்பட்டுள்ள தீ, மிகவும் வருத்தமளிக்கிறது. உலக மீடியாக்களின் கவனத்தை இந்த சம்பவம் ஈர்க்கும் என நம்புகிறேன்’ என கூறினார்.
இதேபோல் அர்ஜூன் கபூர், பூஜா பத்ரா, ஆயுஷ்மான் குரானா ஆகிய பாலிவுட் பிரபலங்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். #AmazonRainforest, #savetheamazon போன்ற ஹேஷ்டேகுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் பயோபிக்கில் நடிப்பது ஏன் என்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படங்களாக வந்தன. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை வைத்து ‘83’ என்ற பெயரில் படம் தயாராகிறது. இதுபோல் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர்.
இதில் முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களர்கள் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்து விஜய் சேதுபதி கூறியதாவது:- “நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனிடமே இதை நேரில் சொன்னேன். இந்த படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றிய கதை அல்ல. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்கள் படத்தில் இருக்கும். என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன்.
அதுபோன்ற ஒரு காட்சியும் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்க மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்.” இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
போர்ச்சுக்கல் நாட்டு தொழில் அதிபருடன் நடிகை ரம்யாவுக்கு திருமணம் குறித்து, ரம்யாவின் தாய் ரஞ்சிதா பதில் அளித்துள்ளார்.
தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் ரம்யா. கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரம்யா தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரம்யா, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மண்டியா நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.
அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக செயல்பட்டார். இதையடுத்து அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்தார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ரம்யா எங்கு இருக்கிறார்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில்அதிபர் ரபேலுடன் நடிகை ரம்யாவுக்கு துபாயில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு ரம்யாவின் தாய் ரஞ்சிதா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:- தற்போது ரம்யா திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. திருமணம் குறித்து ரம்யா முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக கூறுவோம். அவருடைய திருமணத்தை மூடிமறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
ரம்யா திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். ரம்யா அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தனது தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வரவும் மனமில்லை. இதுபோன்ற காரணங்களினால் 2 பேரும் பரஸ்பரம் பேசி பிரிந்தனர். இருப்பினும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினரும், நாங்களும் தொடர்பில் தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய பட ‘அவ்.’ இதில் காஜல் அகர்வால், நித்யாமேனன், ரெஜினா உள்பட பல முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இரண்டாம் பாகத்திலும் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதன்மூலம் இரண்டு பேரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் பிரசாந்த் வர்மா கூறுகையில், “முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். முதல் பாகத்தில் பல கதைகள் வந்து போனது. இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கதை மட்டுமே இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர்கள் பாரதிராஜா, சசிகுமார் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் வெளியாகி இருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் விமர்சனம்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த குழந்தைகளில் ஒருவர் சசிகுமார்.
மேலும் இதே கிராமத்தில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பத்து பேரை தேர்வு செய்து சிறந்த வீராங்கனைகளாக்கும் முயற்சியில் கபடி பயிற்சி கொடுத்து வருகிறார் பாரதிராஜா. ஒரு கட்டத்தில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
இதனால் வீராங்கனைகளுக்கு சசிகுமாரை பயிற்சி அளிக்கும் படி பாரதிராஜா கேட்க, அவரும் சம்மதித்து திறமையாக பயிற்சி அளித்து பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெறக்கூடிய சிறந்த அணியாக உருவாக்குகிறார். இந்நிலையில், இந்த குழுவில் இருக்கும் பெண், இந்திய அணியில் விளையாட தேர்வாகிறார்.
ஆனால் மேல் பொறுப்பில் இருக்கக்கூடிய முரளி ஷர்மா 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் தான் அந்த டீமில் விளையாட முடியும் என்று கூறுகிறார். இதனால் மன வேதனை அடையும் அந்த பெண், விபரீத முடிவு எடுக்கிறார்.

இறுதியில் அந்த பெண் எடுத்த முடிவு என்ன? பாரதிராஜா, சசிகுமார் இருவரும் இதை எப்படி கையாண்டார்கள்? இந்திய அளவில் கபடி வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்திருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பங்கள் தலைதூக்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டுப் பெண்களை கபடி விளையாட வைத்து, அவர்களின் குடும்பம் உயர பாடுபடும் கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றைய விளையாட்டுத்துறையில் இருக்கக்கூடிய அவலங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காண்பிக்கிறது.

சசிகுமாரின் தோற்றம் மிகவும் அழகாக இருக்கிறது. பாரதிராஜாவும் இவரும் படத்தில் அப்பா மகன் போல வந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு உரசல் வந்துகொண்டே இருக்கிறது. அந்த உரசலை மிக அழகாக கையாண்டிருக்கிறார் சசிகுமார். குறிப்பாக படத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக இவர் பேசும் வசனங்கள் மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. அதை இவர் பேசும்போது மிக சிறப்பாக உள்ளது. இப்படத்தில் இவருக்கு நாயகி எதுவும் இல்லை என்றாலும் அதைப் பற்றி சிந்திக்கவே வாய்ப்பில்லாமல் மிக சிறப்பாக செய்திருக்கிறார்.
ஒரு கபடி பெண்கள் டீமுக்கு பயிற்சியாளராக வருகிறார் சூரி. சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கும் படியாக செய்திருக்கிறார் அதேபோல் திருமணம் செய்த அன்றே தன் மனைவியைப் கபடி போட்டிக்கு அனுப்பி வைக்கும் இளைஞரும் மனதில் நிற்கிறார்.
உயர் பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் பணத்திற்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் முரளி ஷர்மா நடித்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது, இவர் மீது கோபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

கபடி வீராங்கனைகளாக நடித்திருக்கும் நடிகைகள் அவரவர் கதாபாத்திரத்தை மிகவும் திறம்பட செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய பதிவை அழகாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் சுசீந்திரன் கபடி போட்டி மையப்படுத்தி கிராமத்து பெண்களை ஒருங்கிணைத்து ஒரு எளிமையான கதையை மிக அழகாக சொல்லி இருக்கிறார். படத்தில் அனைத்தும் எதார்த்தமான காட்சிகளாக பதிவு செய்திருப்பது சிறப்பு. வீராங்கனைகளை தேர்வு செய்து இருப்பதிலேயே பாதி வெற்றி கண்டிருக்கிறார். களத்தில் விளையாடும் வீரர்களின் மனநிலையை பாரதிராஜா, சசிகுமார் இவர்களுக்கு இடையிலான உரசலினால் வீரர்கள் மனநிலை பாதிக்கப்படும் என்பதை சுசீந்திரன் கொஞ்சம் சிந்தித்து காட்சி கொடுத்திருக்கலாம். இறுதிப் போட்டியில் இருக்கக்கூடிய வீரர்கள் பயிற்சியாளர்கள் மனநிலை மாறி இருக்கும் போது வெற்றி பெறுவது கடினம். இது விளையாட்டு வீரர்களுக்கு நன்கு புரியும்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். குருதேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கென்னடி கிளப்’ குட் கேம்.
பட விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இதில் அமீர் பேசும்போது, ‘எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது.

அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது’ என்றார்.
வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் டிரெண்டாகியுள்ளது.
வடசென்னை படத்தின் வெற்றிக்கு பின், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா, கருணாஸ் மகன் கென் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 4ம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இதன் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தனுஷின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
#Asuran look 2 pic.twitter.com/3zCkH4vhED
— Dhanush (@dhanushkraja) August 22, 2019
கலைப்புலி தாணு தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாக இருக்கிறது.
விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், பேபி ஷ்ருத்திகா, ரோகித் பதக், மோக்லி நடிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது மனைவி வசுந்தராவும், மகள் ஷ்ருத்திகாவும் தான் உலகம்.
ஒருநாள் கடன் கேட்பதற்காக இசுலாமியர் வீட்டுக்கு செல்லும் போது பக்ரீத்துக்காக கொண்டு வரப்பட்ட ஒரு ஒட்டகத்தின் குட்டியை இரக்கப்பட்டு வீட்டுக்கு கொண்டுவருகிறார் விக்ராந்த். அந்த ஒட்டகம் அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிடுகிறது.

இந்நிலையில், ஒட்டகத்திற்கு உடல் நலம் சரியில்லாமல் போக, விலங்கு நல மருத்துவர் எம்.எஸ்.பாஸ்கர் அறிவுரையால் திரும்ப ராஜஸ்தானில் ஒட்டகங்களுடன் ஒட்டகமாக விட்டுவிட செல்கிறார் விக்ராந்த்.
இந்த பயணத்தில் விக்ராந்த் சில இன்னல்களை சந்திக்கிறார். இதையெல்லாம் கடந்து ஒட்டகத்தை சேர்த்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த், எதார்த்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார். கடனுக்காக அலைவது, மகளுடன் பாசத்தை காட்டுவது, ஒட்டகம் மீதான அன்பு, அதை பிரிந்த பின்னர் பரிதவிப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். இப்படம் விக்ராந்திற்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் வசுந்தரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளை சாதாரணமாக செய்து விட்டு செல்கிறார். ஒரு விவசாயி மனைவியாக சிறப்பாக பிரதிபலித்துள்ளார். பேபி ஷ்ருத்திகாவின் நடிப்பால் படம் நமக்கு இன்னும் நெருக்கமாகிறது. விக்ராந்தின் நண்பராக தினேஷ், லாரி டிரைவராக வரும் ரோகித் பதக், லாரி உதவியாளராக வரும் மோக்லி, ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார்கள். ஒட்டகத்தை விற்று காசு பார்க்கலாம் என்ற ஆசையில் அதை ஏற்றிவிட்டு அதனால் தொல்லைகளுக்கு ஆளாகும் ரோகித் சிரிக்க வைக்கிறார்.

அன்பை மட்டுமே பிரதானமாக எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு. குறிப்பாக கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். விலங்குகளை வைத்து படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும். அதுவும் இந்த படத்தில் ஒட்டகத்திடம் வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர். படம் பார்க்கும் போது, நம்மளுடைய செல்ல பிராணிகளுடன் நாம் இருப்பதை பல இடங்களில் நினைவு படுத்துகிறார். ஒட்டுமொத்தமாக விலங்குகள் மீதான பேரன்பை பக்ரீத் பேசியிருப்பது சிறப்பு. அதை வெறும் ஆவணமாக பதிவு செய்யாமல் நம்மையும் சாராவோடு சேர்ந்து பயணிக்க வைத்ததில் ஜெகதீசன் சுபு கவனிக்க வைக்கிறார்.

படத்தின் இன்னொரு நாயகன் இமானின் இசை தான். கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையால் கடத்துகிறார். ஆலங்குருவிகளா, லக்கி லாரி, கரடு முரடு ஆகிய பாடல்களும் முன்பே வெளியாகி ஹிட் அடித்து விட்டன. தமிழ்நாட்டின் வயல்புறம் முதல் ராஜஸ்தான் பாலைவனம் வரை ஜெகதீசன் சுபுவின் ஒளிப்பதிவு நம்மையும் சேர்த்து பயணிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘பக்ரீத்’ குடும்பங்களின் கொண்டாட்டம்.
நடிகர் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன், பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
சாருஹாசன், கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா, ஜனகராஜ் நடிப்பில் வெளியான படம் ‘தாதா 87’. இப்படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் ‘பீட்ரூ’ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

இது குறித்து இயக்குனர் கூறுகையில், ‘விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்று தேர்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். மேலும் அவரது தோற்றத்தை, குறிப்பாக அவரது சிகை அலங்காரத்தை நான் கண்டேன். இப்படத்தில் நான் நினைத்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பதாக தோன்றியதால் அவரை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்" என்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி முதல் அர்ஜூமன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் மொட்ட ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருச்சி மற்றும் கோவாவில் படமாக்கப்பட உள்ளது.
படத்தை ஜிடிஆர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார்.






