என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய நடிகை மதுமிதா, என் மீது தொலைக்காட்சி நிறுவனம் பொய் புகார் கூறுகிறது என்று பேட்டியளித்துள்ளார்.
    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். கடந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி திடீரென வெளியேற்றப்பட்டார். 

    இந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மதுமிதா ஒப்பந்தப்படி 11 லட்சத்தி, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கு பாக்கி பணம் தருவதாக கூறி இருந்ததாகவும் ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மதுமிதா தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மதுமிதா

    இதற்கு மதுமிதா மறுப்பு தெரிவித்து பேட்டியளித்துள்ளார். அதில், ‘திரைத்துறையில் இதுவரை என் மீது எந்த புகாரும் வந்ததில்லை. நான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் தற்கொலை மிரட்டல் கொடுக்கவில்லை. மீதி பணம் கேட்டேன். அவர்களும் தர சம்மதித்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் என் மீது ஏன் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது குறித்து கேட்க, தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. தனியார் தொலைக்காட்சி நிறுவனமும், கமல் சாரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன்’ என்றார்.
    ஐங்கரன் படத்தை தொடர்ந்து காமன்மேன் பிரசன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ஐங்கரன் திரைப்படம் உருவாகியுள்ளது. ரவி அரசு இயக்கியுள்ள இப்படத்தில் மகிமா நம்பியார், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மீண்டும் காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவருடன் யோகிபாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

    ஜிவி பிரகாஷ், யோகி பாபு

    இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குனர் விஷ்ணு வர்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கௌஷிக் ராமலிங்கம் இயக்க இருக்கிறார்.
    எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் அமீர், திரைத்துறையில் நன்றி என்பதே இல்லை என்று கூறியிருக்கிறார்.
    பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்'. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தைச் சார்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.

    இதில் இயக்குநர் அமீர் பேசும்போது, ‘என்னுடைய வாழ்வில் கேட்டுப் பெறக் கூடாத விஷயங்கள் மூன்று வைத்திருக்கிறேன். கைத்தட்டல், வாழ்த்து மற்றும் நன்றி, கைத்தட்டுங்கள் என்று கேட்பதில் கூச்சப்படுவேன். நம் பேசுவது நன்றாக இருந்தால் கைத்தட்டல் தானாக வரும்.

    நான் இந்த விழாவிற்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் தான். ஒன்று ஆரியின் வற்புறுத்தல், இரண்டாவது ராவுத்தர் பிலிம்ஸ். என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் புகழ் நிரந்தரமில்லை.

    எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை வெளியீடு

    இப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது. விஜயகாந்திற்கு 'கேப்டன்' என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள்? சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்.

    சினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா? நட்சத்திரம் என்பது மின்னி மறைவது, அதுபோல தான் சினிமாக்காரர்களும். ஆகவே, புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், வெற்றியடைந்தபின் மற்றவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். நீங்கள் வளரும் போதே உங்களுடன் பயணித்தவர்களை உங்களுடனே கூட்டிச் செல்ல வேண்டும்’ என்றார்.
    விஷால் கால்ஷீட் விவகாரத்தில் தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக இயக்குனர் விசி.வடிவுடையான் தெரிவித்துள்ளார்.
    தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு போன்ற படங்களை இயக்கியவர் விசி.வடிவுடையான். இவர் மீது நரேஷ் கோத்தாரி என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் கொடுத்துள்ளார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- நான் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். என்னிடம் அறிமுகமான இயக்குனர் வடிவுடையான்,  கடந்த 2016-ம் ஆண்டு விஷாலை வைத்து ரூ.7 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க உள்ளதாகவும், அதற்காக விஷாலிடம் கால்ஷீட் பெற்றுள்ளதற்கான ஆவணங்களையும் காட்டினார். அதனை நம்பி வடிவுடையானிடம் 3 தவணைகளாக ரூ.47 லட்சம் கொடுத்தேன். 

    வடிவுடையான்

    ஆனால் வடிவுடையான் சொன்னபடி படம் எடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனை அடுத்து சந்தேகமடைந்து  விஷால் தரப்பில் கால்ஷீட் குறித்து கேட்டதற்கு அது போன்ற எந்த கால்ஷீட்டும் வடிவுடையானுக்கு வழங்கவில்லை என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். வடிவுடையான் என்னை மோசடி செய்துவிட்டார்’. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. நேற்று திரையுலகில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதுகுறித்து இயக்குனர் விசி.வடிவுடையான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ’இன்று காலை முதல் என்னை பற்றி தவறான செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. சுரேஷ் கோத்தாரி என்பவர் நான் அவரிடம் விஷாலை வைத்து படம் இயக்குவதாக கூறி 47 லட்சம் பணம் கடன் வாங்கிகொண்டு திருப்பி தரவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறானது. சுரேஷ் கோத்தாரி யார் என்றே எனக்கு தெரியாது. அவருக்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை.

    விஷால்

    நான் கடந்த ஆண்டு அசோக் லோதா என்பவரிடம் ரூபாய் 3 லட்சம் கடனாக பெற்றேன். அதற்காக நிரப்பப்படாத காசோலை மற்றும் என் கையெழுத்திட்ட   பத்திரம் போன்றவற்றை கொடுத்து பணம் பெற்றேன். ஆனால் அந்த தொகையை வட்டியும், முதலுமாக அவருக்கு திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் அவர் என் காசோலையையும், பத்திரத்தையும் திருப்பி தர மறுத்ததால், நான் அவர்மீது சென்னை 6 வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். 

    அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதனால் கோபமடைந்த அசோக் லோதா எனது நிரப்பப்படாத காசோலையையும், பத்திரத்தையும் சுரேஷ் கோத்தாரியிடம் கொடுத்து அதில் நான் அவரிடம் பணம் பெற்றது போல் நிரப்பி  தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று எனக்கு சந்தேகம் உள்ளது. எனது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிப்பதற்காக இது போல் பொய்யான பழியை என்மீது சுமத்தியுள்ள அவர்கள் மீது நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதை நடிகர் விவேக் உறுதி செய்துள்ளார்.
    நடிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 32 ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பெரும்பாலான உச்ச நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை. கமலுடன் இந்தியன் 2 படத்தில் விவேக் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. 

    விவேக்கின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், விவேக் அதனை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- “நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்-க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
    இயக்குநர் பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் முன்னோட்டம்.
    இயக்குநர் பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும் படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. 

    பார்த்திபன்

    இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்கும் இப்படத்துக்கு, ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி கலை இயக்குநராகவும், அம்ரித் ப்ரீத்தம் சவுண்ட் டிசைனராகவும் பணியாற்றியுள்ளனர். பாடல்களை விவேகா எழுதியிருக்கிறார். 
    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான யாஷிகா ஆனந்த், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.
    புவன் நல்லான் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’ஜாம்பி’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் யாஷிகா ஆனந்த் பேசியதாவது:- ஜாம்பி படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நான் மிகவும் எதிர்பார்க்கும் படம். 4 மாதங்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளேன். 

    இதுவரை நான் ஏற்காத கதாபாத்திரம். மருத்துவ மாணவியாக வருகிறேன். யோகி பாபு, கோபி, சுதாகர் என காமெடிக்கு பஞ்சமே இருக்காது. படத்தில் சில சண்டைக்காட்சிகளில் நானே ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்து இருக்கிறேன். 

    யாஷிகா ஆனந்த்

    பிக் பாசுக்கு பிறகு எனக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள். என் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த செய்தி அறிந்ததும் நான் எமோஷனல் ஆகிவிட்டேன். கோவை சென்றபோது ரசிகர்களுடன் சேர்ந்து மக்களுக்கு உதவிகள் செய்தேன். 

    அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த யாஷிகா. நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். அதன்மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
    விஷால் நடிக்கும் ’ஆக்‌ஷன்’ படத்தை தொடர்ந்து, சுந்தர் சி பேய் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயங்கரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. 

    படக்குழுவினருடன் சுந்தர் சி

    இந்நிலையில், சுந்தர் சி ஆக்‌ஷன் படம் முடிந்தவுடன் பேய் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அரண்மனை படத்தின் 3-ம் பாகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெளியான இரண்டு பாகங்களிலும் சுந்தர் சி நடித்திருந்த நிலையில், இப்படத்திலும் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்திய திரையுலகில் ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
    சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். மேலும் நயன்தாரா, தமன்னா, ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, சுதீப் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். 

    இந்தப் படத்தில் நரசிம்ம ரெட்டியின் ஆசான் வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சிரஞ்சீவி, ’அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி. ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான். அவர் பக்கத்தில் யாரும் நெருங்க முடியாது. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். அவருக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். என் ஆசான் கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். 

    அமிதாப் பச்சனுடன் சிரஞ்சீவி

    அது ஒரு விசேஷமான கதாபாத்திரம். கண்டிப்பாக அமிதாப் தான் வேண்டும் என்றார். அதனால் அமிதாப் அவர்களை அழைத்து எனது ஆசான் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். ஒரு வாரம் தான் ஆகும் என்றேன். அவர் உடனே சரி என்றார். இந்த இந்தியா மெகாஸ்டாருக்கு என் இதயம் நன்றி கூறியது" என்று குறிப்பிட்டுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கும் இந்தப் படம் அக்டோபர் 2ந்தேதி அன்று, இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
    கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
    ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியான ’கோமாளி’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, அவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமது இயக்க உள்ளார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு அர்பைஜான் நாட்டில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

    ஜெயம் ரவி, டாப்ஸி

    இந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த டாப்ஸி, சமீபத்தில் ’கேம் ஓவர்’ படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்தியில் அக்‌ஷய் குமாருடன் இவர் நடித்த ’மிஷன் மங்கள்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
    ஐநாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனிசெப் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் யூனிசெப் தொண்டாற்றி வருகிறது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக (Global Goodwill Ambassador) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

    பிரியங்கா சோப்ரா - ஷெரின் மசாரி

    இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிரியங்கா ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் புல்வாமா தாக்குதலின்போதும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா தனது டுவிட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார்.

    இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை எழும்போது, பிரியங்கா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை மந்திரி ஷெரின் மசாரி, ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    நடிகை காஜல் அகர்வால் மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். ஜெயம் ரவி ஜோடியாக இவர் நடித்த கோமாளி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காஜல் அகர்வால் தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

    காஜல் அகர்வால், சூர்யா

    இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வால் ஏற்கனவே சூர்யாவுக்கு ஜோடியாக மாற்றான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×