என் மலர்
சினிமா செய்திகள்
ஜாம்பி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பிரேம்ஜி, நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் என்று கூறியிருக்கிறார்.
S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகி யாஷிகா ஆனந்த், இயக்குனர் புவன் நல்லான், இசையமைப்பாளர் பிரேம்ஜி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
இதில் பிரேம்ஜி பேசும்போது, சில தினங்களுக்கு முன்பு கேம் ஓவர் என்று எழுதப்பட்ட டி.சர்ட்டை போட்டு போட்டோ போட்டிருந்தேன். இதைப் பார்த்த பலரும் எப்போது திருமணம், யார் பெண், வாழ்த்துகள் என்று கூறினார்கள். ஆனால் உண்மையில் திருமணம் ஆனால், கேம் ஓவர் இல்லை. கேம் ஆன் என்று சொல்ல வந்தேன். அதை எல்லோரும் தவறாக புரிந்துக் கொண்டார்கள்.

நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். கவலைப்படாதீங்க.. என்றார். மேலும் ‘யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல் தான் இந்த படத்திற்கு 'இசை காட்டேரி' என்று வைத்துக் கொண்டேன்’ என்றார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் முதல் பாடலுக்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார்.
இவர்களுடன் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் ‘எங்க அண்ணன்’ பாடலை வெள்ளிக் கிழமை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்த், தற்போது ஜாம்பி படத்தில் நடிப்பதற்காக 3 மணி நேரம் மேக்கப் போட்டிருக்கிறார்.
S3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகி யாஷிகா ஆனந்த், இயக்குனர் புவன் நல்லான், இசையமைப்பாளர் பிரேம்ஜி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் பேசும்போது,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் ஒளிப்பதிவாளரின் பணி தான் முக்கியமானது. அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு கோணத்திலும் கேமராவை வைத்து கடினமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அதேபோல் நடன இயக்குநர் எனக்கேற்றவாறு நடனம் அமைத்துக் கொடுத்தார். இரவு பகலாக படப்பிடிப்பு நடக்கும். இருப்பினும் அனைவரும் ஒரு குடும்பம் போல பணியாற்றினோம். மேக்கப் போடுவதற்கு 3 மணி நேரம் ஆகும் என்றார்.

புவன் நல்லான் பேசும்போது,
யோகிபாபு எனக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஒரு நல்ல கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி. 'ஜாம்பி' மாதிரியான படம் எடுக்கும்போது தொழில்நுட்ப கலைஞர்களின் உதவி பெரும்பங்கு வகிக்கும். அது இந்த படத்தில் எனக்கு நன்றாக அமைந்திருக்கிறது.
96 படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஜோடியாக பேசப்பட்ட விஜய் சேதுபதி, திரிஷா, தற்போது புதிய படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள்.
திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவர் தயங்காமல் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.
Congrats team 💐#GARJANAI Trailerhttps://t.co/pL8PdTmZaR@SdcPicturez#Amit@trendmusicsouth@Vamsykrishhna#Sreeranjani#MaduraiMuthu@sundarbalu82@AmrishRocks1#Chittibabu@trendmusicsouth#Centuryinternationalfilms@manirs_dir@ProCNKumar
— VijaySethupathi (@VijaySethuOffl) August 21, 2019
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார்.
“கேடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, விஷால், தனுஷ் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இவரது காதல், திருமணத்தைப் பற்றி பல வதந்திகள் அவ்வப்போது பரவி வந்தன.
இயக்குனரும் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவை தமன்னா காதலிப்பதாக சமீபத்தில் வதந்தி பரவியது. இந்த நிலையில், தமன்னா ஒருவரை காதலித்து அவருடன் டேட்டிங் சென்றதாகவும், விரைவில் அவரை தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின, இந்த செய்திகளையெல்லாம் முழுமையாக மறுத்து வந்தார் தமன்னா.

பாகுபலி நடிகர் பிரபாசை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனையும் மறுத்த அவர் தனக்கு நடிப்பு மட்டுமே முக்கியம் எனக் கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது திருமணம் பற்றிய தகவலை தெரிவித்திருக்கிறார் தமன்னா.
அதாவது, தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவது உறுதியாகி விட்டது. ஆனால் அது காதல் கல்யாணம் இல்லையாம், பெற்றோர்கள் பார்க்கும் நபரை தான் தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதனை ஒரு பேட்டியில் அவரே தெரியப்படுத்தியுள்ளார். அவரது பெற்றோர் தமன்னாவிற்கு தற்போது தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகின்றனர். தனக்கு ஏற்ற
மணமகன் கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வாராம் தமன்னா.
மான்ஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘இறைவி’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராதா மோகன் இதற்குமுன் ‘அழகியே தீயே, மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா- ராதா மோகன் இணையும் இந்த புதிய படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் முன்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விஷாலிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக இயக்குனர் வி.சி.வடிவுடையான் மீது தயாரிப்பாளர் புகார் கூறியுள்ளார்.
சினிமா தயாரிப்பாளரான நரேஸ் கோத்தாரி. விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நடிகர் விஷாலிடம் கால்ஷீட் வாங்கி இருப்பதாக கூறி இயக்குனர் வி.சி.வடிவுடையான் என்னை அணுகினார். விஷால் நடிக்கும் படத்தை ரூ.7 கோடி செலவில் எடுக்க இருப்பதாக கூறிய அவர் இந்த படத்தை நீங்கள் தயாரியுங்கள் என்று தெரிவித்தார். இதனை நம்பி அவரிடம் 3 தவணைகளாக ரூ.47 லட்சம் பணம் கொடுத்தேன்.

விஷாலிடம் கால்ஷீட் வாங்கி வைத்திருப்பது போன்ற ஆவணத்தையும் வடிவுடையானிடம் காட்டினார். அது போலியானது என்பது பின்னர் தான் தெரிந்தது. நான் கொடுத்த பணத்தையும் அவர் திருப்பி கொடுக்க வில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து வி.சி.வடிவுடையான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சர்ச்சைக்கு பெயர்போன இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
ஜீவன், கஜாலா நடித்த யுனிவர்சிட்டி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா. காமசூத்ரா படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்து அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தவர். சமூகவலைதளங்களில் அவ்வப்போது அரை நிர்வாண படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். ஷெர்லின், சர்ச்சைக்கு பெயர்போன இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது புகார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ‘2016 ம் ஆண்டு நான் பட வாய்ப்பு கேட்டு என் புகைப்படங்களை ராம்கோபால் வர்மாவுக்கு வாட்ஸ்- அப்பில் அனுப்பினேன். உங்களின் ரங்கீலா, சத்யா உள்ளிட்ட படங்களை பார்த்து ரசித்துள்ளேன் என்று வாட்ஸ்அப் செய்தேன். உடனே அவர் பதில் அனுப்பினார். இது தான் என் அடுத்த பட கதை, படித்து பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கவும் என்று கூறி இருந்தார்.
கதையை படித்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அதில் கதையே இல்லை. செக்ஸ் காட்சிகள் தான் இருந்தன. சார் நீங்கள் அனுப்பிய கதையில் கதையே இல்லை. வெறும் செக்ஸ் காட்சிகள் தான் உள்ளன. தயவு செய்து கதை என்ன என்பதை தெரிவிக்க முடியுமா என்று கேட்டு நான் பதில் அனுப்பினேன். அதற்கு ராம் கோபால் வர்மா, இது தான் கதை என்றார்.

அது எப்படி கதை இல்லாமல்...? என்று நான் மீண்டும் கேட்க அவரோ, உங்களுக்கு சவுகரியமாக இருந்தால் கூறுங்கள், படம் பண்ணலாம் என்றார். பின்னர் ராம் கோபால்வர்மா எனக்கு ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தார். அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து என்ன சார், இப்படி ஒரு வீடியோவை அனுப்பியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு செக்ஸ் என்பது அடிப்படை தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று இப்படி செய்தேன்.
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் செக்ஸ் தேவை, அதை அனுபவிக்க வேண்டும் என்று பதில் அனுப்பினார்’. இவ்வாறு ஷெர்லின் தெரிவித்துள்ளார். ராம் கோபால் வர்மா மீது ஏன் சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கவில்லை என்று ஷெர்லினிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஷெர்லினோ, ராம்கோபால் வர்மா என்னை அவர் படத்தில் நடிக்க கட்டாயப்படுத்தவில்லை என்றார்.
தனுஷூக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் நாயை தேவதையாக வர்ணித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். மறுஜென்ம காதல் கதையாக உருவான இப்படத்தில் வெவ்வேறு ஜென்மங்களில் தனுசுடன் இணையும் காதலியாக நடித்தார். ஆனால் ஒரு படத்தோடு பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார்.

சமீபத்தில் வீட்டில் தான் வளர்க்கும் நாய் ஒன்றை கட்டிப்பிடித்து தரையில் படுத்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், ‘ஒவ்வொருவரும் தேவதைக்கு இறக்கைகள் இருப்பதாக எண்ணுகிறார்கள். அதிர்ஷ்டசாலியான என்னை போன்றவர்களுக்குத்தான் அத்தகைய தேவதைகளுக்கு மயிர்க் கால்களும், 4 பாதங்களுமே இருக்கிறது என்பது தெரியும்’ என தனது நாயை தேவதையாக வர்ணித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு நடிகை சாக்ஷி அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.
காலா, விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி, சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் குறிப்பிட்டு, இதர பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் கிண்டல் செய்தனர்.

அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சாக்ஷி பதிவிட்டதாவது:- “எனது டுவிட், எனது உரிமை. அமைதியாகுங்கள். உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இது ஒரு ஜனநாயக நாடு. எனக்குப் பேசும் உரிமை இருக்கிறது. நையாண்டி செய்பவர்களே என்னைப் பின் தொடர்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது உபயோகமாக செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த ஆதர்சங்களுக்கு கோயில் கட்டுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள விஜய் சேதுபதி, அமீர்கானுக்கு நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இதன் இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெற்றது. இறுதியில் அதில் அமீர் கான் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்டபோது, அமீர்கானுடன் சேர்ந்து நடிக்கவுள்ளதை உறுதி செய்தார் விஜய் சேதுபதி. ஆனால், என்ன படம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
தற்போது ‘பாரஸ் கம்ப்’ இந்தி ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ படத்தில் தான் அமீர் கானுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தில், பப்பா என்ற கதாபாத்திரத்தில் மைகெல்டி வில்லியம்சன் என்ற நடிகர் நடித்திருந்தார். கம்ப் கதாபாத்திரம் ராணுவத்தில் இருக்கும் போது அவரது நண்பனாக இவர் தோன்றுவார். அவர் இறந்த பின், கம்ப் தனது வியாபாரத்தின் லாபத்தை பப்பாவின் அம்மாவுக்குத் தருவார்.

இந்தி ரீமேக்கில் இந்த பப்பா கதாபாத்திரம் தமிழராக சித்தரிக்கப்படவுள்ளதாகவும், இதில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஏ.ஆனந்த் இயக்கத்தில் பிர்லா, பவித்ரா நடிப்பில் உருவாகி உள்ள ’ஊர காணோம்’ படத்தின் முன்னோட்டம்
வடிவேலு கிணத்த காணோம் காமெடியை நம்மால் மறக்க முடியாது. இப்போது ’ஊர காணோம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்தப் படத்தை செவிலி, மோகனா போன்ற படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கிவருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையையும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டது.
இதற்காக நவம்பர் மாத பனிப்பொழிவில் இந்தப்படத்தின் முக்கியமான காட்சிகள் மலைகிராமத்தில் படமாக்கப்பட்டது. இதில் பிர்லா, ஷா, பவித்ரா, நெல்லைசிவா, தவசி, தங்கதுரை, மும்பைசீனுஜி, சசி, மகேஷ் ஏட்டா, “பிச்சைக்காரன் ஜான்”, குணாஜி, வெங்கல்ராவ், கீதா, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

படத்திற்கான இசையை ஒரு புதிய பெண் இசையமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அமைக்கிறார். பாடல்களை பிரியாகிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரண்டு பெண்கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். தயாரிப்பு கே.எஸ்.சரவணகுமார். இணைத்தயாரிப்பு சகுந்தலா. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ.ஆனந்த்.






